வெள்ளி மங்கை விரலில் வைரம்: காதல் களம் ஆன ஒலிம்பிக்!
வெள்ளி மங்கை விரலில் வைரம்: காதல் களம் ஆன ஒலிம்பிக்! ரியோ டி ஜெனீரோ ஒலிம்பிக் மைதானத்தில் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களைத் தாண்டி இதயங்களை வெல்லும் நிகழ்வுகள் நடைபெற்றிருக்கிறது. அது அனைவரது கவனத்தையும் கவர்ந்திருக்கிறது. சீனாவின் முன்னணி நீச்சல் வீராங்கனைகளில் ஒருவர் ஹே சி (25). இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த 3 மீட்டர் ஸ்ப்ரிங்போர்டு பிரிவு நீச்சல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். வெள்ளி வென்ற அவருக்கு வைரம் பரிசாகக் கிடைக்கும் என அவர் நினைக்கவில்லை. ஆம், வெள்ளிப் பதக்கம் பெற்றுவிட்டு மைதானத்தின் நடுவே வந்து நின்ற ஹே சி அருகே சென்ற அவரது காதலர் கின் காய் (30) ஒற்றைக் காலால் மண்டியிட்டு ஒரு வைர மோதிரத்தை எடுத்து ஹே சி-யிடம் நீட்டி திருமண பந்தத்துக்கு அனுமதி கோரினார். நெகிழ்ந்து போனார் ஹே சி. கின்னின் காதல் பரிசை ஏற்றுக் கொண்டார். கின் காயும் நீச்சல் வீரரே. அவர் ரியோ ஒலிம்பிக்ஸில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். கின்னின் காதல் பரிசு குறித்து ஹே சி கூறும்போது, "அவர் என்னிடம் இன்று தனது திருமண எண்ணத்தை தெரிவிப்பார் எ...