TIRUVILAIYADAL MOVIE SHOOTING -SIVAJI GANESAN
TIRUVILAIYADAL MOVIE SHOOTING -SIVAJI GANESAN `ஒரு நாள் போதுமா’ படப்பிடிப்பு துவங்குமுன் படப்பிடிப்பு தளத்தில் ஏன் திடீர் பரபரப்பு......... காரணமிருந்தது. அன்று அங்கே வேலையேயில்லாத சிவாஜி படப்பிடிப்பு தளத்திற்கு வந்து பாலையாவின் காலைத் தொட்டு வணங்கினார். காரணம் பாலையா சிவாஜிக்கு தொழிலில் மூத்தவர். சாதாரண உடையில் சிவாஜி அங்கே வந்தார் இயக்குனர் ஏ.பி. நாகராஜன் உட்பட எல்லோருக்கும் ஏன் திடீரென்று சிவாஜி படப்பிடிப்பு தளத்திற்கு வந்தார் என்பதில் ஒரு சந்தேகம்! ஒரு பதட்டம் சிவாஜியிடம் கேட்டபோது ` வீட்டிலே சும்மா இருந்தேன். அதனால் சும்மா படப்பிடிப்பை பார்க்க வந்தேன்’ என்றார். ஆனால் உண்மையில் சிவாஜி வந்த காரணம் அதுவல்ல! படத்தின் காட்சியின்படி ஹேமநாத பாகவதரை, பாண்டிய நாட்டை விட்டு சிவபெருமானாகிய சிவாஜி கணேசன் அடுத்து அவர் வீட்டில் பாடி அவரை பாடி விரட்ட வேண்டும் அதற்கான பாடல், பாட்டும் நானே பாவமும் நானே பாடல் ஏற்கெனவே பதிவாகிவிட்டது. இந்தப் பாடலில் பாலையா எப்படி நடிக்கிறார் என்பதை தெரிந்து கொண்டால்தான் அடுத்து தான் அவரை விரட்டியடித்து பாடுகிற காட்சியில் அதற்கு இணையாக நடிக்க முடியும். அதற்காகவ...