Saturday 21 October 2017

RAVEENA RAVI , DUBBING ARTIST TURNED TO ACTRESS


RAVEENA RAVI , DUBBING ARTIST TURNED TO ACTRESS




ஒரு வருடம் காக்கவைத்த முதல் வாய்ப்பு!

சமந்தா, எமி ஜாக்சன், அமலா பால் எனப் பல முன்னணி நடிகைகளுக்குப் பின்னணிக் குரல் கொடுத்திருப்பவர், ரவீனா ரவி. `ஒரு கிடாயின் கருணை மனு' படத்தின் மூலம் நடிகையாகவும் அறிமுகமானார். "எங்க அம்மாவும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்... ஸ்ரீஜா ரவி. சின்ன வயசுல என்னை ஸ்டூடியோவுக்குக் கூட்டிட்டுப் போய் டப்பிங் துறையை அறிமுகப்படுத்தி வெச்சாங்க. இப்போ நடிப்பு, டப்பிங் - ரெண்டு வாய்ப்புகளும் வருது.'' - விழிகள் விரிய அழகுத் தமிழ்ப் பேசுகிறார், ரவீனா ரவி.
``டப்பிங் டூ ஆக்டிங்?’’
``இவ்ளோ நாள் திரைக்குப் பின்னாடி நடிச்சேன், இப்போ திரைக்கு முன்னாடி வந்திருக்கேன். ஆனா, டப்பிங் ஸ்டூடியோவுல நம்ம நடிப்பைச் சிலபேர்தான் பார்ப்பாங்க. கொஞ்சம் வசதியா இருக்கும். சினிமா அப்படி இல்லை. ஆரம்பத்துல கேமரா முன்னாடி நின்னு பேச ரொம்பவே திணறினேன். கொஞ்சம் கஷ்டமாவும் இருந்துச்சு. இப்போ பழகிட்டேன்னு நினைக்கிறேன்.''
ரவீனா ரவி
``ஃபேமிலி சப்போர்ட்?’’
``எங்க அம்மாவுக்குத்தான் என்னை நடிகையா பாக்கணும்னு ரொம்ப ஆசை. ஏன்னா, பாட்டிக்கு அம்மாவை நடிக்கவைக்கணும்னு ஆசை இருந்துச்சாம். டப்பிங்ல நிறைய டிப்ஸ் கொடுப்பாங்க. வீட்டுக்கு நான் ஒரே பொண்ணு. அப்பா மேடைப் பாடகர். பாலிவுட் நடிகர் அனுபம் கெர் சாரோட ஆக்டிங் ஸ்கூல்ல மூணு மாசம் நடிப்புப் பயிற்சி எடுத்தேன். குடும்பமே கலை மேல ஆர்வமா இருக்கிறதுனால, நான் நடிக்கிறது அவங்களுக்குப் பெரிய பிரச்னையா இல்லை.''
``முதல் வாய்ப்பு எப்படிக் கிடைச்சது?’’
`` `ஒரு கிடாயின் கருணை மனு' படத்தோட இயக்குநர், சினிமா டைரக்டரியில இருந்த என்னோட போட்டோவைப் பார்த்துக் கூப்பிட்டார். டப்பிங் வாய்ப்புனு நினைச்சுப் போனேன். `நீங்கதான் ஹீரோயின்’னு சர்ப்ரைஸ் கொடுத்தார். எனக்குச் செம ஹேப்பி. உடனே `ஓகே’ சொன்னேன். ஆனா, ஒரு வருஷமா ஆளையே காணோம். பிறகு திடீர்னு ஒருநாள் கூப்பிட்டு ஆடிஷன் வெச்சாங்க. ஓரளவுக்கு நடிச்சேன். டப்பிங் கொடுக்கும்போது யாராவது சிரிப்புக் காட்டினா நான்ஸ்டாப்பா சிரிச்சுக்கிட்டே இருப்பேன். `ஒரு கிடாயின் கருணை மனு' ஷூட்டிங் முழுக்கவே அப்படித்தான் இருந்தது.''
``நண்பர்கள் என்ன சொன்னாங்க?’’
``அம்மாவோட சின்ன வயசுல இருந்தே டிராவல் பண்றதுனால இண்டஸ்ட்ரியில எல்லாரையும் எனக்குத் தெரியும். என்னைக் குழந்தை மாதிரிதான் ட்ரீட் பண்ணுவாங்க. நடிகையா பார்த்த அவங்களுக்கு ரொம்பவே ஆச்சர்யம். `அப்புறம்... இனிமே டப்பிங் பேசமாட்டீங்க'னு கலாய்ச்சாங்க.''
``அடுத்து என்ன?’’
``டப்பிங் - ஆக்டிங் ரெண்டையுமே பண்ணுவேன். இப்போவும் டப்பிங் வாய்ப்புகள்தான் நிறைய வருது. இன்னும் என் முகம் குழந்தை மாதிரி இருக்கிறதால, ஹீரோயினா தொடர்ந்து நடிக்கக் கொஞ்ச காலம் ஆகும்னு நினைக்கிறேன்.''

No comments:

Post a Comment