Posts

Showing posts with the label GORKEY

MAXIM GORKEY RUSSIAN WRITER BORN 1868 MARCH 28 -1936 JUNE 18

Image
  MAXIM GORKEY RUSSIAN WRITER  BORN  1868 MARCH 28 -1936 JUNE 18 மாக்சிம் கார்க்கி (Maxim Gorky) என அறியப்படும் அலெக்சி மாக்சிகொவிச் பெசுகோவ் (உருசியம்: Алексе́й Макси́мович Пешко́в; 28 மார்ச் [யூ.நா. 16 மார்ச்] 1868 – 18 சூன் 1936) உருசியா நாட்டை சேர்ந்த பிரபல எழுத்தாளர் மற்றும் அரசியல்வாதி.[1] இவர் உலகின் மிகச் சிறந்த புதினங்களில் ஒன்றாகக் கருதப்படும் தாய் என்ற புதினத்தை எழுதினார். வாழ்க்கை மாக்சிம் கார்க்கி குருசியாவில் நிஜினி நவ்கரோட் என்ற ஊரில் ஏழ்மையான குடும்பத்தில் 1868இல் பிறந்தார். இயற்பெயர் அலெக்சி மாக்சிமோவிச் பெஷ்கோவ். இவருடைய 5 ஆவது வயதில் வயதில் தந்தை இறந்தார். தந்தையார் ஒரு தச்சர். தாயின் ஆதரவும் இல்லாத இவரை இவரின் பாட்டிதான் வளர்த்தார். 1879 இல் இவருடைய தாய் இறந்தார். வறுமை காரணமாக பள்ளிப் படிப்பு அவ்வளவாக கிடைக்கவில்லை. 8 வயதிலேயே வேலைக்குச் சென்றார். வேலை செய்துகொண்டே தானாகவே முயன்று கல்வி கற்றார். உருசிய, பிரெஞ்சு, இத்தாலி, ஆங்கிலம், செருமனி ஆகிய மொழிகளைக் கற்றார். வாழ்க்கைத் துணைவி 1896ஆம் ஆண்டு அச்சுப்பிழை திருத்துவதில் துணைவராக இருந்த ஏகடரினா பவ்லோவ்...

JEYAKANTHAN , MAXIM GORKEY OF INDIA

Image
WRITER JEYAKANTHAN ,  MAXIM GORKEY OF INDIA APRIL 24,1934 - APRIL 8,2015 எழுத்தாளர் ஜெயகாந்தன். விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையினை யதார்த்தமாக எழுத்துக்கள் மூலம் உலகுக்கு தெரியப்படுத்திய எழுத்தாளர் ஜெயகாந்தன். சமூக அநீதி, பொருளாதார ஏற்றத்தாழ்வு குறித்து ஆழமான சிந்தனைகளை எழுத்துக்களாக பதித்த மாபெரும் இலக்கியவாதி இயற்கை எய்தியுள்ளார். கம்யூனிச சித்தாந்தம் கொண்ட எழுத்தாளர் கடலூர் மஞ்சக்குப்பம் என்ற ஊரில் 1933ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி ஜெயகாந்தன் பிறந்தார். பத்து வயதுச் சிறுவனாக இருக்கும்போதே மூவர்ணக் கொடி பிடித்து பாரதியாரின் தேசிய எழுச்சி மிக்க பாடல்களைப் பாடிக்கொண்டு தெருவில் சென்றவர். பள்ளி சென்று பயிலாத ஜெயகாந்தன், 14வது வயதிலேயே சொந்த ஊரை விட்டு சென்னைக்கு வந்தார். சௌபாக்கியம் என்ற இதழில் ஆசிரியராக இருந்த பி.சி.லிங்கம் என்ற புலவரிடம் தமிழ் இலக்கிய கற்றுக்கொண்ட இவர், தமிழ்ப் புலவர் சொக்கலிங்கத்திடம் முறையாக மொழியறிவை வளர்த்துக்கொண்டார். ஜெயகாந்தன் எழுதிய முதல் சிறுகதை சௌபாக்கியம் என்ற இதழில் 1950ல் வெளிவந்தது. வசந்தம், மனிதன் உள்ளிட்ட இதழ்களில் சிறுகதை ...