Posts

Showing posts with the label FLOODS

KERALA FLOODS 2019

Image
KERALA FLOODS 2019 .26 நொடிகளில் குழந்தையை மீட்ட கண்ணையா குமார் யார்? கண்ணையா குமார், கேரளாவில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்றவந்த தேசிய பேரிடர் மீட்புக்குழுவில் முக்கியமாக பேசப்படுகிறார். பெரியாறு நதியில் வெள்ளம் கரைபுரண்டு வந்த நேரத்தில், இடுக்கி மாவட்டம் செருதொனி பகுதியில் ஒரு தந்தையின் கைகளில் இருந்த சிறு குழந்தையை எடுத்துக்கொண்டு, ஒரு பாலத்தை ஓடிக்கடந்தார் கண்ணையா. அவர் பாலத்தைத் தாண்டியதும் அந்த இடம் தகர்ந்து பாலம் உள்வாங்கி கடல்போல காட்சியளித்தது. சென்னையில் இருந்து கேரளா வந்துள்ள 10 படைப்பிரிவுகளில், பேரிடர் மீட்புக் குழுவைச் சேர்ந்த கண்ணையா ஒரு மீட்புப் பணி காவலர். குழந்தையை மீட்கும் பணியை முடிக்க கண்ணையா எடுத்துக்கொண்டது வெறும் 26நொடிகள் என்கிறார்கள் மீட்புக் குழுவில் உள்ள மற்ற அதிகாரிகள். கரையேறியதும், கண்ணையாவுக்கு எவ்வாறு நன்றி சொல்வதென்றே தெரியாமல் குழந்தையின் தந்தை நெகிழ்ந்துபோனார். ''பாதிக்கப்பட்ட எல்லோரும் என் குடும்பம்'' சமூக வலைத் தளங்களில் பிரபலமாகிவிட்ட பீகாரைச் சேர்ந்த கண்ணையாகுமார், தனது ம...