COMPARISON BETWEEN ACTORS AND ACTRESS
COMPARISON BETWEEN ACTORS AND ACTRESS நடிகராக இருந்தாலும், பெரும் செல்வந்தராக இருந்தாலும், எந்தச் சூழ்நிலையிலும் வள்ளலாகவே வாழ்வதும், புயல், வெள்ளம் போன்ற பேரிடர்களின் போது, தாரளமாக நிதி அளிப்பதும், அவரவர் மன இயல்பைப் பொறுத்த விஷயங்களாகும். ‘பொது வாழ்க்கைக்கு வந்துவிட்டதால், கொடைத்தன்மையை வெளிப்படுத்தியே ஆகவேண்டும்’ என்று யாரையும் நிர்ப்பந்தப்படுத்திவிட முடியாது. ‘அந்தச் சிறிய நடிகர் எவ்வளவு கொடுத்திருக்கிறார்? இவ்வளவு பெரிய நடிகராக இருந்தும் ஏன் அவரளவுக்கு கொடுக்கவில்லை?’ என்று ஒப்பிடுவதும் சரியல்ல. ஆனாலும், ஒப்பீட்டையும் விமர்சனத்தையும் யாராலும் தடுத்துவிட முடியாது. தியாகராஜ பாகவதர் காலத்திலிருந்தே இந்த ஒப்பீடு இருக்கிறது. நடிகர்களோ, ரசிகர்களோ ஏன் இப்படி நடந்துகொண்டார்கள் என்ற கேள்விகளுக்கும் பஞ்சமில்லை. பாகவதருக்கு அடுத்த இடத்தில் இருந்த பி.யு.சின்னப்பாவும் பெரிய நட்சத்திரம்தான். பாகவதரைப் போலவே பாடி நடித்தவர். இன்னும் சொல்லப்போனால், குஸ்தி, குத்துச்சண்டை, கம்பு சுற்றுதல் போன்றவற்றில் தியாகராஜ பாகவதரைக் காட்டிலும் திரையில் வெளுத்துக் கட்டியவர். கலைத்துறையில், பலவித ஆற...