Showing posts with label NADAR. Show all posts
Showing posts with label NADAR. Show all posts

Tuesday, 13 October 2020

ANANDA PADMA NADAR HISTORY

 

ANANDA PADMA NADAR HISTORY




அனந்த பத்மநாப நாடார் கன்னியாகுமரி மாவட்டத்தில் வேர்கிளம்பிக்கு அருகில் உள்ள தச்சன்விளை என்ற ஊரில் பிறந்தார். இவரது காலம் கி.பி. 1698-1750 ஆகும். இவர் திருவிதாங்கூர் மன்னன் மார்த்தாண்ட வர்மா அரியணை ஏற உதவியர். மார்த்தாண்ட வர்மா ஆட்சியில் முதன்மை தளபதியாக பணியாற்றியுள்ளார்.


குளச்சல் போர் கி.பி 1741ம் ஆண்டு சூலை மாதம் 31ம் தேதி டச்சு கிழக்கிந்தியக் கம்பனி படைக்கும் திருவிதாங்கூர் படைக்கும் இடையே குளச்சல் துறைமுகத்தில் நடைபெற்ற போர்.


போர்[தொகு]

இப்போரில் டச்சுப்படை நவீன ஆயுதங்களுடன் மோதியும் திருவிதாங்கூர் படையிடம் தோற்றது. டச்சுப் படை தளபதி [இயுஸ்ட்டாச்சியஸ் டிலனோய்|டிலனாயை கைது செய்யப்பட்டார். பின்னர் திருவிதாங்கூர் படையை நவீன படுத்த படைதளபதியாக நியமிக்கப்பட்டார். இப்போரை நினைவு கூரும் விதமாக குளச்சல் துறைமுகத்தில் வெற்றித் தூண் அமைக்கப்பட்டது. அது இன்றும் குளச்சலில் உள்ளது. டச்சுப் படை தளபதி டினலாய் கல்லறை கன்னியாகுமரி மாவட்டம் உதயகிரிக்கோட்டையில் இன்றளவும் உள்ளது.


அனந்த பத்மநாப நாடார் கன்னியாகுமரி மாவட்டத்தில் வேர்கிளம்பிக்கு அருகில் உள்ள தச்சன்விளை என்ற ஊரில் பிறந்தார். இவரது காலம் கி.பி. 1698-1750 ஆகும். இவர் திருவிதாங்கூர் மன்னன் மார்த்தாண்ட வர்மா அரியணை ஏற உதவியர். மார்த்தாண்ட வர்மா ஆட்சியில் முதன்மை தளபதியாக பணியாற்றியுள்ளார். 1741-இல் குளச்சலில் நடைபெற்ற குளச்சல் சண்டையில் மார்த்தாண்டவர்மா ஆரசுக்கும் - டச்சுப் படைக்கும் இடையே நடைபெற்ற போரில் டச்சுக்காரர்களைத் தோற்கடித்து அவர்களின் படைத்தலைவன் டிலனாயைக் கைது செய்தார். இப்போரில் அனந்த பத்மநாப நாடார் தலைமையில் அன்றைய காலகட்டத்தில் வாழ்ந்த 108 நாடார் ஆசான்களின் துணைக் கொண்டு டச்சுப் படையினரை தோற்கடித்தார். தனது ஆட்சியைக் காப்பாற்றிய அனந்த பத்மநாபன் நாடாருக்கு, மார்த்தாண்டவர்மா ஏராளமான ஊர்களையும், விளை நிலங்களையும், ஏலாக்களையும் வழங்கியதற்கான செப்புப்பட்டயங்கள் பல உள்ளது.


1741-இல் குளச்சலில் நடைபெற்ற குளச்சல் சண்டையில் மார்த்தாண்டவர்மா ஆரசுக்கும் - டச்சுப் படைக்கும் இடையே நடைபெற்ற போரில் டச்சுக்காரர்களைத் தோற்கடித்து அவர்களின் படைத்தலைவன் டிலனாயைக் கைது செய்தார். இப்போரில் அனந்த பத்மநாப நாடார் தலைமையில் அன்றைய காலகட்டத்தில் வாழ்ந்த 108 நாடார் ஆசான்களின் துணைக் கொண்டு டச்சுப் படையினரை தோற்கடித்தார். தனது ஆட்சியைக் காப்பாற்றிய அனந்த பத்மநாபன் நாடாருக்கு, மார்த்தாண்டவர்மா ஏராளமான ஊர்களையும், விளை நிலங்களையும், ஏலாக்களையும் வழங்கியதற்கான செப்புப்பட்டயங்கள் பல உள்ளது


நினைவிடங்கள்[தொகு]

குளச்சல் சண்டையில் வெற்றி பெற்றதற்காக அவரை பாராட்டி அவர் பெயரில் பல நினைவிடங்களை அமைத்த மன்னன் மார்த்தாண்ட வர்மன், பல ஊர்களுக்கு அனந்த பத்மநாபனின் பெயரைச் சூட்டினார். குமரி மாவட்டத்தில் உள்ள பத்மநாபபுரம் அரண்மனையின் பெயர் இவரை கவுதவிக்கும் விதமாக சூட்டப்பட்டது.


தோள் சீலைப் போராட்டம்



கேரள மாநிலத்தின் பெரும் பகுதியும் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகள் திருவாங்கூர் சமசுதானத்தின் கீழ் மன்னராட்சியின் கட்டுப்பாட்டில் இருந்தது. அப்போது இந்து நாடாக இருந்தது. அந்த காலகட்டத்தில் சாதீயக் கொடுமைகளால் மக்கள் அதிக அடக்குமுறைக்கு ஆளாகினர். பனையேறும் தொழிலைச் செய்து வந்த பனையேறி நாடார் நாயர், ஈழவர், புலையர் உட்பட 18 சமுதாயத்தைச் (சான்று தேவை) சார்ந்த பெண்கள் தங்கள் மார்பகத்தை மறைக்க மேலாடை அணிவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.[1] நாடான் என்ற பட்டங்களுக்குரிய நிலமைக்காரர் நாடார்களும் இப்பகுதியில் இருந்தனர்.[2]. இவர்கள் மார்பகத்தை திறந்து போடுவதுதான் உயர் சாதியினருக்குத் தரும் மரியாதை என்று தரம் தாழ்ந்த எண்ணத்தில் திருவாங்கூர் நாடு ஒரு நடைமுறையை வகுத்திருந்தது. இதன்படி 18(சான்று தேவை) சாதிகளைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணியாமல் அவமதிப்புடன் வாழ்ந்து வந்தனர். இந்த அடக்குமுறையை எதிர்த்து சீர்திருத்த கிறித்தவத்தை ஏற்றுக்கொண்ட பனையேறி நாடார் சாதியைச் சேர்ந்த மக்கள் தங்கள் சாதிப் பெண்களுக்கு மார்பை மறைத்து சேலை அணிய உரிமை கோரிப் போராடத் தொடங்கினர். இது தோள் சீலைப் போராட்டம் எனப்பட்டது. 37 ஆண்டு போராட்டத்துக்குப் பிறகு திருவிதாங்கூர் அரசு நாடார் கிருத்தவ பெண்களுக்கு மட்டும் தோள் சீலை அணியவும், மார்பகங்களை மறைக்கவும் உரிமை அளித்தது.


சாதிய கோட்பாடுகள்[தொகு]

கி.பி. ஏழாம் நூற்றாண்டு வாக்கில் கேரளப் பகுதியில் குடியேறிய நம்பூதிரிகள் பூமியிலுள்ள கடவுள்கள் தாங்கள் என்று சொல்லி அரசர்களும் பிறரும் மதிக்கும் வண்ணம் உயர்வு பெற்று வாழ்ந்தனர். மலையாள நாடு நம்பூதிரிப் பிராமணர்களான தங்களுக்குப் பரசுராமனால் ஈட்டித் தரப்பட்டது என்றும் அரசர் முதல் யாவரும் தங்களுக்குத் தொண்டு செய்யக் கடமைப்பட்டவர் என்றும் கூறி அதையே நடைமுறைப்படுத்தினார். அதனால் நிலவுடைமையாளர்களாகவும் விளங்கி தெய்வத் தன்மை பொருந்தியவர்களாகவும் மதிக்கப் பெற்றார்.


நம்பூதிரிகளில் வழிகாட்டுதலில் அமைந்த சமூகத்தில் சாதிப் பிரிவுகளும் தீண்டாமையும் அடிமை வாழ்வும் நிலைபேறு பெற்றிருந்தன. வர்ண தர்மம் எனப்படும் இந்து மதத்தில் நான்கு வர்ணங்கள் (பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன்) அடையாளங்காட்டப்பெற்றன. ஆனால் நம்பூதிரிகள் தங்கள் சுயநல நோக்கில் அதை வேறுவிதமாக மாற்றி சவர்ணர், அவர்ணர் எனப் பிரிவினை செய்தனர்.


முன்னளைய திருவிதாங்கூர் (Travancore) நாட்டின் பகுதியாக இருந்த இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்தில் சாதிக் கொடுமை தீவிரமாக இருந்தது. அது தீண்டாமையின் உருவம்தான். உதாரணமாக, “ஒரு நம்பூதிரி பிராமணனுக்குப் பக்கத்தில் நாடாளுகின்ற சத்திரியர்கள் செல்லலாம். ஆனால் தொடக்கூடாது. மன்னனின் அருகில் சூத்திரர்களான நாயர்கள் செல்லலாம். ஆனால் தொடக்கூடாது. ஒரு நம்பூதிரியிடமிருந்து நாயர் இரண்டு அடித் தொலைவிலும், ஒரு நாடார் 12 அடி தொலைவிலும், ஒரு புலையர் 72 அடி தொலைவிலும் நிற்க வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.[3] இல்லையென்றால் அவர்கள் தீண்டாமைக்கு ஆளாக்கப்படுவர்.கோவிலில் சென்று இறை வழிபாடு மறுக்கப்பட்டிருந்தது. கோவில் தெருக்களில் நடக்க அனுமதி மறுக்கப்பட்டது. அரசு அனுமதியோடு மேற்கூறிய கொடுமைகள் 1850ம் ஆண்டுகள் வரை தொடர்ந்தன. இத்தகைய அடக்குமுறைகள் அப்போதைய திருவாங்கூர் சமஸ்தானத்தின் எல்லைப் பகுதிகளிலும் அதை ஒட்டியிருந்த பகுதிகளிலும் இருந்து வந்தன. இதில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பான்மையினராக வாழும் பனையேரி நாடார் சமுதாயத்தினரும்,கேரளாவில் ஈழவர்கள் என்று அழைக்கப்படும் தமிழக இல்லத்துப்பிள்ளைமார் சமுதாயத்தினரும்தான் என்பது உண்மை.


மேலாடை அல்லது தோள் சீலை[தொகு]


திருவிதாங்கூரில் “மேலாடை”, அல்லது “Upper cloth” என்பதை மலையாளிகள் “மேல்முண்டு” என்றே அழைக்கின்றனர். நாயர் பெண்கள் இன்றும் இந்த மேல் முண்டை சில சமயச் சடங்குகள் மற்றும் திருமணச் சடங்குகளில் கடைபிடித்து வருகின்றனர். இவர்கள் சாதாரணமாக மூன்று முண்டுகளை பயன்படுத்துகின்றனர். ‘உடுமுண்டு’ அதாவது உடுத்திக் கொள்ளுகின்ற முண்டு (வேட்டி – ஒற்றை அல்லது இரட்டை), மார்பு துண்டு, அதாவது மார்பகங்களை மறைக்கின்ற கச்சை போன்ற வேட்டி, அதற்கும் மேலாக தோளோடு தோளில் இட்டு மறைக்கின்ற “மேல்முண்டு” அதாவது மேலடை போன்ற வேட்டித்துண்டுகளாகும். நம்பூரிப் பெண்கள் பொதுவாக மார்புமுண்டு அணியாமல், மேல்முண்டால் மார்பகங்களை இலைமறைவு காய்மறைவாக போர்த்திக் கொள்வர். இதை சித்தரிக்கின்ற வகையில் வரலாற்றாசியர் சங்கை எ.எசு.சாமுவேல் மேற்றீற் அவர்களின் தர்மபூமி (Land of charity) 1870-யில் பக்கம் 30-ல் படம் ஒன்று தந்துள்ளார். இதுதான் “தோள்சீலை”யே (மேல்முண்டு) தவிர ‘தோள் சேலை அல்ல’. பெண்களின் சேலை[புடவை] (Saree) முந்தாணை அல்ல தோள்சீலை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். திருவிதாங்கூர் நாட்டு அரசிகளே கூட இந்த மேல்முண்டை (தோள் சீலை) அணிவது இல்லை. இதை திருவிதாங்கூர் வரலாற்றை விரிவாக எழுதின நாகம் ஐயாவின் முதல் பாகத்தில் பக்கம் 520-ல் காணலாம். தவிரவும் இவருக்கு முன்பு (1878-ல்) திருவிதாங்கூர் வரலாற்றை அதன் தொன்மைக்காலம் தொட்டு எழுதிய திரு.பி.சங்குண்ணிமேனன் கூட அரசி கவுரிலெட்சுமிபாய் (பக்கம் – 362) மற்றும் அரசி பார்வதிபாய் (பக்கம் – 383) மற்றும் இளவரசு உருக்குமணிபாய் (பக்கம் – 389) போன்றோர்களின் ஆடை அலங்காரமும், கீழ்முண்டு, மார்பு முண்டு, மேல்முண்டு (Upper Cloth) என்றுதான் காணப்படுகின்றது. இந்த முறைதான் உயர் சாதி இந்துக்கள் அன்று அணிந்து வந்த ஆடை அலங்காரம்.


போராட்டத்திற்கான காரணம்[தொகு]


ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகளில் ஜன்மி சம்பிரதாயமும், 10 மற்றும் 11 ம் நூற்றான்டுகளில் ஆரியப் பார்ப்பனர்களும் (நம்பூதிரிகள்) ஆதிக்கம் சேர நாட்டில் ஓங்கத் தொடங்கிய வேளையில் சாதிக் கட்டுப்பாடுகள் உருவெடுத்தன. 12 ம் நூற்றாண்டில் இந்தக் கட்டுப்பாடுகள் ஜென்மி சம்பிரதாயத்தின் உத்வேகத்தால் அதிகரித்து, மேல் சாதி இந்து என்றும், கீழ் சாதி இந்து என்றும் பாகுபாடுகள் உருவாகி காணாமை, நடவாமை, தொடாமை போன்ற சமுதாய முறைகள் உருவாகிற்று. இந்த தீமைகளில் ஒரு பிரிவு தான் தாழ்த்தப்பட்ட மக்கள் இடுப்புக்கு மேலும், முட்டுக்கு கீழும் ஆடை அணியக்கூடாது என்றக் கட்டுப்பாடு. உயர்ந்த சாதி இந்துக்களின் முன்பு தாழ்த்தப்பட்ட பெண்கள் மறைக்கப்படாத மார்பகங்களுடன்தான் மரியாதை செலுத்த வேண்டும். சான்றாக நம்பூதிரிகளின் முன்பு சூத்திர நாயர் பெண்கள் மார்பகங்களை மறைக்க கூடாது, அதே போன்று சாதி வரிசையின் அடிப்படையில் கீழ் சாதி இந்து நாடார் பெண்கள் அனைவரும் மார்பகங்களை மறைக்காமல் நடமாட வேண்டும் என்பது மரபாகிவிட்டது. இந்த உடைக் கட்டுப்பாட்டை மீறினால் மரணத் தண்டனை விதிக்கப்பட்டது.[3]


உடை கட்டுபாடு[தொகு]

திருவிதாங்கூர் நாட்டால் தாழ்த்தப்பட்டவர்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட மக்கள் தங்கள் இடுப்பிற்கு மேல் உடை அணிய மறுக்கப் பட்டனர். கலாச்சாரம் என்ற போர்வையில் பெண்களுக்கும் இது திணிக்கப்பட்டது. உயர் சாதி பெண்கள் தங்கள் மார்பை மறைக்க அனுமதி அளிக்கப் பட்டது என்றாலும் நம்பூதிரிப் பிரானணர்கள் முன்பு நாடார் சாதிப் பெண்கள் திறந்த மார்புடனே நிற்க வேண்டும் என்ற ஈனக் கட்டுப்பாடு இருந்தது. இந்த உடை கட்டுப்பாடுகள் மிக கடுமையாக கடைபிடிக்கப் பட்டன. உடை அணியும் விதத்தை வைத்தே மக்களை உயர்ந்தவர்களாகவும் தாழ்ந்தவர்களாகவும் அடையாளப்படுத்தப்பட்டார்கள். கொத்தனாவிளை என்ற ஊரில் 1822 ம் ஆண்டு ஒரு சிறிய போராட்டம் நடைப்பெற்றது. அதன் பிறகு 37 வருட காலம் இப் பேராட்டம் மூன்று கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்ட போராட்டம் 1822 முதல் 1823 வரையும், இரண்டாம் கட்டப் போராட்டம் 1827 முதல் 1829 வரையும், மூன்றாம் கட்டப் போராட்டம் 1858 முதல் 1859 வரையும் நடைப்பெற்றது.


முத்துக்குட்டி சாமியார் பங்கு[தொகு]

முத்துக்குட்டி சாமியார் 1808-ம் ஆண்டு மார்ச் மாதம் 2-ம் தேதி (கொல்லமாண்டு மாசி மாதம் 20-ம் நாள்) பிறந்தார். இவரது தாய் தந்தையர் திருநெல்வேலி மாவட்டம், இடையன்குடியிலிருந்து பனைத்தொழில் செய்து பிழைப்புக்காக திருவிதாங்கூர் வந்தனர். வாலிப பருவத்தில் இவர் பனைத்தொழிலையே செய்தார். எனவே எஸ். இராமச்சந்திரன் சித்தாந்தத்தின்படி இவர் நாடான் அல்லது சத்திரியன் ஆக முடியாது் இவர் சாணான் ஆகவே முடியும். இவர் நோய்வாய்ப்பட்டு, திருச்செந்தூர் முருகன் சன்னிதானத்திற்கு தரிசனத்துக்காகத் தூக்கிச் சென்ற வேளையில், 1833 ஆம் ஆண்டு, தனது 25-ம் வயதில் விஞ்சைப் பெற்று ஊர் திரும்பினார். அதனைத் தொடர்ந்து சுவாமிகள் தவ வாழ்க்கை மேற்கொண்டு 1834 ஆம் ஆண்டில் தனது சமயத் தொண்டைத் தொடங்கினார். இதற்கும் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 1838 முதற்கொண்டு அருளாசிகள் வழங்கத் தொடங்கி புகழ் அடைந்தார். இவரது கொள்கையான “ஏக கடவுள், ஏகச் சமயம், ஒரே சாதி” என்ற கோட்பாட்டால் சாணார் மக்கள் அனேகர் ஈர்க்கப்பட்டு இந்து சமயத்தைவிட்டு இப்புதிய சமயத்தைத் தழுவினர். 1851 ஆம் ஆண்டு தனது 43 அகவையில் உலக வாழ்க்கையை முடித்துக் கொண்டார். இவரது பூத உடல் பூவண்டர்தோப்பு என்ற சாமித்தோப்பில் சமணமுறை போன்று உட்கார்ந்த நிலையில் அடக்கம் செய்யப்பட்டு, அதன்மேல் தலைமைப்பதி நிறுவப்பட்டுள்ளது.


இவரது மக்கள் தொண்டு 1838-ல் தான் தொடங்கப்பட்டது. ஆனால் தோள்சீலைப் போராட்டம் 1822-ல் தொடங்கப்பட்டுவிட்டது. அதன் இரண்டாவது கட்டப் பேராட்டம் கூட 1829-ல் தொடங்கப்பட்டது. அதாவது சாமியார் மக்கள் தொண்டு தொடங்குவதற்கு முன்பே, (1838-ல்) ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பே கலகத்தின் இரண்டாவது நிலை எட்டிவிட்டது. எனவே பெண்கள் தோள்சீலை (Upper Cloth) அணிவதில் இவருக்கு எந்தவித பங்களிப்பும் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை என்பதை உறுதியாகக் கூறலாம். தோள்சீலைப் போராட்டம் முழு வெற்றி பெற்றது 1859-ல் ஆகும். இதற்கும் எட்டு ஆண்டுகளுக்கு முன்பே சாமியார் காலமாகிவிட்டார்கள். அந்த வகையிலும் அவருக்கு பங்கு எடுத்துக் கொள்ள இயலவில்லை. அவரது ஆயுட் காலத்தில் சில குறுகிய காலகட்டங்களில் தோள்சீலைப் போராட்டம் நடந்தது என்பது உண்மை. இப்போராட்டங்களை கிறிஸ்தவ மிஷனறிமார்கள் முன்னின்று நடத்தினார்களேத் தவிர, முத்துக்குட்டிசாமிகள் முன்னின்று, குறைந்தபட்சம் அவரது கொள்கைகளை ஏற்றுக் கொண்டவர்களிடத்தில் கூட விரிவாகச் செய்யவில்லை.


“ பூமகள் நிதமுடன் போட்ட

தோள்சீலை தன்னைப் போடாதே என்றடித்தானே சிவனே அய்யா


என்று இறைவனிடம் ஆவலாதி கூறுகிறாரேத் தவிர, அடித்த உயர்சாதியானனைப் பார்த்து “ஏய் நீ ஏன் எங்கள் பெண்ணை அடிக்கிறாய், அடித்தால் உன் கையை நான் உடைப்பேன்” என்றாவது கூறி இவர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தவிரவும் பெண்களை அழைத்து “ஏ, கண்மணிகளா சேலையைக் கட்டிக் கொண்டும், ரவிக்கையை அணிந்து கொண்டும் தைரியமாக நடமாடுங்கள், அதனால் என்ன வந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று பெண்களுக்கு இவர் ஊக்கமளித்ததாகக்கூட அகிலத்தில் குறிப்பு உண்டா?


முதல் போராட்டம்[தொகு]


சார்ல்சு மீட்

சீர்திருத்தக் கிறித்தவ சமயத் தொண்டரான மீட் பாதிரியார் [4] கிறித்தவ பெண்களின் மார்பகங்களை மறைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.இதனால் கிறித்தவ பெண்கள் தங்கள் மார்பகங்களை துணிந்து மறைத்ததுமல்லாமல், அதற்கு மேல் ஒரு மேலாடையையும் பயன்படுத்தினர். இதனால் மேல் சாதியினர் கலவரம் செய்தனர். மே மாதம் 1822ம் வருடம் கல்குளம் மற்றும் இரணியல் பகுதிகளில் கலவரம் வெடித்தது. இதன் காரணமாக மீட் ஐயர் என்ற ஐரோப்பிய மறைப்பணியாளர் ஆங்கிலேய தளபதி கார்னல் நேவால் என்பவருக்கு இச் சம்பவங்களைப் பற்றி விரிவாக கடிதம் எழுதினார். இதன் பயனாக ஆங்கிலேய தளபதி கார்னல் நேவால் பத்மநாபபுரம் நீதிமன்ற விசாரனைக்கு உத்தரவிடுகிறார். இதன் பயனாக 1823 ம் ஆண்டு வெளியிடப்பட்ட நீதிமன்ற உத்தரவுப் படி சீர்திருத்தக் கிறித்தவர்களுக்கு மட்டும் மேலாடை அணியலாம் என்று தீர்ப்ளிக்கப் படுகிறது.


இரண்டாம் கட்டப் போராட்டம்[தொகு]

மிக அதிகமாக பாதிக்கப் பட்ட இடங்களான ஆத்தூர், திற்பரப்பு, கண்ணனூர், அருமனை,உடையார்விளை, புலிப்புனம் ஆகிய இடங்களில் மீண்டும் 1827 ம் ஆண்டு போராட்டம் வெடித்தது. 1823 ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணை ஒரு நிரந்தரமான தீர்வை அளிக்கத் தவறியது. இந்த ஆணையின் அடிப்படையில் கிறித்தவப் பெண்கள் உயர்சாதிப் பெண்கள் அணிவது போன்ற ஆடைகள் அணியக்கூடாது என்று தடை விதிக்கப் பட்டது. இதனால் கிறித்தவ பெண்களிடம் அதிருப்தி ஓங்கியது. கிறித்தவ பெண்கள் தங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட குப்பாயம் என்ற மேலாடையை விட ஐரோப்பிய மறைப்பணியாளர்கள் மற்றும் உயர் சாதி பெண்கள் அணியும் உடைகளை அணிய ஆரம்பித்தனர். இவர்களைப் பின்பற்றி இந்து பெண்களும் மேலாடை அணிய ஆரம்பித்தனர். இவர்களுக்கு போன்றோர் மிகவும் உறுதுணையாக இருந்தனர். இதற்கு சூத்திர நாயர்கள் எதிர்பு தெரிவித்தனர். விக்டோரியா மகராணியின் பிரகடனத்தையடுத்து தோள் சீலைப் போராட்டம் தீவிரமடைந்தது. விக்டோரியா மகராணியின் பிரகடனம்


'one soceity or Government should not interfere into the religious regulations or social restrictions of other society. Government servants should not intervene and discriminate anybody in the customary affairs that is being followed in the respective soceities. The violators of this order would be punished'[5]


இந்த பிரகடனம் நவம்பர் 1, 1858 ம் ஆண்டு இங்கிலாந்து பாராளுமன்றத்தில் இந்தியாவை ஆங்கிலேய கிழக்கு இந்திய கம்பெனியிடமிருந்து அரசாங்க கட்டுப்பாட்டில் கொண்டு வரும் போது ஆற்றிய உரை. இதை எதிர்த்து கிறித்தவ மறைப் பணியாளர்கள் ஆங்கிலேய அரசிடம் முறையிட்டனர். நெய்யாற்றின்கரையில் தொடங்கியப் போராட்டம் பாறசாலை, நெய்யூர் போன்ற ஊர்களுக்கும் பரவியது. பல இடங்களில் தெருக்களிலும், சந்தைகளிலும் பெண்கள் தாக்கப்பட்டனர். பெண்களின் மேலாடைகள் கிழித்து எறியப்பட்டன.பெண்கள் மற்றும் குழந்தைகள் ஐரோப்பிய மறைபரப்பாளர்களின் பங்களாக்களில் ஒளிந்து தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொண்டனர். டிசம்பர் 30, 1859 ம் நாள் கோட்டாறுப் பகுதியில் வைத்து நாடார் கிறித்தவகளுக்கும் சூத்திர நாயர்களுக்கும் இடையே மிகப் பெரிய சண்டை மூண்டது. இந்து,கிறித்தவர்களுடன் இதில் கைகோர்த்து கொண்டனர்.


உடை உடுத்த உரிமை[தொகு]

1829-ம் ஆண்டு பிப்ரவரி 3-ம் நாள் திருவிதாங்கூர் அரசு வெளியிட்ட நீட்டில் (அரசு ஆணையில்) இந்து மதத்தில் நீடிக்கின்ற சாணார் பெண்டிர், கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய சாணார் பெண்டிர் போன்று குப்பாயம் அணியலாம் என்று கூறப்படவில்லை. இந்த உத்தரவுப்படி இந்து சமயத்தில் நீடித்த சாணார் பெண்களுக்கு தங்களது மார்பகங்களை மறைப்பதற்கு உரிமை வழங்கவில்லை என்பது வெட்ட வெளிச்சம். இதனால் கிறிஸ்தவர்களுக்கு கிடைக்கப் பெற்ற உரிமையும் பறிபோயிற்று. சுருக்கமாகக் கூறின்


“ “… As it is not reasonable on the part of the Shanar women to wear cloths over their breasts, such custom being prohibited, they are required to abstain in future from covering the upper part of their body. An order (circular) had been issued on the 7th Edavam 989, to all places prohibiting the Shanar women of the families of such Sanars as may have embraced Christianity from wearing cloths, over their breasts, and requiring them to substitute for these the Kuppayam (a kind of short bodice used by their Christians and by Mohamadan native females) but with regard to their (the Shanars) allegation as an authority for wearing clothes over their breasts, that a decree has been passed subsequently by a law court, permitting the Shanar women on the contrary the use of clothes on the upper part of their body. Such a decision since if it be admitted as establishing a rule, it would be a direct contravention of the order alluded to, cannot but be considered as invalid. Therefore the order referred to is hereby republished to be held as a document (or authority) in their respect”

[6].


மிஷனறிகள் அல்ல குப்பாயத்தை வடிவமைத்தது. அவர்களின் மனைவிகளே இதை உருவாக்கி கையால் தைத்துக் கொடுத்தனர். இதை உருவாக்கிக் கொடுப்பதற்கான காரணத்தை அவர்கள் கூறும் பொழுது


“ “… that the Shanars and such other castes women, as have embraced Christianity ought to wear an upper cloth for the sake of decency when they go to church, the fairs, markets and similar places, and they were instructed to do so and that it ought to be ordered agreeably to Christianity...” No doubt at this fag end of the nineteenth century it passes strange a government should make restrictions and laws as to the domestic economy and dress of individuals; but the Travancore Govt. was so unenlightened in those days that it made such indecent restrictions regarding the dress of inferior women”.[7]. ”

இதற்கான அரசாணை 26, சூலைத் 1859 ம் ஆண்டு வெளியிடப்பட்டது. ஆனால் உயர் சாதி பெண்கள் அணிவது போன்ற ஆடை அணிய தடை விதிக்கப்பட்டது. இந்த உரிமை மற்ற சாதியினருக்கு அரசு வழங்கவில்லை. எனினும் கிறித்தவப் பெண்கள் அனைவரும் மேலாடை அணிந்தனர்.


மூன்றாம் கட்ட போராட்டம்[தொகு]

இதனால்தான் மீண்டும் போராட்டம் தொடர்ந்தது. இப்பேராட்டத்தை மிஷனறிகள் பொறுப்பேற்று நடத்தினர்.ஆனாலும் சாணார் கிறிஸ்தவர்கள் சற்றும் சளைக்காமல் நாயர்களை எதிர்த்துப் போராடி 1859-ல் வெற்றிவாகை சூடினர். “அதன் பயனாக 1859 ஆம் ஆண்டு ஜுலை 26-ம் நாள் அதிகாரபூர்வ அரசு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அனைத்து சமயத்தைச் சேர்ந்த சாணார் பெண்களும், கிறிஸ்தவப் பெண்களைப் போன்று குப்பாமிட்டுக் கொள்ளவோ, மீனவப் பெண்களைப் போன்று கட்டிச் (Coarse) சீலை உடுத்திக் கொள்ளவோ செய்யலாம் என்றும், ஆனால் உயர் சாதிப் பெண்கள் (நாயர், நம்பூதிரிகள், வெள்ளாளர்கள்) மேலாடை அணிவது போன்று அணியாமல் வேறு எவ்விதத்திலாவது மார்பை மறைத்துக் கொள்வதற்கு எந்தவிதத் தடையும் இல்லை என அந்த அறிக்கை தெரிவித்தது”.[8] இந்த நீட்டுப்படித்தான் இந்து சமயத்தில் நீடித்த சாணார் பெண்களுக்கும் குப்பாயம் அணியும் உரிமை கிடைத்தது. ஆயினும் இவ்வுரிமை தாழ்ந்த சாதிப் பெண்களுக்குக் கிடைக்கவில்லை. தாழ்த்தப்பட்ட பிற சாணார் சமுதாயத்தினருக்கு இவ்வறிப்பால் உரிமை கிடைக்கவில்லை. எனவே இந்த ஆணையைக் கண்டித்து மிஷனறிகள் ஆங்கில அரசிடம் மீண்டும் மேல்முறையீடு செய்தனர். சென்னை மாகாண ஆளூனர் சார்லஸ்ட்ரெவிலின் திருவிதாங்கூருக்கான ஆங்கிலப் பிரதிநிதி மால்ட்பியை நேரடியாக அழைத்துப் பேசினார். திருவிதாங்கூரில் பெண்கள் உடை அணிவதில் இருக்கின்ற எல்லா கட்டுப்பாடுகளையும் நீக்க ஆங்கிலப் பிரதிநிதி மகாராஜாவிடம் தன்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மால்ட்பி இதனைக் குறித்து மகாராசாவிடம் (ஆயில்லியம் திருநாள் ராமவர்மா – 1860 – 1080) பேசினார். ஆங்கில அரசின் உணர்ச்சிகளுக்கு மதிப்பளிக்காவிட்டால் ஆங்கில அரசுடனான தங்களது உறவு பாதிக்கப்படும் என்றுணர்ந்த மகாராஜா 1865-ம் ஆண்டு மற்றோரு அறிவிப்பு வெளியிட்டார். இதன் மூலம் இந்து கிறிஸ்தவ சத்திரிய நாடார் பெண்களுக்கு மேலாடை அணிவதற்குக் கொடுக்கப்பட்ட உரிமை அனைத்து சாதியைச் சேர்ந்த பெண்களுக்கும் கொடுக்கப்பட்டது. ஆனால் சூத்திர நாயர் பெண்களைப் போன்று ஆடை அணியும் உரிமை மட்டும் அனைவருக்கும் மறுக்கப்பட்டிருந்தது”.[9]


உடை உடுத்த உரிமை வழங்கிய அரசாணை

ரவிக்கை அணிவதற்கான உரிமையை கர்னல் மன்றோ (Resident) 1813-ல் வழங்கப்பட்டு கிறிஸ்தவப் பெண்கள் அன்று முதல் பகிரங்கமாக அணிந்து கொண்டனர்.


இப் போராட்டத்திம் விளைவாகவும் ஆங்கிலேயர்களின் நெருக்கடியின் காரணமாகவும் திருவிதாங்கூர் அரசரும், திவானும் அனைத்து நாடார் பெண்களும் மத வேறுபாடு இல்லாமல் குப்பாயம் என்கின்ற மேலாடை அணியலாம் என்று உரிமை அளித்தனர்.


சி.பி.எஸ்.இ. பாடதிட்டத்திட்ட சர்ச்சை கருத்துக்கள்[தொகு]

மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சி.பி.எஸ்.இ) பாடத்திட்டத்தின் கீழ் வெளியிடபட்டுள்ள 9ம் வகுப்புக்கான சமூக அறிவியல் பாடப் புத்தகத்தின் 168வது பக்கத்தில் காலணி ஆதிக்க இந்தியாவில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ற தலைப்பிலான பாடத்தில் நாடார் சமுதாயத்தை இழிவு படுத்தும் வகையில் சில கருத்துக்கள் இடம் பெற்றுள்ளதாகவும் அது உடனே நீக்க வேண்டும் என்றும் தமிழகத்தை சேர்ந்த திமுக, மதிமுக, பமக, சமக ஆகிய கட்சிகள் கூறி வருகின்றன. இப்பாட திட்டத்தை ஜானகி நாயர் என்பவர் தயாரித்துள்ளார். அவர்கள் நீக்குவதற்கு முன் வைக்கும் முக்கிய காரணங்கள்.


சாதி மற்றும் மோதலும், ஆடை மாற்றமும் என்ற குறுந்தலைப்பின் கீழ் இடம் பெற்றுள்ள பத்தியில், ஆங்கிலேயர் ஆட்சியில் தெற்கு திருவிதாங்கூர் என்றழைக்கபட்ட குமரி மாவட்டத்தின் பூர்வக்குடி மக்கள் நாயர்கள் தான் என்றும், நாடார் சமுதாயம் அங்கு பிழைப்பு தேடி இடம் பெயர்ந்து வந்தது என்றும் தவறாக குறிப்பிடபட்டிருக்கிறது. தமிழர் நாகரீகத்தின் ஓர் அங்கமாக இந்து கடலில் மூழ்கிய குமரிக்கண்டத்தின் ஒருபகுதி தான் கன்னியாக்குமரி மாவட்டம் மாகும். நாடர்கள் தான் அம்மாவட்டத்தின் பூர்வகுடிமக்கள் ஆவர். அவ்வாறு இருக்கும்போது அவர்களை பிழைப்பு தேடி வந்தவர்கள் என்றும், பிழைப்பு தேடி வந்த மலையாள நாயர்களை பூர்வகுடிமக்கள் என்றும் பாடநூலில் குறிப்பிடபட்டிருக்கிறது.

நாடார்களை சாணார்கள் என்று அழைக்கும் வழக்கம் வெகுகாலத்திற்கு முன்பே ஒழிந்துவிட்ட நிலையில், இந்த பாடத்தின் அனைத்து இடங்களிலும் நாடார் சமுதாயத்தினரை சாணார்கள் என்று குறிப்பிட்டிருப்பது அவர்களை இழிவுபடுத்தும் செயலாகும்.

நாடார் சமுதாயப் பெண்கள் மேலாடை அணியத் தடை விதிக்கப் பட்டிருந்ததை எதிர்த்து, கிறித்தவ மறைபரப்பு பணியாளர்களின் துணை கொண்டு நடத்திய போராட்டங்கள் மட்டுமே முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது. 1836ம் ஆண்டிலிருந்து அய்யா வைகுந்தர் அவர்கள் நடத்திய போராட்டங்களை பற்றிய குறிப்புகளை பாட புத்தகத்தில் சேர்க்கவில்லை.

ஆங்கிலேயரின் வெற்றி[தொகு]

சில நூற்றாண்டுகளாவது இந்திய மண்ணை ஆள்வதற்கு திட்டம் தீட்டிய ஆங்கிலேயர், சிப்பாய் கலகத்திற்குப் பின்னர் இந்தியாவில் எடுத்த மக்கள் குடிமதிப்பில் சாதி, சமயம் பற்றிய விவரங்கள் மிக முக்கிய இடம் வகித்தன. இதன் மூலம் நீர்மத்தன்மையுடன் மங்கலாக இருந்த இவ்வேறுபாடுகள் உறுதிப்படுத்தப்பட்டு செய்யும் தொழிலை வைத்து ஏற்பட்ட வேறுபாடுகள் மறைந்து ஆங்கிலேயர்கள் வகைப்படுத்திய சாதி, மத அமைப்புகள் இறுகத்தொடங்கி ஆங்கிலேயர் திட்டமிட்டபடி மக்கள் நடந்து கொள்ளத்துவங்கினர். விடுதலைக்குப் பின்னரும் அதே கணக்கெடுப்பு முறை இந்தியாவில் பின்பற்றப்பட்டது.


இந்தியாவில் இத்தகைய விதத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்திய ஆங்கிலேயர் தங்கள் தாயகமான இங்கிலாந்தில் இதற்கு நேர்மாறாகக் கணக்கெடுத்தனர். 1801 லிருந்து 1931 வரையிலான 130 ஆண்டு கால கட்டத்திலும் மக்களின் சமயம் கணக்கில் எடுக்கப்படவில்லை. 1851 இல் ஒருமுறை மட்டும் விரும்பினால் தரலாம் விரும்பாவிட்டால் சமயம் குறிப்பிடப்படவேண்டாம் எனக்குறிப்பிட்டு சமயம் பற்றிய வினா இடம் பெற்றிருந்தது. மக்களில் பலர் தங்கள் சமய நம்பிக்கையை தெரிவிக்கவே இல்லை.[10]


இதன் தொடர்ச்சியாக திருநெல்வேலி போன்ற ஆங்கிலேயர் பலம் மிகுந்திருந்த பகுதிகளில் இன்றளவும் பல போராட்டங்கள் தொடர்கின்றன[1


பின்னர் வந்த திருவிதாங்கூர் மன்னர்கள் வருணாசிரம கோட்பாட்டை நிலை நாட்டுவதற்காக கொண்டு வந்த தீண்டாமை, காணாமை, நடவாமை போன்ற தீட்டுகளை நாடார் மக்களின் மீது திணித்தனர். இதில் “சாணார்(நாடார்) அல்லது ஈழவ இனத்தைச் சார்ந்த ஒருவன் பிராமனிடமிருந்து 36 அடி தொலைவிற்கப்பாலும், நாயரிடமிருந்து 12 அடி தூரத்திற்கப்பாலுமே நிற்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் உருவாக்கப்பட்டது. மேலும் நாடார் பெண்கள் மார்பகத்தை திறந்து போடுவதுதான் உயர் சாதியினருக்குத் தரும் மரியாதை என்று திருவாங்கூர் நாடு ஒரு நடைமுறையை வகுத்ததின் காரணமாக நாடார்களுக்கும் நாயர்களுக்கும் இடையே பெரும் கலவரம் மூண்டது. இதில் வெற்றி பெற்ற நாயர்கள் அனந்த பத்மநாப நாடாரின் நினைவை சுமந்து கொண்டிருந்த கட்டிடங்கள் அனைத்தையும் அழித்தனர் என்பது பெரும்பாலானோர் கூற்று. பெண்கள் உயர் சாதி என்று கருதப்பட்ட மக்கள் முன் மேலாடை அணியக்கூடாது என்ற சட்டம் நடைமுறைக்கு வந்தது.


வேலு தம்பி தளவாய்[தொகு]


அனந்த பத்மநாப நாடாருக்கு பின் வந்த வேலுதம்பி தளவாய், நாடார் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தவர். அனந்த பத்மநாப நாடாருக்கு பின் திருவிதாங்கூர் ஆட்சியின் தளபதியாக பொறுப்பு வகித்த இவர் 1809ஆம் ஆண்டில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாடார்களை வெட்டிப் படுகொலை செய்து கடலில் வீசினார். நாடார்களுக்கான வரியை இரட்டிப்பாக்கி கொடுமைப் படுத்தினார். வீரபாண்டிய கட்டபொம்மனை வீழ்த்த ஆங்கிலேயர்களுக்கு உதவி செய்தார். இவர் காலத்தில் அனந்த பத்மநாப நாடாரின் வரலாறு திரித்தல் மற்றும் நினைவிடங்கள் சிதைத்தல் நடைபெற்றது




டச்சுபடையை வென்ற முதல் தமிழன்,

முதல் சுதந்திர போராட்ட மாவீரன்,

வீர தளபதி,

அனந்த பத்மநாபன் நாடார்

வாழ்க்கை வரலாறு :


சேரத்தமிழ் நாட்டில் (வேணாடு)

தென் திருவிதாங்கூரில் கல்குளம் வட்டம் வியன்னூர் கிராமம் கண்ணனூர் தேசம் தச்சன்விளை என்னும் ஊரில் வாழ்ந்து வந்தவர் ஆசான் தாணுமாலைய நாடார். திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தளவாயாகவும், போர்ப்பயிற்சி அளிக்கும் கல்விக் கூடமான களரிகள் நூற்றி எட்டுக்கும் ஆயுதக் கிட்டங்கிகளுக்கும், பொறுப்பாளராகவும் திருவட்டார் நரசிம்மர் கோவில் நிர்வாக அதிகாரியாகவும் இருந்தார்.


வர்மக்கலை ஆசானாக விளங்கிய அவருக்கு மகனாக அனந்தபத்மநாபன் 1698-ஆம் ஆண்டு ஆவணி 24 அன்று பிறந்தார். இளமையிலேயே போர்ப்பயிற்சி ஆசிரியராகவும் வர்மக்கலை ஆசானாகவும் இருந்தான்.


தந்தை தாணுமாலைய நாடார் சதிகாரர்களால் கொல்லப்பட்டார். தந்தையின் அரண்மனைப் பொறுப்புகள் அனைத்தும் அனந்த பத்மநாப நாடாரின் நிர்வாகத்திற்குக் கொடுக்கப்பட்டன.

பாண்டிய மன்னர்களும், சாளுக்கிய சோழர்களும் பலநூறு ஆண்டுகளாக சேரத்தமிழ் நாட்டின் மீது படையெடுத்து, மிகுந்த பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்தனர்.


1672ஆம் ஆண்டு ஆதித்ய வர்மாவின் ஆட்சிக் காலத்தில் தலைநகர் திருவிதாங்கூரையும் கோவில்களையும் மொகலாயப் படைகள் தாக்கின. ஆதித்யவர்மா கொல்லப்படவே 1721-ல் ராமவர்மா அரியணையில் ஏறினார். 1706ல் பிறந்த மார்த்தாண்ட வர்மா சிறுவயது முதலே திருப்பாப்பூர் அரண்மலையிலிருந்தபடி ஆட்சியைக் கவனித்து வந்தார்.


1728ல் மன்னர் ராமவர்மா காலமானதும் மருமக்கள் தாய்வழியில் இளவரசர் மார்த்தாண்ட வர்மா முடிசூட்டப்படுவதற்குக் கடும் எதிர்ப்பு இருந்தது. அவரைக் கொல்லவும் சதிகள் திட்டமிடப்பட்டதால், அனந்தபத்மநாபனின் களரிகளில் இளவரசர் ஒளிந்து மறைந்து வாழ்ந்தார். அங்கேயே போர்ப்பயிற்சிகளும் பெற்றுத் தீரனானார். உள்ளுர் புரட்சியாளர்களின் சதிச் செயல்கள் மற்றும் பலவித இடர்ப்பாடுகளாலும் அலைக்கழிக்கப்பட்டு அனைத்தையும் அனந்தபத்மநாபநாடார் துணையுடன் வென்றார்.


கி.பி1729ல் மார்த்தாண்டவர்மா திருவாங்கூர் மன்னரானார்.

மன்னரான பின்னரும் பல சமுதாயச் சதிகளுக்க ஆட்பட்டு, அளவில்லாத இடையூறுகளுக்கு உள்ளானார். அத்தனைக்கும் தன்னுடனேயே இருந்து ஊண் உறக்கமின்றி, இராப்பகல் கண் துஞ்சாது வீரத்துடன் செயலாற்றி உதவிகரமாக இருந்தார். படைதளபதி அனந்தபத்மநாபநாடார்.


கி.பி.1741ல் நடைபெற்ற குளச்சல் போரில் பீரங்கிகளுடன் போரிடவந்த டச்சுக்காரர்களை தனது 108 நாடார் சிலம்பங்களின் ஆசான்மார்களையும் மீனவ சமுதாய மக்களையும் ஒருங்கிணைத்து போரிட்டு டச்சுப்படைத் தளபதி டிலனாயைக் கைது செய்தார்.


இதுவே இந்தியாவில் நடைபெற்ற முதல் சுதந்திரப் போராட்டமாகும்.


டச்சுப் படை தளபதி இயுஸ்ட்டாச்சியஸ் டிலனாயைக் கைது செய்து மன்னர் மார்த்தாண்டவர்மாவிடம் ஒப்படைத்தார்.


இப்போரை நினைவு கூரும் விதமாக குளச்சல் துறைமுகத்தில் வெற்றித் தூண் அமைக்கப்பட்டது. அது இன்றும் குளச்சலில் உள்ளது.


மேலும் கிழக்கிந்திய கம்பனியின் நேரடி வர்த்தகத்தை வேணாட்டில் அனுமதிக்காததால் சினம் கொண்ட ஆங்கிலேயர்களிடம். நாங்கள் யுத்தத்தை ஐரோப்பாவில் வைத்துக்கொள்ள தயார் என கர்ச்சித்தார். இதனால் ஆங்கிலேயர்களும் அவரது சரித்திரத்தை மறைத்தார்கள்.


1750ஆம் ஆண்டு ஆவணி 28அம் நாள் மயக்க மருந்து கலந்த விருந்து அளிக்கப்பட்டதால் மயக்கமானார் அனந்தபத்மநாபன். சதிகாரர்கள் வெட்டிக் கொல்ல முயன்றும் தப்பித்துக் குதிரையில் படுத்தபடியே சொந்த ஊருக்குச் சென்றார். வீட்டுவாசல் வரை சென்ற அவரின் உடல் அப்போது சரிந்த வீழ்ந்தது. பின்னர் நய வஞ்சகற்களின் நயவஞ்சகத்தினால் கி பி 1750 ஆண்டு மாவீரன் வீர மரணம் அடைந்தார். இதற்கு சான்றாக மாவீரனின் புகைப்படம் பத்மநாபபுரம் அரண்மனையில் உள்ளது. இவரது சமாதி தச்சன் விளையில் உள்ளது. அவர் மறைந்தாலும் அவரது புகழ் மேலோங்கி காணப்பட்டது.


குளச்சல் சண்டையில் வெற்றி பெற்றதற்காக அனந்த பத்மநாப நாடாரை பாராட்டி மன்னன் மார்த்தாண்டவர்மா ஏராளமான ஊர்களையும், விளை நிலங்களையும், ஏலாக்களையும் வழங்கினார். மேலும் அவர் பெயரில் பல நினைவிடங்களையும், பல ஊர்களுக்கு அனந்த பத்மநாபனின் பெயரையும் சூட்டினார். குமரி மாவட்டத்தில் உள்ள பத்மநாபபுரம் அரண்மனையின் பெயர் இவரை கவுரவிக்கும் விதமாக சூட்டப்பட்டது. தற்போதைய திருவனந்தபுரம் முன்பு அனந்தன்புரம் என்று தான் இருந்தது.


டச்சுபடையை வென்ற முதல் தமிழன்

வீர தளபதி மாவீரன்

அனந்த பத்மநாபன் நாடார் அவர்களின் புகழை

நயவஞ்சகர்கள் அழிக்க நினைத்தனர்.


தமிழர் புகழை எவனாலையும் அழிக்க முடியாது!!!


ஆம் தற்போது

செப்படம்பர் 13

டச்சுபடையை வென்ற முதல் தமிழனின் வீரவணக்கம்

மிக சிறப்பாக நடைபெறுகிறது!!!


தமிழர்கள் அனைவரும்

வீரவணக்கம் செலுத்தி

மாவீரனின் புகழை கொண்டாடுகின்றன!!!


தமிழர்களின் முக்கியமான

வேண்டுகோள்

டச்சுபடையை வென்ற முதல் தமிழன்,

இந்திய சுதந்திர போராட்ட மாவீரன்,

வீர தளபதி,

அனந்த பத்மநாபன் நாடார் அவர்கள்

பிறந்த தச்சன்விளையில்

மணிமண்டபம்,

மற்றும் முழு உருவ வெண்கல சிலை

வைக்க வேண்டும்

என்பது ஒட்டுமொத்த

தமிழர்களின் நீண்ட நாள் கோரிக்கை!!!


இந்த வருடம்

மாவீரனின் 267 வது

வீரவணக்க நாள்,


நாள் : 13.09.2017





.


KANDAN SANKARALINGA NADAR DIED OF HUNGER STRIKE 1956 JULY 12 - 1956 OCTOBER 13 FOR TAMILNADU NAME

 

KANDAN SANKARALINGA NADAR DIED OF HUNGER STRIKE 1956 JULY 12 - 1956 OCTOBER 13 FOR TAMILNADU NAME



கண்டன் சங்கரலிங்கனார் மதராசு மாநிலம் (மெட்ராஸ் ஸ்டேட்) என்று அழைக்கப்பட்ட பகுதிக்கு ”தமிழ்நாடு” என்று பெயர் வைக்கச் சொல்லி உண்ணாவிரதமிருந்து உயிர்விட்ட ஒரு போராளி. இவர் எந்த அரசியல் கட்சியையும் சாராதவர். 75 நாட்கள் தனது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டி தனது வீட்டின் முன் உண்ணாவிரதமிருந்து உயிர் விட்டவர். இவர் விருதுநகரை அடுத்த மண்மலை மேடு ஊரைச் சார்ந்தவர்.

வாழ்க்கை
காமராசர் படித்த பள்ளியில் படித்த இவர் வணிகத்தில் புகுந்து காங்கிரசில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்தார். நாடார் சமூகத்திற்காக அபிவிருத்திச் சங்கத்தையும் துவக்கிய இவருக்கு ராசாசி உட்படப் பலருடன் தொடர்பு ஏற்பட்டது. கதர் விற்பனையில் ஆர்வம் செலுத்திய சங்கரலிங்கம் காந்தியுடன் தண்டியாத்திரையிலும் பங்கு கொண்டிருக்கிறார். பம்பாயில் வாழ்ந்த அவர் குடும்பத்தினரைப் பிரிந்து தனித்து வாழ்ந்து தன்னுடைய சொத்துக்களை விருதுநகரில் உள்ள பள்ளிக்கு எழுதி வைத்துவிட்டார். பிறகு விருதுநகர் ஆலக்கரையில் ஒரு ஆசிரமத்தை அமைத்துத் தங்கியிருந்தபோதுதான் பொட்டி சிறீராமுலுவின் உண்ணாவிரதம் ஏற்படுத்திய பாதிப்பிலும், ம.பொ.சி.யின் தமிழரசுக் கழகம், சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்டுவதற்காகப் போராட்டம் நடத்தியதின் தூண்டுதலிலும் உண்ணாவிரதத்தை நடத்தத் திட்டமிட்டார்.

உண்ணாவிரதம்
காங்கிரஸ் அரசின் முன்பாக 1956 ஜூலையில் 12 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்தார் அவர். தனியாக மொழிவழி மாகாணம் வேண்டும். சென்னை மாகாணத்திற்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்ட வேண்டும். அரசியல் தலைவர்கள் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சாதாரண மக்களைப் போல் வாழ வேண்டும். தேர்தல் முறையில் மாற்றம் வேண்டும். தொழில்கல்வி, இந்தியா முழுவதும் மதுவிலக்கு என்று பன்னிரெண்டு கோரிக்கைகளுடன் ஜூலை 27ந்தேதி சூலக்கரை மேட்டில் தனியாளாக உண்ணாவிரதத்தைத் துவக்கினார்.அப்போது அந்த இடம் விருதுநகரிலிருந்து தூரத்தில் ஆட்கள் நடமாட்டமில்லாத பகுதியாக இருந்ததால் பொதுவுடமைக் கட்சியினரின் ஆலோசனையின் பேரில் விருதுநகர் தேசபந்து மைதானத்தில் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.அப்போதிருந்த காங்கிரஸ் அரசு சங்கரலிங்கனாரின் கோரிக்கைகளை ஏற்கவில்லை.

அதற்குள் சங்கரலிங்கனாரின் உண்ணாவிரதம் பல சலசலப்புகளை ஏற்படுத்த ஆரம்பித்துவிட்டது. ம.பொ.சிவஞானம்., அண்ணாத்துரை, காமராசர், ஜீவானந்தம் உட்படப் பல தலைவர்கள் உண்ணாவிரதத்தை நிறுத்தச் சொல்லிக் கோரிக்கை விடுத்தனர். இருந்தும் உண்ணாவிரதம் நிறுத்தப்படவில்லை.நாளாக நாளாகச் சங்கரலிங்கனாரின் உடல்நிலை மோசமானது. விருதுநகருக்குச் சென்று அவரைச் சந்தித்துப் பேசினார் அண்ணா. அப்போது தொடர்ந்து மூன்று கடிதங்களை எழுதினார் சங்கரலிங்கனார்.

“பொதுஜனங்களின் விருப்பத்திற்கு மாறாகத் தவறான வழியில், கண்மூடித்தனமாகப் போய்க் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சி ஒழிந்தே தீரும். அறிவுத் திறன் இருந்தால் திருத்திக்கொள்ளட்டும்” என்று ‘எச்சரிக்கையுடன்’ எழுதியிருக்கிறார். 76 நாட்கள்வரை அவருடைய உண்ணாவிரதம் தொடர்ந்தது. தமிழகத்தில் அப்போதிருந்த தின இதழ்களில் இதுகுறித்த செய்திகள் தினமும் வெளிவந்து கொண்டிருந்தன.[3]

மறைவு
அக்டோபர் 10ந் தேதி அன்று நிலைமை மோசமாகி சங்கரலிங்கனார் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். 13.10.1956 அன்று அவருடைய உயிர் பிரிந்தது.அப்போது சென்னை மாகாணத்தில் இந்தச் செய்தி பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சென்னை நகரக் கல்லூரி மாணவர்கள் ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தனர். மதுரை எர்ஸ்கின் மருத்துவமனையிலிருந்த சங்கரலிங்கனாரின் உடல் மதுரை தத்தனேரியில் அடக்கம் செய்யப்பட்டபோது பல கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். இறந்தபின் தன் உடலைப் பொதுவுடமைக் கட்சியிடம் ஒப்படைத்து இறுதிமரியாதை செய்ய வேண்டும் என்று தெளிவாகக் கூறினார் ,[4] அதையொட்டி அவரை அடக்கம் செய்வதில் துணை நின்றவர்கள் பொதுவுடமைக் கட்சித் தலைவர்கள். தியாகி சங்கரலிங்கனாரின் நினைவைப் போற்றும் வகையில் தமிழக‍ அரசால் விருதுநகர் ராமமூர்தி சாலையில்-கல்லூரிசாலைப் பகுதியில் ரூ 1.6 கோடியில் மணிமண்டபம் கட்டும்பணிகள் நடைபெறுகின்றன. [5].

தமிழ்நாடு பெயர் மாற்றம்
சங்கரலிங்கனாரின் ‘தமிழ்நாடு’ பெயர் சூட்டுவது குறித்த கோரிக்கைக்கு அவருடைய மறைவுக்குப் பிறகு அழுத்தம் கொடுக்கப்பட்டு பல இயக்கங்கள் அந்தக் கோரிக்கைகளை முன்வைத்தன.

1962 மார்ச்சில் நாடாளுமன்றத்தில் ‘தமிழ்நாடு’ கோரிக்கைக்காகத் தனி மசோதாவே கொண்டுவந்தபோது, அது தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து 1964 சனவரியில் சென்னை மாநிலச் சட்டமன்றத்தில் தமிழ்நாடு பெயர் சூட்டத் தீர்மானம் கொண்டுவரப்பட்டபோதும் அத்தீர்மானம் தள்ளுபடி செய்யப்பட்டது.

பின்னாளில் ஆட்சிக்கு வந்த பேரறிஞரின் அண்ணாவின் தலைமையிலான திராவிட முன்னேற்ற கழகத்தின் அரசு 1967ல் ஏப்ரல் 14 அன்று சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை ‘தமிழக அரசு’ ஆக மாறியது. அதன் தொடர்ச்சியாக 1968 சூலை 18ல் சென்னை மாநிலத்தை ‘தமிழ்நாடு’ ஆகப் பெயர் மாற்றம் செய்யும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. 23.11.1968ல் தமிழ்நாடு பெயர் மாற்ற மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.

இதையடுத்து 1.12.1968ல் தமிழ்நாடு முழுக்கப் பெயர் மாற்றம் விழாவாகக் கொண்டாடப்பட்டபோது "சங்கரலிங்கனாருக்கு நன்றியும் வணக்கமும்" தெரிவிக்கப்பட்டது.
.





சென்னை மாநிலம் தமிழ்நாடு என பெயர் மாற்றப்பட்டு, 51 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. காலத்தில் நிலைத்துவிட்ட இந்தப் பெயரை மாநிலத்திற்குச் சூட்ட பல ஆண்டுகாலப் போராட்டத்தையே நடத்த வேண்டியிருந்தது.

நவம்பர் முதலாம் நாள் தமிழ்நாடு தினமாக கடைபிடிக்கப்படுவதால், இந்த கட்டுரை மறுபடியும் வெளியிடப்படுகிறது.

1967ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் சி.என். அண்ணாதுரை, "இந்த அவையிலே இன்றைய தினம் " உறுப்பினர்களாக இருக்கின்ற ஒவ்வொருவருடைய வாழ்நாளிலும் மிகுந்த மகிழ்ச்சியையும், நல்ல எழுச்சியையும் தரத்தக்க ஒரு திருநாள் ஆகும். நீண்ட நாட்களுக்கு முன்பே வந்திருக்க வேண்டிய இந்தத் தீர்மானம் காலந்தாழ்த்தி வந்தாலும் இங்குள்ள அனைவரின் பேராதரவுடன் வருகிறது. இந்தத் தீர்மானம் எதிர்ப்பு ஏதுமின்றி நிறைவேறினால் அந்த வெற்றி ஒரு கட்சியின் வெற்றியல்ல. தமிழின் வெற்றி, தமிழரின் வெற்றி. தமிழர் வரலாற்றின் வெற்றி. தமிழ்நாட்டு வெற்றி. மேலும் இப்படி பெயர் மாற்றம் செய்வதாலேயே தனி நாடு ஆகவில்லை. இந்தியப் பேரரசின் ஒரு பகுதியாகவே நம் மாநிலம் இருக்கும். அதனால் சர்வதேச சிக்கல்கள் எழாது. நாம் இப்படி பெயர் மாற்றத்திற்குப் பேராதரவு அளித்ததற்காக எதிர்கால சந்ததியினர் நம்மை வாழ்த்துவார்கள்" என்று குறிப்பிட்டார்.

.

மெட்ராஸ் உயர் நீதிமன்றம்

அதற்குப் பின் அவர் 'தமிழ்நாடு' என்று மூன்று முறை குறிப்பிட்டதும் உறுப்பினர்கள் வாழ்க என்று மும்முறை வாழ்த்தொலி எழுப்பினார்கள்.

தமிழ் பேசும் மாநிலத்திற்கு தமிழ்நாடு என்ற பெயர் தற்போது மிகப் பொருத்தமானதாக ஒலிக்கும் இந்த காலகட்டத்தில், இந்தப் பெயருக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டு, அது ஏற்கப்படாத காலகட்டத்தைப் புரிந்துகொள்வது கடினமாகவே இருக்கும்.

சென்னை ஜார்ஜ் கோட்டையை காப்பாற்ற போரிட்ட தலித்துகள்
"மெட்ராஸ் என்ற பெயரை, தமிழ்நாடு என்று மாற்றியது மிக முக்கியமானது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் நிர்வாக வசதிக்காகச் சூட்டப்பட்ட பெயர்களையும் எல்லைகளையும் தொடர்ந்து வைத்துக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. நிர்வாக எல்லைகளையும் தாண்டிய அடையாளம் நமக்கு இருக்கிறது. அதைத் தான் இந்தப் பெயர் சுட்டிக்காட்டுகிறது" என்கிறார் தன்னாட்சித் தமிழகம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆழி. செந்தில்நாதன்.

.

மெரீனா கடற்கரை

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பா முழுவதுமே இன அடிப்படையிலும் மத அடிப்படையிலுமே தனி நாடுகளாக உருப்பெற்றன. பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் மொழி, இன அடிப்படையிலான பெயர்களையே தங்களுக்குச் சூட்டிக்கொண்டிருக்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டுகிறார் செந்தில்நாதன்.

"இதை இனவெறியாகவோ, தனித் தமிழ் வெறியாகவோ பார்க்க வேண்டியதில்லை. மெட்ராஸ் மாகாணத்தோடு இணைந்திருந்த பிற மொழி பேசும் பகுதிகள் பிரிந்துசென்றுவிட்ட நிலையில், எஞ்சியிருந்த பகுதிகள் தமிழ் பேசும் பகுதிகளாக இருந்த நிலையில் அதற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டுமென்பது நியாயமான கோரிக்கைதான்" என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் து. ரவிக்குமார்.

ஆனால், நாடு என்று வருவதாலேயே இங்கு பலர் அதை தனி நாடு என்று புரிந்துகொண்டு பேசுகிறார்கள் என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். தமிழ்நாடு எனப் பெயர் இருந்தாலும் மத்திய அரசால்தான் 60 சதவீத நிர்வாகம் நடைபெறுகிறது; இதைப் புரிந்துகொள்ளாமல் பிற மொழி பேசுபவர்கள் குறித்த வெறுப்பு இங்கு விதைக்கப்படுகிறது என்கிறார் ரவிக்குமார்.

.

தமிழகத்தில் ஆட்சியில் இருந்தபோது, சட்டமன்றத்தில் தமிழ்நாடு என்ற பெயர் மாற்றக் கோரிக்கை எழும்போதெல்லாம் அதனை தொடர்ந்து எதிர்த்துவந்த காங்கிரஸ் கட்சி 1930களிலேயே தமிழக காங்கிரஸ் கட்சி என்ற பெயரைச் சூட்டிவிட்டது.

1956ல் மொழிவாரி மாநிலங்கள் அறிவிக்கப்பட்டு, ஆந்திரா பிரிந்துசென்றுவிட்ட நிலையில் இந்தக் கோரிக்கை மிகத் தீவிரமடைந்தது. மெட்ராஸ் மாநிலத்திற்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கரலிங்க நாடார் 1956 ஜூலை 27ஆம் தேதியன்று உண்ணாவிரதப் போராட்டத்தைத் துவங்கினார். பல்வேறு தலைவர்கள் வலியுறுத்தியும் அவர் தனது போராட்டத்தைக் கைவிட மறுத்துவிட்டார். 76 நாள் உண்ணாவிரதப் போராட்டத்திற்குப் பிறகு, அக்டோபர் 13ஆம் தேதியன்று அவரது உயிர் பிரிந்தது.

தமிழரசுக் கட்சியின் ம.பொ. சிவஞானம் போன்றவர்கள் நீண்டகாலமாக பெயர் மாற்றத்திற்காகப் போராடிவந்த நிலையில், சங்கரலிங்க நாடாரின் மறைவு இந்தப் போராட்டத்திற்கு புதிய உத்வேகத்தை அளித்தது.

1957ல் தி.மு.க. முதன் முறையாக சட்டமன்றத்தில் நுழைந்தபோதே, அதனுடைய முதல் தீர்மானம் மெட்ராஸ் ஸ்டேட் என்பது தமிழ்நாடு எனப் பெயர் மாற்றப்பட வேண்டும் என்பதாகத்தான் இருந்தது. 1957 மே 7ஆம் தேதியன்று தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது 42 பேர் ஆதரவாகவும் 127 பேர் எதிராகவும் வாக்களிக்க, தீர்மானம் தோல்வியடைந்தது.
.


1961 ஜனவரியில் சோஷலிஸ்ட் கட்சியின் உறுப்பினர் பி. சின்னத்துரை மெட்ராஸ் ஸ்டேட் என்பதை தமிழ்நாடு என மாற்ற வேண்டுமென தீர்மானம் கொண்டுவந்தபோது, இது தொடர்பான விவாதத்தை முதலமைச்சர் பிப்ரவரி வரை ஒத்திவைத்தார். ஆனால், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் சட்டமன்றத்தைத் தொடர்ந்து மூன்று நாட்களுக்குப் புறக்கணித்ததையடுத்து முதலமைச்சர் காமராஜர், மெட்ராஸ் ஸ்டேட் என்பதை தமிழ்நாடு என நிர்வாகக் கடிதங்களில் குறிப்பிடுவதற்கு ஒப்புக்கொண்டது.

.
1961ல் ஒன்றுபட்ட மேற்கு வங்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவையின் உறுப்பினர் பூபேஷ் குப்தா மெட்ராஸ் மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர்சூட்டக் கோரும் மசோதா ஒன்றைக் கொண்டுவந்தார். இது குறித்து நீண்ட விவாதம் மாநிலங்களவையில் நடைபெற்றது.


.

1964ல் தி.மு.க. உறுப்பினர் ராம. அரங்கண்ணல் இது தொடர்பாக தீர்மானம் கொண்டுவரப்பட்டபோதும், அது தோற்கடிக்கப்பட்டது. இந்தத் தீர்மானத்தை எதிர்த்துப் பேசிய அமைச்சர் வெங்கட்ராமன், தமிழ்நாடு என்று சொன்னால் வெளி உலகில் இருப்பவர்களுக்கு எப்படித் தெரியும் அதுமட்டுமல்ல, மெட்ராஸ் என்று சொன்னால்தானே சர்வதேச அரங்கத்தில் கேட்கும்போது பெருமையாக இருக்கிறது என்று குறிப்பிட்டார்.


.
அப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸைப் பொறுத்தவரை, இந்தப் பெயர் மாற்றக் கோரிக்கையை ஏற்பதில் பெரும் தயக்கம் இருந்தது. தமிழ்நாடு என்ற வார்த்தையில் உள்ள நாடு என்பது தனி நாட்டைக் குறிக்குமோ என்ற அச்சம் இருந்தது. "தமிழ்நாடு என்பது நமது நாடா அல்லது இந்தியா நமது நாடா? எப்படி இதையும் நமது நாடு அதையும் நமது நாடு என்று சொல்வது" என முதலமைச்சர் பக்தவத்சலம் கேள்வியெழுப்பினார்.

தவிர, தமிழரல்லாதவர்கள் நிலை குறித்தும் அச்சங்கள் இருந்தன. இதனாலேயே காங்கிரஸ் இந்தக் கோரிக்கையில் பெரிதாக ஆர்வம்காட்டவில்லை. பெயரை மாற்றாமல் இருப்பதற்கே மக்களின் ஆதரவு இருப்பதாகவும் காங்கிரஸ் நம்பியது.


Sunday, 23 August 2020

PORAIYAR NADAR ESTATE HISTORY




PORAIYAR NADAR ESTATE HISTORY

..பொறையார் நாடார் எஸ்டேட் – கி.பி 1790 இல் தொடங்கிய வரலாறு
1790 ஆம் ஆண்டில், சீனந்தோப்பு (தூத்துக்குடி மாவட்டம் ) எனும் கிராமத்தை சேர்ந்த பெருமாள்சாமி நாடார் என்பவர் அவரது மனைவி எசக்கியம்மாலுடன், தனது சகோதரர்களுடனான தகராறு காரணமாக தனது வீடு மற்றும் சொத்துக்களை விட்டு வெளியேறினார்.

முதலில் அவர் போர்டோ நோவாவுக்கு சென்றார் (அந்த காலத்தில் போர்டோ நோவா ஒரு பிரபலமான துறைமுக நகரம், இப்போது பரங்கிபேட்டை என்று அழைக்கப்படுகிறது).

சில மாதங்கள் அங்கேயே தங்கியிருந்தார்கள், பிறகு அவர்கள், வேறு நல்ல வேலை வாய்ப்புகளைத் தேடி தரங்கம்பாடிக்கு வந்தார்கள் (தரங்கம்பாடி – டேனிஷ் கிழக்கு இந்தியக் கம்பெனியின் கட்டுப்பாட்டில் இருந்த துறைமுகநகரம், காவேரி ஆறு, வங்காள விரிகுடாவில் கலக்கும் கழிமுகத்தில், காரைக்காலுக்கு வடக்கே 15 கிமீ தொலைவில் உள்ளது).


தரங்கம்பாடியின் புறநகர்ப் பகுதியான பொறையார் எனும் கிராமத்தில் குடியேறினர். 1791 ஆம் ஆண்டில், தம்பதியினருக்கு வெள்ளையன் எனும் ஒரு மகன் பிறந்தான். வெள்ளையனுக்கு 11 வயதாக இருந்தபோது, பொறையாரில் கள்ளு இறக்கும் பனை தோப்பில் காவலராக பணியாற்றினார்.

16 வயதுக்குள் , வெள்ளையன் கள்ளு வியாபாரம் குறித்து நன்கு அனுபவம் பெற்றுயிருந்தார். அவர் தனது வேலையிலிருந்து சேமித்த சிறிய பணத்தை வைத்துக்கொண்டு, ஒரு கள்ளு கடையைத் திறக்க முடிவு செய்தார்.

கள் இறக்குவதற்கு, பனை தோப்பை குத்தகைக்கு எடுக்க போதுமான பணம் அவரிடம் இல்லை, எனவே அவர் டேனிஷ் அதிகாரிகளின் பங்களாக்களை அணுகி, தங்கள் தோட்டத்தில் உள்ள பனை மரங்களை கள் இறக்குவது பயன்படுத்த அனுமதி கேட்டார். அவர்களில் பலர் தங்கள் மரங்களை வெள்ளையனுக்காக வாடகைக்கு கொடுத்தனர் .
கள்ளு கடை நல்ல லாபம் ஈட்டியது, சில ஆண்டுகளிலேயே, அவர் தரங்கம்பாடி பகுதி முழுவதும் பல கள்ளு கடைகளைத் தொடங்கினார்.

இதற்கிடையில், தரங்கம்பாடி பிராந்தியத்திற்கு 5 ஆண்டுகளுக்கு அராக் (சாராயம்) தயாரித்து வழங்குவதற்காக டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து உரிமத்தை (ஐந்து காலா குத்தகை என அழைக்கப்படும்) வைத்திருந்த ஒரு டேனிஷ் பெண்மணி, தன் கடன்களை அடைக்க, தனது அராக் குத்தகை ஒப்பந்தத்தை ஏலம் விடுத்தார்.

வெள்ளையன் நாடார் அவரிடமிருந்து உரிமத்தைப் வாங்கி, பொறையாரில் இருந்து சாராயம் தயாரிக்கத் தொடங்கி, தரங்கம்பாடி பகுதி முழுவதுக்கும் வினியோகம் செய்தார்.


பிரிட்டிஷ் இந்தியாவில், ஒரு மாவட்டத்திற்கு, மூன்று
வருட காலத்திற்கு சாராயத்தை தயாரித்து விநியோகம் செய்ய ஏகபோக உரிமை (monopoly) வழங்கப்பட்டது.

இந்த உரிமை, ஏலத்தின் மூலம் நிர்ணயிக்கப்பட்டது.

1830 ஆம் ஆண்டில், வெள்ளைய நாடார், இந்த ஏலத்தை வென்று தஞ்சை மாவட்டத்திற்கு அப்காரி (சாராயம்) விநியோகஸ்தராக ஆனார். [1] இதன் முலம், சிறுது காலத்திலே பெரும் செல்வம் ஈட்டினார்.

இதற்கிடையில், வெள்ளைய நாடாருக்கு ஒரு மகன் பிறந்தார், அவருக்கு தவசுமுத்து என்று பெயரிடப்பட்டது. 14 வயதிலிருந்தே, தவசுமுத்து நாடார் தனது தந்தையுடன் இணைந்து தொழிலை கவனித்துக்கொண்டார்.

தவசுமுத்து நாடார், தொலைநோக்கு பார்வைகொண்டவர், அவர் தனது அப்காரி (சாராயம்) வியாபாரத்தை தென்னிந்தியா முழுவதும் விரிவாக்க விரும்பினார்.

அவர் நிறைய பயணம் செய்தார், பல்வேறு ராஜாக்கள் மற்றும் உயர் பிரிட்டிஷ் அதிகாரிகளுடன் தனது தொடர்புகளை விரிவுபடுத்தினார்.

மிகக் குறுகிய காலத்தில் தவசுமுத்து நாடார், மதுரை மாவட்டத்திற்கும், பின்னர் திருநெல்வேலி மாவட்டத்திற்கும், ராமநாடுக்கும் சாராயம் தயாரித்து விநியோகிக்கும் உரிமைகளைப் பெற்றார். மூன்று மாவட்டங்களுக்கும் சாராயம் தயாரிக்கும் திறனுடன் தச்சநல்லூரில் ஒரு பெரிய டிஸ்டில்லரியைக் கட்டினார்.


வர்த்தகத்தின் விரிவாக்கம் நாடாருக்கு மேலும் உதவியது, சில ஆண்டுகளில், தென்னிந்தியாவின் பெரும்பகுதிக்கு சாராயம் தயாரித்து விநியோகிக்கும் உரிமைகளை பெற்றார். [2]

இந்த காலகட்டத்தில், தவசுமுத்து நாடார், தஞ்சை மாவட்டதில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களை வாங்கினார். தஞ்சை மாவட்டதில்  இருந்த அருந்தவபுரம், கிடங்கல், மேலமருத்தூர், கீழ்க்குடி, காரப்பிடாகை, உலகமாதேவி கிராமங்களை வாங்கினார். [3]

தவசுமுத்து நாடாரின் எஸ்டேட்டில் 7000 ஏக்கர்க்கு மேல் விவசாய நிலங்கள் இருந்தது, இதை தொடர்ந்து, தவசுமுத்து நாடாரின் குடும்பம் மக்களால் “நாடார் எஸ்டேட்” என்று அழைக்கப்பட்டது.


தவசுமுத்து நாடார் திருவிதாங்கூர் மகாராஜாவை அணுகி, அங்கு சாராய தொழிற்சாலைகளை தொடங்க அனுமதி கோரினார், தவசுமுத்து நாடார் அப்காரி வர்த்தகத்தில் நல்ல பெயரைப் பெற்றுயிருந்ததால் , திருவிதாங்கூர் சமஸ்தானம் முழுவதுக்கும் சாராயம் தயாரித்து விநியோகம் செய்ய ஒப்பந்தம் தவசுமுத்து நாடாருக்கு வழங்கப்பட்டது. திருவிதாங்கூரில் பல்வேறு பகுதிகளுக்கு கள்ளு வியாபாரம் செய்ய ஒப்பந்தங்களையும் நாடார் பெற்றார். [4] பின்னர் கொச்சின் இராச்சியத்திற்கும் அவர் சாராயம் தயாரித்து விநியோகம் செய்ய ஒப்பந்தங்களைப் பெற்றார்.

தவசுமுத்து நாடார் வைக்கம், கண்ணன் மலை , நாகர்கோவில் மற்றும் தேவிகுளம் ஆகிய ஊர்களில் சாராய தொழிற்ச்சாலைகளை கட்டி, திருவிதாங்கூர் மற்றும் கொச்சி சமஸ்தானங்களுக்கு மதுபானங்களை தயாரிக்க தொடங்கினார். [5]

நாடார் எஸ்டேட் – 18 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய டிஸ்டில்லர்கள்
1830 ஆம் ஆண்டிலிருந்து, நாடார் எஸ்டேட், நூறு ஆண்டுகளுக்கு தென்னிந்தியாவின் மிகப்பெரிய டிஸ்டில்லர்களலக திகழ்ந்தது.

மெட்ராஸ் பிரசிடென்சி (அன்று தென்னிந்தியாவின் பெரும்பகுதியை உள்ளடக்கியது, இதில் தமிழ்நாடு, ஆந்திரா உட்பட, ஒடிசா, கேரளா மற்றும் கர்நாடகாவின் பகுதிகளை உள்ளடக்கியது), திருவிதாங்கூர் சமஸ்தானம் மற்றும் கொச்சின் சமஸ்தானம் ஆகிய பகுதிகளுக்கு சாராயம் தயாரித்து வழங்கியது நாடார் எஸ்டேட் . [6]


1830-1920 களுக்கு இடையில் பலமுறை, பொறையார் நாடார் எஸ்டேட் பின்வரும் மாவட்டங்களுக்கு சாராயம் தயாரிக்கவும் விநியோககிக்கவும் ஒப்பந்தங்களை பெற்றது [7]:

மெட்ராஸ் நகர பகுதி
மதுரை மாவட்டம் (இன்றைய மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டத்தின் சில பகுதிகளை உள்ளடக்கியது)
திருச்சி மாவட்டம் (இன்றைய திருச்சிராப்பள்ளி, கருர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களை உள்ளடக்கியது)
திருநெல்வேலி மாவட்டம் (இன்றைய திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் விருதுநகரின் சில பகுதிகளை உள்ளடக்கியது)
செங்கல்பட்டு மாவட்டம் (காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மற்றும் சென்னை நகரத்தின் சில பகுதிகளை உள்ளடக்கியது)
கிழக்கு கோதாவரி மாவட்டம்
ராம்நாடு
வட ஆற்காடு (இன்றைய சித்தூர், திருவண்ணாமலை, வேலூர், திருப்பட்டூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களை உள்ளடக்கியது)
ராயகடா மாவட்டம் (ஒடிசா)
தெற்கு கனரா மாவட்டம் (கர்நாடகாவின் தட்சிணா கன்னடம் மற்றும் உடுப்பி மற்றும் கேரளாவின் காசராகோடு மாவட்டங்களை உள்ளடக்கியது)
கோயம்புத்தூர் மாவட்டம் (இன்றைய கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களை உள்ளடக்கியது)
நாடார் எஸ்டேட், 27 டிஸ்டில்லரி (சாராய) தொழிற்சாலைகளை கொண்டுயிருந்தது [8]:



மெட்ராஸ் (தமிழ்நாடு)
தச்சநல்லூர் (திருநெல்வேலி, தமிழ்நாடு)
நாகர்கோயில் (தமிழ்நாடு)
ரெனிகுண்டா (ஆந்திரா)
பத்ராச்சலம் (தெலுங்கானா)
வைக்கம் (கேரளா)
கண்ணன் தேவி மலைகள் (கேரளா)
திருச்சூர் (கேரளா)
தேவிகுளம் (கேரளா)
ஜெய்பூர் (ஒடிசா)
மெட்ராஸ், திருவனந்தபுரம், நெல்லூர், காஞ்சிபுரம், வேலூர், மாயாவரம், திருச்சி, மதுரை, காலிகட், மங்களூர் போன்ற இடங்களில் கிடங்குகள் இருந்தன.

இதற்கிடையில், தரங்கம்பாடியில் இருந்த டேனிஷ் கிழக்கிந்திய நிறுவனம், 1800 ஆம் ஆண்டிற்குப் பிறகு அதிக லாபத்தை ஈட்டவில்லை, இந்தியாவில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் கடுமையான போட்டியின் காரணமாக, டேனிஷ் கம்பெனி படிப்படியாக முக்கியத்துவத்தை இழந்தது. 1845 ஆம் ஆண்டில், தரங்கம்பாடி பகுதி ஆங்கிலேயருக்கு விற்கப்பட்டது.

ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி, டேனிஷ் கப்பல்களை ஏலம் விடுத்தது, வெள்ளையா நாடார் அந்த ஏலத்தில் 2 கப்பல்களை 40,000 ரூபாய்க்கு வாங்கினார். நாடார் சமூகத்தைச் சேர்ந்த, கப்பல் வைத்திருந்த முதல் நபர் பொறையார் நாடார் எஸ்டேடின் வெள்ளையா நாடார் ஆவார்.

அவர் கப்பல்களுக்கு மஹாலக்ஷ்மி என்றும் பாக்யலக்ஷ்மி என்றும் என்று பெயர் மாற்றினார் [9]. பின்னர், பூம்புகாரிலிருந்த ஒரு முஸ்லீம் வர்த்தகரிடமிருந்து மற்றொரு கப்பலை (புஹார் மொய்தீன்) வாங்கினார். நாடார் எஸ்டேடின் வணிகக் கப்பல்கள், தென்கிழக்கு ஆசியா, மலேசியா மற்றும் இலங்கை முழுவதும் பயணம் செய்தன.


தொடர்ந்து, பொறையார் நாடார்கள் உப்பு வர்த்தகத்தில் இறங்கினர், அவர்கள் நாகப்பட்டினத்தில் பல ஏக்கர் உப்பளங்கள் கொண்டுயிருந்தனர் . [10]

இதற்கிடையில், வெள்ளையன் நாடாருக்கு இரண்டாவது மகன் பிறந்தார், அவருக்கு பொன்னுசாமி என்று பெயரிட்டார் (பொன்னுசாமி நாடார், நாடார் மகாஜன சங்கத்தின் முதல் தலைவர்).

டேனிஷ் முதன்முதலில் தரங்கம்பாடிக்கு வந்தபோது, ​​டேனிஷ் ஆளுநர் பொறையார் ஊரின் மையத்தில், 7 ஏக்கர் பரப்பளவில், அழகிய தோட்டத்தின் நடுவில் ஒரு மாளிகையை கட்டினார்.

“ஆளுநரின் தோட்டம்” என்று அழைக்கப்பட்ட அந்த தோட்டம், டேனிஷ் ஆளுநர் மற்றும் உயர் அதிகாரிகள் ஓய்வு எடுப்பதற்கும், களியாட்டங்களிலும் கொண்டாட்டங்களிலும் ஈடுபடுவதற்கு என்று கட்டப்பட்டது.

1865 ஆம் ஆண்டில், ஆங்கிலேயர்கள் இந்த இடத்தை விற்க முடிவு செய்தனர், வெள்ளையா நாடார் அதை 1,000 பவுண்டுக்கு விலைக்கு வாங்கினார். [11]

இந்த மாளிகை, முன்பு டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனி மற்றும் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்கு சொந்தமானதால், இந்த மாளிகையை “கம்பெனிஸ் கார்டன்” (குமினி தோட்டம்) என்று பெயரிட்டு தனது மகன் தவசுமுத்து நாடருக்கு பரிசளித்தார்.

கம்பெனிஸ் கார்டன்,  நாடார் எஸ்டேடின் அதிகாரப்பூர்வ இல்லமாக மாறியது.

1873-ல் தவசுமுத்து நாடார் அரியலூர் ஜமீன்தாரியைக் நீதிமன்ற ஏலத்தில் வாங்கி [12], அரியலூரின் ஜமீன்தார் ஆனார். அவர் நாடார் சமூகத்திலிருந்து முதல் ஜமீன்தார் ஆவார்.






பிரிட்டிஷ் மன்னர் ஏழாம் எட்வர்ட் – தவசுமுத்து நாடார் சந்திப்பு
அக்டோபர் 1875 இல், விக்டோரியா மகாராணியின் மூத்த மகன், வேல்ஸ் இளவரசரான ஆல்பர்ட் எட்வர்ட்,  (ஆல்பர்ட் எட்வர்ட் (ஏழாம் எட்வர்ட்) 1901 இல் பிரிட்டிஷ் பேரரசின் மன்னரானார்), எச்.எம்.எஸ். செராபிஸில் கப்பலில் ஏறி இந்தியாவுக்குச் வந்தார்

தனது நான்கு மாத பயணத்தின் போது, ​​இளவரசர் படகு, ரயில், வண்டி மற்றும் யானை மூலம் இந்திய துணைக் கண்டத்தின் அனைத்து மூலைகளிலும் பயணம் செய்தார். நவீன இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் மற்றும் இலங்கையின் 21 க்கும் மேற்பட்ட நகரங்கள் மற்றும் டவுன்களுக்குச் சென்ற அவர் 90 க்கும் மேற்பட்ட அரச சபைகளில் விருந்தினராக கலந்து கொண்டார்.














டிசம்பர் 11, 1875 இல், இளவரசர் எட்வர்ட் திருச்சிராப்பள்ளியை அடைந்தார்,  இளவரசரின் தஞ்சை பயணம் ரத்து செய்யப்பட்டதால்,  தஞ்சை மாவட்டத்தின் முக்கியஸ்தர்களை திருச்சி வரவழைத்து இளவரசரை சந்திக்க வைக்க ஏட்பாடு செய்யப்பட்டது.

நாடார் எஸ்டேடின் நெருங்கிய நண்பரான தஞ்சை கலெக்டர் திரு. ஹென்றி சல்லிவன் தாமஸ், ஜமீன்தார் தவசுமுத்து நாடாரை, இளவரசர் எட்வர்டுகு அறிமுகம் செய்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த பல பிரபுக்களும் கலந்துக்கொண்டனர். [13]

(திருச்சிராப்பள்ளியில் இரண்டு நாட்கள் தங்கியிருந்த இளவரசர், அருகில் இருந்த ஊர்களுக்கு விஜயம் செய்தார். அப்பொழுது வல்லம் எனும் ஊரில் இருந்த நாடார் எஸ்டேடின் அரண்மனையில் (கலெக்டரின் இல்லம்), பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் இளவரசர் எட்வர்ட் சிறிது நேரம் தங்கியிருந்தார் என்று கூறப்படுகிறது).


வெள்ளைய நாடார் தனது 85 வயதில், 1876 நவம்பரில் காலமானார்,
சாதாரண பின்னணியில்பிறந்தாலும், வெள்ளையா நாடார் தனது உழைப்பால் மெட்ராஸ் மாகாணதின் பெரும் செல்வந்தராக உயர்ந்தார். [14]

தவசுமுத்து நாடார், நாடார் எஸ்டேடின் நிர்வாக பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

தவசுமுத்து நாடார் 1880 ஆம் ஆண்டில் காரைக்காலில் ஒரு பத்திரிகையை துவங்கினர், அதற்கு “சத்தியாபிமணி” என்று பெயரிடப்பட்டது, புகழ்பெற்ற இலங்கை தமிழ் எழுத்தாளர், ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை (1858-1917) இந்த இதழின் ஆசிரியராக இருந்தார் . [15]

தவசுமுத்து நாடார் தனது மாவட்டத்தில் உள்ள மக்களின் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான ஒரு பள்ளியை துவங்கினர் . 1882-ல் “தவசுமுத்து நாடார் பள்ளி” என்ற பேருடன் பள்ளி திறக்கப்பட்டது. [16]


இலை சோறு கலாச்சாரம்

இலை சோறு என்பது ஒரு பண்டைய கலாச்சாரமாகும், அந்த நாட்களில், தென்னிந்தியாவின் பல மன்னர்கள் மற்றும் புகழ்பெற்ற பிரபுகள், தங்கள் வீடுகளில் “இலை சோறு” பழக்கத்தை பின்பற்றினர்.

இதில் அக் குடும்பத்தலைவன் சாப்பிட்ட பின், அவர் இலையில் மிதமிருந்த உணவை விரும்பியவர்கள் தாங்களே முன்வந்து சாப்பிட்டார்கள்.

தகுதியின்மேல் நடைபெறுவது இம்மாதிரி செயல்கள்.

தவசுமுத்து நாடாரின் காலத்தில், நாடார் எஸ்டேட்யில் தொடங்கியது“இலை சோறு” கலாச்சாரம். நாடார் எஸ்டேட்டில் இலை சோறு சாப்பிடுவது புண்ணியம் என்று கருதி வசதி உள்ளவர்களும் “கம்பனிஸ் கார்டன் ” வந்து இலை சோறு சாப்பிட்டார்கள்.

இந்த பழக்கம் 1939 வரை பொறையார் நாடார் குடும்பத்தில் தொடர்ந்தது. [17]

குறிப்பு: இது அடிமைப்படுத்தும் செயலோ அல்லது அவமரியாதை செயலோ அல்ல. பழங்காலத்தில் நடைமுறையில் இருந்துவந்த இதுபோன்ற பழக்கவழக்கங்களை தற்போதைய சூழ்நிலையுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டாம்.


அரசாங்கத்துக்கு பொறையார் நாடார் எஸ்டேட் செய்த உதவிகள்
அந்த காலகட்டத்தில், பல பிரபுக்களைப் போலவே, நாடார் எஸ்டேடும், இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்துக்கும், சீரான சட்ட மற்றும் நிர்வாக அமைப்புக்கு பிரிட்டிஷின் ஆட்சி தேவை என்று நம்பியது.

நாடார் ஹவுஸ்

பிரிட்டிஷ்சார், தஞ்சையின் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தை தரங்கம்பாடிக்கு மாற்ற விரும்பியபோது, ​​தவசுமுத்து நாடார் தனது தரங்கம்பாடி பங்களாவை அவர்களுக்கு உபயோகித்துக்கொள்ள குடுத்தார். 1878 ஆம் ஆண்டில், நீதிமன்றம் தஞ்சைக்கு மாற்றப்பட்டபோது, ​​நாடார் அவர்கள் இந்த வீட்டை கலைரீதியாக அலங்கரித்து, பிரிட்டிஷ் ஆளுநர்கள் மற்றும் கலெக்டர்களுக்குகான விருந்தினர் மாளிகையாக பயன்படுத்தினர்.


1902 ஆம் ஆண்டில், லார்ட் ஆம்ப்தில் மற்றும் லேடி ஆம்ப்தில் ஆகியோர் தரங்கம்பாடிக்கு விஜயம் செய்தபோது, ​​அவர்கள் இந்த வீட்டில் பொறையார் நாடார் எஸ்டேட் குடும்பத்தின் விருந்தினராக தங்கினர். [18]

வல்லம் அரண்மனை

தவசுமுத்து நாடார் 1872 ஆம் ஆண்டில், தஞ்சை மாவட்டத்தில் உள்ள வல்லம் எனும் ஊரில் ஒரு அரண்மனையை கட்டினார், அந்த அரண்மனையை தஞ்சை பிரிட்டிஷ் கலெக்டர் தாங்குவதற்கு குடுத்தார் , இது ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தஞ்சை மாவட்ட ஆட்சியர்களின் உத்தியோகபூர்வ இல்லமாக இருந்தது. [19]

மெட்ராஸ் ஆளுநர் தஞ்சை மாவட்டத்திற்குச் செல்லும் போதெல்லாம், அவர் நாடார் எஸ்டேடின் வல்லம் அரண்மனையில் தங்கியிருக்கிறார் [20] .


அரசாங்கத்தின் பயன்பாட்டிற்கான கட்டிடங்கள்

முன்னதாக, பிரிட்டிஷ் அரசாங்கம் தஞ்சையில் ஒரு ரயில் நிலையம் கட்ட முடிவுசெய்தபோது, வெள்ளைய நாடார், தனது தஞ்சை மாளிகையை அரசாங்கத்திற்கு கொடுத்தார், ரயில் நிலையத்தின் தெற்கு நுழைவாயிலில் இருந்த இந்த பங்களா, ஆங்கிலேயர்களால் ரயில்வே மருத்துவமனையாக பயன்படுத்தப்பட்டது.

தஞ்சை நகரத்தில் இருந்த இங்கிலிஷ் கிளப் மற்றும் செங்கல்பட் சப்-கலெக்டர் அலுவலகம் ஆகியவை நாடார் எஸ்டேடின் கட்டிடங்களில் இயக்கப்பட்டன. [21]

காங்கிரஸ் கட்சிக்கு நிதி உதவி

இந்தியாவின் மிகப் பழமையான தேசியக் கட்சியான இந்திய தேசிய காங்கிரஸ் 1885 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் சார்பு இந்திய அமைப்பாக நிறுவப்பட்டது.

1885 ஆம் ஆண்டில் காங்கிரஸ் தொடங்கப்பட்டதிலிருந்து 1890 களின் முற்பகுதி வரை, பொரையார் நாடார் எஸ்டேட் குடும்பம் காங்கிரஸின் முக்கிய பைனான்சியர்களில் ஒருவராக இருந்தது. [22]



தேசம் முழுவதும் தனது வர்த்தக சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற  தனது லட்சிய இலக்கை அடையும் முன்னரே தவசுமுத்து நாடார், தனது 55 வயதில் (1885 இல் தஞ்சையில்)காலமானார்!

தவசுமுத்து நாடார் தனது வாரிசுகளுக்கு தான் கற்ற வர்த்தக அனுபவம் மற்றும் நுணுக்கககளை கற்றுத்தருவதற்குள் காலமானதால், 19 வயதேயானா, அவரது முத்த மகன், இந்த தொழில் குறித்த அனுபவம் எதுவும் பெறவில்லை.

தவசுமுத்து நாடாருக்கு மூன்று மகன்கள் :

ரத்தினஸ்வாமி நாடார் 1865 – 1912
வெள்ளைத்தம்பி நாடார்
குருசாமி நாடார்
நாடார் எஸ்டேடின் நிர்வாகம், அனுபவமற்ற டி.ரத்னசாமி நாடாரின் தோள்களில் விழுந்தது.

அவரது தந்தையைப் போலல்லாமல், ரத்னசாமி நாடார், தொழிலில் குறையாகவே ஈடுபாடு கொண்டிருந்தார், மேலும் அரசியல் மற்றும் நாடார் சமூகத்தின் முன்னேற்றத்தில் அதிக அக்கறை காட்டினார்.

நாடர் மகாஜன சங்கத்தை நிறுவியதின் மூலம் நாடார் சமுதாயத்தின் முன்னேற்றத்தில் ரத்னசாமி நாடார் முக்கிய பங்கு வகித்தார் (சங்கம் குறித்து மேலும் விவரங்களுக்கு, இங்கே கிளிக் செய்யவும்) மற்றும் அவரது காலத்தில் கோவில்களில் நாடார்களின் உரிமையை நிலைநாட்டியது பொறையார் நாடார் எஸ்டேட் (கோவில் அரசியல் குறித்து மேலும் விவரங்களுக்கு, இங்கே கிளிக் செய்யவும்) .

சங்கம், கோவில் அரசியல் மற்றும் அவரது காலத்தில் அவர் மேற்கொண்ட பல்வேறு பொது நல சேவைகள் ஆகியவையால் நாடார் எஸ்டேட் பெருமளவு செல்வத்தை இழந்தது. ரத்தினசாமி நாடாரின் நிர்வாகத்தின் கீழ், அத்தகைய செலவினங்களுக்காக அவர் அதிக கடன்களையும் வாங்கினார்.

1911 ஆம் ஆண்டில், சமுதாயத்துக்கு அவர் செய்த சேவைகளை அங்கீகரித்து, ரத்தினசாமி நாடருக்கு “ராவ் பகதூர்” பட்டம் வழங்கப்பட்டது. [23]

டி. ரத்தினசாமி நாடார் 1912 இல் காலமானார். முன்னதாக, 1907 இல், தவசுமுத்து நாடாரின் இரண்டாவது மகன் வெள்ளைத்தம்பி நாடார் காலமானார். எனவே தவசுமுத்து நாடரின் மூன்றாவது மகன் டி. குருசாமி நாடார் 1912 முதல் நாடார் எஸ்டேட்டின் நிர்வாகத்தை ஏற்றுக்கொண்டார்.


அவர் நாடார் எஸ்டேட் குடும்பத்தின் ஒரே மூத்தவர் என்பதால், அவர் எஸ்டேட் மற்றும் வணிகங்களை நிர்வகிக்க கடுமையாக பாடுபட வேண்டியிருந்தது. அரியலூரின் ஜமீன்தாராகவும் பொறுப்பேற்ற குருசாமி நாடார் தனது முன்னோர்களைப் போலவே மிகுந்த கவனத்துடன் வணிகத்தை நிர்வகித்து, தென்னிந்தியாவின் பெரும்பகுதிக்கு அப்காரி (சாராயம) ஒப்பந்தங்களைப் பெற்றார்.

முதலாம் உலகப் போர் மற்றும் நாடார் எஸ்டேட் மீதான அதன் தாக்கம்
முதலாம் உலகப் போர் இந்தியாவின் அரசியல் மற்றும் பொருளாதார சூழ்நிலைகளில் குழப்பத்தை உருவாக்கியது. பிரிட்டிஷ் போர் நடவடிக்கைகளுக்காக இந்தியாவில் இருந்து ஏராளமான அடிப்படை பொருட்கள் அனுப்பப்பட்டன. இது உணவுப் பொருட்களுக்கான தேவை, பரவலான உணவு பஞ்சம் மற்றும் பணவீக்கத்திற்கு வழிவகுத்தது.

இதற்கிடையில், நாடார் எஸ்டேட் தென்னிந்தியாவின் மிகப்பெரிய டிஸ்டில்லராக இருந்தது [24], மெட்ராஸ், மதுரை, ராம்நாட், திருநெல்வேலி மற்றும் திருவிதாங்கூர் மற்றும் கொச்சின் சமஸ்தானம் உள்ளிட்ட தென்னிந்தியாவின் கிட்டத்தட்ட 70% பகுதிக்கு சாராயம் தயாரித்துத்தர உரிமையைக் கொண்டிருந்தது.

1917 ஆம் ஆண்டில், ஜமீன்தார் டி. குருசாமி நாடார், இந்த மாவட்டங்களுக்கு மூன்று ஆண்டு காலத்திற்கு ஒரு நிலையான விலையில் சாராயம் விநியோகம் செய்ய ஒப்பந்தங்களை பெற்றுயிருந்தார், ஆனால் போருக்குப் பிந்தைய பொருளாதார குழப்பத்தால் மூலப்பொருட்களின் விலை உயர்ந்தது. 1920 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், ஒப்பந்தங்கள் நிர்ணயிக்கப்பட்டபோது இருந்த விலையை விட இரண்டு மடங்கு அதிகமாக இருந்தது, நாடார் எஸ்டேட் அவர்கள் தயாரித்த ஒவ்வொரு கேலன் மதுபானத்திலும் ஒரு ரூபாய் நான்கு அனா இழந்தது! [25]


இதை அரசு அங்கீகரித்து ரூ. 2,15,000 (அந்த காலகட்டங்களில் இது பெரிய தொகை). ஆனால் இழப்பு ஒப்பீட்டளவில் மிக அதிகமாக இருந்தது. நாடார் எஸ்டேட் கிட்டத்தட்ட திவாலானது. [26]

குருசாமி நாடார் 1920 நவம்பரில் இந்த இழப்பீட்டைப் பெற்றார். அவருக்கு இழப்பீடு தந்தத்துக்கு நன்றி தெரிவிப்பதற்கும் அடுத்த கால ஒப்பந்தங்களைப் பற்றி விவாதிப்பதற்கும் அடுத்த நாள் மெட்ராஸ் ஆளுநருடன் ஒரு சந்திப்பு இருந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இரவில் அவருக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.

முழு நாடார் எஸ்டேடின் நிர்வாகமும் இளைஞரான டி.வி.பாலகுருசாமி நாடாரின் தோள்களில் விழுந்தது. இவர் டி.வெள்ளைத்தம்பி நாடாரின் மகன்.

பிரிட்டிஷ் பேரரசின் மன்னருடன் டி.வி.பாலகுருசாமி நாடார்
வேல்ஸ் இளவரசர், எட்வர்ட் (பின்னர் பிரிட்டிஷ் பேரரசின் மன்னரான எட்டாம் எட்வர்ட்) அக்டோபர் 1921 முதல் மார்ச் 1922 வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்தார்.

ஜனவரி 13, 1922 இல், இளவரசர் மெட்ராஸ் வந்தடைந்தார், இங்கு அவர் 4 நாட்கள் தங்கியிருந்தார். இளவரசருக்காக அரசாங்க இல்லத்தில் ஒரு விருந்து நடைபெற்றது, இதில் இளவரசருடன், பிரிட்டிஷ் உயர் அதிகாரிகள், இந்திய இளவரசர்கள் மற்றும் ஜமீன்தார்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் ஜமீன்தார் டி.வி.பாலகுருசாமி நாடாரும் கலந்து கொண்டார். இவ் விருந்தின் பொது, இளவரசருக்கு, பாலகுருசாமி  நாடார், பொறையார் நாடார் எஸ்டேடின் சார்பாக, மரகத கற்கள் பதித்த ஒரு கைத்தடியை காணிக்கையாக தந்தார்.


1921 ஆம் ஆண்டில், பாலகுருசாமி நாடார் தலைமையில், நாடார் எஸ்டேட் தென்னிந்தியாவில் வெகு சில மாவட்டங்களுக்கு மட்டுமே அப்காரி உரிமையையே தக்க வைத்துக் கொள்ள முடிந்தது. பல மாவட்டங்களை அதன் போட்டியாளர்களிடம் இழந்தது. எஸ்டேட்டின் பிரச்சினைகளைத் தீர்க்க தன்னால் முடிந்தவரை பாலகுருசாமி நாடார் முயன்றார், ஆனால் அந்த நேரத்தில், நாடார் எஸ்டேட்டின் நிலைமை மிகவும் சிக்கலான நிலைமையில் இருந்தது.


இந்த இழப்பு பொறையார் நாடார் எஸ்டேட்டின் குடும்பத்தில் குழப்பத்தை உருவாக்கியது, டி.ரத்தினஸ்வாமி நாடார் மற்றும் டி. குருசாமி நாடார் ஆகியோரின் மகன்கள், டி.வெள்ளைத்தம்பி நாடார் மகன்களுக்கு (டி.வி.பாலகுருசாமி நாடார் மற்றும் அவரது சகோதரர்கள்) எதிராக பாகபிரிவினை கோரி வழக்கு தொடர்ந்தனர்.

அந்த காலத்தில் மிகவும் பிரபலமான இந்த வழக்கு கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக நீடித்தது. நீதிமன்றம், பொறையார் நாடார் எஸ்டேட்-ஐ நிர்வகிக்க ரெஸிவேர்ஸ்-களை நியமித்தது.

ரிஸிவெர்ஸின் நிர்வாகத்தின் கீழ், நாடார் எஸ்டேட், 100 வருடங்களா தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த அப்காரி ஒப்பந்தங்கள் அனைத்தையும் இழந்தது.


இந்த வழக்கு மிகவும் கசப்பான அனுபவங்களை தந்தது. பல வருடங்களாகவே, நாடார் எஸ்டேட் கடன்களால் பெரிதும் பாதிக்கப்பட்டுஇருந்தது, இருப்பினும், நாடார் எஸ்டேட்டின் வீழ்ச்சிக்கு அவர் ஒருவரே கரணம் என்று பரவலாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் டி.வி.பாலகுருசாமி நாடார், மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டு 1929 ஜூலை 5 ஆம் தேதி தனது இல்லமான “கும்பினி தோட்டத்தில்” தற்கொலை செய்து கொண்டார்!

1937 ஜூலை 30 ஆம் தேதி, நாடார் எஸ்டேட்டின் சொத்துக்களை ஏலத்தில் விற்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது, அதில் தவசமுத்து நாடரின் குடும்பத்தின் உறுப்பினர்களுக்கு மட்டுமே ஏலம் எடுக்க உரிமை தரப்பட்டது (அதாவது இது ஒரு பொது ஏலம் அல்ல, தனியார் ஏலம்) செப்டம்பர், 1937 இல் ஏலம் நடந்தது.








அதைத் தொடர்ந்து, பொறையார் நாடார் எஸ்டேட்டின் குடும்பங்கள் மீண்டும் ஒன்றிணைந்தன, ஒருவருக்கொருவர் நல்ல உறவைப் பேணி வந்தனர்.


ஜமீன்தார் குருசாமி நாடாரின் சந்ததியினர் இப்பொழுது நாடார் எஸ்டேட்டின் பூர்வீக இல்லமான “கும்பினி தோட்டத்தில்” வாழ்ந்து வருகிறார்கள்.








.