VASANTHAMALIGAI 100 TH DAY CELEBRATION
VASANTHAMALIGAI 100 TH DAY CELEBRATION வசந்த மாளிகை (டெல்டா மாவட்டங்களில் வெற்றி பவனி) வசந்த மாளிகை TT ஏரியா என்றழைக்கப் படும் திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் மட்டும் திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மாயவரம் ( மயிலாடுதுறை) ஆகிய நான்கு நகரங்களில் 100 நாட்களைக் கடந்ததை முன்னிட்டு அந்த ஏரியா விநியோகஸ்தர் ஒரே நாளில் நான்கு ஊர்களிலும் 100-வது நாள் விழா கொண்டாட ஏற்பாடு செய்தார். அதன்படி முதல் நாள் இரவு 8 மணிக்கு எழும்பூரிலிருந்து ரயிலில் நடிகர் திலகம், வாணிஸ்ரீ, ராமாநாயுடு, பாலமுருகன், கே.வி.மகாதேவன், நாகேஷ்.வி.கே.ஆர்., மேஜர் , ஸ்ரீகாந்த், ரமாப்ரபா உள்ளிட்டோர் புறப்பட்டு காலையில் திருச்சி போய் சேர்ந்தனர். (சாந்தகுமாரி, பாலாஜி வரவில்லை). திருச்சி ஓட்டலில் ஓய்வுக்குப் பின் இரண்டு சொகுசு பஸ்களில் புறப்பட்ட அனைவரும் திருச்சி ராஜா தியேட்டரில் காலைக் காட்சி இடைவேளையிலும், தஞ்சாவூர் ஜூபிடர் தியேட்டரில் மாட்னி காட்சி இடைவேளையிலும் , கும்பகோணம் ஜூபிடர் தியேட்டரில் மாலைக் காட்சி இடைவேளையிலும், மாயவரம் அழகப்பா தியேட்டரில் இரவுக் காட்சி இடைவேளையிலும் நடைபெற்ற 100-வது நாள் விழாவில் கலந்து க...