Posts

Showing posts with the label C M C

IDA SOPHIA SCUTTER ,AMERICAN DOCTOR FOUNDED C M C HOSPITAL ,VELLORE BORN 1870 DECEMBER 9 -1960 MAY 23

Image
  IDA SOPHIA SCUTTER ,AMERICAN DOCTOR  FOUNDED C M C HOSPITAL ,VELLORE BORN   1870 DECEMBER 9 -1960 MAY 23 ஐடா ஸோஃபியா ஸ்கட்டர் என்பவர் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண் மருத்தவராவார். இவர் வேலூரில் உள்ள கிருத்தவ மருத்துவக் கல்லூரியை நிறுவியதற்காக அறியப்படுகிறார். இளமைப்பருவம் இவரது பெற்றோர் அமெரிக்காவைச் சேர்ந்த, ஜான் ஸ்கடர் - சோஃபியா வெல்ட் ஸ்கடர் ஆவர். இவரின் தந்தையும் ஒரு மருத்தவராவார். அவர்கள் இராணிப்பேட்டையில் தங்கி மருத்துவத் தொண்டு புரிந்துகொண்டிருந்த காலகட்டத்தில் ஐடா ஸோஃபியா ஸ்கட்டர் 1870 திசம்பர் 9 இல் பிறந்தார். எட்டு வயதுவரை தமிழ்நாட்டின் இராணிப்பேட்டையில் வளர்ந்த ஐடா பிறகு தன் பெற்றோர்களுடன் தாயகமான அமெரிக்காவுக்குச் சென்றார். அதன்பின் சமயத் தொண்டுக்காக சப்பான் நாட்டுக்குப் பயணமானார். அதனால் நார்த் பீல்டில் உள்ள கிறித்துவப் பெண்கள் பள்ளியில் சேர்ந்து விடுதியில் தங்கியிருந்து படிப்பைத் தொடர்ந்தார். பள்ளி இறுதித் தேர்வெழுதிய நிலையில் உடல்நிலை சரியில்லாத தாயாரைப் பார்பதற்காக இந்தியாவுக்குப் புறப்பட்டு வந்தார். அப்போது ஒருநாள் இரவு அந்தணர், முஸ்லிம், இந்து சமய...