Posts

Showing posts with the label நடிகையர் திலகம்

நடிகையர் திலகம் சாவித்திரி. சுக்கு நூறாய் உடைந்த சாவித்திரியின் கடைசி நாட்களின் காட்சிப் பதிவுகள்.

Image
  நடிகையர் திலகம் சாவித்திரி.  சுக்கு நூறாய் உடைந்த சாவித்திரியின் கடைசி நாட்களின் காட்சிப் பதிவுகள். சென்னை, லேடி வெலிங்டன் மருத்துவமனை - மாலை நேரப் பணிக்காக, செவிலியர் வந்து கொண்டிருந்தனர். அந்த அறையில், பாதி திறந்திருந்த கதவை தள்ளி, உள்ளே நுழைந்தாள் செவிலி ஒருத்தி. லேடி வெலிங்டன் மருத்துவமனையில், ஒரு வழக்கம் இருந்தது. அது, பணிக்கு வரும் செவிலியர், முதலில் தங்கள் நோயாளிகளின் அறைக்கு சென்று, ஜெபிக்க வேண்டும் என்பதே! அறைக்குள் நுழைந்த செவிலிப் பெண், சுவரில் மாட்டப்பட்டிருந்த மேரி மாதாவின் படத்துக்கு முன், கண்மூடி நின்று, கிறித்துவ மறைநூலான விவிலியத்தின் வசனம் ஒன்றை ஜெபிக்க ஆரம்பித்தாள்... 'திகையாதே; கலங்காதே; நான் உன்னோடு இருக்கிறேன்...' என்ற வசனத்தை உச்சரித்தபடி, மேரி மாதாவின் படத்திற்கு முன் மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்து, ஜன்னலைத் திறந்தாள். வெளியே, நீலவானத்தில் எப்போதும் மின்னும் விண்மீன்கள், ஏனோ அன்று ஒட்டுமொத்தமாகக் காணாமல் போயிருந்தன. தமிழ் திரையுலகின் உன்னத நட்சத்திரம் ஒன்று உணர்வற்று, துயில் கொள்ளும் போது, நாம் மட்டும் விழித்திருந்து மின்னுவது, அ...

நடிகையர் திலகம் சாவித்திரி மடிந்த கதை

Image
நடிகையர் திலகம் சாவித்திரி மடிந்த கதை  ஒருவர் வாழ்ந்த வாழ்க்கை வரலாறாகவோ, காவியமாகவோ ஆவதில்லை. ஆண்டவனால் ஆசிர்வதிக்கப்பட்ட ஆயிரத்தில் ஒருவருக்கு தான், வாழ்க்கை, வரலாறு சொல்லக்கூடிய காவியமாக இருக்கிறது. அந்த ஆயிரத்தில் ஒருவர் தான் நடிகையர் திலகம் சாவித்திரி . அவரது வாழ்க்கை வரலாற்றை இங்கு தொடராக தொகுத்து வழங்குகிறார் கட்டுரையாசிரியர். ஊமை உள்ளங்கள் படத்தில், தான் நடிப்பதில்லை என, முடிவு எடுத்த ஜெமினி, அதன்பின், சாவித்திரியைப் பார்ப்பதையே தவிர்த்தார். சாவித்திரியிடம், எப்போதும் தலை தூக்கும் உயர்வு மனப்பான்மை, இங்கேயும் தலை தூக்கியது. தன்னை அவமானப்படுத்த முயலும்  ஜெமினி முன், வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற உணர்வு,  அவருக்குள் மேலோங்கியது.  இச்சூழலில் படம் தயாரிக்க வேண்டுமாயின்,  சிவாஜியை கதாநாயகனாக நடிக்க வைப்பது தான் சிறந்தது என,  அவர் மனதில் தோன்றியது. ஊமை உள்ளங்கள் என்ற படம், பிராப்தம் என,பெயர் மாற்றப்பட்டது. ஜெமினியோடு, சாவித்திரிக்கு நடந்த சண்டை, சிவாஜிக்குத் தெரியாது. தன் தங்கை இயக்கப் போகும் படத்தில் நடிப்பது அண்ணனின் கடமை என்ற ...