Showing posts with label MUTHULINGAM. Show all posts
Showing posts with label MUTHULINGAM. Show all posts

Saturday, 20 March 2021

STYLE SIVAKAMASUNDARI -STORY BY MUTHULINGAM

 


ஸ்டைல் சிவகாமசுந்தரி

அ முத்துலிங்கம் 



யாழ்ப்பாணம் டவுனுக்குப் போவதற்கு பஸ் டிக்கட் 10 சதம்தான். கொக்குவில் என்றால் 50 சதம். வவுனியாவுக்கு 4 ரூபா; கொழும்புக்கு 12 ரூபா. கொழும்புத்துறைக்கு ஒன்றுமே கொடுக்கத் தேவையில்லை. ஏனென்றால் அவள்வீடு அங்கேதான் இருந்தது. பெயர் சிவகாமசுந்தரி. வயது 15. படித்த பள்ளிக்கூடம் வேம்படி. வருடம் 1965. 

தினமும் அவளுடைய அப்பா அவருடைய காரில் அவளை கொண்டுபோய் பள்ளிக்கூடத்தில் விடுவார். மாலையில் மறுபடியும் அழைத்துவருவார். கொழும்புத்துறையில் அவர் ஒருவரிடம்தான் கார் இருந்தது. ஏ30 கார். அது தூரத்தே வரும்போதே சனங்கள் சொல்லிவிடுவார்கள் சந்திரசேகரம் புறப்பட்டுவிட்டார் என்று. அவருடைய கார் அளவுக்கு அவரும் பிரபலமானவர். அவரிடம் இரண்டு லொறிகள் இருந்தன. அவற்றில் சாமான்கள் கொழும்புக்கு போகும், பின்னர் அதே லொறிகளில் வேறு சாமான்கள் திரும்பும். காலையில் அவர் வீட்டு வாசலில் ஒருகூட்டம் சனம் சாமான்களை வாங்க நிற்கும். ‘ஒரு காலத்தில் கொழும்பில் இருந்து நாவாய்களில் சாமான்கள் வந்து இங்கேதான் இறங்கின. அதுதான் கொழும்புத்துறை என்று பெயர். என்னுடைய பாட்டனுக்கு பாட்டன் செய்ததைத்தான் நான் செய்கிறேன்’ என்று பெருமையாகச் சொல்வார்.

கொழும்பு ஸ்டைலை கொழும்புத்துறைக்கு முதலில் கொண்டு வந்தது சிவகாமசுந்தரிதான். பால் கலக்காத தேநீர் நிறத்தில் இருப்பாள். சுற்றிலும் நிலத்தில் புறாக்கூட்டம் நிற்பதுபோல அவதானமாகத்தான் கால்களை எடுத்து வைப்பாள். ஆனால் கண்களில் கர்வம் இருக்கும். அப்பாவின் செல்லம். அவள் என்ன கேட்டாலும் அதை கொழும்பிலிருந்து தருவித்துக் கொடுத்துவிடுவார்.  2 உதட்டுச் சாயம், 4 நகப்பூச்சு, மூன்று அஞ்சனக் குப்பி, இருபது ரிப்பன்கள், ஒரு யார்ட்லி பவுடர் என ஒப்பனை பொருட்கள் அவளிடம் இருந்தன. ரப்பர் வளையப் பந்துகளை தலையில் முதலில் அணிந்து யாழ்ப்பாணத்துக்கு அறிமுகம் செய்தது அவள்தான்.

பள்ளிக்கூடத்திலிருந்து வந்ததும் முகத்தை கழுவுவாள். தலைவாரி இழுத்து பவுடர் பூசி பொட்டு வைத்து பச்சை பாவாடை அணிந்து பச்சைக்கரை வைத்த பிளவுஸ் தரித்து பச்சை தாவணியை உடுத்தி பச்சை குடையை தலைக்குமேல் பிடித்தபடி கேட்டைத் திறந்து வெளியே வந்தவள் நின்று யோசிப்பாள். சட்டென்று உள்ளே திரும்பி பச்சை கைலேஞ்சியை எடுத்து இடுப்பிலே செருகிக்கொண்டு நடக்கத் தொடங்குவாள். உடனேயே செய்தி பறக்கும். அந்த வீதியில் உள்ள இளம் பெண்கள் வாசலில் நிற்பார்கள். சிவகாமசுந்தரி ஸ்டைலாக நடந்து வீதியின் எல்லை மட்டும் போவாள். பின்னர் திரும்புவாள். கொழும்புக் குடை கையிலே இருப்பது பெரிய அனுகூலம். யாராவது அவளைப் பார்ப்பது பிடிக்கவில்லை என்றால் குடையால் மறைத்துவிடுவாள். கைப்பிடியில் இருக்கும் சின்ன பொத்தானை அழுத்தியதும் குடை தானாக அரை அடி உயரும். பின்னர் படக்கென்று இரண்டு கட்டமாக விரியும். அந்தக் குடை யாழ்ப்பாணத்தில் ஒருவரிடமும் இல்லை. அவளிடம் நாலு குடைகள் நாலு கலர்களில் இருந்தன.


எத்தனை ஸ்டைல் என்றாலும் சிவகாமசுந்தரிக்கு ஏதோ ஒன்று குறைந்தது. அரசியாக எங்கோ பிறக்க வேண்டியவள் இந்தக் குக்கிராமத்தில் பிறந்ததால் அவள் ஸ்டைல் எல்லாம் வீணாகிக்கொண்டிருந்தது. சௌபாக்கியவதி படத்தில் சாவித்திரி பழைய காலத்து ராஜகுமாரிபோல சேடிப்பெண்களுடன் போவாள். தோழிகள் இருந்தால்தான் மதிப்பு.  அழகிலும் ஸ்டைலிலும் குறைந்த நாலு பெண்களைத் தோழியராக சேர்த்துக்கொண்டு. வீதிவீதியாக அலைந்தாள். கரம்பன்வீதியை கடக்கும்போது சிவகாமசுந்தரி மூக்கைப் பொத்துவாள். மற்றவர்களும் பொத்துவார்கள். தேங்காய் மட்டைகளை கடற்கரையில் நனையவைத்து அங்கே கயிறு திரிப்பார்கள். அந்த மணம் வீதி முழுக்க நிரம்பியிருக்கும். சில பையன்கள் தொடருவார்கள். இன்னும் சிலர் அப்போது பிரபலமாயிருக்கும் சினிமா பாடல் வரி ஒன்றைப் பாடுவார்கள். தோழிகள் கிலுகிலுவென்று சிரிக்க இவள் மட்டும் தோரணையாக ஒரு பார்வை பார்ப்பாள். அவர்கள் அடங்கி சுருண்டு விழுவார்கள். .

தாயாருக்கு இவளுடைய ஸ்டைல் பிடிக்காது. அடிக்கடி திட்டுவாள். ஒருநாள் அவர் பயந்தது போலவே நடந்தது. சென்ட்ரல் கல்லூரி கார்னிவலுக்கு பலநாள் திட்டமிட்டு ஐந்து பெண்களும் புறப்பட்டார்கள். அன்று சிவகாமசுந்தரி முன்னெப்பொழுதும் செய்திராதமாதிரி தன்னை அலங்கரித்திருந்தாள். ஒற்றை விரலால் கொழும்பு கிரீமை முகத்திலே தடவினாள். கட்டம்போட்ட அரைத்தாவணி அணிந்து, தலையை வாரி இழுத்து சுருட்டி அலங்கரித்து முடியில் இரண்டு ரப்பர் பந்துகளை மாட்டியிருந்தாள். தோளிலே தொடும் தொங்கட்டான். கொஞ்சம் குதி உயர்ந்த கொழும்பு செருப்பில் உயரமாகத் தெரிந்தாள். சிவப்பும் மஞ்சளும் கலந்த காப்புகளை அணிந்து மஞ்சள் கைப்பையை தோளிலே மாட்டி மஞ்சள் கைக்குட்டையை இடுப்பிலே செருகினாள்.

கண்ணாடியில் பார்த்தபோது அவள் வடிவில் அவளே சொக்கினாள்.  கார்னிவல்லில் லைட்டுகள் மாயவேலைகள் செய்தன. சில ஓடின, சில சுழன்றன. சில பத்தி பத்தி நூர்ந்தன. சுழல் ராட்டினத்தில் சுழன்றார்கள். ராட்சத சில்லில் மேலும் கீழுமாக ஏறி இறங்கினார்கள். முழங்கைகளில் வழியவழிய ஐஸ்கிரீம் சாப்பிட்டார்கள். பாதாளக்கிணற்றில் மோட்டார்சைக்கிள் ஓட்டும் நிகழ்ச்சியின்போது நாலு சீட் தள்ளி அழகான இளந்தாரி ஒருத்தன்  உட்கார்ந்திருந்தான். கறுப்புக் கண்ணாடி அணிந்தபடி இவளையே பார்த்தான். பக்கத்தில் இருந்த சிநேகிதி தோளை இடித்து ’அவன் உன்னைப் பார்க்கிறான்’ என்றாள். இவளுக்கு நெஞ்சு படபடப்பு ஆரம்பித்தது. எத்தனை ஆண்கள் அவளை பார்த்திருக்கிறார்கள். அவள் சட்டை செய்ததே கிடையாது. இந்த உணர்வே வேறு. இவளால் கண்களை விலக்க முடியவில்லை. ஒருவித குதூகலம் நெஞ்சை நிறைத்தது.


வீட்டினுள் நுழைந்ததும் எரிச்சல் எரிச்சலாக வந்தது. அம்மாவைப் பார்த்ததும் அது கூடியது. கைப்பையை வீசினாள். கொழும்பு செருப்பை காலிலே இருந்து உதறினாள். தகப்பன் வந்து தலையை தடவி ’என்ன அம்மா?’ என்றார். ஏதாவது தேவையென்றால் அவள் பேசுவதை நிறுத்திவிடுவாள். தகப்பனை கெஞ்ச வைத்தபின் ’சன்கிளாஸ்’ என்றாள். அவருக்கு புரியவில்லை. ’கறுப்புக் கண்ணாடி, அப்பா. அதுதான் இப்ப ஸ்டைல்.’. அடுத்த நாளே கொழும்பிலிருந்து கறுப்புக் கண்ணாடி ஒன்று வந்தது. முன்னுக்கு நிற்பவருடைய முகம் அதில் தெரியும் அதை மாட்டி  நடக்கும்போது அவன் பார்க்க வேண்டும் என நினைத்தாள். ஆனால் அவனை எங்கே தேடுவது?

கணக்குப் பாடம் ஓடாததால் இரண்டு வீதி தள்ளி கணக்கு மிஸ்ஸிடம் தனியாக ட்யூசனுக்கு போய்வரத் துடங்கினாள். கறுப்புக் கண்ணாடி அணிந்து வீதியிலே அவள் போனபோது ஒருநாள் சைக்கிளில் ஒரு வாலிபன் உட்கார்ந்து அவளையே உற்றுப் பார்த்தான். அதே கறுப்பு கண்ணாடி அணிந்தவன்தான். இவள் நெஞ்சு பதைபதைக்கத் தொடங்கியது. எங்கே பார்ப்பது என்று தெரியவில்லை. எங்கே தலையை திருப்பினாலும் கண்கள் அவன் பக்கமே பார்த்தன. துணிச்சலாக அவன் சிரித்தான். அவளுக்கு என்ன நடந்தது?. வேகமாக அந்த இடத்தைவிட்டு ஓடவேண்டும் அல்லவா? சிரித்துவிட்டாள். ஏன் அப்படிச் சிரித்தோம் என்று தன்னையே கேட்டபடி வீட்டுக்கு வந்தாள். அவளால் அவனை மறக்க முடியவில்லை. தினமும் அதே இடத்தில் நின்று சிரித்தான். .  ட்யூசன் செல்லும் மாலைகளை ஆவலுடன் எதிர்பார்க்க ஆரம்பித்தாள்.

சனி, ஞாயிறு  ட்யூசன் இல்லாத்தால் வீட்டில் இருப்பது நரக வேதனையாக இருந்தது. திங்கள் ட்யூசனுக்கு போனபோது அவனைக் காணவில்லை. அந்த இடத்தில் சிறிது நின்றுகூடப் பார்த்தாள். கோபம் கோபமாக வந்தது. செவ்வாய்க்கிழமையும் அவன் வரவில்லை. இப்பொழுது பயம் பிடித்தது. கோபம், பயம், எரிச்சல் என்று பல உணர்ச்சிகள். இவன் யார்? பெயர்கூடத் தெரியாதே.? பாவாடையை கிழிக்கத் தோன்றியது. தலைமயிரை இழுத்து பிய்த்துப் போட நினைத்தாள். புதன்கிழமை அதே இடத்தில் நின்று ஒன்றுமே நடக்காததுபோல சிரித்தான். அவள் பட்ட வேதனை ஓர் இழவும் அவனுக்கு தெரியவில்லை. அவளுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. அவனைப் பார்த்து ’நேற்று ஏன் வரவில்லை?’ என்று கேட்டாள். ஒரு காதலனைப் பார்த்து அவள் பேசிய முதல் வார்த்தைகள். அவனில் ஒரு மாற்றமும் இல்லை. ஒரு கால் நிலத்தில் ஊன்றியிருக்க மற்றக் காலை பெடலில் வைத்து அவளைப் பார்த்து சொன்னான். ‘நேற்று என்ன கிழமை? செவ்வாய்க்கிழமை. ஓ, சியாமளாவைப் பார்க்க போய்விட்டேன்’ என்றான். பின்னர் இருவரும் ஒரே நேரத்தில் சிரித்தார்கள். அவன் சிரித்தபோது கழுத்து நரம்புகள் துடித்ததை பெரும் அதிசயத்தோடு பார்த்தாள். அப்படித்தான் அவர்கள் காதல் ஆரம்பித்தது.

மூன்றாம் நாள்தான் அவன் பெயர் தெரிந்தது. சாமுவேல் என்றான். ’ஓ யேசுதான் உங்கள் கடவுளா?’ அவன் தலையாட்டினான். ஒரு சின்னத் தலையாட்டல்கூட எத்தனை அழகாயிருக்கிறது. அவள் சிரித்தாள். ’ஏன் சிரிக்கிறீர்?’ ’அப்பாவிடம் உங்கள் பெயர் சாமிவேல் என்று சொல்லிவிடுவேன். ஒரு பிரச்சினையும் இராது.’ இப்பொழுது இருவரும் சிரித்தார்கள். ட்யூசன் நேரத்தை அரைவாசியாகக் குறைத்தாள். சிலநாட்கள் ட்யூசனுக்கே போவதில்லை. தினமும் கடிதம் பரிமாறிக் கொண்டார்கள். சனி ஞாயிறு நாட்களில் சந்திக்க முடியாமல் விரக தாபத்தில் துடித்தார்கள். இந்தக் காதல் விவகாரம் ஒரு வருடம் தொடர்ந்தது. ஊருக்கெல்லாம் கதை பரவிய . பின்னர் அவள் அம்மாவுக்கு தெரிந்தது. கடைசி கடைசியாக அப்பாவுக்கும் செய்தி எட்டியது. அப்பா அவளை நேருக்கு நேர் கேட்டார். அந்த முகத்தை அவளால் மறக்க முடியாது. இருபது பேர் குத்தியதுபோல அவர் முகம் சிவந்து ரத்தம் கண்டிப்போய் கிடந்தது. முகத்தில் கண்ணீரா வியர்வையா என்று தெரியாதபடி திரவம் ஓடியது. ‘உண்மையா?’ என்றார். அவள் ’ஓம் அப்பா’ என்றாள்.

அதற்கு முதல் நாள் நல்லூர் ஏழுமுகத் திருவிழாவுக்கு போயிருந்தார்கள். அப்பா அதிசந்தோசமாக  இருந்த கடைசி நாள் அது. அம்மா கேட்ட அத்தனை வெண்கலப் பாத்திரங்களையும் வாங்கிக் கொடுத்தார். சிவகாமசுந்தரி வளையல் கடையின் முன்னால் ஒரு மணிநேரம் நின்று கறுப்பு, மஞ்சள், ஊதா. நீலம், பச்சை, சிவப்பு மென்சிவப்பு என்று சகல நிறங்களிலும் ஐந்து ஐந்து சோடிகள் வாங்கினாள். சனக்கூட்டம் ஒருவரை ஒருவர் இடித்தபடி வெளியேறிக் கொண்டிருந்தது. நீண்ட தூரம் நடந்து கோயிலுக்கு வெளியே வந்து காரைக் கண்டுபிடித்து ஏறினார்கள். கார் வேகம் பிடிக்க ஆரம்பித்தபோது ‘அப்பா’ என்றாள் ’என்ன மகளே?’ சட்டென்று காரை நிறுத்தினார். ’அப்பா, வெள்ளைக் காப்பு வாங்க மறந்துபோனேன்.’. அவர் ஒன்றுமே பேசாமல் காரை விட்டு இறங்கி மகளிடம் அளவு காப்பு வாங்கிக்கொண்டு எதிர் திசையில் ஓடினார். இருபது நிமிடம் காத்திருந்தார்கள். களைத்து விழுந்து திரும்பிய அவர் கையை நீட்டியபடியே ஓடி வந்தார். அதில் ஐந்து சோடி வெள்ளை வளையல்கள் இருந்தன. ’செல்ல அப்பா. என்ரை அப்பா’ என்று காப்புகளை வாங்கினாள். சற்று திரும்பி பார்த்திருந்தால் தாயார் முகத்தில் நெருப்பு எரிவது தெரிந்திருக்கும்.

’மகள், இது சரிவராது. பையனைப் பற்றி விசாரித்தனான். அவன் படிக்கவில்லை. பஸ் கம்பனியில மிகச் சாதாரண வேலை செய்கிறான். அவன் சம்பளத்தில் உனக்கு ஒரு நல்ல சேலைகூட வாங்கித் தரமுடியாது. அவர்கள் வேதக்காரர்கள்.  நீ என்ரை செல்ல மகள் அல்லவா? நான் வெளியிலே தலை காட்ட முடியாது, மகளே’ என்று கெஞ்சினார். அவள் சாமுவேல் சொல்லித் தந்ததை மனதிலே நினைத்தாள். ’உன்பக்கம் நியாயம் இருந்தால் உன் வலிமை நாலு மடங்காக கூடிவிடும்.’ திரும்பத் திரும்ப அதையே சொன்னாள். அழவில்லை. நிதானமாகவே பேசினாள். ’அப்பா அவர் நல்லவர். என்னை நல்லாய் வைத்திருப்பார்.’ 

தினம் தினம் அறிவுரைபோல ஆரம்பிக்கும் பேச்சு பின்னர் குரல் உயர்ந்து சண்டையாக மாறும். அவள் சாப்பிடாமல் படுக்கப் போய்விடுவாள். ஒருநாள் சந்திரசேகரம் கோபம் தலைக்கேறி கன்னத்தில் அடித்துவிட்டார். அவளால் நம்ப முடியவில்லை. அவராலும் நம்ப முடியவில்லை. இந்த 16 வருடத்தில் ஒருநாள்கூட அவர் அவளை அடித்தது கிடையாது. அவள் ஓடிப்போய் கிணற்றிலே குதித்து விட்டாள். அவரும் குதித்தார். இருவரையும் ஆஸ்பத்திரிக்கு தூக்கி ஓடினார்கள். அவருக்கு கால் முறிந்துவிட்டது. அவள் ஒருநாளில் வீட்டுக்கு திரும்பிவிட்டாள். அவருக்கு மூன்று மாதம் எடுத்தது. அந்த மூன்று மாதமும் அவள் சாமுவேலை ரகஸ்யமாகச் சந்தித்துக்கொண்டே இருந்தாள்.

சந்திரசேகரம் இந்தப் பிரச்சினையை எப்படி தீர்ப்பது என்று தெரியாமல் குழம்பிப்போய் இருந்தார். அவர் என்ன குறை வைத்தார்? அன்பைத் தவிர அவர் வேறு ஒன்றையும் அவளுக்குத் தரவில்லையே! எப்படி அவளால் விலகி விலகிப் போகமுடிந்தது.  பள்ளிக்கூடத்துக்கு போவதை ஒரு வருடமாக நிறுத்திவிட்டார்கள். . கொழும்பிலே நல்ல உத்தியோகத்தில் இருக்கும் ஒருவனின் சாதகம் பொருந்தியிருந்தது. சிவகாமசுந்தரியின் படத்தை பார்த்து அவன் சம்மதம் சொன்னதால். திருமணத்துக்கு நாளும் குறித்து விட்டார்கள். அவளுக்கு முன்னுக்கும் பின்னுக்கும் காவல். கிணற்றுப் பக்கம் அவள் போகவே முடியாது. அன்றிரவு தண்ணீர் குடிக்க வைத்திருந்த கிளாஸை உடைத்து தூள் தூளாக்கி எப்படியோ உட்கொண்டு விட்டாள்.

ஆஸ்பத்திரிக்கு மறுபடியும் கொண்டு ஓடினார்கள். நாலு நாட்களாக ரத்தம் ரத்தமாக வாயாலும், வயிற்றாலும் போனது. கிளாஸ் துகள்கள் குடல் முழுக்க ஒட்டிக்கொண்டதால் மருத்துவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ரொட்டித் துண்டை இரண்டாக வெட்டி நடுவிலே பஞ்சு அடைத்து சாண்ட்விச் போல செய்து சாப்பிட வைத்தார்கள். அப்படி நாலு சாண்ட்விச் உள்ளே போனது.  இன்னொரு பக்கத்தில் ட்ரிப் ஏறியது. கொஞ்சம் கொஞ்சமாக ரத்தப்போக்கு நின்று முற்றிலும் குணமானாள்.

பத்து நாட்களும் கட்டிலுக்கு பக்கத்தில் அப்பா இருந்தார். ‘ஏன் மகளே இப்படிச் செய்தாய். நீ செத்தபிறகு நாங்கள் உயிருடன் இருப்போமா?’ என்று சொல்லி அழ ஆரம்பித்தார். இத்தனை பாசம் கொண்ட அப்பாவை பிரிந்து என்ன வாழ்க்கை வேண்டியிருக்கு என்ற எண்ணம் அவளுக்கு எழுந்தது. ’அப்பா உங்கள் விருப்பம் போலவே செய்யுங்கள். நான் மாறமாட்டேன். இது சத்தியம்’ என்றாள். அவள் அப்பா முகம் சிரிப்பதை பல மாதங்களுக்கு பிறகு கண்டாள். அடுத்தநாள் காலை அவர் அவளை வீட்டுக்கு அழைத்துப்போக வந்தார். அவளைக் கட்டிலில் காணவில்லை. அவள் சாமுவேலுடன் ஓடிவிட்டாள்.

சந்திரசேகரம் வீட்டில் நிறைய ஆட்கள் சேர்ந்துவிட்டார்கள். ஒரு செத்த வீடு எப்படியிருக்குமோ அப்படியே ஆகிவிட்டது. அவள் சத்தியம் செய்து கொடுத்ததையே திரும்ப திரும்ப எண்ணினார். மனைவி முடியை விரித்து தலையில் அடித்து ’முற்றத்து வெய்யில் முதுகில் படாமல் வளர்த்தேனே’ என்று ஒப்பாரி வைத்தார். சிலர் இப்பொழுதே போய் அவளை இழுத்து வருவோம் என்றார்கள். வேறு. சிலர் பொலீஸில் சொல்லலாம் என்று அறிவுரை கூறினார்கள். சந்திரசேகரம் யோசித்துப் பார்த்தார். இரண்டு தரம் தற்கொலை முயற்சியில் இறங்கியிருக்கிறாள். சத்தியம் செய்து கொடுத்துவிட்டு அதை மீறிப் போயிருக்கிறாள். அவள் காதலில் எத்தனை தீவிரமாக இருக்கிறாள். ‘வேண்டாம் 17 வருடங்கள் மட்டுமே எனக்கு ஒரு மகள் இருந்தாள். அவளைப் பிடித்து இழுத்து வந்து என்ன பிரயோசனம்? மறுபடியும் ஓடத்தானே போகிறாள்’ என்றார்.

அன்றிலிருந்து அவருக்கு தகவல் சொல்லும் ஆட்கள் பெருகிவிட்டார்கள். ஒருவர் சொன்னார் அவளுடைய பெயர் இப்போ ’மட்டில்லா.’ இன்னொருவர்  மாதாகோயிலில் திருமணம் நடந்து முடிந்துவிட்டதாக தகவல் தந்தார்.  ‘முன்பெல்லாம் என்ன ஸ்டைலாக இருப்பாள். பூவெல்லாம் சாயம்போன பழைய சேலையில் சந்தைக்கு வந்திருந்தாள். தலை வாரவில்லை; பொட்டும் இல்லை’ என்றார்கள். அவருக்கு குடலையே அறுத்து வீசியதுபோல வேதனை ஏற்பட்டது. ’மட்டில்லா’ என்று பெயராம். ’அவளுக்கு மட்டில்லா மகிழ்ச்சியா? அல்லது எங்களுக்கு மட்டில்லா வேதனையா?’ வயிற்றைப் பிடித்தபடி அவர் புலம்பினார்.

முதல் பிள்ளை பிறந்தபோது அவர்கள் வரக்கூடும் என்று நினைத்தார். வரவில்லை. மூன்று வருடம் ஓடியது. இரண்டாவது பிள்ளையும் பிறந்தது. அவர்களை இனிமேல் பார்ப்போம் என்ற நம்பிக்கை போய்விட்டது. வெளியிடங்களுக்கு போகும்போது அவர் கண்கள் அவளைத் தேடித்தேடி ஏங்கின. ஒருநாள் செய்தி வந்தது. அவள் ஆஸ்துமாவால் தினம் வேதனை அனுபவிக்கிறாள்  என்று. சிறு வயதாயிருந்தபோது ஒரேயொரு முறை அவளுக்கு ஆஸ்துமா தாக்கி அவர் அவளைத் தோளிலே தூக்கிப் போட்டுக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடியது நினைவுக்கு வந்தது.

சிலநாட்களாக அவருக்கு சீவியம் வெறுத்துவிட்டது. மகள் நினைவாகவே இருந்தது. மெலிந்து போயிருக்கிறாள் என்று சொன்னார்கள். மாமியாருக்கு வேறு உடல்நலம் இல்லையாம். புருசன் காலையில் போனால் இரவுதான் திரும்புவான். இரண்டு குழந்தைகளையும் மாமியாரையும் எப்படி சமாளிக்கிறாள்? சிறுவயதில் இரவிலே ரகஸ்யமாக வந்து அவர் முதுகிலே கன்னத்தை வைத்துக்கொண்டு தூங்குவாள். வீட்டிலே உளுத்தம் களி கிண்டினால் அதைச் சாப்பிட முன்னர் ஒரு கரண்டி கொண்டுவந்து அவர் வாய்க்கு கிட்ட நீட்டுவாள்.

அவரால் அவதி தாங்க முடியவில்லை. காரை எடுத்துப்போய் கரம்பன் வீதி நுனியிலே நிறுத்திவிட்டு 18ம் நம்பர் வீட்டையே பார்த்துக் கொண்டிருந்தார். ஓர் அறை மட்டுமே உள்ள சின்ன வீடு அது. மறுபடியும் மாலைபோய் அரை மணி நேரம் காத்திருந்தார். அவருடைய காரை எல்லோருக்கும் தெரியுமாதலால் நீண்ட நேரம் தரிக்க முடியாது. இது பல நாள் தொடர்ந்தது.  ஒருநாள் காலை ஒன்பது மணிபோல. அவரிடம் கொஞ்சம் தைரியம் மிச்சமிருந்தது. ’எதற்குப் பயம்? மகள் வீடுதானே, உள்ளே போகலாம்’ என்று நினைத்தபோது ஓர் உருவம் வீட்டை விட்டு வெளியே வந்து எதையோ வீதியில் கொட்டிவிட்டு நின்று அவர் பக்கம் உற்றுப் பார்த்தது. சந்திரசேகரம் காரை விட்டு இறங்கி மகளை நோக்கி ஓடத் தொடங்கினார். அவள் தன் வாழ்நாளில் பலமுறை பின்னர் நினைத்துப் பார்த்த அவளுடைய ஓட்டம் தொடங்கியது. விமானம் ஒன்று மேலே பறக்கும் சத்தம் கேட்டது. ஈரக் கயிறு மணம் வீசும் காற்றை உள்ளே இழுத்தாள்; அவள் நிழல் அவளை முந்திக்கொண்டு பாய்ந்து பாய்ந்து நகர்ந்தது. கட்டிப்பிடித்து ’அப்பா’ என்று அலறினாள். அவள் அழுவதே இல்லை. முதல்முறையாக அவள் அழுவதை பார்த்தார். ’அழாதே அம்மா நான் வந்திட்டன், அழாதே’ என்று கண்ணீரைத் துடைத்தார். 20 வருடக் கண்ணீர் அங்கே கொட்டியது.

’இத்தனை தூரம் வந்த உங்களுக்கு வீட்டினுள்ளே வரமுடியவில்லையா, அப்பா?’ அப்பொழுதுதான் ’ஸ்டைல் சிவகாமசுந்தரி’ என்று ஒருகாலத்தில் அழைக்கப்பட்ட அவருடைய மகளை. கவனித்தார். கண்கள் உள்ளுக்குப் போய், உதடுகள் வெடித்துக் கிடந்தன. ஒரு கிழமைக்கு முன்னர் தோய்த்திருக்கக்கூடிய நீளமான வீட்டு உடையை அணிந்திருந்தாள். தினம் நகப்பூச்சு பூசிய நகங்கள் உள்பக்கம் தேய்ந்து கறுத்துப்போய் காணப்பட்டன. மூச்சு வாங்கியது. அது ஓடிவந்த களைப்பு அல்ல, மூச்சுத் திணறல். நிமிர்ந்து மூச்சை உள்ளே இழுத்தாள் ஆனால் அவளால் சுவாசப்பையை பாதிகூட நிரப்ப முடியவில்லை. பார்க்கவே பரிதாபமாகவிருந்தது. ‘இப்பவே நான் உன்னை மருத்துவரிடம் அழைத்துப் போகிறேன். அவரை எனக்கு தெரியும். காரில் ஏறு’ என்றார். அவள் இறகு போல அவருக்குப் பின்னால் வந்தாள். காருக்குள் ஏறியதும் ‘உன்னை ‘மட்டில்லா’ என்றா நான் அழைக்கவேண்டும்?’ என்றார். ‘அப்பா, உங்களுக்கு நான் எப்பவும் சிவகாமசுந்தரிதான்.’   ’இது என்ன கோலம், அம்மா?’ என்று மறுபடியும் விம்மினார். ’பேசாமல் ஓட்டுங்கோ’ என்றாள் பழைய கட்டளையிடும் தொனியில். அதைக் கேட்க அவருக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ’உன்னைத் தேடுவார்களே. வீட்டுக்கு போய் மாமியாரிடம் சொல்லிவிட்டு வா’ என்றார்.

‘அப்பா, காரை எடுங்கோ.’ அதிகாரம் குறையவில்லை. ’நான் உங்களிடம் சொல்லாமல்தானே ஓடினேன்.’






Friday, 7 August 2020

IDI AMEEN WAITING IS A PUNISHMENT BY MUTHULINGAM




IDI AMEEN 
WAITING IS A PUNISHMENT
BY MUTHULINGAM


உலகின் மிகப்பெரிய தண்டனை | அ.முத்துலிங்கம்
என்ன நடக்கிறது இங்கே? சிறைக்கூடத்தை தயார் செய்கிறார்களா அல்லது பிளேன் டிக்கட் ஏற்பாடு செய்கிறார்களா? என்னை முதலில் அனுப்பிவிட்டு பின்னர் மனைவியையும் பிள்ளைகளையும் அனுப்புவார்களா?
.

எழுத்தாளர் அ. முத்துலிங்கம்

இடிஅமீன் காலம் 

விமானத்தில் ஒரு முறை பறந்து கொண்டிருந்தபோது அது பாதி வழியில் பழுதாகி மேலே பறக்க முடியாமல் கீழே அகப்பட்ட விமான நிலையம் ஒன்றில் இறங்கியது. முதலில் இரண்டு மணித்தியாலத்தில் விமானம்  சரியாகிவிடும் என்று சொன்னார்கள். பின்னர் ஆறு மணி நேரம் என்றார்கள். பழுது பார்க்கப்பட்ட விமானத்தில் ஏறி மூன்று மணிநேரம் ஓடுதரையில் காத்திருந்த பின்னர் மீண்டும் இறக்கப்பட்டோம். ஒரு முழு நாள் ஆனது.
விமானக் கம்பெனி பயணிகளுக்கு தங்க இடமும் உணவும் ஏற்பாடு செய்து, ஒரு புது விமானம் வருகிறது காத்திருங்கள் என்றது. எல்லா பயணியரும் கோபத்தின் உச்சிக்கு போய் பழுதுபட்ட விமானத்தில் மீண்டும் பறப்பதற்கு  தயாராக இருந்தார்கள். காத்திருப்பது ஒருவருக்குமே பிடிப்பதில்லை. அது பெரிய தண்டனை.

ஆப்பிரிக்காவில் வேலை கிடைத்து நான் அங்கே போனபோது நடந்த ஒரு சம்பவம். அந்த நாட்டில் அப்பொழுது கிட்டத்தட்ட மூன்று வருடங்களைக் கழித்து விட்டேன். எங்கள் வீடு காட்டுப் பகுதியில் நாலு தூண்களுக்கு மேல் தனியாக நின்றது. நான் வேலை செய்த கம்பனி காட்டு மரங்களை வெட்டி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது. கம்பெனியில் கணிசமான அரசாங்க முதலீடு இருந்தபடியால் அது ஒரு முற்று முழுதான அரசாங்க நிறுவனமாக மாறுவதற்கு முயன்று கொண்டிருந்தது.

ஒருநாள் பின்னேரம் ஏழுமணியளவில் நான் வெளிவராந்தாவில் உட்கார்ந்து ஓய்வெடுத்தேன். மனைவியும் பிள்ளைகளும் உள்ளே இருந்தார்கள். வெளியே எரிந்த மின்விளக்கை அணைத்திருந்தேன். ஏனென்றால் ஆப்பிரிக்காவின் அத்தனை பூச்சிகளும் என்னைச் சுற்றி மொய்த்துவிடும். காடு எழுப்பும் ஒலி நேரத்துக்கு நேரம் மாறுபடும். ஆறு மணிக்கு ஒரு சத்தம், ஏழு மணிக்கு ஒரு சத்தம், நடு இரவு ஒரு சத்தம் என்று வித்தியாசமாக இருக்கும். அந்த ஒலிகளை தனித்தனியாக இனம் பிரித்து இது இன்ன பூச்சியின் சத்தம், இது இன்ன பறவையின் சத்தம், இது இன்ன மிருகத்தின் சத்தம் என்று ஊகிப்பது எனக்கு பிடித்த விளையாட்டு. அதைத்தான் செய்து கொண்டிருந்தேன்.

அப்பொழுது பார்த்து திடீரென்று ஒரு வாகனம் வந்து நின்றது. அந்த நேரத்தில் ஒருவரும் காட்டுக்கு அண்மையில் இருக்கும் என் வீட்டிற்கு  வருவது கிடையாது. அது அரசாங்க முத்திரை பதித்த வாகனமாயிருந்தபடியால் ஆச்சரியம் இன்னும் கூடியது. சீருடை அணிந்த சேவகன் ஒருவன் வந்து ஒரு தந்தியை கொடுத்து விட்டு போனான். வழக்கமாக இப்படி, இந்த நேரத்தில்  தந்தி விநியோகிப்பதில்லை. இது விபரீதமாகப் பட்டது. ஏதோ முக்கியமான சமாச்சாரம் என்று நினைத்துக்கொண்டு உறையை பிரிப்பதற்காக வீட்டின் உள்ளே போனேன். மின்விளக்கு வெளிச்சத்தில் என் கை உதறுவதைக் கண்டேன். என் மனைவி மகளைத் தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு என் பக்கத்தில் நின்றாள். என் மகன் காலைப் பிடித்துக்கொண்டு கீழே நின்றான். ஒரு சொல் ஒருவரும் பேசாவிட்டாலும் அந்த தந்திக்குள் எங்கள் வாழ்க்கையை மாற்றப் போகும் ஏதோ வார்த்தைகள் இருப்பது அந்தக் கணம் எல்லோருக்கும் தெரிந்திருந்தது.


.
அந்த நாட்டு ஜனாதிபதியின் அரண்மனையிலிருந்து தந்தி வந்திருந்தது. மூன்றே மூன்று வார்த்தைகள்தான். ‘அரண்மனைக்கு உடனே வரவும்.’ என் முகம் எப்படி மாறிப் போனது என்பது எனக்கு தெரியாது. ஆனால் மனைவியின் கண்களில் முன்னெப்பொழுதும் தோன்றாத பீதி தெரிந்தது. என்ன என்ன என்று கேட்டார். என்னால் பதில் சொல்ல முடியவில்லை. நிச்சயமாக அரசமாளிகை இரவு விருந்துக்கு என்னை கூப்பிடவில்லை. தங்க மாலை போட்டு விருது வழங்கவும் அழைக்கவில்லை. என்னைப் போன்றவர்களுக்கு ஜனாதிபதியிடமிருந்து தந்தி வந்தால் அதன் பொருள் ஒன்றுதான். நீங்கள் சிறைக்கு செல்கிறீர்கள். அல்லது நாடு கடத்தப் படுகிறீர்கள். நான் என்ன நடந்திருக்கும், எதற்காக இந்த தந்தியை அனுப்பியிருக்கிறார்கள் என்று மூளையை ஆசுவாசப்படுத்தி யோசிக்க ஆரம்பித்தேன்.

எங்கள் கம்பனிக்கு ஒரு தலைமையதிகாரி இருந்தார். என்னிலும் பார்க்க இருபது வயது கூடியவர். அஞ்சா நெஞ்சர். நுட்பமாகச் சிந்தித்து செயலாற்ற தெரிந்தவர். தொடர்ந்து 12 மணி நேரம் களைக்காமல் வேலை செய்யக்கூடியவர் ஆனால் அதே சமயம் கேளிக்கை பிரியர். நான் கம்பெனியில் சேர்ந்ததும் கொஞ்சம் கொஞ்சமாக தன் வேலைகளை எல்லாம் என் பக்கம் தள்ளிவிட்டு கம்பெனி விசயமாக பயணம் செய்வதை தன் முழுநேர கடமையாக மாற்றினார். மாதத்தில் இருபது நாட்கள் அவர் வெளிநாட்டில் சுற்றினார். அந்த நாட்களில் அவர் வேலையையும் நான்தான் பார்க்க வேண்டும்.

ஒரு வாரத்திற்கு முன்பு ஜனாதிபதிக்கு வேண்டிய ஒருவர் அவரிடமிருந்து ஒரு கடிதத்தை கொண்டு வந்தார். கையெழுத்து இல்லாத, தட்டச்சு செய்த இரண்டு வரிக் கடிதம். அதை நீட்டி ஒரு காரியம் ஆகவேண்டுமென்று சொன்னார். அவர் கேட்டது கம்பனி விதிகளுக்கு அப்பாற்பட்டது ஆகவே நான் மறுத்து விட்டேன். என்னுடன் வேலை செய்தவர்கள் அவர் பலம் வாய்ந்தவர் என்றும், அவரைப் பகைக்க கூடாது என்றும் அறிவுறுத்தினர். நான் அதை உதாசீனம் செய்தேன். அப்பொழுது எனக்கு வயது இப்பொழுது இருக்கும் வயதில் சரி பாதி. மூளையும் சரி பாதி. ‘கோழியும் அவங்கட, புழுங்கலும் அவங்கட’ என்பதை நான் நினைத்துப் பார்க்கவில்லை. அதன் விளைவுதான் இந்த தந்தி என்பது ஊகிக்கக் கூடியதாக இருந்தது.

.

மனைவி இப்பவே புறப்பட வேண்டுமா என்று கேட்டார். தந்தியின் வாசகம் மிகத் தெளிவாக இருந்தது. அரண்மனைக்கு உடனே வரவும். அரண்மனை மூன்று மணி தூரத்தில் இருந்தது. காட்டுப் பாதையில் இரவில் தனியாக பிரயாணம் செய்ய வேண்டும். இப்பொழுது புறப்பட்டால் இரவு ஒரு மணிக்கு அரண்மனை போய்ச் சேரலாம். ஜனாதிபதி என்னை எதிர்பார்த்து அந்த நேரம் காத்திருக்கப் போகிறாரா? அடுத்த நாள் காலை நாலு மணிக்கு புறப்படுவதென தீர்மானித்தேன்.

நான் அன்றிரவு தூங்கவில்லை. புறப்படுவதற்கு முன்னர் மனைவி என்னென்ன செய்ய வேண்டுமென்று பட்டியலிட்டேன். என்னை சிறையில் அடைத்தார்கள் என்றால் எந்த வழக்கறிஞரை தொடர்பு கொள்ளவேண்டும், அவரிடம் என்ன விவரங்கள் சொல்லவேண்டும் போன்ற குறிப்புகளை எழுதினேன். என்னை நாடு கடத்தினால் எந்த தூதரகத்தை அணுகவேண்டும் போன்ற விவரங்களையும் குறித்து வைத்தேன். என்ன என்ன சாமான்களை சூட்கேசுகளில் அடைக்கவேண்டும் என்ற முடிவை அவரிடமே விட்டு விட்டேன்.

அடுத்த நாள் அதிகாலை நாலு மணிக்கு புறப்பட்டு சரியாக ஏழு மணிக்கு அரண்மனை வாசலை அடைந்தேன். காவல் காக்கும் ராணுவ வீரர்கள் என்னையும் தந்தியையும்  பார்த்த பின்னர் உள்ளே விட்டார்கள்.  அரண்மனை இன்னும் திறக்கப் படவில்லை. வெளியே காணப்பட்ட பளிங்கு இருக்கை ஒன்றில் அமர்ந்து காத்திருக்கத் தொடங்கினேன். எட்டு மணிக்கு அரண்மனை சுறுசுறுப்பானது. ஜனாதிபதியின் அந்தரங்கக் காரியதரிசி வந்தாள். முப்பது வயது மதிக்கத்தக்க பெண். கழுத்து நீண்டு, தலை நிமிர்ந்து நாடியும் செவியும் ஒரே நேர்கோட்டில் இருந்தன. அவளிடம் என் தந்தியை காட்டினேன். அவள் அதைப் படிக்கவில்லை. ஆழப் புதையும் கம்பளம் விரித்த ஓர் ஆடம்பரமான அறையைக் காட்டி அங்கே தங்கச் சொன்னாள். ஜனாதிபதி வந்ததும் முதல் ஆளாக என்னை அழைப்பார் என்று நினைத்தேன். இன்னும் பலர் ஒவ்வொருவராக வந்து வெவ்வேறு ஆசனங்களில் அமர்ந்துகொண்டார்கள். சிலர் உள்ளே போனார்கள். சிலர் வெளியே வந்தார்கள். இரண்டு வெளிநாட்டு தூதுவர்கள் வந்து அவர்களும் காத்திருந்தார்கள். தொழிலதிபர்கள் மாத்திரம் உடனுக்குடன் உள்ளே போய் வெளியே வந்தார்கள். ஆட்கள் போவதும் வருவதுமாய் ஒரு ரயில்வே ஸ்டேசன் போல அந்த அறை அமளியுடன் காணப்பட்டது. என்னை ஒருவரும் அழைக்கவில்லை. அதே சொகுசு நாற்காலியில், அதே இடத்தில், அதே உடல் வளைவுகளுடன் நான் காத்திருந்தேன்.

எனக்கு பாத்ரூமுக்கு வந்தது, நான் போகவில்லை. சரியாக அந்த நேரம் பார்த்து அழைக்கப்பட்டால் நான் என்ன செய்வது. தண்ணீர் தாகமெடுத்தது. சற்று தள்ளி கேட்டுக்கு வெளியே ஒரு கடையில் குளிர்பானம் விற்றார்கள். சிலர் போய் குடித்துவிட்டு வந்தார்கள். நான் குடிக்கவில்லை. எனக்கு பசித்தது. சிறைக்கூடத்தில் என்ன உணவு தருவார்கள் என்று யோசனை போனது. அன்று அந்த நாற்காலியில் உட்கார்ந்து என் மனம் யோசித்த அவ்வளவையும் எழுதினால் அது பெரிய நாவலாக விரிந்திருக்கும். ஓர் அரண்மனையில் ஜனாதிபதியை சந்திக்க காத்திருக்கும் ஒருவர் என்ன செய்ய வேண்டும் என்பது எனக்கு தெரியவில்லை.

மறுபடியும் அந்தரங்க காரியதரிசியிடம் சென்றேன். அவள் எனக்கு வட்டமான பின்பக்கத்தை காட்டிக்கொண்டு நின்றாள். உடம்பை ஒட்டிப் பிடித்த கட்டையான ஸ்கேர்ட். உயரமான சப்பாத்து. அவளிடம் கை கொடுக்கும்போது சிலர் இடது கையினால் வலது முழங்கையை தொட்டுக் கொண்டு கொடுத்தார்கள். பழுதுபட்ட திசைகாட்டி முள்போல அவள் சுழன்று கொண்டு வேலை செய்தாள். எங்கே நடமாடுகிறாள் என்பதை அவளின் சப்பாத்தின் ஒலியை வைத்து சொல்லி விடலாம். அந்த ஒலியில் அதிகாரம் இருந்தது. கழுத்திலே மெல்லிய ஸ்கார்ஃபை பூப்போல கட்டியிருந்தாள். ஒரு தோடம்பழத்தை உரித்து நடுவிலே ஓட்டைபோட்டு உறிஞ்சிக்கொண்டிருந்தாள். என்ன தண்டனை கிடைத்தாலும் பரவாயில்லை, ஒரு நிமிடம்கூட இனிமேல் தங்கமுடியாது என்று எனக்கு தோன்றியது.  அவளிடம் நான் வாய் திறக்கக்கூட இல்லை. என்னைப் பார்த்ததும் தோடம்பழத்தில் புதைந்திருந்த சொண்டை வெளியே எடுத்து ‘ஜனாதிபதிக்கு நீங்கள் வந்திருப்பது தெரியும். அவர் அழைப்பார்’ என்றாள். சொண்டு மறுபடியும் தோடம்பழத்திற்குள் போய்விட்டது.


Administrative-Punishment-a-painting by Jan Komsk
என்ன நடக்கிறது இங்கே? சிறைக்கூடத்தை தயார் செய்கிறார்களா அல்லது பிளேன் டிக்கட் ஏற்பாடு செய்கிறார்களா? என்னை முதலில் அனுப்பிவிட்டு பின்னர் மனைவியையும் பிள்ளைகளையும் அனுப்புவார்களா? இதற்கெல்லாம் ஒரு முறை இருக்கவேண்டுமே? அப்பொழுது பார்த்து இரண்டு பொலீஸ்காரர்கள் வந்தார்கள். நான் என்னை தயார்படுத்திக் கொண்டேன். அவர்கள் இருவரும் ஒருவர் கையை ஒருவர் பற்றியபடி காரியதரிசியிடம் போய் பேசிவிட்டு என்னை நோக்கி வந்தார்கள். ஒரு நிமிடம் தாமதமாகியிருந்தால் நான் எழும்பி கைகளை நீட்டியிருப்பேன். அவர்கள் என்னை கவனிக்கவில்லை, வந்த மாதிரியே வெளியே போனார்கள். சுவர்க்கடிகாரத்தை பார்த்தேன், அது ஏழுதரம் அடித்தது.  நான் கண் விழித்தபோது எனக்கு முன்னால் இரண்டு கறுத்த வழுவழுப்பான தொடைகள் தெரிந்தன. காரியதரிசிப் பெண் என்னை குனிந்து பார்த்து ‘நீங்கள் போகலாம்’ என்றாள். நான் ஒன்றுமே கேள்வி கேட்கவில்லை. உடனே எழுந்து புறப்பட்டேன்.

மூன்று வார்த்தைகளில் வரச் சொன்னார்கள், இரண்டு வார்த்தைகளில் வீட்டுக்கு போகச் சொன்னார்கள். நான் காத்திருந்த இந்த 12 மணித்தியாலத்தில் என்னைக் கூப்பிட்டு விசாரிக்க வேண்டிய பிரச்சினைக்கு என்ன நடந்தது. தானாகவே தீர்ந்து விட்டதா?  ஜனாதிபதியின் உணவருந்தும் வேளை நெருங்கிவிட்டதால் என்னை போகச் சொல்லி  மறுபடியும் நாளை வரச் சொல்வார்களா? திரும்பிப் போகும் வழியெல்லாம் இதைத்தான் யோசித்தேன். இரண்டு வருட சிறைத் தண்டனை அனுபவிக்கவும் நான் தயாராக இருந்தேன் ஆனால் இந்தக் காத்திருத்தல் மட்டும் வேண்டாம்.

சரியாக இரவு 10 மணிக்கு வீடு வந்து சேர்ந்தேன். நான் பார்த்த காட்சி என்னைத் திடுக்கிட வைத்தது. இரண்டு சூட்கேசுகள் நிறைய அடைக்கப்பட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. மனைவி பயண ஆடைகள் தரித்து புறப்பட தயாராக இருந்தார். என் குழந்தைகளும் நல்ல ஆடைகள் உடுத்திக் காணப்பட்டனர். மகள் பொம்மையை கட்டிப்பிடித்தபடி வாசலிலேயே தூங்கி விட்டாள். என்னுடைய மகன் பள்ளிப் புத்தகங்களையும் நோட்டுப் புத்தகங்களையும் ஒன்றுக்கு மேல் ஒன்றாக அடுக்கி கயிற்றினால் கட்டி முக்காலி போலச் செய்து அதற்கு மேல் உட்கார்ந்திருந்தான். கறுப்பு கால்சட்டை, வெள்ளை  சேர்ட் அணிந்து ஏதோ பள்ளிக்கூடம் போகப் புறப்பட்டது போல அமைதியாக இருந்தான். அவனுடைய முதல் கேள்வி ‘கே.எல்.எம் பிளேனிலா பறக்கப் போகிறோம்?’ நான் இல்லை என்றேன். மனைவி சூட்கேசுகளை உள்ளே வைக்கட்டா என்றார். ஓம் என்றேன். பிள்ளைகளின் உடுப்பை களையட்டா? ஓம் என்றேன். சப்பாத்துகளை கழற்றட்டா? ஓம் என்றேன்.

அவர்கள் காத்திருந்த அந்த 12 மணி நேரத்தைப் பற்றி யோசித்தேன். மனைவி காலையிலேயே சூட்கேசுகளை அடுக்கி வாசலிலே வைத்து விட்டதாகச்  சொன்னார். அன்று வீட்டிலே சமைக்கவில்லை. முதல்நாள் மிச்சமிருந்த உணவை சாப்பிட்டிருந்தார்கள். எந்த நிமிடமும் ஒரு பொலீஸ் வண்டி வரக்கூடும் என்று எதிர்பார்த்ததாகச் சொன்னார்கள். வீட்டினுள் தொட்டியில் வளர்த்த பூக்கன்றுகளுக்கு கடைசித் தரமாக நிறையத் தண்ணீர் ஊற்றி அது தரையில் ஓடிக்கொண்டிருந்தது.. அவர்கள் அனுபவித்த வேதனையை நினைத்த போது பெரும் துயரம் எழுந்து என்னை மூடியது.

நோர்மன் மெய்லர் எழுதிய The Executioner’s Song என்ற புத்தகம் ஒரு கொலையாளியின் கதையை சொல்கிறது. . கரி கில்மோர் என்பவன் ஒரு ஹோட்டல் மனேஜரை கொலை செய்து விடுகிறான். அவனுக்கு அமெரிக்க நீதிமன்றம் மரண தண்டனை விதிக்கிறது. கொலையாளியை சுட்டுக் கொல்ல வேண்டும் என்பதுதான் தீர்ப்பு. நாலு பேர் துப்பாக்கிகளை தூக்கி குறிவைத்து சுடத் தயாராகி, கட்டளைக்காக காத்திருக்கிறார்கள். அப்பொழுது கரி கில்மோர் சொல்கிறான் ‘Let’s do it.’ ‘இதை முடித்துவிடுவோம்’ என்கிறான். இறப்பதிலும் பார்க்க காத்திருப்பது அவனுக்கு கூடிய தண்டனையாகப் படுகிறது.

நான் என் வாழ்க்கையில் மேற்கொண்ட அநேகவிதமான பயணங்களிலிருந்தும், வசித்த நாடுகளிலிருந்தும், சந்தித்த மனிதர்களிலிருந்தும் பல விசயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன். அவற்றிலே நான் கண்ட உண்மை என ஒன்றிருக்கிறது. தண்டனைகளில் ஆகக் கொடுமையானது காத்திருக்க வைப்பதுதான். என்ன நடக்கப்போகிறது என்பது தெரியாமல் காத்திருக்க வைப்பது இன்னும் கொடூரமானது. ஜனாதிபதிகளுக்கு அது தெரியும்.

நன்றி :அ.முத்துலிங்கம்
எழுத்தாளர் முத்துலிங்கத்தின் இணைய தளம்

எழுத்தாளர் அறிமுகக் குறிப்பு:
இலங்கையில் கொக்குவில் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்ததன் பின், இலங்கையின் சாட்டர்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும், இங்கிலாந்தின் சாட்டட்ர்ட் மனேஜ்மெண்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும் பூர்த்தி செய்து வேலை பார்த்தேன். பின்னர் ஐ.நாவுக்காக பல வெளிநாடுகளில் பணிபுரிந்தேன். 2000ம் ஆண்டில் ஓய்வு பெற்று கனடாவில் மனைவியுடன் வசிக்கிறேன். பிள்ளைகள் இருவர், சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள்தான் அடிக்கடி என் கதைகளில் வரும் அப்ஸரா.

அறுபதுகளில் எழுத ஆரம்பித்து சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நேர்காணல்கள், நாடகங்கள், நாவல்கள் என எழுதியிருக்கிறேன்.

(அ.முத்துலிங்கத்தின் தளத்தில் வெளிவந்துள்ள கட்டுரைகளை அவரது அனுமதியுடன் இங்கே வெளியிடுகிறோம்.)



.

Tuesday, 20 March 2018

LYRICS MUTHULINGAM , BORN MARCH 20,1942





LYRICS MUTHULINGAM , 
BORN MARCH 20,1942




 கவிஞர் முத்துலிங்கம் (பிறப்பு:மார்ச் 20 1942) தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் ஆவார். ஆயிரத்து ஐந்நூற்றுக்கும் அதிகமான திரைப்பாடல்களை எழுதியவர், கலைமாமணி, பாவேந்தர் பாரதிதாசன் விருது, சிறந்த பாடலாசிரியர் விருது, கலைத்துறை வித்தகர் விருது ஆகியவற்றைப் பெற்றவர்; முன்னாள் அரசவைக் கவிஞர்; முன்னாள் மேலவை உறுப்பினர்
வாழ்க்கைக் குறிப்பு
கவிஞர் முத்துலிங்கம் சிவகங்கை மாவட்டம், கடம்பங்குடி என்னும் சிற்றூரில் 1942இல் பிறந்தார். சொந்தத்தொழில், விவசாயம். பள்ளி இறுதி வகுப்பு வரைக்கும் படித்தவர். தனது 15ஆவது வயதில் முதல் கவிதை எழுதினார்.[1]


திரைப்படத் துறையில்
1966 இல் முரசொலி இதழில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். தி.மு.கவிலிருந்து 1972 இல் எம்.ஜி.ஆர் விலகியதை அடுத்து, எம்.ஜி.ஆர் ரசிகனாயிருந்த இவர், முரசொலியிலிருந்து விலகி "அலையோசை" பத்திரிகையில் சேர்ந்தார்.[2] அங்கிருந்தபோது இயக்குனர் பி.மாதவனின் அறிமுகம் கிடைத்தது.[3] மாதவன் தயாரித்த பொண்ணுக்குத் தங்க மனசு படத்தில் தஞ்சாவூர் சீமையிலே தாவி வந்தேன் பொன்னியம்மா என்ற பாட்டை முதன் முதலாக எழுதினார்.[4]

அதன்பிறகு எம்.ஜி.ஆர் தாம் நடித்த படங்களில் எல்லாம் பாட்டெழுத வாய்ப்பளித்தார். உழைக்கும் கரங்கள் படத்தில் கந்தனுக்கு மாலையிட்டாள் கானகத்து வள்ளிமயில் என்ற பாடல் தொடங்கி மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படம் வரைக்கும் தொடர்ந்து எழுதினார்.[5]இவர் தன் தாரக மந்திரமாக உழைப்பு, திறமை, விடாமுயற்சி, தன்னம்பிக்கை எனக் கூறியுள்ளார்.[6]
இவரின் திரைப்பட பட்டியல்
1970களில்

1973– பொண்ணுக்கு தங்க மனசு
1976– உழைக்கும் கரங்கள்
1976– ஊருக்கு உழைப்பவன்
1977– மீனவ நண்பன்
1978– வயசுப்பொண்ணு
1978– கிழக்கே போகும் ரயில்
1978– என் கேள்விக்கு என்ன பதில்"
1979– புதிய வார்ப்புகள்
1980களில்
1980– எல்லாம் உன் கைராசி
1980- நன்றிக்கரங்கள்
1981– ராணுவ வீரன்
1981– மௌன கீதங்கள்
1981– இன்று போய் நாளை வா
1982– தூறல் நின்னு போச்சு
1982– வாலிபமே வா வா
1982– கோபுரங்கள் சாய்வதில்லை
1982– மூன்று முகம்
1982– டார்லிங் டார்லிங் டார்லிங்
1982– பயணங்கள் முடிவதில்லை
1982- ஊருக்கு ஒரு பிள்ளை
1983– முந்தானை முடிச்சு
1983– பகவதிபுறம் ரயில்வே கேட்
1983– இளமைக் காலங்கள்
1983– தங்கமகன்
1983– காஷ்மீர் காதலி
1983– வெள்ளை ரோஜா
1984– சிரஞ்சீவி
1984– குடும்பம்
1984– தீர்ப்பு என் கையில்
1984– தாவணிக் கனவுகள்
1984– வெள்ளை புறா ஒன்று
1984– நூறாவது நாள்
1984– மெட்ராஸ் வாத்தியார்
1984– நான் பாடும் பாடல்
1984– நல்லவனுக்கு நல்லவன்
1984– அம்பிகை நேரில் வந்தாள்
1984– குழந்தை யேசு
1985– இதய கோவில்
1985- மூக்கணாங்கயிறு
1985– கரையை தொடாத அலைகள்
1985– மண்ணுக்கேத்த பொண்ணு
1985– ராஜா ரிஷி
1985– உதயகீதம்
1986– முதல் வசந்தம்
1986- மௌனம் கலைகிறது
1986– உனக்காகவே வாழ்கிறேன்
1986– நான் அடிமை இல்லை
1986– மீண்டும் பல்லவி
1986– உயிரே உனக்காக
1986– மண்ணுக்குள் வைரம்
1986– எனக்கு நானே நீதிபதி
1986- கரிமேடு கருவாயன்
1987– பூவிழி வாசலிலே
1987– கூட்டுப்புழுக்கள்
1987– காதல் பரிசு
1987– முப்பெரும் தேவியர்
1987– சிறைப்பறவை
1988– செந்தூரப்பூவே
1988– உன்னால் முடியும் தம்பி"
1988– என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு"
1988– இது நம்ம ஆளு"
1988– புதிய வானம்
1988– தம்பி தங்க கம்பி
1989– சோலை குயில்"
1989– வெற்றி மேல் வெற்றி"
1989– எம்புருஷந்தான் எனக்கு மட்டும்தான்"
1990களில்
1990– புது வசந்தம்
1990– பெரிய வீட்டு பணக்காரன்
1991– புதுநெல்லு புதுநாத்து
1991– இதய வாசல்
1991– நாட்டுக்கு ஒரு நல்லவன்
1992– உன்னை வாழ்த்தி பாடுகிறேன்
1992- செம்பருத்தி
1993– கற்பகம் வந்தாச்சு
1995– ராஜாவின் பார்வையிலே
1999– பூவாசம்
1999– ராஜஸ்தான்'
– அழகேஸ்வரன்
– துணையிருப்பாள் பண்ணாரி
2000த்தில்
2000– கண்ணுக்கு கண்ணாக"
2001– சிகாமணி ரமாமணி"
2002– இவன்"
2004– விருமாண்டி"
2005– மீசை மாதவன்"
2005– சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி"
2007– மாய கண்ணாடி"
2008– இனி வரும் காலம்"
2008– தனம்"
2009– கண்ணுக்குள்ளே"
2009– மத்திய சென்னை"
2010களில்
2011– கால பைரவி"
2011- மேதை (தமிழக அரசின் விருது)
2012– படித்துரை"
2012– அஜந்தா"
2012– பயணங்கள் தொடரும்"
2013– மறந்தேன் மன்னித்தேன்"
2014– வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்"
2015– தரணி"


இயற்றிய சில பாடல்கள்[மூலத்தைத் தொகு]

வரிசை எண்ஆண்டுதிரைப்படம்பாடல்பாடியவர்கள்இசையமைப்பாளர்குறிப்புகள்
11973பொண்ணுக்கு தங்க மனசுதஞ்சாவூர் சீமையிலேஎஸ். ஜானகிபி. ௭ஸ். சசிரேகாசீர்காழி எஸ். கோவிந்தராஜன்ஜி. கே. வெங்கடேஷ்இவரது முதல் பாடல்
21976ஊருக்கு உழைப்பவன்பிள்ளைத்தமிழ் பாடுகிறேன்கே. ஜே. யேசுதாஸ்எம். எஸ். விஸ்வநாதன்
31976உழைக்கும் கரங்கள்கந்தனுக்கு மாலையிட்டாள் கானகத்துஎம். எஸ். விஸ்வநாதன்
41977மீனவ நண்பன்தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில்கே. ஜே. யேசுதாஸ்வாணி ஜெயராம்எம். எஸ். விஸ்வநாதன்
51977இன்றுபோல் என்றும் வாழ்கஅன்புக்கு நான் அடிமை தமிழ்கே. ஜே. யேசுதாஸ்எம். எஸ். விஸ்வநாதன்
61977இன்றுபோல் என்றும் வாழ்கநாட்டைக்காக்கும் கை வீட்டைக்காக்கும்எம். எஸ். விஸ்வநாதன்
71978மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்தாயகத்தின் சுதந்திரமேஎம். எஸ். விஸ்வநாதன்
81978வயசுப்பொண்ணுகாஞ்சி பட்டுடுத்தி கஸ்தூரி மஞ்சள்கே. ஜே. யேசுதாஸ்எம். எஸ். விஸ்வநாதன்1978-79 ஆண்டுக்கான சிறந்த பாடலுக்கான விருதை தமிழக அரசிடமிருந்து பெற்ற பாடல்
அதோ அதோ ஒரு செங்கோட்டைஎம். எஸ். விஸ்வநாதன்
91978கிழக்கே போகும் ரயில்மாஞ்சோலை கிளிதானாபி. ஜெயச்சந்திரன்இளையராஜா1978 தமிழக அரசின் தங்கப்பதக்கம் பெற்ற பாடல்
௭ன் கேள்விக்கென்ன பதில்ஒரே வானம் ஒரே பூமிடி. கே கலா, சசிரேகா௭ம்.௭ஸ். விஸ்வநாதன்
101979புதிய வார்ப்புகள்இதயம் போகுதே இணைந்தேஜென்சிஇளையராஜா
111980காதல் கிளிகள்நதிக்கரை ஓரத்து நாணல்களேகே. வி. மகாதேவன்
பாமா ருக்மணிகதவைத்திறடி பாமா-௭ன்மலேசியா வாசுதேவன்௭ம் ௭ஸ் விஸ்வநாதன்
121980ஒரு கை ஓசைமச்சானே வாங்கய்யா அந்தப்புரம்௭ம். ௭ஸ். விசுவநாதன்
௭ங்க ஊரு ராசாத்திபொன்மானத் தேடி நானும்௭ஸ். பி. சைலஜா, மலேசியா வாசுதேவன்கங்கை அமரன்
நன்றிக்கரங்கள்உங்க-அம்மா யாரு தெரியுமாவாணிஜெயராம், ௭ல் ஆர் ஈஸ்வரிசங்கர் கணேஷ்
131981மௌன கீதங்கள்டாடி டாடி ஓ மை டாடிஎஸ். ஜானகிகங்கை அமரன்
மௌனயுத்தம்குங்குமக் கடல்-நான் செந்தமிழ் மடல்கே. வி. மகாதேவன்
முள்ளுசெய்த பாவத்துக்கு முல்லைமலர் ௭ன்ன செய்யும்
முத்துக்கள் சிந்தாமல் முல்லைப்பூ வாடாமல்
141982கோபுரங்கள் சாய்வதில்லைஏம்புருஷந்தா எனக்குமட்டுந்தாஎஸ். பி. சைலஜாபி. ௭ஸ். சசிரேகாஇளையராஜாஇயக்குனராக நடிகர் மணிவண்ணன் முதல் திரைப்படம்
151982தூறல் நின்னு போச்சுபூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்கே. ஜே. யேசுதாஸ்,இளையராஜாபல்லவியை இயற்றியவர் கே. பாக்யராஜ் ராகம்:கீரவாணி
161982பயணங்கள் முடிவதில்லைமணியோசை கேட்டு எழுந்துஎஸ். பி. பாலசுப்பிரமணியம்எஸ். ஜானகிஇளையராஜா
முதன்முதல் ராகதீபம்௭ஸ்.பி.பாலசுப்பிரமணியம்
171982மணிப்பூர் மாமியார்ஆனந்த தேன் காற்றுமலேசியா வாசுதேவன்எஸ். பி. சைலஜாஇளையராஜா
ஊருக்கு ஒரு பிள்ளைஅட-ராஜாங்கம்-உன்-அதிகாரம்௭ம் ௭ஸ் விஸ்வநாதன்
புரியாத வெள்ளாடு தெரியாமலே ஓடுது
முத்துமணி சிரிப்பிருக்க-செம்பவள
நீயிந்த ஊருக்கொரு பிள்ளையல்லவா
181983இளமை காலங்கள்ராகவனே ரமணா ரகுராமாஎஸ். பி. சைலஜாஇளையராஜா
19முந்தானை முடிச்சுசின்னஞ்சிறு கிளியே சித்திர பூஎஸ். பி. பாலசுப்பிரமணியம்எஸ். ஜானகிஇளையராஜா
20தங்க மகன்வா வா பக்கம் வா பக்கம்வர வெக்கமாஎஸ். பி. பாலசுப்பிரமணியம்வாணி ஜெயராம்இளையராஜா
21தூங்காத கண்ணென்று ஒன்றுஇதயவாசல் திறந்தபோது உறவுவந்ததுகே. வி. மகாதேவன்
221984நல்லவனுக்கு நல்லவன்முத்தாடுதே முத்தாடுதே ராகம்எஸ். பி. பாலசுப்பிரமணியம்எஸ். ஜானகிஇளையராஜா
நான் பாடும் பாடல்தேவன் கோவில் தீபம்௭ஸ். ௭ன். சுரேந்தர் எஸ். ஜானகிஇளையராஜா
சிரஞ்சீவிஅன்பெனும் ஒளியாக ஆலய மணியாகடி. ௭ம். சௌந்தரராஜன்௭ம். ௭ஸ்.விசுவநாதன்
நிலவு வந்து நீராட
241985இதய கோவில்கூட்டத்திலே கோயில் புறாஎஸ். பி. பாலசுப்பிரமணியம்இளையராஜா
மூக்கணாங்கயிறுநேற்று இன்று வந்ததல்ல இந்த ரொமான்சு௭ல் ஆர் ஈஸ்வரி௭ம் ௭ஸ் விஸ்வநாதன்
251985காக்கிசட்டைபட்டுக்கன்னம் தொட்டுக்கொள்ள ஒட்டிஎஸ். பி. பாலசுப்பிரமணியம்பி. சுசீலாஇளையராஜா
ராஜரிஷிகருணைக்கடலேவாணி ஜெயராம்இளையராஜா
261986நான் அடிமை இல்லைவா வா இதயமே என் ஆகாயமேஎஸ். பி. பாலசுப்பிரமணியம்எஸ். ஜானகிவிஜய் ஆனந்த்
271986முதல் வசந்தம்ஆறும் அது ஆழமில்ல அது சேரும்இளையராஜாஇளையராஜா
281987காதல் பரிசுகாதல் மகராணி கவிதை பூ விரித்தாள்எஸ். பி. பாலசுப்பிரமணியம்எஸ். ஜானகிஇளையராஜா
291987கூட்டுப்புழுக்கள்வெள்ளிப்பணங்களைஎம். எஸ். விஸ்வநாதன்
301987பூவிழி வாசலிலேசின்ன சின்ன ரோசாப்பூவேகே. ஜே. யேசுதாஸ்இளையராஜா
311988என் பொம்முக்குட்டி அம்மாவுக்குசித்திரச்சிட்டுக்கள் சிவந்த மொட்டுக்கள்கே. எஸ். சித்ராஇளையராஜா
321988செந்தூரப்பூவேசெந்தூரப்பூவே இங்கு தேன் சிந்த வாஎஸ். பி. பாலசுப்பிரமணியம்பி. ௭ஸ். சசிரேகாமனோஜ் கியான்
331988உன்னால் முடியும் தம்பிஇதழில் கதை எழுதும் நேரமிதுஎஸ். பி. பாலசுப்பிரமணியம்கே. எஸ். சித்ராஇளையராஜா
341990புது வசந்தம்போடு தாளம் போடு நாம பாடாதஎஸ். பி. பாலசுப்பிரமணியம், குழுவினர்எஸ். ஏ. ராஜ்குமார்
351990புது வசந்தம்ஆயிரம் திருநாள் பூமியில் வரலாம்கே. எஸ். சித்ரா, கல்யாண்எஸ். ஏ. ராஜ்குமார்
361991புதுநெல்லு புதுநாத்துகருத்த மச்சான் கஞ்சதனம் எதுக்குஎஸ். ஜானகிஇளையராஜா
371992செம்பருத்திபட்டுப்பூவே மெட்டு பாடுமனோஎஸ். ஜானகிஇளையராஜா
381996நம்ம ஊரு ராசாகாடுவெட்டி களையெடுத்துமனோ, சங்கீதாசிற்பி
391996செங்கோட்டைபூமியே பூமியே பூமழை௭ஸ் பி பாலசுப்பிரமணியம், ௭ஸ் ஜானகிவித்யாசாகர்