Posts

Showing posts with the label TORNED

INDIA TORNED IN TO INDIA -PAKISTAN

Image
INDIA TORNED IN TO INDIA -PAKISTAN .காலணி நாடான இந்தியா, பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்று, அதன் பின்னர் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நிகழ்ந்தது. தற்போது, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் 70-ஆவது சுதந்திர தினம் நெருங்குகிறது. இந்நிலையில், பிரிட்டன் ஆட்சியில் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்று, இரு நாடுகளாக பிரிந்தபோது ஏற்பட்ட குழப்பம், அதிர்ச்சி அவற்றின் நீங்காத விளைவுகள் ஆகியவற்றை அலசும் பிபிசி ஆய்வின் இரண்டாம் பாகம் இது. இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை: 70 ஆண்டுகளுக்குப் பிறகும் நீங்காத வலி சுதந்திரம் என்பது மகிழ்வான நினைவாக இருந்தாலும், சந்தோசமாக கொண்டாடப்பட்டாலும், பிரிவினை என்பது நினைத்த மாத்திரத்திலேயே வருத்தத்தை கொடுப்பது. இது 70 வருடங்கள் பழமையான கதை என்றாலும் பிரிவினை இன்றும் வேதனையை ஏற்படுத்துவது. இந்தியா சுதந்திரம் பெற்றபோது, இரண்டாக பிரிக்கப்பட்டது. இந்தியா - பாகிஸ்தான் பிரிவு வரலாற்றின் சில முக்கிய துளிகள் இவை. 1885 டிசம்பர் மாதம் மும்பையில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசின் முதல் கூட்டத்தில் இருபது ஆண்டுகளில் முதன்முறையாக விடுதலை வேண்டும் என்று கோரிக்...