Thursday, 6 August 2020

FIRST APPROVAL OF CHRISTIONITY BY CONSTANTINE 272 FEBRUARY 27 - 337 MAY 22




FIRST APPROVAL OF CHRISTIONITY BY CONSTANTINE 272 FEBRUARY 27 - 337 MAY 22




.கொஞ்சம் கிறிஸ்தவ மதத்தின் உண்மையான ஆரம்பம், தன்மை பற்றி பார்க்கலாம். ரோமானிய மக்களின் முக்கிய தொழில் போர்வீரனாக இருப்பது. போரில் உயிர் துறக்க அஞ்சாத வீரர்கள். இந்த தன்மைக்கு முக்கிய காரணம் அவர்கள் அனைவருக்கும் தனி கடவுள் உண்டு. இந்த கடவுள்கள் அவர்களை போரில் காப்பது மட்டும் இல்லாமல், ஒருவேளை இறந்தாலும் சொர்க்கம் கொண்டு சேர்ப்பார்கள். இந்த வகையான தெய்வங்கள் ஓசிரிஸ், ஐசிஸ், ஹெராக்ளீஸ், தோர், மித்ராஸ் என்று அநேகம் உண்டு.

இவர்களை சாதாரணமாக வழிபட முடியாது. ரகசிய வழிமுறைகளை படிப்படியாக கற்க வேண்டும். அதற்கான பரிட்சைகளும் உண்டு. இதுதான் பின்னாளில் ஞான ஸ்நானம் ஆனது. இந்த மதங்களில் ஈடுபட்ட படைவீரர்கள் மேற்க்கண்ட தெய்வங்கள் மீதுள்ள அசாத்திய நம்பிக்கையால் தங்கள் உயிரைப்பற்றி கவலைப்படாமல் சண்டையிட்டனர். ரோமானிய சாம்ராஜ்யம் வேகமாக விரிவடைந்தது. இதனால் ரோமானிய செனட்டர்கள் இந்த மதங்களை பின்பற்றி வளர்த்து வந்தனர்.

ஆனால் போர் இல்லாமல் சும்மா இருக்கும் காலங்களில் படை வீரர்கள் நமது டாஸ்மாக் குடிமகன்கள் பாரில், நான்காம் ரவுண்டுக்கு பிறகு, திமுக அதிமுக என்று ஒரண்டை இழுத்து கட்டி உருளுவது போல, தங்கள் தெய்வங்களை வைத்து சண்டைபோட்டனர். இந்த சண்டைகள் சிலசமயம் கொலையில் கூட முடிந்தன. அப்போது செனட் முன்பு கொலையான குழு முறையிடும். செனட் உறுப்பினர்களும் வேறு வேறு மதத்தை ஆதரித்தனர். இதனால் முட்டுசந்தில் நடந்த பிரச்னைகள் பல நேரங்களில் செனட் சபையையே முட்டு சந்தாக மாற்றின.



இதை எல்லாம் பார்த்து சகிக்க முடியாமல் “ஒரே மதம் வரவில்லை என்றால் இவர்கள் ஆளாளுக்கு அடித்துக்கொண்டு சாவார்கள்” என்று ஒரு அரசர் முடிவெடுத்தார். அவர் முதலாம் காண்ஸ்டான்டின்.

மேலும் ஆதி கிறிஸ்தவர்கள் ரோமானிய அடிமைகளாக இருந்தனர். இவர்களை மற்ற யூதர்களிடம் இருந்து பிரித்தது “மெஸியா ஏசுதான். அவர் வந்துவிட்டார். மீண்டும் வந்து இஸ்ரவேலின் எதிரிகளை அழிப்பார்” என்ற நம்பிக்கைதான். ஆள்பவர்களிடம் இப்படி பேசினால் வாயிலேயே குத்து விழுவது உறுதி. அப்படித்தான் ஆதி கிறிஸ்தவர்கள் பல விதங்களில் அழிக்கப்பட்டனர். இது போதாது என்று பவுல் வேறு கிறிஸ்தவ மக்களை “மெஸியா வந்துவிட்டார்! ரத்தம் போன்ற சிவப்பு ஆடை அணிந்துள்ளார்” என்றெல்லாம் சொல்லி உசுப்பேத்தினார்.

இங்கே இன்னும் விசேஷம் என்னவென்றால், இப்படி பேசிய பவுல் பத்திரமாக பதுமத்தீவு என்னும் கிரேக்க பகுதியில் இருந்தார். ஆனால் இதை எல்லாம் ரோமின் தெருக்களில் பிரசாரம் செய்த பீட்டர் தலைகீழாக சிலுவையில் அறைந்து ரோமானியர்களால் கொல்லப்பட்டார். இதன் விளைவாக கிறிஸ்தவ மதம் மொத்தமாக அழிந்திருக்க வேண்டும்.

ஆனால் கான்ஸ்டாண்டின் “இந்த மதம் புதிதாக உள்ளது, ஏற்கனவே யூதர்களாலும் ஒப்புகொள்ள படாத நிலை. இன்னொரு பக்கம் ஓவராக பேசி ரோமாநியர்களையும் பகைத்துக்கொண்ட நிலை. இந்த மதத்தை தனது தேவைக்கு ஏற்றவாறு வளைக்கலாம்” என்று நினைத்தார். பீட்டர் இல்லாத காரணத்தால் ஆதி கிறிஸ்தவர்களின் முக்கிய தலைவர் பவுல்தான். அரசு ஆதரவு அளிக்க முன்வந்தால், எதை வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ள தயாராக இருந்தார் பவுல். முக்கியமாக இரண்டு மாற்றங்களை செய்ய சொன்னார் கான்ஸ்டாண்டின்.


மாற்றம் #1: “யூதர்களின் எதிரிகளை அழிக்கும் மெஸியா” என்பதை “தன்னை ஒப்புக்கொள்ளாத பாவிகளை அழிப்பவர்” என்று மாற்ற வேண்டும்.

மாற்றம் #2: யூதர்களின் முக்கிய சடங்கான விருத்த சேதனத்தை (சுண்ணத்) கட்டாயமானது என்று சொல்லக்கூடாது.

பவுல் இரண்டு மாற்றங்களுக்கும் பலமாக தலையாட்டினார். “முன்தோலை வெட்ட வேண்டும் என்று இறைவன் விரும்பினால், நம்மை முன் தோல் இல்லாமல் படைத்தது இருக்க மாட்டாரா?” என்று கேட்டு, இரண்டாவது மாற்றத்தை செய்தார். இந்த கட்டிங் வேலைக்கு பயந்து கிறிஸ்தவர்களாக மாறாமல் இருந்த பலரை மதம் மாற்ற வசதியாக இருந்தது. பொஆ 313ல் ரோமானிய அரசு முதன்முதலாக கிறிஸ்தவர்களை சகித்துக்கொள்ளும் பிரகடனம் ஒன்றை வெளியிட்டது. இந்த பிரகடனத்தின் படி, “இனிமேல் ரோமானியர்கள் ஆட்சியில் இருக்கும் எந்த பகுதிகளிலும் கிறிஸ்தவர்களை துன்புறுத்தக்கூடாது” என்று முடிவெடுத்தனர். மேலும் அரசாங்கத்தால் ஒப்புக்கொள்ளப்பட்ட கிறிஸ்தவ மதம் என்று ஒன்றை உருவாக்க முயன்றனர். ஆனால் இங்கேயும் திரித்துவ கொள்கையில் பிரச்சனை உருவானது.

அரியநிஸம் (Arianism) எனும் கொள்கைப்படி பல கிறிஸ்தவர்கள் “இயேசு வேறு பிதாவான ஆண்டவர் வேறு” என்ற நம்பிக்கையை பின்பற்றினர். இதற்கும் பின்னாளில் வந்த ஆரியன் பொய்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. இது அரியஸ் எனும் அலெக்ஸாண்ட்ரியா பாதிரி ஒருவர் பெயரால் “அரியன்” என்ற வார்த்தை. இயேசு எந்த இடத்திலும் நேரடியாக “நானும் எனது பிதாவும் ஒன்று” என்று சொல்லவே இல்லை. பல கிறிஸ்தவர்கள் இன்றும் அப்படி ஒரு வாசகம் இருப்பதாக சொல்வது முழு பொய்.

“என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்” என்று ஜான் 6:44 வசனமும், “என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.” என்ற ஜான் 14:6 வசனமும் தான் உள்ளது. இந்த இரண்டு வசனங்களை வைத்துகொண்டு இருவரும் ஒருவர் என உருவான ஒரு நம்பிக்கைதான் திரித்துவம். ஆனால் இதை ஒப்புக்கொள்ள எல்லா கிறிஸ்தவர்களும் தாயாராக இல்லை. இந்த கொள்கை கிறிஸ்தவத்தை ரோமானிய தேசிய மதமாக மாற்ற விரும்பியவர்களுக்கு மிக முக்கியம். காரணம், இப்படி இல்லை என்றால், யார் வேண்டுமானாலும் நேரடியாக இறைவனை அணுக முடியும். அப்படி அணுகினால் மதத்தின் பெயரால் மக்களை கட்டுப்படுத்த முடியாது.

அதற்கு மாறாக திருச்சபை மூலம் மட்டுமே ஞான ஸ்நானம் செய்ய முடியும், அப்படி ஞான ஸ்நானம் செய்யாதவர்கள் நரகத்தை அடைவார்கள் என்று சொல்லவேண்டும். இதற்காக எந்த பீட்டரை கொடூரமாக கொன்றார்களோ அதே பீட்டரை கத்தோலிக்க திருச்சபையின் முதல் போப் என்று ரோமானிய அரசு அறிவித்தது. காரணம், ஞானஸ்நான உரிமை பீட்டருக்கு அப்போஸ்தலர் என்கிற முறையில் இருந்தது. இந்த திருச்சபை நிசியா நகரத்தில் மூன்று முறை கூடி, வோட்டெடுப்பு மூலம் எந்த எந்த கருத்துகள் கிறிஸ்தவத்துக்குள் இருக்கலாம் என்று முடிவு செய்தது. இந்த கருத்துகள் ஆன்மீக முன்னேற்றத்தை உருவாக்க அல்ல, அரசியல்வாதிகளை திருப்தி செய்ய உருவானவை என்று உங்களுக்கே புரிந்திருக்கும்.

இன்று புதிய ஏற்பாட்டில் உள்ள நான்கு சுவிசேஷங்கள் (ஜான், மார்க், மத்தேயு, லூக்) பல மாற்றங்களுக்கு உள்ளாகி, கடைசியாக ரோமானிய அரசியலுக்கு எப்படியெல்லாம் தேவையோ, அப்படி உருவானது. மேலும், யூதர்களை பகைத்து கொள்ளாமல் இருக்க அவர்களது பழைய ஏற்பாடும் சேர்க்கப்பட்டது. இதற்கெல்லாம் ஆதார புருஷரான பவுல் எழுதிய கடிதங்கள் “அப்போஸ்தலர்களின் நடபாடு” என்ற பெயரிலும், நேரடியாக அவர் கிறிஸ்தவர்களுக்கு எழுதிய கடிதங்கள் “வெளிப்பட்ட சுவிசேஷம்” என்ற பெயரிலும் சேர்க்கப்பட்டது.

இயேசு என்று ஒருவர் இருந்தது உண்மை என்றே வைத்துகொண்டாலும், ஜோஷுவா என்னும் அந்த யூத மதபோதகரின் நோக்கத்தில் இருந்து கிறிஸ்தவ மதம் நெடுந்தூரம் அதன் ஆரம்பப் புள்ளியிலேயே விலகிவிட்டது. இன்னும் சொல்லப் போனால், இறைவனுக்கு அடிபணிவதை விட்டு, அதற்கு நேர் எதிராக, ரோமானியர்களுக்கு அடிபணிய வைக்கும் கருவியாக மாறியது. முழுக்க அரசியல் காரணங்களுக்காக, அரசியல் முறையில் உருவாக்கப்பட்டு, அரசியலாகவே நடத்தப்படுவது தான் கிறிஸ்தவ மதத்தின் உண்மையான தன்மை.

இதனால் அவர்கள் தங்கள் அரசியல், மக்கள் பலத்தை பெருக்க, என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். இன்றும் ஆன்மீகத்துக்கு துளியும் சம்மந்தம் இல்லாமல், எண்ணிக்கையை பெருக்கும் விதமாக மட்டுமே கிறிஸ்தவம் செயல்படுவதை பார்க்கிறோம். இன்னொரு தருணத்தில் இந்த மதமாற்ற அரசியல் எப்படி கிறிஸ்தவ அமைப்புகளால் வளர்க்கப்பட்டது என்று பார்க்கலாம்.


-ராகவேந்திரன்

No comments:

Post a Comment