JOHN MILTON PARADISE LOST WAS SOLD 5 POUNDS
1667 –APRIL 27 பார்வையற்ற ஜான் மில்டன் தான் எழுதிய பாரடைஸ் லாஸ்ட் என்ற காவியத்தின் காப்புரிமையை £10க்கு விற்றார். பாரடைஸ் லாஸ்ட்" (Paradise Lost) என்பது 17-ஆம் நூற்றாண்டின் ஆங்கிலேயக் கவிஞரான ஜான் மில்டன் (1608-1674) எழுதிய காவியம் ஆகும். 1667ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட முதல் பதிப்பு, பத்து ஆயிரம் வரிகள் கொண்ட பத்து புத்தகங்களைக் கொண்டிருந்தது. 1674 இல் வெளிவந்த இரண்டாவது பதிப்பானது, பன்னிரண்டு புத்தகங்களாக சிறிய திருத்தங்களைக் கொண்டதாகவும், விரிவுரையில் ஒரு குறிப்பும் இடம்பெற்றதாகவும் வெளிவந்தது.[1][2] இது மில்டனின் முக்கிய படைப்பு என்று விமர்சகர்களால் கருதப்படுகிறது, மேலும் அவரது காலத்தின் மிகப்பெரிய ஆங்கில கவிஞர்களில் ஒருவராக அவரது புகழை உறுதிப்படுத்த உதவியது.[3] இந்த கவிதை பைபிளை தழுவி எழுதப்பட்டுள்ளது. முதல் புத்தகத்தில் கடவுளால் படைக்கப்பட்ட ஈடன் கார்டன் என்ற அழகான தோட்டத்தில் ஆதாமும் ஏவாளும் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்ததையும் அத்தோட்டத்தில் சாத்தான் நுழைந்து இருவரையும் தன பேச்சாற்றலால் தன பக்கம் ஈர்த்து கடவுளுக்கு எதிராக செயல்பட வைப்பதையும் எழுதியுள்ளார் . ...