Posts

Showing posts with the label COMMUNIST

NANMARAN ,EX-MLA OF COMMUNIST LIVED IN POVERTY

Image
  NANMARAN ,EX-MLA OF  COMMUNIST LIVED IN POVERTY கம்யூனிஸ்ட் தியாகி மேடைக்கலைவாணர் நன்மாறன் Ex. எம்எல்ஏ.  சட்ட மன்ற உறுப்பினராக இருந்த காலத்தில்  ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க நன்மாறன்  அவர்கள் மதுரையிலிருந்து  பேருந்தில் பயணம் செய்து திண்டுக்கல் வந்து கொண்டிருந்தார். . நிகழ்ச்சி துவங்கும்  நேரமாகி விட்டதாலும், நிகழ்ச்சி நடைபெறுமிடம்  ஸ்டேட் வங்கியின் அருகில் என்பதாலும், பேருந்து  நிலையத்துக்கு செல்லாமல் ஸ்டேட் வங்கி பக்கத்திலிருக்கும் நிறுத்தத்தில் அவரை இறங்கச் சொல்லியிருந்தோம் ,   முகம் கழுவவும், இயற்கை உபாதையை சரிப்படுத்தவும்  ,நிகழ்ச்சி நடக்கும் இடத்தில்   வசதி இல்லாததால் , அருகிலுள்ள நான்பணி செய்யும் வங்கிக்கு அவரை அழைத்துச்  சென்றேன். இரவு நேரமாதலால் முன்புறம் பூட்டியிருந்தது. ஆயுதக்காவலரை அழைத்து திறக்கச் சொல்லி தோழரை உள்ளே  அழைத்துச் சென்றேன் . ஒரு அதிகாரி மட்டும் பணியிலிருந்தார் .  வேட்டியை மடித்துக் கொண்டு  முகம் கழுவ உள்ளே சென்று அவர் திரும்புவதற்குள் அந்த அதிகாரியும் காவலரும் வந்தவர் யாரெ...

V.P.CHINTHAN , MARXIST COMMUNIST BORN 1918 OCTOBER 10 -MAY 8,1987

Image
V.P.CHINTHAN , MARXIST COMMUNIST  BORN 1918 OCTOBER 10 -MAY 8,1987 ..வி. பி. சிந்தன் (V. P. Chinthan) (பிறப்பு: சிண்டன் 10 அக்டோபர் 1918 - 8 மே - 1987) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி, தொழிற்சங்கவாதி, இந்திய விடுதலைப் போராட்ட வீரர், தமிழ்நாடு சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினரும் ஆவார்.வாழ்கை இவர் 1918 அக்டோபர் 10 அன்று சென்னை மாகாணம், மலபார் மாவட்டத்தின், இலையாவூர் கிராமத்தில் செரியம்மா, சாந்துநாயர் இணையருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார். இவரது அக்காள் தேவகியும், அண்ணனும், அண்ணியும் இந்திய தேசிய காங்கிரசில் இணைந்து இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சித்தனும் அவர்களைப் பின்தொடர்ந்து காந்தியியன் அழைப்பே ஏற்று கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டு ஆறுமாதம் கடுங்காவல் தண்டனையைப் பெற்றார். பொதுவுடமை இயக்கத்தில் 1934இல் காங்கிரசு சோசலிசக் கட்சி தொடங்கப்பட்டபோது இவர் அதில் இணைந்து மலபார் பகுதியில் இடதுசாரி இயக்கத்தவர்களுடன் இணைந்து பணியாற்றினார். போர் எதிர்ப்பு பரப்புரையில் ஈடுபட்டதற்காக சித்தன் 1939இல் இரண்டு ஆண்டுகள் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். விடுதலைக்குப் பிறகு ...

NALLA KANNU ,COMMUNIST , FREEDOM FIGHTER BRIBELESS POLITICIAN BORN 1925 DECEMBER 25

Image
NALLA KANNU ,COMMUNIST , FREEDOM FIGHTER ,BRIBELESS POLITICIAN  BORN 1925 DECEMBER 25 ஸ்ரீ வைகுண்டத்தில் 10 பேரைக் கொண்ட விவசாயக் குடும்பத்தில் மூன்றாவது குழந்தையாகப் பிறந்தவர் (26.12.1925) நல்லகண்ணு. அப்பா ராமசாமி அழுத்தமான வைணவ பக்தர். அப்பா வழியில் சைவ உணவுக்கு மட்டுமே பழக்கப்பட்டு வளர்ந்த நல்லகண்ணு, 1948 - 49-களில் தலைமறைவாக இருந்த காலகட்டத்தில் மக்கள் கொடுக்கிற எந்த உணவாகினும் சாப்பிடத் தொடங்கினார். பின்னாளில் மீன் பிரியராக மாறிவிட்டார்! ஸ்ரீ வைகுண்டம் கார்னேசன் (இன்றைய கேஜிஎஸ்) பள்ளியில் படித்தவர், திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் புதுமுக வகுப்பில் சேர்ந்தார். இளம் வயதிலேயே சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர் நல்லகண்ணு. ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தின்போது கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்டார். 1943-ல் கம்யூனிஸ்ட் இயக்கம் அவரை அணைத்துக்கொண்டது. எடுத்த எடுப்பிலேயே விவசாயிகள் போராட்டத்தில் இறங்கிவிட்டார். ஆயுதப் போராட்டம்தான் புரட்சியைக் கொணர முடியும் என்று கருதிச் செயல்பட்ட காலம் அது. 1949, டிசம்பர் 20 அன்று தோழர் ஒருவரின் வீட்டில் தலைமறைவாகப் பதுங்கியி...