Thursday 5 October 2017

LORD CORNWALLIS ,THE FATHER OF INDIAN ADMINISTRATIVE SERVICES


LORD CORNWALLIS ,THE FATHER OF INDIAN ADMINISTRATIVE SERVICES


காரன்வாலிஸ் முன்னோர்கள் முதலாம்சார்லசுக்கு சேவை செய்தவர்கள் . இரண்டாம்சார்லசு காலத்திலும் அவருக்கு துணையாய் நின்றவர்கள் . எனவே வெளிநாடு சென்று கல்வி கற்பதிலும் ,அரசியல் செல்வாக்கு அடைவதிலும் அதிக சிரமம் ஏற்படவில்லை .அமெரிக்காவுடன் மோதல் போக்கை தவிர்க்க முயன்றாலும் , அமெரிக்க போரில் இவர் ஈடுபடும் கட்டாயம் ஏற்பட்டது .ஆரம்பத்தில் இவருக்கு வெற்றி கிட்டினாலும் இறுதியில் யார்க் டவுன் போரில் தோல்வியுற்று கைது ஆனார் .பின் பரோலில் விடுதலை செய்யப்பட்டு இங்கிலாந்து வந்தடைந்தார் .பின்னர் இந்திய கவர்னர் ஜெனரல் மற்றும் ராணுவ கமாண்டர் ஆக பொறுப்பேற்று திப்புவை மூன்றாம் மைசூர் போரில் சரணடைய செய்தார் .அயர்லாந்தில் கலகம் ஏற்படவே அங்கு சென்றார் .நெப்போலியனுடன் சமரசம் கண்டார் .பின்னர் மறுபடியும் இந்தியாவிற்கு வந்து ,சில நாளில் நோய் வாய்ப்பட்டு மரணம் அடைந்தார்


பிறப்பும் ,வளர்ப்பும் 

காரன்வாலிஸ் லண்டனில் க்ரோஸ்வென்  சதுக்கம் என்னுமிடத்தில்  பிறந்தார், அவருடைய குடும்பத்தின் சொத்துக்கள்  தோட்டங்கள் இங்கிலாந்தில் கென்ட் டில் இருந்தன. அவர் தந்தை  சார்லஸ் காரன்வாலிஸ் , தாயார், எலிசபெத் சார்லஸ்  இவர்களின் மூத்த மகனாக 1738  இல் டிசம்பர் 31  இல்பி றந்தார் 

காரன் வாலீஸின் முன்னோர்கள் - பிரெடெரிக் காரன் வாலீஸ் முதலாம் சார்லஸ் மன்னனுக்காக போராடியவர் . இரண்டாம் சார்லஸ் நாடு கடத்தப்பட்டபோதும் அவருக்கு உதவியாக அவருடன் சென்றவர் என்பதால் இங்கிலாந்தில் அரச குடும்ப வரிசையில் மதிப்பு மிக்கவராய் இருந்தார் 

காரன் வாலீஸ் கேம்பிரிட்ஜ் பல்கலை கழகத்தில் ஏடன் கல்லூரி மற்றும் கிளேர் கல்லூரியில் படித்தவர் .ஏடன் கல்லூரியில் படிக்கும் போது ஹாக்கி விளையாட்டின் போது கண்ணுக்கு பக்கத்தில்  எதிர்பாராமல்  அடி விழுந்தது .அவர் 1757  டிசம்பர் 8 இல் காலாட் படையில் சேர்ந்தார் .

பின்னர் அவர் வெளிநாடு சென்று இராணுவ படிப்பில் சேர அனுமதி அளிக்கப்பட்டது .பிரஸ்சியா வில் கேப்டன் டீ ரோகுய்ன் துணையுடன் டுரின் ராணுவ பள்ளியில் படித்தார் . 1758  இல்  படிப்பை நிறைவு செய்து ,பயிற்சிக்காக ஜெனீவாவிற்கு அனுப்பப்பட்டார் . அங்கே ஏழாண்டுப்போரில் 
நடப்பதை கண்ணுற்று பயிற்சியை நிறைவு செய்தார் 

ராணுவ வாழ்க்கையும் ,மதி நுட்பமும் 

1760 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் காரன் வாலிஸ் இங்கிலாந்து பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப் பட்டார் .1762 ஆம் ஆண்டில் தனது தந்தை வகித்த மதிப்பு மிக்க பதவியும் பெற்றார் . ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸிற்கு உயர்த்தப்பட்டார்.  வருங்கால பிரதமரான லார்ட் ராக்கிங்ஹாம் ஆகியோரின் ஆதரவாளராக அவர் ஆனார். [7]

1765 ஸ்டாம்ப் சட்டத்திற்கு எதிராக காலனித்துவவாதி அனுதாபத்துடன் வாக்களித்த ஐந்து பேரில் இவரும் ஒருவர் ஆவார். [8] அடுத்த ஆண்டுகளில், அவர் சுதந்திரப் போருக்கு வழிவகுத்த பதட்டங்கள் மற்றும் நெருக்கடிகளின் போது காலனித்துவவாதிகளுக்கு வலுவான ஆதரவு அளித்தார். [9]என்றாலும் அமெரிக்காவுடனான போர் தவிர்க்க முடியாமல் போய் விட்டது . 

 சார்லஸ் கார்ன்வால்ஸ் ஜெர்மனியில் ஏழு ஆண்டுகள் போரின் போது  மிடென்டன் (1759 )இராணுவ சேவைபுரிந்தார் , 1775 ஆம் ஆண்டில் அவர் பிரதான தளபதியாக ஆனார்..  அமெரிக்க புரட்சியின் போது சேர் ஹென்ரி கிளின்டனின் கீழ் பணியாற்றிய 1776 ஆம் ஆண்டில் வெற்றிகரமாகநியூயார்க்   நகரத்தை கைப்பற்றினார் 



1781 இல், ஜெனரல் ஹென்றி கிளிண்டனுக்கு இரண்டாவது கட்டளையாக, அவர் தனது படைகளை வர்ஜீனியாவிற்கு நகர்த்தினார், அங்கு அவர் யார்க் டவுன்  போரில் தோற்கடிக்கப்பட்டார். எனவே  கார்ன் வாலிஸ்  ஜார்ஜ் வாஷிங்டன் முன் சரண் அடைந்தார் .இதன் மூலம் அமெரிக்க புரட்சியில் அமேரிக்கா சுதந்திரத்தை அடைந்தது .

பரோலில் இங்கிலாந்து திரும்புதல்

காரன் வாலிஸ் , பெனடிக்ட் அர்னால்ட் உடன் பிரிட்டனுக்குத் திரும்பினார், 1782 ஆம் ஆண்டு ஜனவரி 21 அன்று இறங்கியபோது அவர்கள் மகிழ்ச்சிய டைந்தனர். [65]  யுத்தத்தில் வாலிஸ்  சரண் அடைந்தாலும்  சண்டை வேறொரு இடத்தில் நடந்து கொண்டிருந்தது .

காரன் வாலிஸ் அமெரிக்க தளபதி ஹென்றி லாரன்ஸ் விடுதலைக்காக   அதற்கு ஈடாகவே  தற்காலிகமாக பரோலில் விடுவிக்கப்பட்டிருந்தார் .ஆனால் உடன் படிக்கையின் படி லாரன்ஸ் விடுதலை செய்யப்படாததால் மறுபடியும் அமெரிக்காவிற்கு சண்டையிட செல்ல மறுத்து விட்டார்

என்றாலும்கார்ன் வாலிஸ்  மூன்றாம் ஜார்ஜின் அபிமானத்தை பெற்று இருந்ததால் ஆகஸ்டு 1785 ப்ரஷ்ஷியாவிற்கு நல்லெண்ண தூதுவராக நியமிக்கப்பட்டார்  

இந்தியாவில் கவர்னர் ஜெனரல் பதவி


1786  ஆம் ஆண்டு கவர்னர் ஜெனரல் மற்றும் ராணுவ கமாண்டர் ஆக இந்தியாவில் பதவி ஏற்றார் .முன்னதாக 1782  ஆம் ஆண்டிலேயே இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக பரிந்துரைக்க ப்பட்டாலும் , ராணுவ  பதவி தராததால்  வேலையில் சேர மறுத்து விட்டார் . 

காரன்வாலிஸ் மேற்கொண்ட உள்நாட்டு சீர்திருத்தங்களை மூன்று பிரிவுகளாக அறிந்து கொள்ளலாம். 

1 . ஆட்சித்துறை சீர்திருத்தங்கள் 

2 வருவாய் சீர்திருத்தங்கள் அல்லது நிலையான நிலவரித்திட்டம் 

3. நீதித் துறை மற்றும் பிற சீர்திருத்தங்கள். 

ஆட்சித்துறை சீர்திருத்தங்கள் 

திறமையான மற்றும் நேர்மையான பணியாளர்களை நியமித்து ஆட்சிப் பணித்துறையை செம்மைப்படுத்தியதே காரன்வாலிஸ் மேற்கொண்ட சீர்திருத்தங்களில் முதன்மையானதாகும். சிக்கனம் எளிமை தூய்மை ஆகியவற்றை அவர் தனது நோக்கங்களாகக் கொண்டிருந்தார். வணிகக்குழுவில் பணியாற்றிய ஊழியர்களுக்கு சொற்ப ஊதியமே வழங்கப்பட்டு வந்தது. ஆனால், அவர்கள் வருவாய்க்குமேல் பெருமளவு தரகுப் பணத்தைப் பெற்று வந்தனர். மேலும் தடை செய்யப்பட்டிருந்த அதிக வருமானமுள்ள தனிப்பட்ட வாணிகத்திலும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பெயரில் ஈடுபட்டு வந்தனர். ஆட்சித் துறையை தூய்மைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட காரன்வாலிஸ், குறைந்த ஊதியம் மற்றும் அதிக ஈட்டுப்படிகள் என்ற வழக்கத்தை ஒழித்தார். வணிகக்குழு ஊழியர்களுக்கு நிறைவான ஊதியம் வழங்கும்படி இயக்குநர் குழுவிடம் கேட்டுக் கொண்டார். இதன்மூலம் ஊழல் மிகுந்த வணிக முறைகளைக் களையமுடியும் என்று எடுத்துரைத்தார். 

மேலும் தகுதியின் அடிப்படையிலேயே நியமனங்கள் செய்யப்படவேண்டும் என்ற கொள்கையையும் காரன் வாலிஸ் தொடங்கி வைத்தார். இவ்வாறு இந்திய ஆட்சிப் பணித்துறைக்கு அவர் அடித்தளம் அமைத்தார். செலவினங்களைக் குறைப்பதற்காக பல்வேறு அதிகப்படியான பணியிடங்களை ரத்து செய்தார். வணிகம், நீதி, வருவாய் ஆகிய மூன்று துறைகளின் செயல்பாடுகளை தனித்தனியே பிரித்து ஒரு புதிய வகை ஆட்சியமைப்பை அறிமுகப்படுத்தினார். ஆட்சியமைப்பின் அச்சாணிகளாக இருந்த மாவட்ட கலெக்டர்களிடமிருந்து நீதித்துறை அதிகாரங்கள் பறிக்கப்பட்டன. அவர்கள் வருவாய்த்துறையில், வரிவசூலிக்கும் பணியை மட்டும் கவனித்து வந்தனர். 

காவல்துறை சீர்திருத்தங்கள் 

நீதித்துறையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் செம்மையாக நடைமுறைப்படுத்துவதற்கு காவல்துறையின் சீரமைப்பும் தேவையாக இருந்தது. மாவட்ட நீதிபதியின் கட்டுப்பாட்டில் காவல்துறை இருந்தது. ஒவ்வொரு மாவட்டமும் சுமார் 20 மைல் பரப்பளவு கொண்ட 'தாணா' (காவல் சரகம்) என்ற பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு 'தாணா' பிரிவும் 'தரோகா' எனப்பட்ட இந்திய அதிகாரியின் கட்டுப்பாட்டில் விடப்பட்டன. அவருக்கு உதவியாக பல காவலர்கள் நியமிக்கப்பட்டனர். இருப்பினும் காவல் துறை திறமையானதாக இல்லை. மார்ஷ்மேன் என்பவரது கூற்றுப்படி தரோகா வரம்பற்ற அதிகாரத்தைப் பெற்றிருந்ததோடு நாட்டில் நிலவிய கொடுமைகளுக்கும் காரணமாக இருந்தார். 

பிற சீர்திருத்தங்கள் 

வணிகக் குழுவின் வாணிப முதலீடுகளை நிர்வகித்து வந்த வணிக வாரியத்தை காரன்வாலிஸ் சீரமைத்தார். சார்லஸ் கிராண்ட் என்பவரின் உதவியோடு அதில் நிலவிய எண்ணற்ற முறைகேடுகளையும் ஊழல் நடவடிக்கைகளையும் அவர் ஒழித்தார். இந்திய தொழிலாளர்களுக்கும் நெசவாளிகளுக்கும் நியாயமான சலுகைகளை வழங்கினார். நேர்மையான பணியாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்தினார்.  

மூன்றாம் மைசூர் போர் 

06-.12-.1782 இல் மன்னர் ஹைதர் அலியின் மர­ணத்தை தொடர்ந்து 26.-12-.1782 இல் தனது 32 ஆவது வயதில் திப்பு சுல்தான் மைசூர் மன்­ன­ரானார். மன்னர் திப்பு சுல்தான் “புலி சின்னம்” பொறிக்­கப்­பட்ட கொடியை தனது சின்­ன­மாக பயன்­ப­டுத்­தினார். இதனால் திப்பு சுல்தான் “மைசூரின் புலி” என அழைக்­கப்­பட்டார். 


இரண்டாம் மைசூர் போர் அதா­வது மேற்கு கடற்­க­ரை­யி­லி­ருந்து ஆங்­கி­லே­யர்­களை துரத்த வேண்டும் என்ற எண்­ணத்தில் திப்பு சுல்தான் பிரான்ஸ் படை­யி­ன­ரையும் சேர்த்துக் கொண்டு 1780 ஆம் ஆண்டில் போர் தொடுத்தார்.

யுத்தம் நடை­பெற்று நான்கு வருட முடிவில் 1784 ஆம் ஆண்டில் பிரான்ஸ் மன்னன் 16 ஆம் லூயி பிரிட்­ட­னுடன் சம­ரசம் செய்து கொண்­டதால் திப்பு சுல்தான் வேறு வழி­யில்­லாமல் போரை நிறுத்த வேண்­டிய நிலை ஏற்­பட்­டது. 1784 ஆம் ஆண்டு முடி­வுற்ற இப்­போரில் ஆங்­கி­லேய தள­பதி உள்­ளிட்ட 4,000 இரா­ணுவ வீரர்கள் திப்பு சுல்­தானால் போர்க் கைதி­க­ளாக பிடிக்­கப்­பட்டு பின்னர் விடு­விக்­கப்­பட்­டனர்.

இந்த அவ­மானம் ஆங்­கி­லே­யர்­க­ளுக்கு திப்பு சுல்­தானை நினைத்­தாலே குலை நடுங்க செய்­தது.

1789 ஆம் ஆண்டு திப்பு சுல்தான் தலை­மையில் ஆங்­கி­லே­ய­ருக்கு எதி­ராக நடை­பெற்ற மூன்றாம் மைசூர் போரில் மராட்­டிய பேர­ரசும், ஹைத­ரபாத் நிஜாமும், பிரிட்டிஷ் படைத் தள­பதி கார்ன் வாலி­ஸுடன் இணைந்து திப்பு சுல்­தா­னுக்கு எதி­ராக போர் தொடுத்­தனர்.

திப்பு சுல்தான் எதி­ரி­களை துணிச்­ச­லுடன் எதிர்­கொண்ட போதிலும் 1792 ஆம் ஆண்டு வரை நடை­பெற்ற இந்தப் போரில் திப்பு சுல்தான் தோல்வி அடைந்தார். இறு­தியில் ஸ்ரீரங்­கப்­பட்­டிணம் அமைதி ஒப்­பந்­தத்­தின்­படி பல பகு­திகள் பிரிட்டிஷ், ஹைத­ரா­பாத்­நிஜாம் மற்றும் மராட்­டி­யர்­க­ளிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டன.

மூன்றாம் மைசூர் போரின் ஆரம்­பத்தில் வெற்றி பெற்ற திப்பு சுல்தான் போரின் இறுதிக் கட்­டத்தில் மராட்­டி­யர்கள் நய­வஞ்­ச­கத்­த­ன­மாக ஆங்­கி­லே­யர்­க­ளுடன் இணைந்து கொண்­டதால் ஒப்­பந்தம் செய்­து­கொள்ளும் நிலைக்குத் தள்­ளப்­பட்டார்.


மைசூரின் பாதி நிலப்­ப­ரப்பும் எதி­ரிகள் வசம் சென்­றது. இழப்­பீட்டுத் தொகை­யாக 3.3 கோடி நிர்­ண­யிக்­கப்­பட்­டது.

இழப்­பீட்டுத் தொகையை செலுத்தும் வரை திப்பு சுல்­தானின் இரு மகன்கள் பிணைக் கைதி­க­ளாகப் பிடித்து வைக்­கப்­பட்­டனர். திப்பு சுல்தான் இழப்­பீட்டுத் தொகையை செலுத்தி தனது இரு மகன்­களை மீட்டார். ஆங்­கி­லே­யர்­களால் ஸ்ரீரங்கப் பட்­டிணம் முற்­றுகை இடப்­பட்ட போதிலும் திப்பு சுல்­தானின் கோட்­டைக்குள் நுழைய இய­ல­வில்லை.

இந்திய ஆட்சி பணியின் தந்தை 

செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த காரன்வாலிஸ் நாட்டுப்பற்று மிக்கவராகத் திகழ்ந்தார். தனது கடமைகளை அச்சமின்றி நிறைவேற்றினார். கடமையும் தியாகமும் அவரது மூச்சாக விளங்கியது. திப்புவின் வளர்ச்சி அஞ்சும் நிலைக்கு சென்றபோது, தலையிடாக் கொள்கையை கைவிட்டு துணிச்சலுடன் அதனை எதிர்கொண்டார். ஒரு ஆட்சியாளராக வணிகக்குழுவின் ஆட்சியை இந்தியாவில் நிலைப்படுத்தினார். 

தூய்மையான திறமையான நிர்வாகத்திற்கு அடித்தளம் வகுத்தார். அவர் கொண்டுவந்த நிலையான நிலவரித் திட்டத்தில் குறைகள் இருந்தபோதிலும், ஆட்சித் துறை, நீதித்துறை சீர்திருத்தங்களில் தமது முத்திரையை காரன் லாலிஸ் பதித்துவிட்டுச் சென்றார். தற்கால இந்திய ஆட்சிப் பணியின் தந்தை என்று அவரைக் கருதலாம். 

காரன்வாலிசை தொடர்ந்து சர் ஜான் ஷோர் (1793 - 98) தலைமை ஆளுநராக பதவி வகித்தார். இவரது ஆட்சிக்காலத்தில் குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் ஏதும் இல்லை எனலாம்.

அயர்லாந்து கலகத்தை அடக்குதல் ,மனக்குமுறலும்  

ஜூன் 1798 இல் அயர்லாந்தின் லெப்டினென்ட் மற்றும் கமண்டராக நியமிக்கப்பட்டார் . இந்தப்பதவிக்கு 1797 லிலே பரிந்துரைக்கப் பட்டாலும்  மே மாத அயர்லாந்து கலகத்திற்கு பின்னரே அங்கு சென்றார் . இந்திய கமாண்டராக வெல்லெஸ்லி நியமிக்கப்பட்டார் .அயர்லாந்து கலவரக் காரர்களும் ,பிரான்ஸ் சிப்பாய்களையும் அடக்க 60000  துருப்புகள்  பயன்படுத்தப்பட்டன . ஏராளமான அயர்லாந்து கலவரக்காரர் களை கொன்றொழித்த பிறகே பிரெஞ்சு துருப்புகள்  சரண் அடைந்தனர் 

 என்னுடைய வேலை மிகவும் வருந்தத்தக்கதாக உள்ளது .மேலும் அரசரை தொடர்பு கொள்ள முடியாத படி ஊழல் தலைவிரித்தாடுகிறது 

இந்த மத பிரட்சனை வேதனை அளிக்கிறது . இதற்கு அயர்லாந்து இங்கிலாந்துடன் இணைக்கப்பட வேண்டும் . இல்லாத பட்சத்தில் நான் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று 1801அயர்லாந்தை விட்டு வெளியேறினார்   

நெப்போலியனுடன் சமரச தீர்வு

 பின்னர் நெப்போலியனுடன் சமரச தீர்வு காண பிரான்ஸ் சென்றார் .அமின்ஸ் உடன்படிக்கை 1802  மார்ச் 25 கையெழுத்தாகியது  என்றாலும் இந்த உடன்படிக்கை நெப்போலியனால் மீறப்பட்டது 



சொந்த வாழ்க்கை 

14 ஜூலை 1768 அன்று அவர் ஒரு கர்னல் கேல்லரின் மகள் ஜெமிமா டல்லிகின் ஜோன்ஸ்ஸை திருமணம் செய்தார். [10] அவரது மண வாழ்வு மகிழ்வுடன் கழிந்தது .அவர்கள்  சஃபோல்க் நகரில் ,குள் போர்ட் டில் வசித்தனர் .இவருக்கு மேரி என்ற மகளும், சார்லஸ் என்ற மகனும் பிறந்தனர் .மனைவி ஜெமினா 1779  ஏப்ரல் 14  இல் மரணம் அடைந்தார் 

No comments:

Post a Comment