Posts

Showing posts with the label SAKALA

P.U.CHINNAPPA, SAKALA KALA VALLAVAN OF TAMIL CINEMA, ACTOR,SINGER,FIGHTER, BORN 1916 MAY 5 - 1951 SEPTEMBER 23

Image
 P.U.CHINNAPPA, SAKALA KALA VALLAVAN  OF TAMIL CINEMA,  ACTOR,SINGER,FIGHTER, BORN 1916 MAY 5 - 1951 SEPTEMBER 23 பி.யூ.சின்னப்பா - வாழ்க்கை குறிப்பு சின்னப்பாவின் பூர்வீகம் புதுக்கோட்டை ஆகும். உலக நாதப்பிள்ளை, மீனாட்சி அம்மாள் தம்பதியின் மூத்த மகனாக சின்னப்பா வெள்ளிக்கிழமை அன்று பிறந்தார். உடன் பிறந்தவர்கள் இரண்டு தங்கைகள். சின்னப்பா பிறந்த தேதி 05.05.1916 ஆகும். P U Chinnappaசின்னப்பாவின் தந்தை நாடக நடிகராக இருந்ததால் சின்னப்பா முயற்சி எதுவுமின்றியே 5-ம் வயதிலேயே நாடகத்தில் நடிக்கத் தொடங்கி விட்டார். சிறு வயதிலேயே பல வேடங்களில் நடித்து ரசிகர்களை அசர வைப்பாராம். சதாரம் நாடகத்தில் அவர் குட்டித் திருடனாகத் தோன்றி பல பரிசுகளைப் பெற்றிருக்கிறார். தம் தந்தை நாடகத்தில் பாடி வந்த பாட்டுகளையெல்லாம் சின்னப்பா பாடிக்கொண்டிருப்பாராம். அத்துடன் புதுக்கோட்டையில் நடந்த பஜனைகளில் அவர் அடிக்கடி கலந்துக் கொண்டு பாடுவது வழக்கமாம். இவரது கம்பீரமான இனிய குரல் கண்டு பஜனை குழுவினர் இவரை அடிக்கடி பாட அழைப்பார்களாம். பள்ளிக் கூடத்தில் சின்னப்பா நான்காவது வகுப்பு வரையில் பட...