HARD LABOUR NEEDED ,NOT EDUCATION
HARD LABOUR NEEDED ,NOT EDUCATION மதிப்பெண்கள் குறைந்ததற்காக தங்கள் குழந்தைகளை கோபித்துக் கொள்ளாத பெற்றோர்கள் தங்கள் மாணவ மாணவிகளை கோபித்துக் கொள்ளாத ஆசிரியர்கள் எவரேனும் உண்டா ? முன்பெல்லாம் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்காக என்றிருந்த நிலை மாறி இப்போதெல்லாம் இப்படி மதிப்பெண்களுக்காக குழந்தைகளை பெற்றவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோபித்துக் கொள்ளும் பழக்கம் எல்.கே.ஜி முதற்கொண்டே ஆரம்பமாகி விடுகிறது. பலன் இப்படியான கோபங்களுக்கு ஆளாகும் குழந்தைகளுக்கு இயல்பான கற்றல் தன்மை தடைபட்டு கடமைக்காக பாடங்களை கற்கும் நிலைக்கு தள்ளப் படுகிறார்கள். பெற்றோர்கள் மிக அவசியம் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் இது. இப்படியான நிலைக்கு தங்கள் குழந்தைகளை தள்ளுவது ஆரோக்கியமான காரியம் இல்லை. தானாக விரும்பிச் செய்யும் காரியங்களில் தான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையும் அனைவருக்கும் மன திருப்தியும் ஈடுபாடும் கிடைக்கும், மாறாக ஒரு காரியத்தை வற்புறுத்தல் மூலம் செய்யத் தொடங்கும் போது கவனச்சிதறலினால் சோர்வே மிஞ்சும். முதற்கட்டமாக இந்த மனச் சோர்வு தான் மற...