Showing posts with label HOT. Show all posts
Showing posts with label HOT. Show all posts

Sunday, 17 May 2020

CHARMI , HOT TELUGU ACTRESS BORN 1987 MAY 17


CHARMI , HOT TELUGU ACTRESS 
BORN 1987 MAY 17

பிரபல நடிகை சார்மி 1987 மே 17 இல் பிறந்தார்

பிரபலர் தெலுங்கு இயக்குனருடன் இணைந்து சார்மி தயாரித்த படம் தோல்வியடைந்ததால், அவருக்கு ரூ.12 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம்.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை சார்மி. தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த அவருக்கு சினிமா வாய்ப்பு குறைய குத்து பாடலுக்கு நடனம் ஆடி வந்தார். இந்த நிலையில், பிரபல தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகனாத்துடன் இணைந்துமெக்பூபா என்ற தெலுங்கு படத்தை தயாரித்தார். இப்படத்தை பூரி ஜெகனாத் இயக்கினார். இப்படத்தில் அவரது மகன் ஆகாஷ் பூரி ஹீரோயினாக நடித்தார். கடந்த வாரம் வெளியான இப்படம் நல்ல வசூல் குவிக்கும் என்று எதிர்பார்த்த சார்மிக்கு பலத்த ஏமாற்றம் தான் மிஞ்சியது. ரூ.18 கோடி பொருட்செலவில் எடுக்கப்படட் இப்படம் மிகப்பெரிய தோல்வியைத் தான் தழுவியது. இதன் காரணமாக சார்மிக்கும், பட இயக்குனர் பூரி ஜெகனாத்துக்கும் ரூ.12 கோடி நஷ்டம் ஏற்படுள்ளதாக தெலுங்கு திரையுலகில் தகவல் வெளியாகி வருகிறது.ஹைதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் இருந்த வீடு மற்றும் சொத்துக்களை விற்றுத்தான் இப்படத்தை எடுத்ததாக பூரி ஜெகநாத் கூறியிருந்தார். இந்த நிலையில், இந்த தோல்விக்குப் பிறகு இனிமேல் தயாரிப்பு வேண்டாம் என்று முடிவு செய்துவிடுவார் என்று கூறப்படுகிறது.


இனிமேல் படங்களில் நடிக்கப்போவதில்லை என்று நடிகை சார்மி திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.இனிமேல் படங்களில் நடிக்கப்போவதில்லை என்று நடிகை சார்மி திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

தெலுங்கு சினிமாவில் கடந்த 2002ம் ஆண்டு நீ தோடு காவாலி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சார்மி. இப்படத்தைத் தொடர்ந்து சிம்பு நடிப்பில் வந்த  அழிவதில்லை என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி பிரபலமானார். படு கவர்ச்சியாக நடித்து வந்த சார்மி தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வந்தார். கடந்த 17ம் தேதி தனது 32 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார்.

இந்த நிலையில், கடந்த வாரம் த்ரிஷாவின் பிறந்தநாளன்று வாழ்த்து கூறிய சார்மி, நாம் திருமணம் செய்து கொள்ளலாமா? இப்போது தான் ஓரினச் சேர்க்கையை அரசாங்கமே அனுமதிக்குதே என்று கேட்டு பலரையும் அதிர்ச்சியடைச் செய்தார்.

அண்மையில் போதைப் பொருட்கள் பயன்படுத்துபவர்கள் பட்டியலில் சினிமா பிரபலங்கள் பெயரும் அடிபட்டதாக தகவல் வெளியானது. இதில், சார்மியின் பெயரும் அடிபட்டது. இதையடுத்து போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதனால், மனமுடைந்த சார்மி மனம் வெறுத்துப்போய் சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளதார் என்று தகவல் தெரிவிக்கின்றது.

அதோடு, தயாரிப்பாளர் பணியை தொடரயிருப்பதாக ரசிகர்களுக்கு ஒரு ஆறுதல் செய்தியை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.





கணவனுக்கு கட்டுப்பட்டு வாழ முடியாது என்பதால் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று பிரபல நடிகை சார்மி வெளிப்படையாக கணவனுக்கு கட்டுப்பட்டு வாழ முடியாது என்பதால் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று பிரபல நடிகை சார்மி வெளிப்படையாக பேசியுள்ளார்.

தமிழில் காதல் அழிவதில்லை படத்தில் சிம்பு உடன் கதாநாயகியாக அறிமுகமானவர் சார்மி. தமிழில் குறைவான படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், சார்மி தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளார்.



பல ஆண்டுகளாக தெலுங்கு திரையுலகில் ஸ்டார் அந்தஸ்த்தில் இருக்கும் இவர் தற்போது பிரபல தெலுங்கு பட இயக்குநர் பூரி ஜெகன்நாத்துடன் இணைந்து தயாரிப்பு கம்பெனி தொடங்கி படங்களை தயாரித்து வருகிறார்.

இதனால் இவர்கள் இருவருக்குமிடையில் காதல் என்று பல செய்திகள் டோலிவுட்டில் உலா வருகின்றன. இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்துள்ள சார்மி, தனிமையில் வாழ்வதை விரும்புவதாகவும் அதனால் திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் “என்னை வீட்டில் பையன் மாறி வளர்த்தனர், அதனால் நான் சுதந்திரமானவள். இயற்கையாகவே நான் துணிச்சல் நிறைந்த பெண். தனிமையில் வாழ்வதை விரும்புகிறேன். திருமணம், காதை ஆகியவற்றை வெறுக்கிறேன்” என்று சார்மி கூறியுள்ளார்.



திரைப்பட தயாரிப்பில் ஆர்வமுள்ளதால், பூரி ஜெகன்நாத்துடன் இணைந்து படங்களை தயாரித்து வருவதாக கூறும் சார்மி, தன்னை பற்றி மற்றவர்கள் நினைக்கும் கருத்துகளுக்கு பதில் கூற முடியாது. வாழ வாழவிடு என்பது தான் தன் சித்தாந்தம் என்றும் அவர் தெரிவித்தார்.

பணம் தான் இன்றைய வாழ்க்கையில் பாதுகாப்பு. இன்றைய மனித தேவைகளுக்கு பணம் தான் பிரதானமாக தேவைப்படுகிறது. கணவனுக்கு கட்டுப்பட்டு வாழ முடியாது என்பதால் திருமணம் செய்துகொள்ளப்போவதில்லை. எனது முடிவை பெற்றோரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். இவ்வாறு சார்மி கூறினார்.

காதலில் ஏமாந்துவிட்டதால் இனிமேல் திருமணம் செய்து கொள்ளப்போவது இல்லை என்று நடிகை சார்மி தெரிவித்துள்ளார்.காதலில் ஏமாந்துவிட்டதால் இனிமேல் திருமணம் செய்து கொள்ளப்போவது இல்லை என்று நடிகை சார்மி தெரிவித்துள்ளார்.



தமிழ் சினிமாவில் காதல் அழிவதில்லை, லாடம், 10 எண்றதுக்குள்ள ஆகிய படங்களில் நடித்துள்ளார் நடிகை சார்மி. தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தார். கவர்ச்சியிலும் தாராளம் காட்டி வந்தார். இந்த நிலையில், சினிமா வாய்ப்புகள் இல்லாததால், தயாரிப்பாளராக மாறியுள்ள சார்மி திருமணம் செய்து கொள்ளப்போவது இல்லை என்று கூறியுள்ளார். இது குறித்து சார்மி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
என் வாழ்க்கையில் ஒருவரை நான் ஆழமாக காதலித்தேன். இரு விஷயங்களால் அந்த காதல் முறிந்துவிட்டது. எனினும், நாங்கள் திருமணம் செய்திருந்தாலும், அதே காரணங்களுக்காக பிரிய வேண்டி வந்திருக்கும். அவரது நடவடிக்கையால் திருமணத்தின் மீது எனக்கு வெறுப்பு வந்துவிட்டது. அவர் நலல்வர் தான். அவரை நினைத்த எனது மனதில் இன்னொருவரை நினைக்க முடியவில்லை. ஒருவரை மனதில் நினைத்துக் கொண்டு, இன்னொருவருடன் சேர்ந்து வாழ்வது, அவருக்காக காத்திருப்பது என்று என்னால் முடியாது.

எனவே இனிமேல் திருமணம் செய்து கொள்ளப்போவது இல்லை என்ற முடிவிற்கு வந்துவிட்டேன். என்னை காதலித்து ஏமாற்றியவர் பெயரை மட்டும் நான் வெளியிட விரும்பவில்லை என்று உருக்கமாக கூறியுள்ளார். இதற்கு முன்னதாக, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தும், சார்மியும் காதலிப்பதாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது.

இருவரும் ஜோடியாக சுற்றுவதாகவும் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளார்கள் என்றும் கூறப்பட்டது. ஆனால், இதற்கு இருவரும் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

போதைப் பொருள் தொடர்பான வழக்கில், மருத்துவ பரிசோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்த சார்மி ஐதராபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். அவரது மனு இன்று விசாரணைக்கு வருகிறது.போதைப் பொருள் தொடர்பான வழக்கில், மருத்துவ பரிசோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்த சார்மி ஐதராபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். அவரது மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
தெலுங்கு பட உலகைச் சேர்ந்த நடிகர்கள், இயக்குனர்கள் உள்ளிட்டோருக்கு போதை பொருட்கள் சப்ளை செய்ததாக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த கெல்வின், ஐதராபாத்தை சேர்ந்த பியூஸ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் போதைப்பொருள் கும்பலுடன் தெலுங்கு நடிகர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.


விசாரணையில் நடிகர்கள் நவ்தீப், தருண், தனிஷ், நந்து, நடிகைகள் சார்மி, முமைத்கான், இயக்குனர் பூரி ஜெகன்னாத், ஒளிப்பதிவாளர் ஷ்யாம் கே.நாயுடு ஆகிய 12 பேருக்கு இதில் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானது. இதுகுறித்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் சிறப்பு விசாரணைக்குழு விசாரணை நடத்த முடிவு செய்தது.

இயக்குனர் பூரி ஜெகன்னாத், நடிகர்கள் தருண், பி.சுப்புராஜூ, நவ்தீப் உள்ளிட்டோர் விசாரணை குழுவின் முன்பாக ஆஜராகி விளக்கம் அளித்து உள்ளனர். வரும் புதன் அன்று சிறப்பு புலனாய்வு பிரிவு விசாரணை குழு முன்பு நடிகை சார்மி விசாரணைக்கு ஆஜராக வேண்டும். இந்நிலையில் அவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து உள்ளார்.

போதைப்பொருள் வழக்கு குறித்து விசாரித்து வரும் சிறப்பு விசாரணைக்குழு முறையாக விசாரணை நடத்துவது இல்லை என சார்மி தரப்பில் குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.


மேலும் விசாரணைக்கு ஆஜராகுபவர்களை கட்டாயப்படுத்தி ரத்தம், தலைமுடி, நகங்கள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் சேகரிக்கின்றனர். இது போன்ற மருத்துவ பரிசோதனைக்கு விலக்கு கோரி சார்மி வழக்கு தொடுத்துள்ளார். மேலும் சார்மி விசாரணைக்கு வரும்போது தனது வழக்கறிஞரையும் உடன் அழைத்து வர அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் விசாரணையின்போது பெண் அதிகாரிகள் உடன் இருக்க வேண்டும் என்றும் தனது மனுவில் தெளிவுபடுத்தியுள்ளார்.
நடிகை சார்மி ‘பைசா வசூல்’ படத்தில் நடிக்காமலேயே அந்தப் படத்திற்காக அவர் வாங்கிய சம்பளம் ரூ. 4 கோடியாம்.
நடிகை சார்மி ‘பைசா வசூல்’ படத்தில் நடிக்காமலேயே அந்தப் படத்திற்காக அவர் வாங்கிய சம்பளம் ரூ. 4 கோடியாம்.

கோலிவுட் நடிகைகள் அதிகபட்சமாக ரூ.3 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படும் நிலையில் கைவசம் படங்களே இல்லாத நடிகை சார்மி ரூ.4 கோடி சம்பளம் வாங்கியிருப்பது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நடிகை சார்மி டோலிவுட் இயக்குனர் புரி ஜெகனாத்துடன் நல்ல பழக்கத்தில் இருந்து வருறார். என்.டி. பாலகிருஷ்ணா நடிக்கும், ‘பைசா வசூல்’, 101வது படத்தை புரி ஜெகனாத் இயக்குகிறார். இதன் பட்ஜெட் ரூ.32 கோடி. புரியின் சிபாரிசால் சார்மி படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் பொறுப்பு கவனித்துள்ளார். நடிகர், நடிகைகள் ஒருங்கிணைப்பு, படப்பிடிப்பு பணிகளை கவனித்துள்ளார் சார்மி. இதன் படப்பிடிப்பு போர்ச்சுகல் நாட்டில் 70 நாட்கள் நடந்தது. இதற்கான பணிகளை கவனித்த சார்மிக்கு ரூ.4 கோடி சம்பளம் தரப்பட்டதாக கூறப்படுகிறது.

5 படங்கள் நடித்திருந்தால் கூட சார்மிக்கு இதில் பாதி அளவு சம்பளம் கூட கிடைத்திருக்காது. ஆனால் சாதுர்யமாக நிர்வாக தயாரிப்பாளர் பொறுப்பை ஏற்று பெரிய தொகையை சம்பளமாக பெற்றிருக்கிறார். படத்தில் நடிக்காமலே இவ்வளவு பெரிய தொகையை சார்மி சம்பளமாக பெறுவதையறிந்து சக ஹீரோயின்கள் அதிர்ச்சியில் வாயடைத்துபோய் உள்ளார்களாம்.

புனித கோயிலுக்குள் அரைகுறை ஆடை அணிந்து சென்ற நடிகை சார்மியால் சர்ச்சை எழுந்துள்ளது.புனித கோயிலுக்குள் அரைகுறை ஆடை அணிந்து சென்ற நடிகை சார்மியால் சர்ச்சை எழுந்துள்ளது.

நடிகை சார்மி தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் நடிகர் பாலகிருஷ்ணாவுடன் ‘பைசா வசூல்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக, நடிகை சார்மி உட்பட படக்குழுவினர் போர்ச்சுகல் நாட்டிற்கு சென்றுள்ளனர்.

அப்போது அவர் சீக்கியரின் புனித கோவில் அமர்ந்துள்ள குருத்வாரா கோவிலுக்கு சென்றார் நடிகை சார்மி. அப்போது அவர் தொடை தெரியும் படியான ஒரு பைஜாமா மட்டும் அணிந்திருந்த ஆடையை அணிந்திருந்தார். உள்ளே பேண்ட் அணியவில்லை. அந்த புகைப்படங்களை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இந்தப் புகைப்படத்தைப் பார்த்தவர்கள் அவ்வளவுதான்.. ஒரு புனித கோவிலுக்கு இப்படியா உடை அணிந்து செல்வது? என நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுக்க தொடங்கிவிட்டனர்.

காதல் தோல்வியால் டெல்லியில் குடியேறி சொந்த தொழில் தொடங்கவிருக்கிறார் நடிகர் சார்மி!காதல் தோல்வியால் டெல்லியில் குடியேறி சொந்த தொழில் தொடங்கவிருக்கிறார் நடிகர் சார்மி!
தமிழில் சிம்புவுடன் ‘காதல் அழிவதில்லை’ படம் மூலம் அறிமுகமானவர் நடிகை சார்மி. தமிழில் மட்டும் அவர் ஓரிரு படங்களில் நடித்துள்ளார். அதுவும் அவருக்கு கைகொடுக்கவில்லை. இதனால் தெலுங்கு பக்கம் சென்றார். அங்கு முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக கிளாமராக நடித்து ஐதராபாத்தில் குடியேறினார்.
அப்போதுதான் அவருக்கும் இயக்குனர் புரி ஜெகநாத்துக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் அதிக நட்புடன் பழகி வந்தனர். அவர்கள் நட்பு உண்மையானதும், அதுவே திருமணம் வரை சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. சார்மி மீது அக்கரை கொண்ட டைரக்டர் புரி ஜெகநாத், அவருக்காக ‘ஜோதிலட்சுமி’ என்ற படத்தை எடுத்தார். அந்தப் படமும் சார்மியை தூக்கிவிடவில்லை. பின்னர் இருவரும் பட நிறுவனம் ஆரம்பித்தனர். இடையில் இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டு பிரிந்தார்கள். தற்போது சார்மி கைவசம் படங்கள் இல்லை. தற்போது அவர் ஐதராபாத்திலிருந்து டெல்லியில் செட்டிலாகிவிட்டார். அங்கு சொந்த தொழில் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


தனக்கும் பூரி ஜெகநாத்துக்கும் இனி ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று நடிகை சார்மி, காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.தனக்கும் பூரி ஜெகநாத்துக்கும் இனி ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று நடிகை சார்மி, காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நடிகை சார்மி தமிழில் ஓரிரு படங்களில் நடித்துள்ளார். சமீப காலத்தில் இயக்குனர் பூரி ஜெகநாத்துடன் சார்மியை இணைத்து பல கிசு கிசு வதந்திகள் வந்த வண்ணம் இருந்தன. மார்க்கெட்டை இழந்த சார்மிக்கு வாழ்வு கொடுக்கும் வகையில் அவரை ஹீரோயினாக வைத்து ‘ஜோதிலட்சுமி’ படத்தை இயக்கினார்
பூரிஜெகநாத். இப்படத்தை பூரி ஜெகநாத்துடன் இணைந்து சார்மியும் தயாரித்தார். படத்தின் ஒப்பந்தப்படி சார்மியும் துணை தயாரிப்பாளர் என்ற அந்தஸ்துடன் இருந்தார்..
இதையடுத்து சார்மி, பூரி ஜெகநாத் பட அலுவலகத்துக்கு சென்று தயாரிப்பு பணிகளை கவனித்தார். அத்துடன் இருவரும் காதலிப்பதாகவும், திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருப்பதாகவும் வதந்திகள் பரவியது. சமீபத்தில் ஒரு விழாவில், என் அடுத்த படத்திலும் சார்மி துணை தயாரிப்பாளராக இருப்பார் என பூரி ஜெகநாத் அறிவித்தார்.
இதற்கிடையில் இருவருக்கும் திடீர் மோதல் முற்றியுள்ளது. துணை தயாரிப்பாளர் என்ற அந்தஸ்தில், அதிகாரம் காட்டி எல்லோரையும் மிரட்டுவதாக சார்மி மீது புகார் எழுந்தது. இதனால் பூரியின் உதவியாளர் ஒருவர் கோபத்தில் சென்றதாக கூறப்படுகிறது.
கோபம் அடைந்த பூரி, சார்மியை கண்டித்ததுடன் அலுவலகத்திலிருந்து வெளியேறுமாறு கூறியதாக தெரிகிறது. இதையடுத்து இருவரின் நெருங்கிய நட்புக்கு விரிசல் விழுந்துள்ளது இனி ஒட்டும் இல்லை உறவும் இல்லை, அவரவர் வழியை அவரவர் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற வகையில் பேசி சமாதானமாக சென்றுவிட்டனர்

.