RUNNER ...VIJAY MALLAIYAA ..HISTORY
RUNNER ...VIJAY MALLAIYAA ..HISTORY ஆட்டம்... பாட்டம்... கொண்டாட்டம்... ....ஓட்டம் சரிந்த மல்லையாவின் சாம்ராஜ்யம் இன்றைக்கு இந்தியாவே தேடும் ஒரு நபர் என்றால் அது விஜய் மல்லையாதான். ஏறக்குறைய ரூ.7,000 கோடி கடனை வாங்கி விட்டு, அதை திருப்பித் தராமலே பிரிட்டனுக்கு ஓடிவிட்டார் மல்லையா. மீண்டும் அவரை இந்தியாவுக்கு அழைத்து வந்து, கடன் தொகையை வசூலிக்க வேண்டும் என்று கதறுகின்றனர் அவருக்கு கடன் தந்த வங்கி அதிகாரிகள். யார் இந்த விஜய் மல்லையா? இவருக்கு அறிமுகம் தேவையில்லை. கிங்ஃபிஷர் என்கிற ஒற்றை வார்த்தை போதும், இவரைப் பற்றி எடுத்துச் சொல்ல. ஒரு உத்தம தந்தை தனது தொழிலை ஆலமரமாக வளர்த்தெடுத்து தன் மகனுக்குத் தர, அதை தன்னுடைய பல இமாலயத் தவறுகளால் வெட்டி வீழ்த்திய ஊதாரியின் கதைதான் விஜய் மல்லையாவினுடையது. இந்த உத்தம வில்லனின் கதையைக் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம். டிசம்பர் 18, 1955 அன்று கொல்கத்தாவில் விட்டல் மல்லையா, லலிதா ராமையாவுக்கு மகனாகப் பிறந்தார். சில்வர் ஸ்பூன் குழந்தையாகப் பிறந்த விஜய் மல்லையாவின் தந்தை விட்டல் மல்லையா, கொல்கத்தா பிரசிடென்சி கல்லூரியில் பட்டம் படித்த...