DUSSEHRA CELEBRATION , KULASEKARAPATNAM
DUSSEHRA CELEBRATION , KULASEKARAPATNAM தசரா பண்டிகை, குலசேகரபட்டினம் - நவராத்திரி ஸ்பெஷல் தசரா பண்டிகைக்கு பேர் போனது மைசூரும், வடநாடும்தான். நம்ம தமிழ்நாட்டுல நவராத்திரி விழாவை கொண்டாடினாலும் வெறும் கொலு வைக்குறதோட சரி, அதுவும் சிலர் மட்டும்தான் வைக்குறாங்க. நம்மை பொறுத்தவரை சரஸ்வதி பூஜையும், விஜயதசமியும் கொண்டாடுவதோட நம்ம வேலை முடிஞ்சது. ஆனா, நம்ம தூத்துக்குடி மாவட்டத்துல, திருச்செந்தூரிலிருந்து கன்னியாகுமரி போகும் பாதையில் இருக்கு குலசேகரன்பட்டினம்ன்ற ஊர். இயற்கையாவே அமைந்த துறைமுகக் கரையில் கடல் அலை தாலாட்டும் முகத்துவாரத்தில்- ஞான மூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் சுயம்பு வடிவாய் -சிவசக்தி சமேதராய் குடிகொண்டிருக்கிறாள். இங்கதான் தசரா பண்டிகையை வடநாட்டுல போல ரொம்ப கோலாகலமா கொண்டாடுறாங்க. உலகத்தின் பல்வேறு இடத்திலிருந்து இங்கு வந்து வேஷம் போட்டு, பிச்சை எடுத்து, அதை கோவிலில் செலுத்துவதை ஒரு பிரார்த்தனையாவே செஞ்சுக்கிட்டு வர்றாங்க. இந்த விழா பத்து நாள் கொண்டாட்டமா கொண்டாடப்படுது. விரதம் தொடங்கும் முதல் நாள்ல குலசை முத்தராம்மன் ஆலயத்திற்கு வரும...