Showing posts with label 1870. Show all posts
Showing posts with label 1870. Show all posts

Tuesday, 9 March 2021

IDA SOPHIA SCUTTER ,AMERICAN DOCTOR FOUNDED C M C HOSPITAL ,VELLORE BORN 1870 DECEMBER 9 -1960 MAY 23

IDA SOPHIA SCUTTER ,AMERICAN DOCTOR 

FOUNDED C M C HOSPITAL ,VELLORE BORN  

1870 DECEMBER 9 -1960 MAY 23

ஐடா ஸோஃபியா ஸ்கட்டர் என்பவர் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண் மருத்தவராவார். இவர் வேலூரில் உள்ள கிருத்தவ மருத்துவக் கல்லூரியை நிறுவியதற்காக அறியப்படுகிறார்.

இளமைப்பருவம்

இவரது பெற்றோர் அமெரிக்காவைச் சேர்ந்த, ஜான் ஸ்கடர் - சோஃபியா வெல்ட் ஸ்கடர் ஆவர். இவரின் தந்தையும் ஒரு மருத்தவராவார். அவர்கள் இராணிப்பேட்டையில் தங்கி மருத்துவத் தொண்டு புரிந்துகொண்டிருந்த காலகட்டத்தில் ஐடா ஸோஃபியா ஸ்கட்டர் 1870 திசம்பர் 9 இல் பிறந்தார். எட்டு வயதுவரை தமிழ்நாட்டின் இராணிப்பேட்டையில் வளர்ந்த ஐடா பிறகு தன் பெற்றோர்களுடன் தாயகமான அமெரிக்காவுக்குச் சென்றார். அதன்பின் சமயத் தொண்டுக்காக சப்பான் நாட்டுக்குப் பயணமானார். அதனால் நார்த் பீல்டில் உள்ள கிறித்துவப் பெண்கள் பள்ளியில் சேர்ந்து விடுதியில் தங்கியிருந்து படிப்பைத் தொடர்ந்தார். பள்ளி இறுதித் தேர்வெழுதிய நிலையில் உடல்நிலை சரியில்லாத தாயாரைப் பார்பதற்காக இந்தியாவுக்குப் புறப்பட்டு வந்தார்.

அப்போது ஒருநாள் இரவு அந்தணர், முஸ்லிம், இந்து சமயத்தை சார்ந்தவர்கள் தங்கள் மனைவிகளின் பிரசவ உதவிக்காக அவர்கள் வீட்டுக்கு வந்து, ஐடாவை பெண் மருத்துவராக கருதி உதவ வேண்டினர். அவர்களிடம் தான் மருத்துவர் இல்லை என்றும், மருத்துவரான தன் தந்தையை அழைப்பதாகச் சொன்னார் ஆனால் அவர்கள் ஆண் மருத்தரிடம் காட்ட விரும்பாமல் திரும்பிச் சென்றனர். மறுநாள் அந்த மூன்று பென்களும் பிரசவத்தின்போது இறந்து அவர்களுடைய சவஊர்வலங்கள் சென்றன அதைக் கண்ட ஐடா வருந்தினார்.

இந்தியப் பெண்களின் அவலநிலை குறித்து ஆழமாகச் சிந்தித்த ஐடா மருத்துவம் படித்து மிஷனரி பணியில் ஈடுபட விரும்புவதாக தன் பெற்றோரிடம் தெரிவித்தார். பின்னர் மருத்துவம் படிக்க அமெரிக்கா சென்ற ஐடா ஸ்கடர், பிலடெல்ஃபியா மருத்துவக் கல்லூரியில் 1895 இல் சேர்ந்தார். மருத்துவப் படிப்பு முடிந்ததும், வேலூரில் பெண்களுக்கென மருத்துவமனை கட்ட வேண்டும் என்ற எண்ணம் ஐடாவுக்கு இருந்தது. மருத்துவமனை தொடங்க எட்டாயிரம் அமெரிக்க டாலர்கள் தேவைப்பட்டது. நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டார். அப்போது ஷெல் என்ற முதியவர் 10 ஆயிரம் அமெரிக்க டாலர்களுக்கான காசோலையை ஐடாவிடம் தந்து, என் அன்பு மனைவி மேரி டேபர் ஷெல்லின் நினைவாக, வேலூரில் பெண்கள் மருத்துவமனை அமைக்க நிதியுதவி அளிக்கிறேன். அவர் உயிரோடு இருந்திருந்தாலும் உதவி செய்திருப்பார் என்று கூறினார்.

வேலூரில் மருத்துவமனை:

தோழி ஆனி ஹான்காக்குடன் 1900 சனவரி மாதம் வேலூருக்கு வந்தார் ஐடா. இருவரும் மருத்துவப் பணியை உடனடியாகத் தொடங்கினர். கூடவே மருத்துவமனை கட்டிடம் கட்டும் பணியும் தொடங்கியது. திட்டமிட்டபடி நாற்பது படுக்கைகளுடன் பெண்களுக்கான மேரி டேபர் ஷெல் நினைவு மருத்துவமனை தொடங்கப்பட்டது. 1904 ஆம் ஆண்டில் தென்னிந்தியாவில் பரவியபிளேக் நோயைத் தடுப்பதில் டாக்டர் ஐடா பெரும் பங்கேற்றார்.

அப்போது போதிய பயிற்சி பெற்ற செவிலியர்கள் இல்லாதது, ஐடாவின் மருத்துவப் பணிக்குப் பெருந்தடையாக இருந்தது. இதன் தொடர்ச்சியாக செவிலியர் பயிற்சிப் பள்ளி ஒன்றைத் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் ஐடாவின் மனதில் உதித்தது. செவிலியர் பள்ளியைத் தொடங்குவதற்கான பணியை ஐடா ஸ்கடர் 1908 இல் தொடங்கினார். சுற்றுவட்டார மிஷன் பள்ளிகளில் படித்த ஐந்து மாணவிகளுடன் செவிலியர் பயிற்சி பள்ளியைத் தொடங்கினார்.

மருத்துவக் கல்லூரி

1913-லேயே பெண்களுக்கென ஒரு மருத்துவக் கல்லூரி தொடங்கவேண்டுமென்று டாக்டர் ஐடா திட்டமிட்டு அவர் எண்ணத்தை வெளியிட்டார். ஐடாவின் எண்ணத்தை, தென்னிந்திய மிஷனரி மன்றம் ஏற்றுக்கொண்டது. வேலூரில் பெண்களுக்கான மருத்துவக் கல்லூரி தொடங்குவது என்றும் அதற்கு ஐடாவே முதல்வராக இருக்க வேண்டுமென்றும் முடிவெடுக்கப்பட்டது. மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்காக 200 ஏக்கர் நிலமும் தயாராக இருந்தது.

1914 இல் நெடு விடுப்பில் ஐடா அமெரிக்காவுக்குச் சென்றார். அதேநேரம் முதல் உலகப் போர் மூண்டது. 1915 இல் கடுமையான போர்ச் சூழலில் இந்தியா திரும்பிவந்தார், மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான பணியைத் விரைவுப்படுத்தினார் இதையணுத்து 1918 இல் பட்டைய மருத்துவப் படிப்புடன் பெண்களுக்கான மருத்துவப் பள்ளி நடத்துவதற்கான அனுமதியானது, சென்னை மாகாண மருத்துவத் துறை தலைவர் கர்னல் பிரைசனிடமிருந்து பெற்றார். 1918 ஆகத்து 12 இல் யூனியன் மிஷனரி பள்ளியை சென்னை மாகாண கவர்னர் பென்ட்லண்ட் பிரபு தொடங்கி வைத்தார். 1948 இல் யூனியன் மருத்துவப் பள்ளி, கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போதுதான், பெண்களுடன் ஆண்களும் மருத்துவம் படிக்கத் தொடங்கினர்.[1]

விருதுகள்:

அம்மையாரைப் போற்றும்விதத்தில் இந்திய அரசு கெய்சர்-இ-இந்து என்ற பொற்பதக்கத்தை அளித்தது.

அமெரிக்கா 1935இல் டி.எஸ்ஸி பட்டம் அளித்துக் கௌரவித்தது. மேலும் எப் ஏசிஎஸ் என்னும் ஒரு மதிப்பியல் பட்டத்தையும் உவந்து தந்தது.

மறைவு:

1960 மே 24 அன்று ஐடா கொடைக்கானலில் தம் தொண்ணூறாவதுவயதில் இயற்கை எய்தினார்.[2]

ஐடா.S.ஸ்கட்டர் - கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி, வேலூர்

Ida S. Scudder

இன்று அனைத்து   வசதிகளுடனும் , நவீன சிறப்புப் பிரிவுகளுடனும், வேலூரின் அடையாளமாகவும் உலகஅளவில் பிரபலமான மற்றும் மிகப் பெரிய  மருத்துவமனையாகவும், செயல் பட்டு அதன்மூலம் இந்தியத் திருநாட்டிற்கு பெருமை சேர்க்கும் Vellor CMC மருத்துவ மனையின் கட்டிடங்களில் இழையோடியிருக்கும் “ஐடா ஸ்கட்டர்”  என்ற அமெரிக்க பெண்மணியின் தியாகம் உங்களுக்கு தெரியுமா? 

பிறப்பு மற்றும் கல்வி

       திண்டிவனத்தில் மருத்துவ மிஷனரியாக ஊழியம் செய்து வந்த டாக்டர். ஜான் ஸ்கட்டர் II,  சோபியா ஸ்கட்டர் தம்பதியினரின் ஐந்தாவது குழந்தை தான் “ஐடா ஸ்கட்டர்” . (DOB: 09-12-1870). ஐடா ஸ்கட்டருக்கு ஆறு வயது இருக்கும்பொழுது சரியாக 1877 ஆம் ஆண்டில் இந்தியாவில் கொடியபஞ்சம் ஏற்பட்டது. பஞ்சத்தின்கொடுமையை நேரில் கண்ட ஐடா தன் வாழ்நாளில் ஒருபோதும் மிஷனரி ஆகப்போவது இல்லை என தீர்மானித்தார். பள்ளி மற்றும் இறையியல் படிப்புக்காக அமெரிக்கா சென்ற ஐடா- அவர்களின் . பள்ளி வாழ்க்கையும் Missionary பயிற்சியும்,  20 வயதில் நிறைவு பெற்றது.

கிராமத்து வாழ்க்கை

       தந்தை ஜான் ஸ்கட்டரின் மருத்துவப் பணியில் உதவி வந்த தாய் சோபியா ஸ்கட்டருக்கு உடல் நலம் குன்றிய காரணத்தால் ஐடா 1890- ல் இந்தியாவிற்கு வரவேண்டிய கட்டாயம் உருவானது. கடல் மார்க்கமாக சென்னை துறைமுகத்தை அடைந்த ஐடா வையும் அவரது சகோதரன் ஹாரியையும் அழைத்து செல்ல அவரது தந்தை டாக்டர் ஜான் ஸ்கட்டர் துறைமுகம் வந்திருந்தார்.  துறைமுகத்திலிருந்து மாட்டு வண்டியில் பயணம் செய்து திண்டிவனத்தில் உள்ள கூரைவேய்ந்த மிஷன் வீட்டுக்கு வந்தனர். பாமர மக்கள் இவரையும் ஒரு மருத்துவராக எண்ணினர். மருத்துவ சிகிச்சைக்காக மிஷன் விட்டுக்கு வரும் திண்டிவன மக்கள், ஐடா ஸ்கட்டரை   “மிஸ்ஸியம்மா”   என்று அழைத்தனர்.

 மனதைத் தொட்ட நிகழ்வுகள்

       1870 ஆம் வருடம்!, நள்ளிரவை நெருங்கும் நேரம் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டு கதவைத் திறந்தார் ஐடா, சிம்னி  விளக்கின் ஒளியில் ஒரு இஸ்லாமியர் பதற்றத்துடன் காணப்பட்டார். “மிஸ்ஸியம்மா நீங்கள் தான் என் மகளைக் காப்பாற்ற வேண்டும், தலைப் பிரசவம்! வலியால் துடிக்கிறாள் ” என்று  அவர் மன்றாடினார். ஐடாவோ, நான் டாக்டர் இல்லை. பிரசவம் பாக்க எனக்கு தெரியாது, இருங்கள். அப்பாவை (டாக்டர் ஜான் ஸ்கட்டர்) எழுப்புகிறேன். என்றவாறு மாடி அறைக்குச் செல்ல திரும்பினாள். அந்த மனிதனோ, “வேண்டாம் மிஸ்ஸி அவரை எழுப்பவேண்டாம்” என்று கூறி தடுத்தார்.! ஒரு முஸ்லீம் பெண்ணுக்கு ஆண் பிரசவம் பார்க்க எங்களின் வேதத்தில் இடம் இல்லை. அதைவிட அவள் செத்தாலும் பரவாயில்லை. நான் வருகிறேன் தாயே!” கைகள் கூப்பி விடை பெற்று இருளில் மறைந்துபோனார்.

       அதிக நேரம் ஆகவில்லை, மீண்டும் கதவு தட்டப்பட்டது. அவர் ஒரு இந்து, வணக்கம் கூறிவிட்டு, “மிஸ்ஸியம்மா என் மனைவி பிரசவ வலியால் துடிக்கிறாள், உடனே என்னோடு வாருங்கள் அம்மா அந்த இரு உயிரையும் காப்பாற்றுங்கள் தாயே!” அவரும் கெஞ்சினார், மீண்டும் அதே பதிலைத்தான் ஐடா கூறினார். ஐடா தந்தையை அழைக்கவா என்று கேட்டாள். ஆனால் அந்த மனிதனோ, “வேண்டாம் தாயே! எங்கள் சாஸ்த்திரத்தில் அதற்கு இடமில்லை. என் மனைவி செத்தாலும் சாகலாமே தவிர ஒரு ஆண் அவளுக்கு பிரசவம் பார்க்க முடியாது தாயே” அவரும் ஏமாற்றத்துடன் திரும்பினார். மீண்டும் கதவு தட்டப்படும் சத்தம்  கேட்டு கதவைத் திறந்து பார்த்தபோது வேறொரு நபர்! அவரும் ஒரு இந்துதான்.  

       மறுநாள் மாலையில் வீதியில் ஒன்றன் பின் ஒன்றாக மூன்று சவ ஊர்வலங்கள் சென்று கொண்டிருப்பதைப் பார்த்தார் . அந்த மூவரும் பிரசவ சிக்கலில் இரவில் இறந்துபோன பெண்மணிகள் என்பதைத் தெரிந்து கொண்டபின் மனம் வெதும்பினார்.!. ஐடா, இந்தியப் பெண்மணிகளுக்கு உடனடி தேவை பெண் மருத்துவர்கள் என்பதை அன்றே உணர்ந்து கொண்டார்.

 மருத்துவக் கல்வி மற்றும் பணி

       1899 ஆம் வருடம் நியூயார்க் நகரில் கார்நெல் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் (Cornell University Medical College) சேர்ந்தார்., பெண்கள் மருத்துவம் பயில அனுமதிக்கப்பட்ட முதல் வகுப்பு அது!. தேர்ச்சியுற்று மருத்துவரான உடனே தமிழ்நாடு திரும்பி மருத்துவப் பணியை, குறிப்பாக பெண்களுக்கு செய்யவேண்டும் என்ற ஆர்வம் கொண்டார். பலரிடம் தனது திட்டத்தைக் கூறினார்.  மான்ஹாட்டான் நகரைச் சேர்ந்த வங்கியாளர் ஷெள் (Schell)  என்பவர் தமிழ் நாட்டு பெண்களின் நலனுக்காக 10,000 அமெரிக்க டாலர்களை அவரின் மனைவியின் நினைவாக ஐடாவிடம் வழங்கினார். அவர் தமிழ் நாடு திரும்பியபோது அவரின் தந்தை வேலூரில் மருத்துவப் பணியில் ஈடு பட்டிருந்தார்.. 1900 ஆம் ஆண்டில் அவரின் தந்தை ஜான் ஸ்கட்டர் மரணமடையும்வரை அவருடன் இணைந்து மருத்துவப் பணியை திறம்பட செய்து வந்தார்.

ஐடா ஸ்கட்டரின் சாதனைகள்:

       தந்தையின் மரணத்திற்கு பின் மருத்துவப் பணியின் முழுப் பொறுப்பையும் ஐடா ஏற்றுக்கொண்டார். அமெரிக்காவிலிருந்து கொண்டு வந்திருந்த நன்கொடையைப் பயன்படுத்தி 1902 ஆம் வருடம் ஒரு சிறு மருத்துவமனையை வேலூரில் அமைத்து அதற்கு ஷெல் மருத்துவமனை (Schell Hospital) என்று பெயரிட்டார். சிகிச்சையும் மருந்துகளும் இலவசமாக தரப்பட்டன. (தற்போது இது Mary Tabler Schell Eye Hospital என்று கண் மருத்துவமனையாக பெரிய அளவில் இயங்கி வருகின்றது). அப்போது தமிழகத்தில் பரவலாக காணப்பட்ட ப்ளேக் (plague), காலரா, தொழுநோய் ஆகியவற்றிலிருந்து மக்களைக் காப்பாற்றப் போராடினார்.

       சென்னைப் பல்கலைக்கழக சம்மதத்துடன் இந்தியாவிலேயே   முதல் தாதியர் பயிற்சிப் பள்ளியை நிறுவினார். இன்றுவரை பெண் கல்விக்காக விழிப்புணர்வு பிரசாரம் செய்யவேண்டிய சூழ்நிலையில் நாம் இருந்து கொண்டிருக்கும் நிலையில், அரசு அனுமதியுடன் சென்னைப் பல்கலைக்கழக அங்கீகாரத்துடன் 1918  ஆம் வருடத்திலேயே பெண் மருத்துவர்களை உருவாக்க மருத்துவக் கல்லூரி நிறுவி பெண்கல்வியில் புரட்சி செய்தார்.  இதுவே கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியின் ஆரம்பம். 1945 ஆம் ஆண்டில் மருத்துவக் கல்லூரியில் ஆண்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.  1952 ஆம் வருடம் உலகின் சிறந்த 5 டாக்டர்களில் ஒருவராக டாக்டர் ஐடா ஸோஃபியா ஸ்கட்டர்   தேர்ந்தெடுக்கப் பட்டார் .

Dr. Ida Sophia Scudder 

(December 9, 1870 – May 23, 1960)

பாசத்திற்குரிய ஐடா அத்தை (Aunt Ida)

       டாக்டர் ஐடா ஸ்கட்டர் வேலூர் நகர மக்களாலும்,  வட   ஆற்காடு மக்களாலும் பெரிதும் போற்றப்பட்டார். அவரை பாசத்துடன் ஐடா அத்தை (Aunt Ida) என்றே அழைத்தனர். ஐடா,   தமது 85 வது வயதில் ஒரு நாள் வழக்கம்போல் தபால்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். அமெரிக்காவிலிருந்து வந்திருந்த ஒரு தபாலில் “டாக்டர் ஐடா, இந்தியா” என்று மட்டும் முகவரி எழுதப்பட்டிருந்தது. நாடு தழுவிய அளவில் அவர் அறியப்பட்டிருந்தார்  என்பதற்கு இது ஒரு சான்றாகும். 

விண்ணகப் பிறப்பும் மண்ணகச் சிறப்பும்

        கடைசிவரை  திருமணமே  செய்துகொள்ளாமல்  மக்கள் நலனுக்காகவே  பணியாற்றிவந்த ஐடா அத்தை, 1960 ஆம் வருடம் மே  மாதம் 24 ஆம் நாள் அதிகாலையில் இறைவனடி  சேர்ந்தார்.   அப்போது அவருக்கு வயது 90.     இந்தியப் பெண்களுக்காக அவர் செய்த  மாபெரும்  தியாகத்தையும்  சேவையையும்  பாராட்டும் வகையில் அவருடைய நூற்றாண்டு தினமான  ஆகஸ்ட்  12, 2000  நாளன்று   அவரின்  படமும் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரியும்,  மருத்துவமனையும்  பொறிக்கப்பட்ட  சிறப்பு  தபால்  தலை வெளியிட்டு பெருமை சேர்த்தது இந்திய  அரசு!  இன்று அனைத்து வசதிகளுடனும் , நவீன சிறப்புப் பிரிவுகளுடனும், 2000 படுக்கைகள் கொண்டு, ஆசியாவின் மிகப் பெரிய மருத்துவமனையாகவும்,  உலகின் மிகப் பெரிய மிஷன்   மருத்துவமனையாகவும் விளங்குகிறது!

Dr. Ida S. Scudder;Vellore 1900Tiruvalla Medical Mission1935

1905-FIRST SEVEN INDIAN NURSES WITH IDA SCUDDER VELLORE

Dr. Ida Sophia Scudder (December 9, 1870 – May 23, 1960) was a third-generation American medical missionary in India of the Reformed Church in America. She dedicated her life to the plight of Indian women and the fight against bubonic plague, cholera and leprosy. In 1918, she started one of Asia’s foremost teaching hospitals, the Christian Medical College & Hospital, Vellore, India.

Early life

She was born of Dr. John Scudder Jr. and his wife, Sophia (née Weld), part of a long line of medical missionaries (see Scudders in India). The granddaughter of John Scudder, Sr., as a child in India, she witnessed the famine, poverty and disease in India. She was invited by Dwight Moody to study at his Northfield Seminary in Massachusetts, where she earned a reputation for pranks.[1]

Screen Shot 2016-05-14 at 9.36.01 AM

She initially expected to get married and settle down in the United States after seminary, but in 1890 she went back to India to help her father when her mother was ailing at the mission bungalow at Tindivanam. Ida had expressed a resolve not to become a medical missionary, but during that stay, she had the enlightening experience of not being able to help three women in childbirth who died needlessly in one night.

That experience convinced her that God wanted her to become a physician and return to help the women of India. She never married.

She graduated from Cornell Medical College, New York City in 1899, as part of the first class at that school that accepted women as medical students. She then headed back to India, fortified with a $10,000 grant from a Mr. Schell, a Manhattan banker, in memory of his wife. With the money, she started a tiny medical dispensary and clinic for women at Vellore, 75 miles from Madras. Her father died in 1900, soon after she arrived in India. In two years she treated 5,000 patients. She opened the Mary Taber Schell Hospital in 1902.

Auntie Ida (2)

Ida Scudder realized that she would be foolish to go on alone in her fight to bring better health to South India’s women, so she decided to open a medical school for girls. Skeptical males said she would be lucky to get three applicants; actually she had 151 the first year (1918), and had to turn many away ever since. At first, the Reformed Church in America was the main backer of the Vellore school, but after Dr. Scudder agreed to make it coeducational, it eventually gained the support of 40 missions. Of 242 students today, 95 are men.

cmc-vellore (1)

Christian Medical College, Vellore

In 1928 ground was broken for the “Hillsite” medical school campus on 200 acres (0.8 km²) at Bagayam, Vellore.

Ida S. Scudder with Mahatma Gandhi, 1928

In 1928, Mahatma Gandhi visited the medical school. She traveled a number of times to the United States to raise funds for the college and hospital, raising a total in the millions. In 1945, the college was opened to men as well as women. In 2003 the Vellore Christian Medical Center was the largest Christian hospital in the world, with 2000 beds, and its medical school is now one of the premier medical colleges in India.

Screen Shot 2016-05-14 at 9.37.12 AMOne day in 1953, aged 82, she was at “Hilltop”, her bungalow at Kodaikanal, and opened a stack of letters and telegrams. Her name is a famous one in India and her letters  reached her addressed simply, “Dr. Ida, India.”

Monday, 12 October 2020

ROBERT E. LEE BORN 1807 JANUARY 19-1870 OCTOBER 12

ROBERT  E. LEE BORN 

1807 JANUARY 19-1870 OCTOBER 12

புரட்சித் தளபதி ராபர்ட் ஈ. லீ
தவறான தரப்பில் சரியான மனிதர் ராபர்ட் ஈ. லீ

ஆள் என்னவோ நல்லவர்தான் ஆனால் சேர்ந்த இடம்தான் சரியில்லை என்று கேள்விப்பட்டிருப்பீர்களே! Right man in the wrong side. அது ராபர்ட் ஈ. லீ க்கு கச்சிதமாகப் பொருந்தும். 19-ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் நடந்த உள்நாட்டுப் போரில் அடிமைமுறையைக் காப்பாற்றப் போராடியவர்தான் தளபதி லீ.

ஐக்கிய அமெரிக்க நாடு 1776-ல் பிரிட்டனிடமிருந்து விடுதலை அடைந்தது. தனது அரசியலமைப்பிலேயே “அனைத்து மனிதர்களும் சமமானவர்கள்” என்று கொண்டிருந்தாலும் அந்நாட்டில் ஆப்பிரிக்காவிலிருந்து கடத்திவரப்பட்ட லட்சக்கணக்கான கறுப்பின மக்கள் அடிமைகளாக இருந்தனர். புதிய அமெரிக்கக் குடியரசு அவர்களைக் குடிமக்களாகக் கருதவில்லை. ஆனாலும் அமெரிக்காவில் அடிமைமுறையை ஒழிக்கவேண்டும் என்று குரல்கள் எழுந்தன. ஐரோப்பாவில் அடிமைமுறை ஒழிக்கப்பட்டபோது, அமெரிக்காவின் பல மாநிலங்களும் அடிமைமுறையை ஒழித்து, கறுப்பின அடிமைகளை விடுதலை செய்தன. (ஆனால் அவர்களுக்கு வாக்குரிமை கொடுக்கவில்லை.)

19-ம் நூற்றாண்டில் அமெரிக்காவின் வடபகுதியிலிருந்த பல மாநிலங்கள் அடிமைமுறையினை ஒழித்தவர்கள் பட்டியலில் சேர்ந்தன. ஆனால் அமெரிக்காவின் தென்மாநிலங்களில் ஒன்றுகூட அடிமைமுறையினை ஒழிக்க முன்வரவில்லை. அமெரிக்காவில் இருந்த அடிமைகளில் மிகப்பெரும்பான்மையானோர் தென் மாநிலங்களிலிருந்த பண்ணைகளில் தொழிலாளிகளாக வேலை செய்துவந்தனர். தென் மாநிலங்களின் பொருளாதாரம் பண்ணையடிமை முறையைப் பெரிதும் சார்ந்திருந்தது. அடிமைகளின் உழைப்பில் வாழ்ந்துகொண்டிருந்த தென்மாநில அமெரிக்கர்கள் அவர்களை விடுதலைசெய்து தங்கள் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கத் தயாராக இல்லை. இரு தரப்பும் நீண்ட விவாதத்துக்குப் பிறகு ஒரு சமரசத்துக்கு வந்தார்கள் – தென் மாநிலங்கள் அடிமைமுறையைப் பின்பற்றலாம். ஆனால் வட மாநிலங்களில் அம்முறை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டது.

ஆப்ரஹாம் லிங்கன்

இந்த சமரசம் வெகு நாள்கள் தாக்குப்பிடிக்கவில்லை. ஏனென்றால் அமெரிக்கா அப்போது மேற்கு நோக்கி வளர்ந்துகொண்டிருந்தது. சில ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய மாநிலங்கள் அமெரிக்கக் குடியரசில் இணைந்துகொண்டிருந்தன. இந்தப் புதிய மாநிலங்களில் அடிமைமுறையை அமல்படுத்துவது பற்றி இரு தரப்புக்கிடையில் மீண்டும் பிரச்னை எழுந்தது. இந்த நிலையில்தான் அடிமைமுறையை முற்றிலும் ஒழிக்கவேண்டும் என்ற கொள்கை கொண்ட ஆப்ரஹாம் லிங்கன் 1861-ல் அமெரிக்க அதிபரானார். லிங்கன் அதிபரானால் தங்கள்மீதான கட்டுப்பாடுகள் அதிகமாகும் என்று தென் மாநிலங்கள் நினைத்தன. லிங்கனைத் தங்கள் அதிபராக ஏற்றுக்கொள்ள மறுத்த தென்மாநிலங்கள், அமெரிக்க ஒன்றியத்திலிருந்து பிரிந்து போவதாக அறிவித்தன. கான்ஃபெடரசி என்ற பெயரில் புதிய நாடு ஒன்றை உருவாக்கின. அப்படிப் பிரிந்துபோக அவற்றுக்கு உரிமை இல்லை என வடமாநிலங்கள் சொன்னதால், இருதரப்புக்கும் இடையே போர் மூண்டது. இந்தப் போரில் இருதரப்பும் தங்கள் படைகளுக்குத் தலைமை தாங்க அணுகிய ஒரே ஆள் ராபர்ட் ஈ. லீ.

லீ, வர்ஜீனியா மாநிலத்தில் ராணுவப் பாரம்பரியமிக்க குடும்பத்தில் பிறந்தவர். பதினெட்டாவது வயதில் அமெரிக்காவின் புகழ்பெற்ற வெஸ்ட் பாயிண்ட் ராணுவக் கல்லூரியில் சேர்ந்தார். நான்கு ஆண்டுகளில் படிப்பை முடித்து அமெரிக்க ராணுவத்தில் பொறியியல் அதிகாரியாகச் சேர்ந்தார். அடுத்த நாற்பது ஆண்டுகளுக்கு அமெரிக்கா ஈடுபட்ட பல்வேறு போர்களில் பங்கேற்றார். படிப்படியாகப் பதவி உயர்வு பெற்றார். 1861-ல் உள்நாட்டுப் போர் மூண்டபோது லீ, ராணுவத்தில் கர்னல் பதவியில் இருந்தார். லீக்கு அடிமைமுறையைப்பற்றி அழுத்தமான கருத்துகள் கிடையாது. சமகாலத்திய அமெரிக்கர்களில் மிகப் பெரும்பாலானோர் கருதியதுபோலவே அவரும் கறுப்பர்களை வெள்ளையர்களைவிடத் தாழ்ந்தவர்கள் என்று நினைத்தார். அவர் பிறந்த வர்ஜீனியா மாநிலம், தென் மாநிலங்களில் ஒன்றாக இருந்தாலும், வட மாநிலங்களின் எல்லையில் அமைந்திருந்தது. அங்கு பண்ணைத் தோட்டங்கள் மிகக் குறைந்த அளவில்தான் இருந்தன. அந்த மாநிலத்தில் இருந்த கறுப்பின அடிமைகள், வீடுகளில்தான் வேலைக்காரர்களாகப் பணிபுரிந்தனர். பண்ணையடிமைகள் படும் கொடுமைகளை லீ நேரடியாகப் பார்த்து அறிந்திருக்கவில்லை. இதனால் அடிமைமுறையை அவர் ஆதரிக்கவில்லை என்றாலும், அது ஒழிக்கப்படவேண்டியது என்று அவர் கருதவில்லை.

கறுப்பர்களுக்கு முழு விடுதலை அளித்தால் அவர்களால் தனியாக வாழ இயலாது; வெள்ளையர்களின் வழிகாட்டுதல் அவர்களுக்கு அவசியம் என்றே லீ கருதினார். ஆனால் அதே சமயம், அடிமைமுறைக்காக நாட்டைப் பிரித்துப் புதிய நாடு உருவாக்குவதையும் அவர் விரும்பவில்லை. தென் மாநிலத்தின் அரசியல்வாதிகளைப் பற்றியும் அவருக்கு உயர்ந்த அபிப்பிராயம் கிடையாது.

கான்ஃபெடரேட் மாநிலங்கள் பிரிந்துபோனபோது வரிஜீனியா உடனடியாக அவற்றுடன் சேரவில்லை. போர் நிச்சயம் என்று முடிவானபின் இரு தரப்புகளும் அதற்கான ஆயத்தங்களைச் செய்யத்தொடங்கின. அனுபவம் வாய்ந்த படைத்தளபதிகளுக்கு இருதரப்பிலும் நல்ல கிராக்கி இருந்தது. லீயின் ராணுவ அனுபவமும் திறமையும் அவருக்கு ராணுவத் தரப்பில் நல்ல பெயரைப் பெற்றுத் தந்திருந்தன. எனவே ஆபிரகாம் லிங்கன், தங்கள் தரப்புக்கு வந்தால் வட அமெரிக்கப் படையில் பெரிய பதவி தருவதாக லீக்கு செய்தி அனுப்பினார். ஆனால் லீ பிறந்த வர்ஜீனியா அதற்குள் அமெரிக்க ஒன்றியத்திலிருந்து பிரிந்து தென் மாநிலங்களுடன் சேர்ந்துகொண்டது. போர் மூண்டால் தனது மாநிலத்துக்குப் பெரும் சேதம் உண்டாகும் என்று லீக்கு நன்றாகத் தெரியும். ஆனாலும் சொந்த மண்ணின் விசுவாசம் அவரைத் தென்மாநிலப் படையில் சேர வைத்தது. வட அமெரிக்காவைப்போல தென் மாநிலங்கள் தொழில் மயமான பகுதிகள் அல்ல. அவற்றின் படைபலமும் வடக்கின் படைபலத்தைவிடக் குறைவு.ஜெனரல் லீ

போர் தொடங்கினால் வெகுசீக்கிரம் வடஅமெரிக்கப் படைகள் கான்ஃபெடரேட் படைகளைத் தோற்கடித்துவிடும் என்று பரவலாக நம்பப்பட்டது. கான்ஃபெடரேட் படையில் சேர்ந்த லீ, தலைமைத் தளபதிகள் ஐவருள் ஒருவராக நியமிக்கப்பட்டார். மேற்கு வர்ஜீனியாவில் உள்ள படைகள் அவரது கட்டுப்பாட்டில் வந்தன. கான்ஃபெடரேட் தளபதியாக அவர் ஈடுபட்ட முதல் சண்டையே அவருக்குத் தோல்வியில் முடிந்தது. அவரது செல்வாக்கைப் பிடிக்காத அவரது உள்ளூர் எதிரிகள் அவரைப் போர்முனையிலிருந்து தண்ணியில்லாக் காட்டுக்கு மாற்றிவிட்டனர். ஆனால் வெகுவிரைவில் அவர் மீண்டும் போர்த் தளபதியாக மாறும் நிலை உருவானது. 1862-ல் வட அமெரிக்காவின் பெரும்படை ஒன்று கான்ஃபெடரசியின் தலைநகர் ரிச்மாண்டைத் தாக்க வந்தது. அப்போது ரிச்மாண்டைப் பாதுகாத்து வந்த கான்ஃபெடரேட் வடக்கு வர்ஜீனீயாப் படையின் தளபதி போரில் காயமடைந்ததால், அந்தப் பதவி லீக்குக் கிடைத்தது.

லீ தளபதியானது குறித்து தென்மாநிலங்களில் கடும் அதிருப்தி நிலவியது. அவருக்குத் தைரியமே கிடையாதென்றும், தாக்குதல் நடத்தாமல் சும்மா வெட்டியாக இருப்பாரென்றும் விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் நடந்ததோ நேர் எதிரான ஒன்று. ஒரே வருடத்தில் வட அமெரிக்கப் படைகளால் அழிக்கப்பட்டிருக்கவேண்டிய கான்ஃபெடரசியை நான்கு ஆண்டுகள் தனது போர்த்திறமையால் தாக்குப்பிடிக்க வைத்தார் லீ. முதலில் ரிச்மாண்டின் அரண் நிலைகளைப் பலப்படுத்தியபின் அதனைத் தாக்கவந்த அமெரிக்க ஒன்றியப் படையை எதிர்த்துத் தாக்கினார். சில மாதங்களில் கான்ஃபெடரசியின் கதையை முடித்துவிடலாம் என்ற இறுமாப்புடன் வந்திருந்த வட அமெரிக்கத் தளபதிகள், லீயின் அதிரடித் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் திணறினர். கான்ஃபெடரசியைத் தாக்க வந்த வட அமெரிக்கப் படைகளை விரட்டியதோடு நிற்காமல், வட மாநிலங்களின்மீது படையெடுத்தார் லீ. பாதுகாப்புப் போர் (defensive war) நடத்தினால் கான்ஃபெடரசியால் நீண்ட நாட்கள் சமாளிக்க முடியாது என்பது அவருக்குத் தெரியும். நாளாக ஆக ஆள் பலமும் ஆயுத பலமும் மிக்க அமெரிக்க ஒன்றியத்தின் பலம் கூடிக்கொண்டேதான் போகும். அதற்குள் ஒன்றியத்தின் குடிமக்களின் மன உறுதியைக் குலைத்து போர் வேண்டாம் என்ற மனநிலைக்கு அவர்களைத் தள்ளவேண்டும் என்று லீ முடிவு செய்தார். இதை நிறைவேற்ற வடக்கு வர்ஜீனியாப் படையுடன் அமெரிக்க ஒன்றியத்தின்மீது படையெடுத்தார்.

சில மாதங்களில் போர் முடிந்துவிடும், ஓடிப்போன தென் மாநிலங்கள் வாலைச் சுருட்டிக்கொண்டு மீண்டும் வந்து ஒன்றியத்தில் ஐக்கியம் ஆகிவிடுவார்கள் என்று எண்ணியிருந்த வட மாநில மக்களுக்கு லீயின் படையெடுப்பு பேரதிர்ச்சியாக இருந்தது. லீயின் முதல் படையெடுப்பு தோல்வியில் முடிவடைந்தாலும் அவர் தன் படைகளைப் பத்திரமாகக் காப்பாற்றிப் பின்வாங்கிவிட்டார். ஆனால் தனது படையெடுப்பின் தாக்கம் போர்க்களத்தைவிட ஒன்றிய மக்களின் மனத்தில்தான் அதிகமாக இருந்தது என்பதைப் புரிந்துகொண்டார். தொடர்ந்து தோல்விகள் கிடைத்தால் அவர்கள் போர் போதும் என்ற மனநிலைக்கு வந்துவிடுவார்கள் என்பதை உணர்ந்தார். எனவே அடுத்த ஆண்டு (1863) மீண்டும் வடக்கு நோக்கிப் படையெடுத்தார். அவரை எதிர்க்க அனுப்பப்பட்ட ஒன்றியப்படைகள் அனைத்தையும் முறியடித்து வேகமாக முன்னேறினார்.

லீ அளவுக்குத் திறமையுள்ள தளபதிகள் ஒன்றியப்படையில் அப்போது இல்லை. ஆனால் படை எண்ணிக்கையும் தளவாட எண்ணிக்கையும் அவர்களுக்குச் சாதகமாக இருந்தன. கெட்டிஸ்பெர்க் என்ற இடத்தில் லீயின் படையைத் தடுத்து நிறுத்தின ஒன்றியப்படைகள். மூன்று நாட்கள் பெரும் உயிர்ச்சேதத்துடன் கடும் சண்டை நடந்தது. லீயின் படை தோற்றுப் பின்வாங்கியது. அதோடு போரில் கான்ஃபெடரசி ஜெயிக்கும் கனவும் பொய்த்துப் போனது. அப்போதே கான்ஃபெடரசி சரணடைந்திருந்தால் பின் ஏற்பட்ட உயிரிழப்புகளையும் பொருட் சேதங்களையும் தவிர்த்திருக்கலாம். லீ போன்ற திறமையான தளபதி ஒன்றியப் படைகளைச் சமாளிக்கவில்லை என்றாலும், போர் சீக்கிரம் முடிந்திருக்கும். கெட்டிஸ்பெர்க் சண்டைக்குப் பிறகு கான்ஃபெடரசியின் கதையை முடிக்கவந்த ஒன்றியப் படைகளைத் தாமதப்படுத்திப் போரிட்டார் லீ. ஆனால் ஒன்றியத்தின் படைபலத்தின் முன் லீயின் திறமையை மட்டும் வைத்துக் கொண்டு கான்ஃபெடரசியால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. போதாக்குறைக்கு, லீ அளவுக்குத் திறமை வாய்ந்த கிராண்ட், ஷெர்மன் என்ற இருவர் ஒன்றியப் படைகளின் தலைமைத் தளபதிகள் ஆகிவிட்டனர்.

1864-65ல் கான்ஃபெடரசியின் படைகள் ஒன்றன்பின் ஒன்றாக அழிக்கப்பட்டு அதன் பகுதிகள் ஒன்றியப் படைகளால் கைப்பற்றப்பட்டன. போரின் இறுதிக் கட்டத்தில் வேறு வழியில்லாமல் கறுப்பின அடிமைகளுக்கு ஆயுதப்பயிற்சி அளித்து அவர்களைப் படைகளில் சேர்த்துக்கொள்ளலாமா என்று யோசிக்கத் தொடங்கினார் லீ. எப்படி இருக்கு கதை! எந்த அடிமைகள் கீழ்த்தரமானவர்கள், அவர்களுக்கு கொஞ்சம்கூட உரிமைத் தரக்கூடாது என்று கான்ஃபெடரசியை உருவாக்கி உள்நாட்டுப் போரைத் தொடங்கினார்களோ அதே அடிமைகளைக் கொண்டு கான்ஃபெடரசியைக் காக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். ஆனால் அதற்கான காலம் கடந்துவிட்டது. ஷெர்மன், கிராண்ட் இருவரின் படைகளின் தாக்குதல்களைச் சமாளிக்க முடியாமல் ஏப்ரல் 1865-ல் கான்ஃபெடரசி சரணடைந்தது. அடிமைமுறையும் ஒழிக்கப்பட்டது. கான்ஃபெடரசிக்காகப் போராடியவர்களின் குடியுரிமை ரத்து செய்யப்பட்டது. லீ நாடிழந்தவர் ஆனார். சில வருடங்கள் கழித்து அப்படி குடியுரிமை பறிக்கப்பட்டவர்களுக்கு பொது மன்னிப்பு அறிவிக்கப்பட்டபோது லீயும் அதற்கு விண்ணப்பித்தார். ஆனால் ஏனோ அவரது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. 1870-ல் அவர் மரணமடைந்தபோது அவர் எந்த நாட்டின் குடிமகனும் இல்லை. அவர் இறந்து நூறாண்டுகளுக்குப் பிறகே அவரைக் கெளரவிக்கும் வகையில் அவருக்கு அமெரிக்கக் குடியுரிமை திருப்பியளிக்கப்பட்டது.

லீயின் வாழ்க்கையை மேலோட்டமாகப் பார்த்தால் இவரெல்லாம் வில்லனா என்று தோன்றும். ஆனால் அவர் யாருக்காகப் போராடினார் என்பதைப் பார்த்தால் அவரால் மானுட சமுதாயத்துக்கு எவ்வளவு பெரிய தீங்கு நேர்ந்திருக்கும் என்பது விளங்கும். கான்ஃபெடரசி ஒரு தீய அரசு என்பதில் கொஞ்சம்கூடச் சந்தேகமில்லை. அடிமைமுறையைத் தக்க வைப்பதற்காக உருவாக்கப்பட்ட தேசம் அது. தங்கள் நாட்டில் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களிலும் நாடுகளிலும் இந்த முறையைப் பரப்பவேண்டும் என்று முயன்ற நாடு அது. லீ இல்லை என்றால் ஒரே ஆண்டில் அழிக்கப்பட்டிருக்கவேண்டிய இந்தக் ‘கொடியவர்களின் கூடாரம்’ நான்காண்டுகள் பிழைத்து உள்நாட்டுப் போர் தொடர்ந்து நடந்தது. கிட்டத்தட்ட ஆறு லட்சம் உயிர்களைக் காவு வாங்கிய இந்தப் போர் நான்காண்டுகள் நடந்தற்கு லீதான் முக்கியக் காரணம். இத்தனைக்கும் அவருக்கு அடிமைமுறை மீது எந்தப் பற்றும் கிடையாது. தனது மாநிலத்தின்மீது வைத்திருந்த விசுவாசத்தால் அமெரிக்காவின் தலையெழுத்தையே மாற்றப் பார்த்தார் லீ.

உள்நாட்டுப் போர் முடிந்து லீ இறந்து பல ஆண்டுகளாகியும் அவரது நினைவை அமெரிக்கத் தென் மாநிலங்களின் இனவெறியர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். உள்நாட்டுப் போர் ஒரு சுதந்திரப் போராட்டம் என்றும், அடிமைமுறைக்காக நடத்தப்பட்டதில்லை என்றும் தென் மாநிலங்களின் ஆதரவாளர்கள் வரலாற்றைத் திரித்து எழுதிவருகிறார்கள். கான்ஃபெடரசிக்கு புனித பிம்பத்தை உண்டாக்க அவர்கள் அதிகம் பயன்படுத்தும் வாதம் – லீ போன்ற நல்லவர்கள் எல்லாம் கான்ஃபெடரசிக்காகச் சண்டையிட்டார்கள் என்பதே. இனவெறிக்கு இப்படியொரு விடுதலை வேட்கைச் சாயம் பூசியதன் விளைவுகள் இன்றுகூட அமெரிக்க சமுதாயத்தில் தெரிகின்றன. அமெரிக்காவின் தென் மாநிலங்களில் 1960-கள் வரை கறுப்பின ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டிருந்தது. இன்றுகூட ஆப்பிரிக்க அமெரிக்க அரசியல்வாதிகளால் தென் மாநிலத் தேர்தல்களில் வெற்றிபெற இயலாது. 2008-ல் பராக் ஒபாமாவே ஓரிரு தென்மாநிலங்களில் மட்டும் – அதுவும் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் – தான் ஜெயித்தார். இன்றும்கூட அடிமைமுறையின்கீழ் கறுப்பர்கள் செளகரியமாக வாழ்ந்தார்கள் என்று நம்புபவர்கள் அமெரிக்காவில் இருக்கிறார்கள். கான்ஃபெடரசி தோற்றபோதே இந்த நிலை என்றால், லீயின் முயற்சியால் அவர்கள் வென்றிருந்தால் இன்று அமெரிக்கா மற்றும் அதன் அண்டை நாடுகளின் நிலை எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.

.

Saturday, 12 October 2019

AMERICAN CIVIL WAR - CONFEDERATE ROBERT LEE , FOUGHT AGAINST LINCOLN

புரட்சித் தளபதி ராபர்ட் ஈ. லீ
தவறான தரப்பில் சரியான மனிதர் ராபர்ட் ஈ. லீ
BORN 1807 JANUARY 19-1870 OCTOBER 12

Saturday, 9 June 2018

CHARLES DICKENS , SOCIAL REVOLUTIONARY WRITER BORN 1812 FEBRUARY 7 - 1870 JUNE 9

CHARLES DICKENS ,
SOCIAL REVOLUTIONARY WRITER
BORN 1812 FEBRUARY 7 - 1870 JUNE 9

சார்லஸ் ஜான் ஹஃபாம் டிக்கென்ஸ் (Charles Dickens, 7 பெப்ரவரி 1812 - 9 ஜூன் 1870) விக்டோரியா காலத்தைச் சேர்ந்த மிகவும் புகழ் பெற்ற ஆங்கிலப் புதின எழுத்தாளர்களில் ஒருவரும், தீவிரமான சமூகப் பரப்புரையாளரும் ஆவார். மிகவும் வறியவராக வாழ்க்கையைத் தொடங்கியவர். அது அவரது எழுத்துக்களிலும் எதிரொலித்தது. இவரது டேவிட் காப்பர்ஃபீல்டு, ஆலிவர் டுவிஸ்ட் போன்ற புதினங்கள் (நாவல்கள்) உலகப் புகழ் பெற்றவை.

திறனாய்வாளர்களான ஜார்ஜ் கிஸ்ஸிங், ஜி. கே. செஸ்ட்டர்ட்டன் ஆகியோர், டிக்கென்சினது உரைநடைத் திறன், தனித்துவமான, திறமையான ஆளுமை கொண்ட பாத்திரங்களைத் தொடர்ச்சியாக உருவாக்கும் திறமை, அவரது ஆற்றமிக்க சமூக உணர்வு என்பவற்றுக்குச் சான்றளித்துள்ளனர். ஆனால், சக எழுத்தாளர்களான, ஜார்ஜ் ஹென்றி லூயிஸ், ஹென்றி ஜேம்ஸ், வெர்ஜீனியா வூல்ப் ஆகியோர், உணர்ச்சிவசப்பட்ட தன்மை, நம்பமுடியாத நிகழ்வுகள், இயற்கைக்கு மாறான பாத்திரப் படைப்புக்கள் என்பவற்றுக்காக அவரது ஆக்கங்களைக் குறை கூறியுள்ளனர்.

டிக்கென்சின் புதினங்களினதும், சிறுகதைகளினதும் புகழ் காரணமாக அவை தொடர்ச்சியாக அச்சேறி வருகின்றன. டிக்கென்சின் பல புதினங்கள் தொடக்கத்தில் சஞ்சிகை போன்றவற்றில் தொடராக வெளிவந்தவை. இது அக்காலத்தில் பெரிதும் விரும்பப்பட்ட ஒரு வடிவமாக இருந்தது. எனினும், அக்காலத்துத் தொடர்கதை எழுத்தாளர்கள் பலரைப்போல, டிக்கென்ஸ், வெளியிடத் தொடங்கு முன்னரே புதினம் முழுவதையும் எழுதி முடிப்பதில்லை. இவர், வெளிவரும் ஒழுங்கில் பகுதி பகுதியாகவே புதினங்களை எழுதினார். இந்த முறை, ஒவ்வொரு வெளியீட்டையும் வாசித்து முடித்ததும் அடுத்த வெளியீட்டை எதிர்பார்த்திருக்கும் ஆவலைத் தூண்டும்படி எழுத வசதியானது.

தாக்கங்கள்
ஹொனோரே டி பால்சாக், மிகுவேல் டி செர்வாண்டெஸ், விக்டர் ஹியூகோ, வாஷிங்டன் இர்விங், வில்லியம் ஷேக்ஸ்பியர்

ஆரம்ப வருடங்கள்

சார்லஸ் டிக்கின்ஸ் பிறந்த இடம், 393 வணிகச் சாலை, போர்ட்ஸ்மவுத்
photograph
2 ஆர்டனஸ் டெரேஸ், சாத்தம்,டிக்கின்ஸ் வாழ்ந்த வீடு 1817 – மே 1821[1]
சார்லஸ் ஜான் ஹூஃபாம் டிக்கின்ஸ், பிப்ரவரி 7, 1812 அன்று, 1 மைல் எண்ட் டெரேஸ் (இப்போது 393 வணிகச் சாலை), போர்ட்ஸியா தீவில் (போர்ட்ஸ்மவுத்), ஜான் டிக்கன்ஸ் (1785-1851) மற்றும் எலிசபெத் டிக்கன்ஸ் (née பாரோ, 1789-1863) ஆகியயோரின் எட்டு குழந்தைகளில் இரண்டாவது குழந்தையாக பிறந்தார். அவரது தந்தை கடற்படை அலுவலகத்தில் ஒரு எழுத்தராக இருந்தார் மற்றும் தற்காலிகமாக அந்த மாவட்டத்தில் இருந்தார். சார்லஸ் அவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக செயல்பட அவரது கடற்படை தலைவர் அவர்களைக் கிறிஸ்டோபர் ஹூஃபாம் கேட்டுக் கொண்டார். [2] கடற்படை தலைவர் பன்முகம் கொண்டவராக மேலாளராகவும் மற்றும் ஒரு நிறுவனத் தலைவராகவும் இருந்திருக்கிறார். ஹூஃபாம் பவுல் டொம்பாய்க்கு உத்வேகம் அளித்தாக கருதப்படுகிறது, இவர் டிக்கின்ஸின் பெயர்பெற்ற டொம்பாபே அண்ட் சன் (1848) இல் ஒரு கப்பல் நிறுவனத்தின் உரிமையாளர். [2]

1815 ஆம் ஆண்டு சனவரி மாதம் ஜான் டிக்கின்ஸ் லண்டனுக்குத் திரும்ப அழைக்கப்பட்டார், மேலும் அவரது குடும்பம் நோட்ஃபோக் தெரு, பிட்ஸ்ரோவியாவிற்கு மாற்றப்பட்டது. சார்லஸ்க்கு நான்கு வயது இருந்தபோது, அவரது குடும்பம் ஷெர்னெஸ்ஸிற்கு மாற்றப்பட்டனர், அங்கிருந்து சாத்தம், கென்ட் என்ற இடத்திற்குச் சென்றனர். சார்லஸ் அங்கு 11 வயது வரை கழித்தார். அவரது ஆரம்பகால வாழ்க்கையானது "மிகவும் சிறியதாகவும், எளிமையானதாகவும், குறிப்பாக ஒரு விசயத்தை பற்றிய பொறுப்புகளை எடுத்துக்கொள்ளும் பையனாக" இருந்திருக்கிறார். [3]

சார்லஸ் வெளிப்புறங்களிலும் தனது நேரத்தை செலவழித்தார் ஆனாலும் உற்சாகத்துடன் வாசித்தார், குறிப்பாக போக்கிரிகளின் துணிகர செயல்கள் அடங்கிய நாவல்களான டோபியாஸ் ஸ்மோல்ட் மற்றும் ஹென்றி ஃபீல்டிங், ராபின்சன் க்ரூஸோ மற்றும் கில் பிளஸ் ஆகியோரின் நாவல்களை வாசித்தார். அரேபிய நைட்ஸ் மற்றும் எலிசபெத் இன்ச்பால்ட்ஸின் சேகரிக்கப்பட்ட பெர்சஸ் ஆகியவற்றை அவர் மீண்டும் மீண்டும் வாசித்து மகிழ்ந்தார். [4] அவர் குழந்தை பருவத்தின் நினைவுகளை தக்கவைத்துக் கொண்டார், மக்களிடமும் சம்பவங்களிடமிருந்தும் ஒரு சிறந்த நினைவூட்டல் அவர் தனது எழுத்துக்களில் பயன்படுத்தினார். [5] அவரது தந்தை கடற்படை அலுவலகத்தில் ஒரு எழுத்தராக பணிபுரிந்த ஒரு சில ஆண்டுகளில் அவருக்கு தனிப்பட்ட கல்வியும், பிறகு வயதான பெண் நடத்திய பள்ளியில் பின்னர் சாத்தம்மில் வில்லியம் கில்ஸ் நடத்திய ஒரு பள்ளியில் பயின்றார். [6]

பத்திரிகை மற்றும் ஆரம்ப நாவல்கள்

1832 ஆம் ஆண்டில், 20 வயதில், டிக்கின்ஸ் ஆற்றல் மிக்கவராகவும் தன்னம்பிக்கையுடனும் இருந்தார். [7] அவர் பலகுரல் வித்தைகள் மற்றும் பிரபலமான பொழுதுபோக்குகளை அனுபவித்து மகிழிந்தார், அவர் தான் எதிர்காலத்தில் எப்படி வரவேண்டும் என்ற் ஒரு தெளிவான, குறிப்பிட்ட உணர்வைக் கொண்டிருக்கவில்லை, மேலும் அவருக்கு புகழ் வேண்டுமென்றும் அறிந்திருந்தார். அவரது ஆர்வம் நாடகத்துறைக்குள் அவரை இழுத்தது- அவர் கேரிக் நாடகக் குழுவில் ஒரு ஆரம்ப உறுப்பினராக ஆனார் [8] - அவர் கோவென்ட் கார்டனில் ஒரு நடிப்புத் தேர்வுக்கு சென்றார், மேலாளர் ஜார்ஜ் பார்ட்லி மற்றும் நடிகர் சார்லஸ் கெம்பல் ஆகியோர் அவரது நடிப்பை பார்த்து மதிப்பிட வேண்டியிருந்தது. [9] இந்தத் தேர்விற்காக டிக்கின்ஸ், நகைச்சுவை நடிகர் சார்லஸ் மேத்யூஸைப் கவனித்து பின்பற்ற முடிவு செய்திருந்தார், ஆனால் இறுதியில் அவர் உடல் நல்க்குறைவின் காரணத்தால் இந்தத் தேர்வை தவறவிட்டார். அவருக்கு வேறொரு சந்தர்ப்பமும் கிடைத்தது ஆனால் இந்த வாய்ப்புக்கு முன்னால், எழுத்தாளர் என்று அவர் தனது வாழ்க்கையைத் தொடங்கி விட்டார். 1833 ஆம் ஆண்டில் லண்டன் மாதாந்திர பத்திரிகைக்கு அவரது முதல் கதை "(A Dinner at Poplar Walk) ஒரு பிரபல நடைபாதை கடையில் இரவு விருந்து" சமர்ப்பித்திருந்தார். [10] அவரது தாயாரின் சகோதரர் வில்லியம் பாரோ, அவரை பாராளுமன்றத்தின் கண்ணாடி (The Mirror of Parliament) இதழில் பணியமர்த்தினார்,
 1832 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் முதன்முறையாக ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றினார். அவர் ஃபர்னைவல்ஸ் இன்னில் அறைகளை வாடகைக்கு எடுத்து அரசியல் பத்திரிகையாளராக பணிபுரிந்தார், பாராளுமன்ற விவாதங்கள் குறித்த செய்திகளை அளித்தார், மற்றும் அவர் மார்னிங் க்ரோனிக்காக தேர்தல் பிரச்சாரங்களை நடத்த பிரிட்டன் முழுவதும் பயணித்தார். அவருடைய பத்திரிகை அனுபவங்களை, பருவ இதழ்களில் ஓவியங்கள் வடிவில், 1836 இல் (Boz) போஸ் என்ற புனைப்பெயரில் அவரது முதல் தொகுப்பை உருவாக்கி வெளியிடப்பட்டது: போஸ்- ஒரு குடும்பப் புனைப்பெயராக இருந்ததால், அவர் சில ஆண்டுகளுக்கு அதே பெயரை தனது புனைப்பெயராக பயன்படுத்தினார். [11][12] டிக்கின்ஸ், "மோசே" என்ற புனைப்பெயரிடமிருந்து வெளிப்படையாகத் போஸ் பெயரை தத்தெடுத்தார், இது அவருடைய இளைய சகோதரர் ஆகஸ்டஸ் டிக்கன்ஸ் கொடுத்தது, இது ஆலிவர் கோல்ட்ஸ்மித் இன் தி விகார் ஆஃப் வேக்ஃபீல்ட் கதையில் வரும் ஒரு கதாபாத்திரத்தின் பெயர். தலை ஓசையிலிருந்து உச்சரிக்கும்போது, "மோசே" போஸ் என
அழைக்கப்படும் "போஸ்" ஆனார். அவரது இலக்கிய வாழ்க்கை முழுவதும் பத்திரிகைகளுக்காக அவர் பங்களித்து இருந்தார். சனவரி 1835 இல் மார்னிங் குரோனிக்கல் இதழில் இசை விமர்சகர் ஜார்ஜ் ஹோகார்ட் தலைமையின் கீழ் ஒரு மாலை பதிப்பை வெளியிட்டது. தெரு ஓவியங்கள் வரைவதில் பங்களிப்பதற்க்காக டிக்கின்ஸ்சை ஹோகார்ட் அழைத்தார் மற்றும் டிக்கின்ஸ் தனது புல்ஹாம் வீட்டிற்கு ஒரு வழக்கமான பார்வையாளராக ஆனார். டிக்கின்ஸ்சின் தனது கதாநாயகனான வால்டர் ஸ்காட்டுடன் ஹோகார்ட் கொண்ட நட்பால் உற்சாகமடைந்தார், மேலும் ஹோகார்தின் மூன்று மகள்கள் - ஜோர்ஜினா, மேரி, மற்றும் பத்தொன்பது வயது கேத்தரின் ஆகியோரின் நட்பையும் பெற்று மகிழ்ந்தார்.

ஆன்மீகப் பார்வை
ஒரு இளைஞனாக டிக்கின்ஸ் ஒழுங்கமைக்கப்பட்ட மதத்தின் சில அம்சங்களுக்கு ஒரு விரக்தியை வெளிப்படுத்தினார். 1836 ஆண்டில், ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று மூன்று தலைவர்கள் என்ற தலைப்பில் ஒரு துண்டுப் பிரசுரத்தில், ஞாயிற்றுக்கிழமைகளில் விளையாட்டுகளை தடை செய்வதற்கான ஒரு திட்டத்தை எதிர்த்து, மகிழ்ச்சிக்கான மக்களின் உரிமைகளை பாதுகாக்க போராடினார்.

"உங்கள் தேவாலயங்களை பாருங்கள்- குறைந்த சபை மற்றும் குறைவான வருகை. மக்கள் பரிதாபகரமாகவும் முரட்டுத்தனமாகவும் வளர்ந்து, தேவாலயத்தின் நம்பிக்கையின் மீது வெறுப்படைந்து வருகின்றனர், அத்தகைய ஒவ்வொரு ஏழு நாளைக்கு ஒருமுறை மக்களின் விருப்பங்களை தடை செய்கிற விசுவாசத்தால் வெறுக்கப்படுகிறார்கள். மக்கள் தேவாலயங்களுக்கு வெளியே தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்கள் மேலும் தேவாலயங்களை தவிர்க்கவும் செய்கிறார்கள். அதனால் ஞாயிற்றுக்கிழமை தெருக்களுக்கு வாருங்கள், மேலும் சுற்றியுள்ள எல்லாவற்றிற்கும் மேலாகச் செயல்படும் கடுமையான மனச்சோர்வைக் கவனியுங்கள்" என்று அந்த துண்டுப் பிரசுரத்தில் எழுதியிருந்தார்.

மரணம்

1870 ஆம் ஆண்டு சூன் மாதம் 8 ஆம் தேதி, எட்வின் ட்ரோட் மீதான ஒரு முழு நாள் வேலைக்குப் பிறகு டிக்கின்ஸ் இருதய தசை அடைப்பு ஏற்பட்டது. அவர் ஒருபோதும் சுயஉணர்வைப் பெறவில்லை, அடுத்த நாள் அவர் உயிர் பிரிந்தது, அவர் மரணம் மடைந்தார். டிக்கின்ஸ் உண்மையிலேயே பெக்காமில் இருப்பதாக சுயசரிதை எழுத்தாளரான கிளாரி டோமலின் பரிந்துரைத்தார். டிக்கின்ஸ் இருதய தசை அடைப்பால் பாதிக்கப்பட்டபோது, அவருடைய மனைவி எல்லென் டெர்னானும் அவளது வேலைக்காரிகளும் அவரை காட்ஸ் ஹில்லுக்கு அழைத்துச் சென்றனர், அதனால் அவர்களது உறவு பற்றிய உண்மையை பொது மக்களுக்கு தெரியாது. ரோச்செஸ்டர் தேவாலயத்தில் "மலிவான, அசையாத, தனிப்பட்ட முறையில்" இரகசியமாக புதைக்கப்பட வேண்டும் என்ற டிக்கின்ஸ் விருப்பதிற்கு மாறாக, அவரை வெஸ்ட்மினிஸ்டர் அபேயின் பொயட்ஸ் கார்னரில் அடக்கம் செயதனர். இறுதி சடங்கில் அச்சிடப்பட்ட ஒரு கட்டுரையில் பின்வருமாறு வாசகம் உள்ளது: "சார்லஸ் டிக்கின்ஸ் நினைவாக, தனது 58 வது அகவையில் 9 சூன் 1870 அன்று, ராச்செஸ்டர், கென்ட் அருகிலுள்ள தனது இல்லத்தில் டிக்கின்ஸ் (இங்கிலாந்தின் மிகவும் பிரபலமான எழுத்தாளர்) இறந்தார். அவர் ஏழைகள், துன்பங்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள் ஒரு அனுதாபியாக இருந்தார் மற்றும் அவருடைய இறப்பு மூலம், இங்கிலாந்தின் மிகப்பெரிய எழுத்தாளர்களில் ஒருவர் உலகில் இழக்கப்படுகிறார்." அவருடைய கடைசிச் சொற்கள்: "நிலத்தின் மேல்", அவரது அண்ணியார் ஜோர்ஜினாவின் வேண்டுகோளுக்கு இணங்க அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜூன் 1870, டிக்கின்ஸ் நல்லடக்கம் முடிந்த ஐந்து நாட்களுக்கு பின்னர், டீன் ஆர்தர் பென்ரின் ஸ்டான்லி ஒரு நினைவறிக்கையை வெளியிட்டார். "இருண்ட காட்சிகளை கையாள்வதிலும் மற்றும் மிகவும் இழிந்த பாத்திரங்களை கையாள்வதிலும், மேதையாக மற்றும் தூய்மையாக இருக்க முடியும் என்பதற்கு டிக்கின்ஸ் ஒரு உதாரணமாக இருந்தார், இப்போது அவர் நம்மோடு இல்லை என்று துக்க நாள் நினைவு கூறப்பட்டது.

பின்பற்றுவோர்

Monday, 30 April 2018

DADASAHEB PHALKE ,INDIA`S FIRST FILM PRODUCER, DIRECTOR ALL IN ALL BORN 1870 APRIL 30-1944 FEBRUARY 16

DADASAHEB PHALKE ,INDIA`S FIRST 
FILM PRODUCER, DIRECTOR ALL IN ALL 
BORN 1870 APRIL 30-1944 FEBRUARY 16

தாதாசாகெப் பால்கே (Dadasaheb Phalke) என்று அழைக்கப்படும் துண்டிராஜ் கோவிந்த் பால்கே (Dhundiraj Govind Phalke, ஏப்ரல் 30, 1870 - பிப்ரவரி 16, 1944) இந்திய திரைப்படத்துறையின் தந்தையாக கருதப்படுகிறார்.

தாதாசாஹெப் பால்கே
தாதாசாஹெப் பால்கே நாசிக்கில் பிறந்தார். 1885ஆம் ஆண்டு மும்பையில் உள்ள சர் ஜெ.ஜெ கலைக்கல்லூரியில் சேர்ந்து பயின்றார். 1910 முதல் 1940 வரை பல திரைப்படங்களை உருவாக்கினார். பெரும்பாலும் அத்திரைப்படங்களை அவரே இயக்கவும் செய்தார்.

இந்திய சினிமா

இந்திய சினிமாவின் தந்தை என்று அழைக்கப்படுபவர் தாதா சாகேப் பால்கே. இந்தியாவிற்கு சினிமாவை முதலில் அறிமுகப்படுத்தியவர் இவர்தான். தொடக்கத்தில் வெளிவந்த படங்கள் எதுவும் வண்ணப்படங்கள் அல்ல. ஒலியும் இல்லாமல் ஊமைப்படங்களாகத்தான் இருந்தன. பால்கே தனது தீவிர முயற்சியினால் ஒரு சினிமாவை எழுதி இயக்கினார். படத்தின் பெயர் அரிச்சந்திரா. நடிகர்களை எப்படித் தேர்வு செய்வது என்று அவர் யோசிக்கவே இல்லை. தனது குடும்பத்திலிருந்த மொத்தம் 18 பேர்களையும் நடிகர்களாக ஆக்கி நடிக்க வைத்து விட்டார் பால்கே. எனவே முதல் இந்திய சினிமா ஒரு குடும்பப் படமே ஆகும்.

அவருடைய நினைவாக தாதாசாகெப் பால்கே விருது நிறுவப்பட்டது.

திரைப்படங்கள்
ராஜா ஹரிஷ்சந்திரா (1913)

தாதா சாகேப் பால்கே வாழ்க்கை வரலாறு

தாதாசாகெப் பால்கே (Dadasaheb Phalke) என்று அழைக்கப்படும் துண்டிராஜ் கோவிந்த் பால்கே (Dhundiraj Govind Phalke, ஏப்ரல் 30, 1870 – பிப்ரவரி 16, 1944) இந்திய திரைப்படத்துறையின் தந்தையாக கருதப்படுகிறார்.

தாதா சாகேப் பால்கே 1870இல் நாசிக் அருகில் உள்ள திரும்பகேஸ்வரில் பிறந்தார். ஓவியம், சிற்பம், அகழ்வாராய்ச்சி என பல விஷயம் கற்றவர், ராஜா ரவிவர்மாவிடம் லித்தோகிராப் வரையும் பணியில் ஈடுபட்டார்.

பம்பாய் சர்.ஜே.ஜே. கலைக்கல்லூரியில் புகைப்படம் எடுக்கும் முறையையும், இயற்கைக் காட்சிகளைக் கொண்டு சித்திரம் தீட்டும் முறையையும் படிப்படியாகக் கற்றார்.

1910 முதல் 1940 வரை பல திரைப்படங்களை உருவாக்கினார். பெரும்பாலும் அத்திரைப்படங்களை அவரே இயக்கவும் செய்தார்.

மேஜிக் செய்து வயிற்று பிழைப்பை ஓட்டினார் . அப்பொழுது தான் லூமியர் சகோதரர்கள் கிறிஸ்துவின் வாழ்வு என்கிற படத்தை மக்களுக்கு போட்டு காட்டினார்கள், இங்கே இதைப்பார்த்து தான் பால்கே அசந்து போனார். படம் எடுக்க வேண்டும் என்று மனிதருக்கு ஆர்வம் பற்றிக்கொண்டது.

அந்த படத்தை போல படமெடுக்க வேண்டும் என சினிமா கொட்டகையில் வேலைபார்த்து பல படங்களை பார்த்தார். படங்கள் பெரும்பாலும் மவுனம் தான்; இடையிடையே அலுக்காமல் இருக்க நாடக கலைஞர்கள், இசை வல்லுனர்கள் ஆகியோர் உதவுவார்கள். கதையை விளக்கி சொல்வார்கள். அப்படிதான் போய்க்கொண்டு இருந்தது.

சின்ன சின்ன படங்கள் எடுத்து பழகிய பின், இவர் இங்கிலாந்துக்கு கப்பலேறி வால்டன் ஸ்டுடியோவில் சினிமா கற்றுக்கொண்டு திரும்பினார்; அதோடு நில்லாமல் வில்லியம்சன் கேமரா ஒன்றை வாங்கிக் கொண்டு வந்தார்.

இன்றைக்கு போல அன்றைக்கு திரைப்படம் எடுப்பது சுலபமான காரியமில்லை. படத்தில் நடிப்பதை பலர் பாவம் என எண்ணினார்கள். மக்கள் பெரும்பாலும் நாடகங்களில் மூழ்கி இருந்த காலம் அது. பெண்கள் நாடகங்களில் பெரும்பாலும் நடிக்க அனுமதிக்கப்படாமல் இருந்தார்கள். இவர் படம் பார்த்து பார்த்து பார்வை மங்கி இந்தியா வந்திருந்தார்.

இவர் சாமான்களை விற்று ராஜா ஹரிச்சந்திரா படம் எடுக்க ஆரம்பித்தார். நடிகர்கள் பஞ்சம் உண்டானது; பெண் வேடத்திற்கு ஆண்களை பிடித்தார். நடிக்க பலர் வீட்டில் பிள்ளைகளை அனுப்ப மறுத்தார்கள். ஆகவே தான் நடிப்பு பேக்டரி நடத்துவதாக சொல்லி அவர்களை கூட்டி வந்தார். ஒரே ஆளாக எடிட்டிங், ஒளிப்பதிவு, இயக்கம், காஸ்ட்யூம், விநியோகம் எல்லாமே இவர் தான். நடிகர்களை அந்த கதாபாத்திரமாகவே ஆக்க ரொம்ப பிரயத்தனப்பட்டார்.

பெண் வேடம் பூண்டவனை சேலை கட்டியே நடமாட விட்டார்; பெண் போன்ற நளினத்தை அவனிடமிருந்து வெளிக்கொணர்ந்தார். ஸ்திரிபார்ட் நடிகர்களின் நடிப்பு இயல்பாக அமைய வேண்டும் என்பதற்காக அவர்கள் நாள் முழுவதும் சமையல்வேலை மற்றும் வீ‘ட்டுவேலைகள் செய்துவர வேண்டும்.

எப்போதுமே புடவை கட்டிக் கொண்டுதான் இருக்க வேண்டும், கூந்தல் வளர்த்துக் கொள்ள வேணடும் பெயரைக் கூட மாற்றிக் கொள்ள வேண்டும் என்று ஆணையிட்டார். தனது ஹிந்துஸதான் பிலிம் கம்பெனி மூலம் பால்கே 75 படங்களை தயாரித்தார் அவர்; பேசும் படங்கள் வந்ததும் இவரால் தாக்குபிடிக்க முடியவில்லை; நொடிந்து போனார்.

இவரின் மனைவி ஏகத்துக்கும் உதவிகரமாக இருந்தார். அவரே பல தொழில்நுட்ப விஷயங்களை கற்றுக்கொண்டு வேலை பார்த்தார். கணவர் கேட்ட பொழுதெல்லாம் நகைகளை கொடுத்தார். பசி வறுமை எல்லாம் வாட்டி எடுத்தன; வீட்டு சாமான்களை அடமானம் வைத்து ஜீவனம் நடத்தினார்.

வறுமையில் நாசிக்கில் கவனிப்பு இன்றி மறைந்து போனார். அவரை இந்திய திரைப்படத்துறையின் தந்தை என்கிறோம். அவரின் முதல் படம் வந்து நூற்றாண்டு ஆகி விட்டது. அவரின் பெயரால் இந்தியாவின் மிக உயரிய திரை விருது வழங்கப்படுகிறது.

சிவாஜி கணேசன் மற்றும் பாலசந்தர் இவ்விருதை தமிழகத்தில் இருந்து பெற்றிருக்கிறார்கள். சினிமா வெளிச்சத்தை மக்கள் பார்க்க தன் வாழ்வை இருட்டில் தோய்த்து கொண்ட அவரின் பிறந்த தினம் இன்று.

அவருடைய நினைவாக தாதாசாகெப் பால்கே விருது நிறுவப்பட்டது.