Posts

Showing posts with the label JOTHILAKSHMI

JOTHILAKSHMI ,ITEM DANCER BORN 1948 NOVEMBER 2 - 2016 AUGUST 8

Image
JOTHILAKSHMI ,ITEM DANCER  BORN  1948 NOVEMBER 2 - 2016 AUGUST 8 பழம்பெரும் நடிகை ஜோதி லட்சுமி மரணம்' காலையில் அலுவலகம் வந்து  முகப்புப் பக்கத்தை திறந்ததும் கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவில் இருந்த ஜோதிலட்சுமி இன்று சென்னையில் அவரது இல்லத்தில் காலமானார். அவரது வயது 68, இன்று பிற்பகல்  4 மணி  அளவில் கண்ணம்மாபேட்டை மயானத்தில் அவரது தகனம் நடைபெறும் என்று கூறப்படுகிறது. பெரிய இடத்துப் பெண்' திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமான ஜோதிலட்சுமி தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் சுமார் 300 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து தனது நடனம் மற்றும் நடிப்பின் மூலம் ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த நடிகையானார். எழுபதுகளில் எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் தொடர்ந்து ஜோதிலக்‌ஷ்மிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு பல ஹிட் பாடல்கள் அவரது நடனத்துடன் வெளிவந்தன. நடிப்பு மட்டுமன்றி இவர் தனது சகோதரியும் நடிகையுமான  விட்டலாச்சார்யா படப் புகழ் ஜெயமாலினியுடன் இணைந்து படத்தயாரிப்பிலும் ஈடுபட்டிருந்தார். இவரது நடிப்பில் ரசிகர்களி...

JOTHILAKSHMI - INTRODUCTION

Image
JOTHILAKSHMI - INTRODUCTION அடிக்கரும்பாய் இனித்த ‘யாரடி வந்தார்!’ முப்பதுகளில் நடிக்கத் தொடங்கிய பழம்பெரும் நடிகை எஸ்.ஆர். ஜானகி முதல் வாண்டுப் பையன் கமலஹாசன் வரை ஒவ்வொரு பத்தாண்டுக்கும் சில நடிகர்கள் இருந்த ‘வானம்பாடி’யில், கமலஹாசனை விட ஒரு சில வருடங்கள் மட்டுமே பெரியவளான ஒரு இளம் நடிகை யும் இடம்பெற்றிருந்தாள்.... அவள்தான் ஜோதிலட்சுமி. பின்னாளின் கவர்ச்சி நடனப்புயல்! ‘யாரடி வந்தார், என்னடி சொன்னார் ஏனடி இந்த உல்லாசம்’ என்று ‘வானம்பாடி’யில் ஒய்யாரமாக வயதுக்கு மேற்பட்ட வசீகரங்களுடன் ஜோதிலட்சுமி ஆடிக்கொண்டு வருவதைப் பார்த்தால், படத்தின் குட்டிப் பயலை விட அவருக்கு நான்கு வருடங்கள்தான் அதிகம் என்று நம்பமுடியாது! ‘காளமேகம்’, ‘பிரபாவதி’ போன்ற பழைய படங்களின் கதா நாயகி நடிகையான எஸ்.பி.எல். தனலட்சுமி, அவருடைய தாயார். டி.ஆர். ராஜகுமாரி அவருக்கு சின்ன தாயார் முறை என்கிற அதிரவைக்கும் பின்னணிகள் ஒரு பக்கம் இருந்தாலும், 13 வயதில் பருவமங்கையாகத் திகழ்ந்த ஜோதிலட்சுமியை ஒரு அருமையான பாடலுக்கு நடனம் ஆட வைத்த பெருமை கண்ணதாசனைத்தான் சாரும்! அதுவும், நடனப்பெண் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அ...