BAJI RAO II ,LAST PESHWA OF MARATHA EMPIRE BORN 1775 JANUARY 10
BAJI RAO II ,LAST PESHWA OF MARATHA EMPIRE BORN 1775 JANUARY 10 இரண்டாம் பாஜி ராவ் (Baji Rao II) (10 சனவரி 1775 – 28 சனவரி 1851), மராத்திய பேரரசின் இறுதி பேஷ்வாக 1796 முதல் 1818 முடிய ஆட்சி செலுத்தியவர். 1817–1818இல் நடந்த மூன்றாம் ஆங்கிலேய மராட்டியப் போரில், மராத்திய ஆட்சிப் பகுதிகளை பிரிட்டனின் கம்பெனி அட்சியிடம் இழந்தவர். [1] ஆட்சியை இழந்த பாஜி ராவ், உத்தரப் பிரதேசம், பித்தூரில், ஆங்கிலேயர்களால் தங்க வைக்கப்பட்டு, ஆண்டுக்கு 80,000 பிரிட்டன் பவுண்டு ஸ்டெர்லிங் ஓய்வூதியமாக பெற்றுக் கொண்டு வாழ்ந்தார். குழந்தை இல்லாத பாஜி ராவ், நானா சாகிப் என்பவரை தத்தெடுத்து வளர்த்தார். டல்ஹவுசி பிரபு கொண்டு வந்த அவகாசியிலிக் கொள்கையின்படி பிரித்தானிய கம்பெனி ஆட்சி இவருக்கு ஓய்வூதியம் வழங்குவதை நிறுத்திவிட்டது. ஒரு திருத்தமும் கூடுதல் தகவலும் மஹாராஷ்டிரா மாநிலத்தின் கோரிகாவுன் கிராமத்தில் 1818 ஜனவரி 1இல் நடந்த, மூன்றாம் ஆங்கிலோ மராத்தா போரின் இறுதிச் சண்டையில், அன்றைய பேஷ்வா படையை முறியடித்த கிழக்கிந்திய கம்பெனி படையின் மஹர் வீரர்களின் வெற்றியை ஆண்டுதோறும் தலித் மக்கள் நினைவுகூ...