Friday, 6 October 2017

KATE WINSLET , ANGEL ACTRESS OF 20 TH CENTURY


KATE WINSLET , ANGEL ACTRESS OF 20 TH CENTURY




கேட் வின்ஸ்லெட் (Kate Winslet, பி. அக்டோபர் 5, 1975) ஒரு ஆங்கில நடிகை. தனது நடிப்புக்காக பல விருதுகளை வென்றுள்ளார். 1994 இல் ஹெவன்லி கிரீச்சர்ஸ் என்ற படத்தில் அறிமுகமான வின்ஸ்லெட், 1999ம் ஆண்டு டைட்டானிக் திரைபடத்தில் நடித்ததன் மூலம் உலகப்புகழ் பெற்றார். 2008ம் ஆண்டு தி ரீடர் என்ற படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஆசுக்கர் விருது பெற்றார். மேலும் பல முறை ஆசுக்கர் விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். பாஃப்டா விருது, ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருது, எம்மி விருது போன்றவற்றுக்கும் பல முறை பரிந்துரைக்கப்பட்டுள்ளார். வின்ஸ்லெட் சில திரைப்படங்கள் மற்றும் இசைத்தொகுப்புகளில் பாடல்களையும் பாடியுள்ளார்.


பிறப்பும் ,வளர்ப்பும் 

கேட் எலிசபெத் வின்ஸ்லெட் , பெர்க்ஷயரில் ரீடிங்கில்  1975  அக்டோபர் 5 இல் பிறந்தார்   - பெற்றோர் ரோஜர் வின்ஸ்லெட் மற்றும் சாலி அன்னே பிரிட்ஜஸ்-வின்ஸ்லெட் இருவரும் மேடை நடிகர்களாக இருந்தனர், 

தாய்வழி தாத்தா பாட்டி ஆலிவர் மற்றும் லிண்டா பிரிட்ஜஸ் ரீடிங்கில் ரெபெர்ட்டரி தியேட்டர், நடத்தினர்

கேட் தனது இளமைப்பருவத்தில் தனது திறமையை  நன்கு வளர்த்தார் .. பதினோரு வயதில்    தொழில்முறை நடனத்தில் ஹனி மொன்ஸ்டர் நடன பயிற்சி மையத்தை குழந்தைகளுக்கான போட்டி ஒன்றில் வென்றார் .  அதே சமயத்தில்நடிப்பு பயிற்சி நிலையத்தில்  அவர் நடிப்பு பயிற்சியையும் பெற்றார் .. அடுத்த சில ஆண்டுகளில், அவர் வழக்கமாக மேடையில் தோன்றி, சில பகுதியை நடித்து காட்டினார் 



இவ்வாறாக ஹெவென்லிகிரி எச்சர்ஸ் 1994 திரைப்படத்தில் நடித்து வெற்றி வாகை சூடினார் . டைட்டானிக் திரைப்படம் அவர் நடித்த 6 ஆவது திரைப்படமாகும்.














திரைப்பட வாழ்க்கை 

வின்ஸ்லெட் நடித்த ஒவ்வொரு படமும் வசூலில் சோடை போகவில்லை .இவர் நடித்த டைட்டானிக் படத்திற்கு  கூட ஆஸ்கார் விருது கிடைக்க வில்லை . ஆனால் 2008  இல் வெளிவந்த"  தி ரீடர்  "என்ற திரைப்படம் எதிர்பாராமல் சிறந்த நடிகைக்கான ஆஸ்காரை பெற்று தந்தது . செய்யாத ஒரு குற்றத்தை ஏற்றுக்கொண்டு தண்டனை கைதியாக வாழ்ந்த எழுதப்படிக்க தெரியாத 1960 களில் நடந்த ஆன்னா ஸ்க்மிட்ஷ் என்ற , பெண்ணின் உண்மைக்கதை . இது வரை 42  திரைப்படங்களில்   நடித்துள்ளார் .பல தொலைக்காட்சி தொடரிலும் நடித்துள்ளார் 


 காலத்தால் அழியாத காதல் காவியம் ‘டைட்டானிக்’. 

ஜேக்-ரோஸ் என்ற அந்த காதல் கதாபாத்திரங்களை, இத்தனை வருடம் கழித்தும் இன்னும் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். டைட்டானிக் கப்பல் மூழ்கியதற்கு கவலைப்பட்டவர்களை விட, இந்த ஜோடி பிரிந்ததற்கு கவலைப்பட்டவர்கள் தான் அதிகம். இந்த நிலையில் இந்த கதாபாத்திரங்களில் நடித்த கேட் வின்ஸ்லெட் மற்றும் டி கேப்ரியோ ஆகியோர்களை காலம் வெவ்வேறு பாதையில் பயணிக்க வைத்தாலும், இருவரும் கடந்த 20 ஆண்டுகளாக நல்ல நண்பர்களாகவே இருந்து வந்துள்ளனர்.

அப்படத்தில் ரோஸின் (கேட்) நிர்வாண காட்சியை ஜெக் (லியனார்டோ) ஓவியமாக வரைவதாக காண்பிக்கப்பட்டாலும் அந்த ஓவியத்தை உண்மையில் வரைந்தவர் படத்தின் இயக்குநரான ஜேம்ஸ் கெமரோன். ஆப்படத்தில் கேட் வின்ஸ்லெட்டும் லியனார்டோ டி கெப்ரியோவும் இணைந்து நடித்த முதல் நடித்த முதல் காட்சி அதுதான் என ஜேம்ஸ் கெமரோன் கூறியிருந்தார். ஆவர் வரைந்த அசல் ஓவியம் 16,000 டொலர்களுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது.



இந்த நிலையில் தெற்கு ஸ்பெயினில் நடந்த சுற்றுப்புற சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு மாநாட்டில், கேட் வின்ஸ்லெட் மற்றும் டி கேப்ரியோ கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் கேட் வின்ஸ்லெட்டை, டி கேப்ரியோ தனது பண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கு இருவரும் நீச்சலுடையில் தங்களது 20 ஆண்டு கால மலரும் நினைவுகளை பகிர்ந்துள்ளதாக தெரிகிறது.


முதல் காதல் 


1991 ஆம் ஆண்டு டார்க் சீஸன் எனும் தொலைக்காட்சி நாடகமொன்றில் நடித்தபோது சக நடிகரான ஸ்டீவன் ட்ரெட்ரேவை சந்தித்து அவரை காதலித்தவர் கேட் வின்ஸ்லெட். 4 வருடங்களின்பின் 1995 ஆம்ஆண்டு இவர்கள் பிரிந்தனர். இவரது டைட்டானிக் திரைப் படம் வெளியீட்டுக்கு அவரால் முடியவில்லை . தான் முதலில் 54  மாதங்களாய் காதலித்த  
மறைவை ஒட்டி இங்கிலாந்தில் சவ அடக்கத்தில் பங்கு கொண்டதே காரணம் .இதில் மிகுந்த உளைச்சலுக்கு ஆளானார் .இந்தியாவில் டைட்டானிக் வெளியான சமயம் , இந்தியா முழுவதும் காசி ,ராமேஸ்வரம் என்று புண்ணிய யாத்திரை சென்றார் .எவரிடமும் தன்னுடைய அடையாளத்தை காண்பிக்க வில்லை . இறுதியாக பம்பாயில் இருந்து  அமெரிக்க திரும்பும்போது தான் விமான நிலையத்தில் அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்டார்  

செக்ஸ் நடிகை என்ற முத்திரை 

ஜூ டு  1996 என்ற படத்தில் முழு நிர்வாணமாய் நடித்தாலும் ரசிகர்கள் மனதில் நிற்பதெல்லாம் டைட்டானிக் காட்சி தான் 

டைட்டானிக் படம் மூலம் உலக திரை ரசிகர்களை குறிப்பாக ஆண்களின் மனங்களை கொள்ளை கொண்டவர் இங்கிலாந்து நடிகை கேட் வின்ஸ்லெட். அப்படத்தில் அவரது கம்பீரமான அழகில் மயங்காதவர்களே கிடையாது. ஆனால் தனது அழகு குறித்து கேட் ஒருபோதும் பீற்றிக் கொண்டதே கிடையாது.

உலக அளவில் நடத்தப்படும் பல்வேறு கருத்துக் கணிப்புகளில் செக்ஸியான நடிகைகள் பட்டியலில் அவ்வப்போது முதலிடம் அல்லது முக்கிய இடத்தைப் பெற்றும் கூட தன்னை பெரிய அழகியாகவோ, செக்ஸியான பெண்ணாகவோ கூறிக் கொண்டதில்லை கேட்.


தற்போது 36 வயதில் (2011)ஓடிக் கொண்டிருக்கும் கேட், தனது வயது குறித்தும், அழகு குறித்தும் அடக்கமாக சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்



நான் ஒன்றும் அவ்வளவு செக்ஸியான பெண் கிடையாது. உண்மையில் எனக்கு அழகான மார்பகங்கள் கூட கிடையாது. அழகான வளைவுகளோ, நெளிவுகளோ கிடையாது. சாதாரணமானவைதான் அவை. அதற்காக நான் ஒருபோதும் கவலைப்பட்டதே கிடையாது. செக்ஸியான, ரொமான்டிக்கான காட்சிகளில் நடிக்க தயங்கியதும் கிடையாது.


நான் நிர்வாணமாக நடிக்கும்போதும் சரி, செக்ஸியாக நடிக்கும்போதும் சரி, அது மற்ற பெண்களுக்கு தன்னம்பிக்கை ஊட்ட உதவும் என்பது எனது நம்பிக்கை. எனவேதான் எனது உடல் அழகு குறித்து நான் ஒருபோதும் கவலைப்பட்டது கிடையாது. என்னால் பல பெண்களுக்கு தன்னம்பிக்கை கிடைக்கிறது என்பதே திருப்தியாக உள்ளது.



21 வயதில் இருந்த நான் இப்போது இல்லை. இன்னும் போகப் போக எனது உடல் சதைகள் தளர்வடைய ஆரம்பிக்கும், மார்பகங்கள் தொங்கிப் போகும், முடி கொட்டலாம், பற்கள் துருத்த ஆரம்பிக்கலாம். இதெல்லாம் சாதாரணமானதுதான். ஆனால் எனது நம்பிக்கை வலுவாகவே உள்ளது


மை ஹார்ட் வில் கோ ஆன்



டைட்டானிக் படம் அளவுக்கு அப்படத்தின் புரோமோ பாடலான மை ஹார்ட் வில் கோ ஆன் பாடலும் உலகப் பிரசித்திப் பெற்றது. புகழ்பெற்ற பாடகி Celione Dion இந்தப் பாடலைப் பாடியிருந்தார். உலகமே இந்தப் பாடலைக் கேட்டு காதலில் கசிந்துருகியது. ஒருவருக்கு மட்டும் இந்தப் பாடல் குமட்டலை தந்திருக்கிறது. அவர் டைட்டானிக் நாயகி கேட் வின்ஸ்லெட்.

இந்தப் பாடலை எனக்கு கேட்கவே பிடிக்கவில்லை. எல்லோரும் அற்புதமான பாடல் என்று சொல்லும் போது வேறு வழியில்லாமல் அதனை சகித்துக் கொண்டேன். அந்தப் பாடலை நான் வெறுக்கிறேன். இத்தனை வருடங்களுக்குப் பிறகு இந்த உண்மையைச் சொன்னது நிம்மதியாக இருக்கிறது என்று வின்ஸ்லெட் வெம்பி தீர்த்திருக்கிறார்.


1912-ல் டைட்டானிக் கப்பல் மூழ்கியது. அதன் நூறாவது வருடத்தை நினைவுகூரும் வகையில் டைட்டானிக் 3டி-யில் வெளிவ‌ந்‌திரு‌க்‌கிறது. இந்த நேரத்தில் வின்லெட்டின் ஸ்டேட்மெண்ட் மை ஹார்ட் வில் கோ ஆன் பாடலின் ரசிகர்களுக்கு மன வருத்தத்தை தந்துள்ளது.


டைட்டானிக் பட துரத்தும் சங்கடங்கள் 

டைட்டானிக் படத்தின் நிர்வாண காட்சியினால் 17 வருடங்களின் பின்னரும் சங்கடத்துக்குள்ளாகும் நடிகை கேட் வின்ஸ்லெட் 

ஹொலிவூட்டின் பிரபல நடிகைகளில் ஒருவரான கேட் வின்ஸ்லெட் அவருக்கு பெரும் புகழ் தேடிக்கொடுத்த டைட்டானிக் திரைப்படத்தில் நிர்வாணமாக நடித்தமை குறித்து 17 வருடங்களின் பின்னரும் சங்கடத்துக் குள்ளாகுவதாக தெரிவித்துள்ளார். ஜேம்ஸ் கெமரூன் இயக்கி, 1997 ஆம் ஆண்டு வெளியான டைட்டானிக் திரைப்படம் வசூலில் பெரும் சாதனை படைத்ததுடன் அப்படத்தில் நடித்த லியனார்டோ டி கெப்ரியோ, கேட் வின்ஸ்லட் ஆகியோருக்கும் பெரும் புகழை பெற்றுக்கொடுத்தது.




அப்படத்தில் 'ரோஸ்' பாத்திரத்தில் கேட் வின்ஸ்லெட்டை நிர்வாண கோலத்தில் ஜெக் (டி கெப்ரியோ) வரையும் காட்சியும் மிகப் பிரபலமானது.

அப்போது 21 வயது யுவதியாக இருந்த கேட் வின்ஸ்லெட், அதன்பின் ஒஸ்கார் விருது உட்பட பல விருதுகளை வென்று, ஏராளமான திரைப்படங்களில் நடித்துவிட்டார். இப்போதும் முன்னிலை நடிகைகளில் ஒருவராக விளங்குகிறார். ஆனால், டைட்டானிக் படத்தில் இடம்பெற்ற அந்த நிர்வாண காட்சியை மாத்திரம் இன்னும் மறக்க முடியவில்லை.

அப்படம் வெளியாகி 17 வருடங்களாகிவிட்டபோதிலும் அக்காட்சியை கேட் வின்ஸ்லெட் மறப்பதற்கு ரசிகர்கள் விடுகிறார்களில்லையாம்.

அந்த காட்சியில் தான் தோன்றும் புகைப்படத்தின்மீது கையெழுத்திட்டு தருமாறு தான் செல்லுமிடமெல்லாம் ரசிகர்கள் கேட்கிறார்கள் எனவும் இனிமேல் அப்புகைப்படத்தின் மீது கையெழுத்திடப் போவதில்லை எனவும் கேட் வின்ஸ்லெட் கூறுகிறார்.



'அப்படத்தில் கையெழுத்திடுமாறு மக்கள் அடிக்கடி கேட்கிறார்கள். அந்த படத்தில் நான் கையெழுத்திட மாட்டேன். அது மிக சங்கடமாகவுள்ளது' என அவர் தெரிவித்துள்ளார்


கேட் வின்ஸ்லெட் நடித்தபுதிய படமான 'டைவர்ஜென்ட்' திரைப்படத்தின் வெளியீட்டு விழா கடந்த மாதம் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொள்வற்கு கேட் வின்ஸ்லெட் சென்றவேளையிலும் அவரிடம் மேற்படி படத்தில் கையெழுத்திடமாறு கோரப்பட்டது. புல படங்களில் கையெழுத்திட்ட கேட் வின்ஸ்லெட், அந்த நிர்வாண படத்தில் மாத்திரம் கையெழுத்திட மறுத்துவிட்டார.



குடும்ப வாழ்க்கை 

1998 ஆம்ஆண்டு திரைப்பட இயக்குநர் ஜிம் த்ரீப்லெட்டனை கேட் வின்ஸ்லெட் திருமணம் செய்துகொண்டார் இத்தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.













இத்தம்பதி விவகாரத்து செய்தபின்னர், இயக்குநர் சாம் மெண்டிஸை 2003 ஆம் ஆண்டு கேட் வின்ஸ்லெட் திருமணம் செய்தார். சுhம் மெண்டிஸ் மூலம் ஆண் குழந்தைக்கு கேட் தயானார். ஆனால் 2011 ஆம் ஆண்டு இவர்கள் பிரிந்தனர்.


அதன்பின் 2011 ஆம் ஆண்டு, பிரித்தானிய கோடீஸ்வர தொழிலதிபர் ரிச்சர்ட் பிரான்ஸனின் மருமகனான நேட் ரொக்அன்ட்ரோலை சந்தித்த கேட் வின்ஸ்லெட், கடந்த வருடம் அவரை திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதிக்கு கடந்த டிசெம்பர் மாதம் ஆண் குழந்தையொன்று பிறந்தது.



நிஜ  ஹீரோயின் டைட்டானிக் கேட் வின்ஸ்லெட்

இங்கிலாந்தைச் சேர்ந்தவர் கோடீஸ்வரர் ரிச்சர்ட் பிரான்சன்(61). அவருக்கு நெக்கர் தீவில் சொகுசு மாளிகை உள்ளது. அந்த மாளிகையில் விடுமுறையைக் கழிக்க கேட், அவரது காதலர் லூயி டவ்லர், 2 குழந்தைகள் உள்பட 20 பேர் தங்கினர். அந்த சொகுசு மாளிக்கைகு அருகில் உள்ள கட்டிடத்தில் பிரான்சன் தன் மனைவி மற்றும் மகன் சாமுடன் தங்கியிருந்தார்


இதுகுறித்து கிரஹாம் நோர்ட்டன் ஷோவின்போது கேட் அளித்த பேட்டியில், அதிகாலை மணி 4.30 மணிக்கு நாங்கள் அனைவரும் எழுந்தோம். அப்போது திடீரென தீவிபத்து ஏற்பட்டு விட்டதாக சத்தம் கேட்டது. இதனால் நான் பயந்து போய் விட்டேன். தீவிபத்து நடந்த இடத்தை நோக்கி நான் விரைவாக ஓடினேன். அப்புறம்தான் யோசித்தேன், நம் மீது தீ பரவி விட்டால் என்ன செய்வது என்று. பிறகு எனது குழந்தைகளிடம் சென்று உள்ளே போய் கதவைப் பூட்டிக் கொள்ளுங்கள் என்று கூறினேன். அடுத்து என்ன செய்யலாம் என்ற யோசனை வந்தது.+ உடனே பெட்ரூமுக்கு ஓடினேன். ஒரு பிராவை எடுத்து அணிந்து கொண்டேன். அது எனக்கே வித்தியாசமாக இருந்தது. பின்னர் பிரா நம்மை காப்பாற்றாமல் போய் விடுமோ என்று நினைத்து ஒரு டி சர்ட்டை எடுத்து அணிந்தேன். பிறகு எனது குழந்தைகளை இழுத்துக் கொண்டு ஓடினேன். பின்னர் பிரான்சனின் தாயாரையும் காப்பாற்றி வெளியே கொண்டு வந்தேன் என்றார் கேட். இந்த நிகழ்வு 2010  அக்டோபர் 22 -23  இல் நடை பெற்றது 




கேட் வின்ஸ்லெட் ஆஸ்கர் வாங்கிய The Reader

பெண்மையும் அழகும் ஒரு சேர அமைந்த நடிகைகள் மிகவும் குறைவு. Zero Size எலும்புக்கூடுகளுக்கு மத்தியில் பெண்மையின் நளினத்துடன் இன்ரும் வலம் வரும் கேட் வின்ஸ்லெட் டைட்டனிக் திரைப்பட கால கட்டத்தில் இந்த உலகின் கனவு தேவதை. 

வணிகம் சார்ந்து இரவு வெளியூரில் தங்கும் போது  டைட்டானிக் எந்தெந்த ஊரிலெல்லாம் ஓடுகிறதோ ,அங்கேயெல்லாம் பார்த்திருக்கிறேன் ,திருச்சி ,கோவை ,வேலூர் ,சிவகாசி என்று .வாழ்நாளில் நான் கடைசியாக 

அதிக முறை பார்த்த ஒரே படம் இதுவே சுமார் 15  தடவைகள் 

அந்த கேட் - அழகு தேவதை - தன் காதலன் துரத்தி வர, நிலக்கரி எரியும் எஞ்ஜின் ஒளியில் தன் ஸ்கர்ட் பறக்க தேவதை போல ஓடி வருவார் - . அதே கேட்- காலத்தின் மாற்றத்தை தன் உடலில் சுமந்து, அனுபவங்களை தன் நடிப்பில் வெளிக்காட்டி- மனதைத் தொடும் ஒரு கதையாடலை தன் திறமையினால் மெருகூட்டி ஆஸ்கர் விருது வாங்கிச் சென்றீருக்கிறார். புகழ்பெற்ற The Reader என்ற நாவலை தழுவி அதே பெயரில் படைக்கப்பட்ட இப்படம் நெகிழ்ச்சியான ஒரு திரை அனுபவத்தை தருகிறது. மேலும் இது ஒரு உண்மைக்கதையும் கூட.


இரண்டாம் உலகப்போரைப்போல கலை, இலக்கிய, படைப்பு சார்ந்த தளங்களுக்கு ஊற்றுகண்ணாக இருந்த சம்பவம் எதுவும் இல்லை. 60 ஆண்டுகள் முடிந்தும் கதைகளும் சம்பவங்களும், சுயசரிதைகளும் அருவி போல பொழிந்துக்கொண்டிருக்கிறது. என்றும் வற்றாது என்றே நினைக்கிறேன், ஏனெனில் இழந்த ஒவ்வொரு உயிருக்கும் ஒரு கதை என்றாலும் இன்னமும் இலட்சங்கள் மீதமிருக்கிறது.




அழகான Artistic Phorno'வாக ஆரம்பிக்கும் திரைப்படம் வெவ்வேறு திசைகளில் பயணித்து முடிவில் ஆழந்த மௌனத்துடன் நமை கட்டிப்போடுகிறது. இரண்டாம் உலகப்போருக்கு பின்னான ஜெர்மனியில் பேருந்தின் நடத்துனராக பனிபுரியும் ஆன்னா ஸ்க்மிட்ஷ் என்ற நடுத்தர வயது பெண்மணி மாற்றும் அவள் சந்திக்கும் உடல் நலமற்ற 15 வயது பையனுக்குமான உறவு கைக்கிளை எனும் பொருந்தாக்காமமாக மாறி, பொருந்தும் காதலாக உருக்கொண்டு போரினால் அலைக்கழிந்த ஆன்மாக்களுக்கு வசந்தகாலமாகிறது.




தன் பள்ளி பாடங்கள் மற்றும் வெவ்வேறு இலக்கியங்களை அவன் படிக்க அவள் கேட்க பின் கட்டிலில் களிநடனம் புரிய என நகரும் நாட்களின் இன்பம் வெகுநாள் நீடிப்பதில்லை. திடீரென ஆன்னா ஒரு நாள் காணாமல் போக, அதற்கான காரணம் தெரியாமலும் அல்லது தான் அவள் மேல் கொண்ட கோபம் காரணமாக இருக்கலாம் என்றூம் வருந்தும் அச்சிறூவன் பிற்பாடு பள்ளி முடிந்து சட்டக் கல்லூரியின் மாணவனாக சேர்கிறான்.


சட்ட பாடத்தின் நீட்சியாக நீதிமன்றத்துக்கு செல்லும் அவனுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. போர்குற்றவாளியாக ஆன்னா விசாரணையில். அவளின் பிண்ணனி அப்போது தான் அவனுக்கு தெரியவருகிறது. போர்க்குற்றங்களில் பெரிதாக பங்கு இல்லை என்றாலும் வெளியே சொல்ல முடியாத ஒரு காரணத்தால் ஆன்னா குற்றத்தை தான் செய்ததாக ஒப்புக்கொள்கிறாள். அந்த காரணம் என்னவென்று அறிந்தவன் இந்தச் சிறுவன் மட்டுமே.




மிக அழகான காட்சி அமைப்புகள், நிர்வாணத்தை அழகாக படமாக்கியிருக்கும் விதம், ஆர்பாட்டமில்லாமல் அமைதியாக நகரும் படம், நேரான கேமராக்கோணம் என யதார்தத்திற்கு வெகு அருகில் நிற்கிறது படம். இரண்டு குழந்தைகளின் தாயான கேட் நிர்வாண காட்சிகளில் துணிந்து நடித்திருக்கிறார். பெரும்பாலோனோர் வாழ்வில் இதுபோன்ற வெளியே சொல்ல முடியாத முதுபெண்டிரின் தொடர்பு பலருக்கு வாய்த்திருக்கிறது. 

 அதற்கான கட்டமைப்பினுள்ளும் புரிந்துணர்வின் ல்லைக்கோடுகளினுள்ளும் மிக இயல்பாய் நிகழும் அடிப்படை மனித தேவைகள் அது. சரியா தவறா என்ற கேள்விகளின் தேவைகளற்ற வாழ்வின் பகுதி அது.


ஆன்னாவும் மிக கம்பீரமான, ரகசியங்களை சுமந்து திரியும் கண்களுடன் தன் அந்திம காலத்தில் அச்சிறுவனிடம் இருந்து வரும் ஒலிநாடாக்களை கேட்டு எழுதப்படிக்க பழகிக்கொள்கிறார். அவருக்கு எழுதப்படிக்க தெரியாதென்பது தான் அவரின் வாழ்வின் மிகப்பெரும் ரகசியம். அதை நீதிமன்ற விசாரனையின் போது இச்சிறுவன் மட்டும் கண்டுபிடித்து விடுகிறான். 


அவரால் படிக்க இயலாது என்பதால் ஒலிநாடாக்களில் இலக்கியங்களை, ஆந்தன் செகாவ் சிறுகதைகளை பதிவு செய்து அவருக்கு அனுப்புகிறான் நாய்கன், இப்பொழுது அவன் பெரும் வழக்கறிஞன்.


அந்த வார்த்தைகளை கொண்டே எழுதபடிக்க பயிலும் ஆன்னா அவனுக்கு அனுப்பும் கடிதங்களுக்கு ஒரு பதிலும் வருவதில்லை அவனிடம் இருந்து. அவளின் தண்டனைக்காலம் முடியும் தருவாயில் ஜெயில் வார்டன் அவனுக்கு தொலைபேசி அவளை வந்து கூட்டிசெல்லுமாறு சொல்கிறார். அதற்கு முத்தாய்ப்பாய் இருவரையும் ஒருமுறை சந்திக்க வைக்கிறார். தான் காதலித்து மகிழந்த சிறுவன் இன்று வளர்ந்து நிற்பதை கண்டு மகிழ்வுறூம் ஆன்னா, எல்லோரையும் போலவே அவனும் அவரை ஒரு போர்குற்றவாளியாக பார்க்கும் நிலைகண்டு மனம் வெதும்புகிறார்.


தான் எதிர்பார்க்கும் காதல் அவனிடம் இல்லை என்பது 20 வருட சிறை வாழ்க்கையைவிட கடினமான ஒன்றாக அவரை தாக்குகிறாது. அவன் திருமண வாழ்வும் சரியாக இல்லாமல் போனதன் காரணம் தானாக இருக்கலாம் என நினைத்து, விடுதலையாவதற்கு முதல் நாள் தற்கொலை செய்துகொள்கிறார்.


அதுவரை தங்களுக்கிடையில் இருந்த உறவை யாரிடமும் சொல்லாத நாயகன், தன் மகளிடம் சொல்ல ஆரம்பிக்கிறார், படம் முடிகிறது.

முழுக்க முழுக்க கேட் வின்ஸ்லெட்டின் ஆட்சியில் படம் ஒரு நெகிழ்ச்சியான அனுபவமாக முடிகிறது. நிர்வாணமாக பார்த்த அதே கேட், வயதான தன் 55 வயதையும் சிறப்பாக வெளிப்படுத்துகிறார். தான் ஒரு எழுத்தறிவில்லாதவள் என்பதை வெளியே சொல்வதை காட்டிலும் சிறைத்தண்டனையே பரவாயில்லை என நினைக்கும் அவரின் பிடிவாதம், அம்மக்களுக்கேயான வெகுளித்தனத்தை காட்டுகிறது.

சந்தர்ப்பமேற்படுத்திக்கொண்டாவது படத்தை பார்த்து விடுங்கள்.


.



No comments:

Post a Comment