Posts

Showing posts with the label IN FRONT OF

IN FRONT OF NIAGARA FALLS

Image
IN FRONT OF NIAGARA FALLS நயாகரா முன்னால் ‘வாழ்விலே ஒரு முறை’ என அசோகமித்திரன் கதை ஒன்றுக்குத் தலைப்பு வைத்திருப்பார். நயாகரா அருவியின் முன்னால் நின்றபோது அந்த தலைப்புதான் நினைவிற்கு வந்து போனது இந்தியாவில் எத்தனையோ அருவிகளைக் கண்டிருக்கிறேன் என்றபோதும் நயாகராவின் முன்னால் நின்றபோது பேச்சற்றுப்போய் கண்களின் போதாமையை உணர்ந்தவனைப் போல பிரமித்து நின்றிருந்தேன். வாழ்வில் ஒரு முறை நயாகராவைப் பார்ப்பது பேறு. பலமுறை காணக் கிடைத்தவர்கள் பெரும் அதிர்ஷ்ட சாலிகள். இயற்கை எவ்வளவு விந்தையானது என்பதற்கு நயாகராவே சாட்சி.  டொரண்டோவிற்கு வந்து இறங்கிய நாளே கனடா செல்வம் இந்த வார இறுதியில் நயாகராவிற்குப் போய்வரலாம் என்று சொல்லியிருந்தார். என்னுடன் நண்பர்கள் ஆன்டனி ஜீவா, செழியன் மற்றும் சிலர் வருவதாகத் திட்டம். காலையில் கிளம்பி மதியத்திற்கு நயாகரா சென்றுவிட்டு இரவு அலங்கார வெளிச்சத்தில் நயாகராவைக் காண வேண்டும் என்று திட்டமிட்டிருந்தோம். நயாகராவைப் பற்றி பாடப்புத்தகங்களில் வாசித்திருந்தபோதும், திரைப்படங்களில் பார்த்திருந்தபோதும், அதனை நேர்நின்று காணும்போது அடையும் மனவெழுச்சியை சொ...