DANGER OF BLUE FILMS
DANGER OF BLUE FILMS அபாய எச்சரிக்கை - இ.டி.ஹேமமாலினி நீல நிறம் என்றால், கடல், ஆகாயம் தான், சட்டென்று நினைவுக்கு வரும். கொஞ்சம் பழைய ஆட்களுக்கு, நீலம் என்றால், வெள்ளை சட்டையில் கலந்த வர்ணம், மாம்பழம், பள்ளி சீருடை, சினிமா பாடலில் வந்த, 'நீல நிறம்... வானுக்கும், கடலுக்கும் நீல நிறம்' என்ற வார்த்தைகள் நினைவுக்கு வரும். ஆனால், இன்றைய புதிய, இளம், இணையதள தலைமுறையினருக்கு, நீல நிறம் என்றால், அவர்கள் நினைவுக்கு வருவது, நீலப்படம் என அழைக்கப்படும், 'புளூ பிலிம்' என்றாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் வரை கூட, புளூ பிலிம்களை பார்ப்பது, அந்த படங்களை, 'வீடியோ' கேசட், புத்தகங்களாக வைத்திருப்பது அநாகரிகம், அசிங்கம், ஆபத்தானது என்ற எண்ணம் வலுவாக இருந்தது. எனினும், ஒரு சிலர், அவ்வப்போது மறைவாக அந்த படங்களை பார்த்து வந்தனர். அந்த அளவுக்குத் தான் அப்போது, வசதி, வாய்ப்பு இருந்தது. ஆனால், இப்போது, எல்லாமே தலை கீழ், 'சுனாமி' வந்து புரட்டி போட்டது போல ஆகி விட்டது. புளூ பிலிம் ஆபாச வீடியோ படங்கள், இணையத்தில் லட்சக்கணக்கில் உள்ளன. இன்டர்நெட் இணைப்பு, 24 மணி நேரமும் உள்ள, ...