Posts

Showing posts with the label DECORATES

WHO DECORATES DEAD BODY

Image
  WHO DECORATES DEAD BODY பிரேதத்தை அலங்கரிப்பவள் கதையாசிரியர்: டாக்டர் நடேசன் கதைத்தொகுப்பு: சமுகநீதி கதைப்பதிவு: February 1, 2014 உங்களுக்குத் தெரிந்த மனிதர் யாராவது உயிர் வாழ்ந்த போதிலும் பார்க்க ஒரு இறந்தபின்பு அழகாக தோற்றமளித்தாரா? அப்படி ஒரு ஏதாவது சந்தர்ப்பத்தில் இறந்து போன ஒருவரை பார்த்தவுடன் அவ்வாறு நீங்கள் நினைத்திருக்கிறீர்களா? இது சிக்கலான கேள்வி நான் நினைப்பதை நீங்கள் புரிந்து கொள்ள விரும்பினால் அதுபற்றி விரிவாக கூறவேண்டும். எனது வேலைத்தலத்துக்கு அருகே பெரிய மயானம் இருக்கிறது. அது நமது ஊர் மயானம் போல் அல்ல யாழ்ப்பாணத்து கோம்பயன்மணல் மாதிரியாக நாலு ஆலமரங்கள் சில அலரிமரங்கள் இடைக்கிடையே ஆமணக்கு பற்றை என்பன வளர்ந்திருக்கும் இடமாக ஒரு சில ஏக்கர் விஸ்திரணத்தில் இல்லை. அதற்கு மாறாக இது பல கிலோமீட்டர் அகல நீளமான அழகிய பூந்தோட்டம். யுகலிக்கப்ரஸ் மரங்களில் இருந்துவரும் கற்பூரவள்ளி நறுமணம் நிறைத்த காற்று சுவாசத்தை நிறைத்தபடி இருக்கும்.உயரமான மரங்கள் இடையே புகுந்து சங்கீதம் ஒலிக்கும் காற்று, குளிர்காலத்தில் உடல்மீது குளிரை வாரியிறைத்துச் செல்லும். இரண்டு பெரும் நெடும்சாலைகளுக்கு ...