KATE WINSLET , ANGEL ACTRESS OF 20 TH CENTURY
KATE WINSLET , ANGEL ACTRESS OF 20 TH CENTURY கேட் வின்ஸ்லெட் (Kate Winslet, பி. அக்டோபர் 5, 1975) ஒரு ஆங்கில நடிகை. தனது நடிப்புக்காக பல விருதுகளை வென்றுள்ளார். 1994 இல் ஹெவன்லி கிரீச்சர்ஸ் என்ற படத்தில் அறிமுகமான வின்ஸ்லெட், 1999ம் ஆண்டு டைட்டானிக் திரைபடத்தில் நடித்ததன் மூலம் உலகப்புகழ் பெற்றார். 2008ம் ஆண்டு தி ரீடர் என்ற படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஆசுக்கர் விருது பெற்றார். மேலும் பல முறை ஆசுக்கர் விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். பாஃப்டா விருது, ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருது, எம்மி விருது போன்றவற்றுக்கும் பல முறை பரிந்துரைக்கப்பட்டுள்ளார். வின்ஸ்லெட் சில திரைப்படங்கள் மற்றும் இசைத்தொகுப்புகளில் பாடல்களையும் பாடியுள்ளார். பிறப்பும் ,வளர்ப்பும் கேட் எலிசபெத் வின்ஸ்லெட் , பெர்க்ஷயரில் ரீடிங்கில் 1975 அக்டோபர் 5 இல் பிறந்தார் - பெற்றோர் ரோஜர் வின்ஸ்லெட் மற்றும் சாலி அன்னே பிரிட்ஜஸ்-வின்ஸ்லெட் இருவரும் மேடை நடிகர்களாக இருந்தனர், தாய்வழி தாத்தா பாட்டி ஆலிவர் மற்றும் லிண்டா பிரிட்ஜஸ் ரீடிங்கில் ரெபெர்ட்டரி தியேட்டர், ந...