MYNAVATHI ,SOUTH INDIAN ACTRESS BORN 1935 JULY 26 - 2012 NOVEMBER 10
MYNAVATHI ,SOUTH INDIAN ACTRESS BORN 1935 JULY 26 - 2012 NOVEMBER 10 தமிழில், ‘மாலையிட்ட மங்கை’ படத்தில் டி.ஆர்.மகாலிங்கம் ஜோடியாக நடித்தவர் மைனாவதி. BORN JULY 26,1935 மைனாவதி கர்நாடகத்தை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் அம்மாவென்று அழைக்காத உயிரில்லையே என்கிற ரஜினி படப் பாடலில் ரஜினிக்கு அம்மாவாக நடித்த நடிகை பண்டரிபாயின் இளைய சகோதரி. மைனாவதி நடிகர் திலகம் நடிகவேள் எம் ஆர் ராதா இவர்களுக்கு ஜோடியாக நிறைய படங்களில் நடித்து இருக்கிறார். பழம் பெரும் நடிகைகளில் பலரும் பரதநாட்டியம், குச்சுப்பிடி என்று கலைகளில் தேர்ச்சி பெற்றவர்களாகவே இருப்பார்கள் அப்படி நடனத் திறமையுடன் நடிக்க வந்தவர்களில் நடிகை மைனாவதியும் ஒருவர். அவர் மறைந்தாலும் அவர் நடித்த செந்தமிழ் தேன்மொழியாள் பாடல் காட்சி இனி வரும் இளைய சமுதாயத்தையும் தன்னகத்தே ஈர்க்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை என்றே பல தரப்பினரின் கருத்தாக இருக்கிறது. ‘செந்தமிழ் தேன் மொழியாள்’ என்ற பாட்டுக்கு ஆடி புகழ்பெற்றார். ‘வண்ணக்கிளி’ படத்தில் பிரேம் நசீருக்கு ஜோடியாக நடித்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட 500 படங்களுக்கு...