உலகப்புகழ் பெற்ற தாஜ்மஹால் , அழகி மும்தாஜ் பிறந்த தினம் 1593 செப்டம்பர் 1
உலகப்புகழ் பெற்ற தாஜ்மஹால் , அழகி மும்தாஜ் பிறந்த தினம் 1593 செப்டம்பர் 1 மொகலாயர்கள் காலத்தில் புத்தாண்டு திருவிழா நவ்ரோஸ் கொண்டாடப்பட்டு வருகிறது .இதை ஒட்டி சிற்றரசர்கள் புதல்விகள் ,அரசாங்க உயர் பதவியில் உள்ள புதல்விகள் நடத்தும் கண்காட்சி இது வேறு யாரும் இங்கே பொருள் விற்க முடியாது . அரண்மனையை சேர்ந்த ஆடவர்கள் மட்டுமே இதில் பங்கேற்க முடியும் .அதாவது பெண்கள் மட்டுமே துணி ,கலைப்பொருள்கள் விற்பனை செய்வர் .இங்கிருந்து தான் மன்னர்கள் தங்கள் போகப்பொருளாக பெண்களை எடுத்து கொள்ளுவது உண்டு . அந்தஸ்தில் உயர்ந்தவர்கள் மணமுடிக்கப்படுவதுண்டு .இது பாபரின் மகனும் அக்பரின் தந்தையும் ஆன ஹுமாயூனால் முதலில் புத்தாண்டு நவ்ரோஸ் விழாவாக ஒருவாரம் கொண்டாடப்பட்டது .இது பாரசீக மொழியில் குக்ஸ்க்ரூஸ்("Day of Joy") என்று அழைக்கப்பட்டது ஷாஜகான் கடை வழியாக நடந்து வந்து கொண்டிருந்தார் .ஒரு கடையை ஏறிட்டு பார்த்தபோது அவர் கால்கள் நகர மறுத்தன .தன்னை மறந்தார் .ஒரு அழகு தேவதை புன்னகையுடன் வரவேற்றாள் .தன்னுடைய சிற்றன்னை நூர்ஜகானின் அண்ணன் சப்கானின் மகள் அர்ஜுமா...