FIRST APPROVAL OF CHRISTIONITY BY CONSTANTINE 272 FEBRUARY 27 - 337 MAY 22
FIRST APPROVAL OF CHRISTIONITY BY CONSTANTINE 272 FEBRUARY 27 - 337 MAY 22 .கொஞ்சம் கிறிஸ்தவ மதத்தின் உண்மையான ஆரம்பம், தன்மை பற்றி பார்க்கலாம். ரோமானிய மக்களின் முக்கிய தொழில் போர்வீரனாக இருப்பது. போரில் உயிர் துறக்க அஞ்சாத வீரர்கள். இந்த தன்மைக்கு முக்கிய காரணம் அவர்கள் அனைவருக்கும் தனி கடவுள் உண்டு. இந்த கடவுள்கள் அவர்களை போரில் காப்பது மட்டும் இல்லாமல், ஒருவேளை இறந்தாலும் சொர்க்கம் கொண்டு சேர்ப்பார்கள். இந்த வகையான தெய்வங்கள் ஓசிரிஸ், ஐசிஸ், ஹெராக்ளீஸ், தோர், மித்ராஸ் என்று அநேகம் உண்டு. இவர்களை சாதாரணமாக வழிபட முடியாது. ரகசிய வழிமுறைகளை படிப்படியாக கற்க வேண்டும். அதற்கான பரிட்சைகளும் உண்டு. இதுதான் பின்னாளில் ஞான ஸ்நானம் ஆனது. இந்த மதங்களில் ஈடுபட்ட படைவீரர்கள் மேற்க்கண்ட தெய்வங்கள் மீதுள்ள அசாத்திய நம்பிக்கையால் தங்கள் உயிரைப்பற்றி கவலைப்படாமல் சண்டையிட்டனர். ரோமானிய சாம்ராஜ்யம் வேகமாக விரிவடைந்தது. இதனால் ரோமானிய செனட்டர்கள் இந்த மதங்களை பின்பற்றி வளர்த்து வந்தனர். ஆனால் போர் இல்லாமல் சும்மா இருக்கும் காலங்களில் படை வீரர்கள் நமது டாஸ்மாக் குடிமகன்கள் பாரில்...