SAVITHRI NOT ONLY ACTRESS , KIND HEARTED WOMAN PHILANTHROPIC BORN JANUARY 4 ,1934.
SAVITHRI NOT ONLY ACTRESS , KIND HEARTED WOMAN PHILANTHROPIC BORN JANUARY 4 ,1934. நடிகர்களில் என் .எஸ் .கிருஷ்ணன் ,நடிகைகளில் சாவித்திரி ,புராணத்தில் கர்ணன் இம்மூவரும் ஒரே நேர் கோட்டில் கொடுத்து வாழ்ந்தவர்கள் ஒருவர் வாழ்ந்த வாழ்க்கை வரலாறாகவோ, காவியமாகவோ ஆவதில்லை. ஆண்டவனால் ஆசிர்வதிக்கப்பட்ட ஆயிரத்தில் ஒருவருக்கு தான், வாழ்க்கை, வரலாறு சொல்லக்கூடிய காவியமாக இருக்கிறது. அந்த ஆயிரத்தில் ஒருவர் தான் நடிகையர் திலகம் சாவித்திரி. அவரது வாழ்க்கை வரலாற்றை இங்கு தொடராக தொகுத்து வழங்குகிறார் கட்டுரையாசிரியர். முதன் முதலாக, சாவித்திரி, ஜெமினியை சந்தித்தது, மனம் போல் மாங்கல்யம் படப்பிடிப்பில் தான்! வெள்ளை நிறச் சட்டை, அதற்கு இணையாய் போட்டிருந்த கால்சட்டையில், எடுப்பாய் இருந்த அந்த இளைஞர், சாவித்திரியை நோக்கி வந்தார். அவரைப் பார்ப்பதை தவிர்க்க முனைந்த சாவித்திரியால், கண்களை அப்புறப்படுத்த முடியவில்லை. அவர் அருகில் வந்ததும், அவர் மனதுள் இனம் புரியாத பரவசம்! 'இவர் தான் இந்தப் படத்தின் கதாநாயகன்...' என்று, இயக்குனர் பி.புல்லையா...