water lorry - novel
தண்ணி லாரி சிறுகதை -ஆ.முத்துக்கிருஷ்ணன் 'உடலில் உள்ள எல்லா உறுப்புகளும் ஒரே சீராக வளர்ந்தால் தான் அது வளர்ச்சி; ஒரு உறுப்பு வளர்ந்து இன்னொரு உறுப்பு வளரலன்னா, அது ஊனம் ஊரிலிருந்து கிளம்பியாயிற்று; அம்மாவும், அப்பாவும் இன்னும் இரண்டு நாட்கள் தங்கிப் போகச் சொன்னார்கள். மனைவிக்கும், மகனுக்கும் தங்கிச் செல்ல ஆசை தான். சிவகுமார் கூட அதே திட்டத்தோடு தான் வந்திருந்தான். ஆனால், ஊரில் நடந்த சம்பவம், அவனை அங்கு இருக்க விடவில்லை. மதுரை வரை காரிலும், அங்கிருந்து விமானத்தில் செல்வதாக ஏற்பாடு. வாடகை சொகுசு கார், கிராமத்து மேடு பள்ளச் சாலையில், நிமிர்ந்தும், சரிந்தும் ஓடிக் கொண்டிருந்தது. அது, சிவகுமாருக்கு எரிச்சலாகவும், அவனது மனைவிக்கும், மகனுக்கும் புது அனுபவமாகவும் இருந்தது. பரந்து விரிந்து கிடந்த பொட்டல் காட்டில், தங்களது பச்சை துாரிகையை இழந்து, ஆங்காங்கே ராட்சச ஊதுவத்திகளை நட்டு வைத்தது போன்று காட்சியளிக்கும் மொட்டை பனை மரங்களையும், தண்ணீர் இல்லாமல் காய்ந்து பாளம் பாளமாக வெடித்துக் கிடக்கும் குளங்களையும் கடந்து, ஊசி கோபுரத்திற்கும் வண்ணாரப்பேட்டைக்கும் இடையில்...