BHARATHIYAR VS SHELLY
BHARATHIYAR VS SHELLY பாரதியார் vs. ஷெல்லி ஸ்வேத்தா மணிவாசகம், ஐந்தாம் வகுப்பு, பாலர் மலர் தமிழ்ப் பள்ளி, ஹோல்ஸ்வோர்தி இந்த கட்டுரையில் மஹாகவி பாரதியாரைப் பற்றியும் காதல் புலவர் ஷெல்லி பற்றியும் எனக்கு தெரிந்த சில கருத்துகளை பகிர்ந்து கொள்ள ஆசைப் படுகிறேன். பாட்டுக்கொரு புலவன் பாரதி, இவர் பாரதியார் என்றும், மகாகவி பாரதியார் என்றும் அழைக்கப்படுகிறார். பைச்சு செல்லி அல்லது பெர்சி பைஷ் ஷெல்லி ஒரு ஆங்கிலக் கவிஞர்(1) கற்பனையியல் இயக்கத்தின் முக்கிய கவிஞர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் ஜான் கீட்ஸ் மற்றும் பைரன் பிரபு ஆகியோரின் நண்பர். பாரதியார் திசம்பர் 11, 1882 எட்டயபுரம், தூத்துக்குடி மாவட்டம், இந்தியாவில் பிறந்தார்(2). தமிழின் கவிதை மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளரும், நவீன தமிழ் கவிதைக்கு முன்னோடியும் ஆவார். தம் எழுத்துக்களின் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு மற்றும் பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். இவருடைய கவித்திரனை மெச்சி பாரத...