Friday 28 August 2020

INDIAN MILITARY - KOORKAA REGIMENT


INDIAN MILITARY - KOORKAA REGIMENT


தோல்வி காணாத இந்தியாவின் கூர்க்கா படை....
1814-1816 ஆகிய ஆண்டுகளில் ஆங்கிலேயர்களுக்கும், நேபாளத்திற்கும் இடையே போர் வெடித்தது. அப்போது இந்த கூர்க்கா ரெஜிமென்ட் மிகச் சிறப்பாக பணியாற்றி பல தடைகளை உடைத்தெறிந்து வேகமான துடிப்புடன் ஆங்கிலேயர்களுக்கு வெற்றி தேடிக் கொடுத்தது.
1815ம் ஆண்டு ஏப்ரல் 25ம் தேதி 1/3 கோர்க்கா ரைபிள்ஸ் என்று அழைக்கப்படும் கூர்க்கா படைப் பிரிவு உருவாக்கப்பட்டது.
இவ் கூர்க்கா இனத்தவருக்கு இயல்பாகவே போரிடும் ஆற்றலும் குறுகிய நேரத்தில் செயல்படும் திறமையும் இவர்களிடத்தில் சற்று அதிகம் காணப்பட்டது என்பது மறுக்க முடியாத உண்மை
ஆரம்பத்தில் கூர்க்கா இனத்தவரை சாதாரண போலீஸ் போலத்தான் ஆங்கிலேயர்கள் நடத்தி வந்தனர் பின்னர்தான் அவர்களின் திறமை கண்டு இராணுவத்தில் இணைத்து படைப் பிரிவையும் உருவாக்கினர்.
கூர்க்கா (Gurkha) என்பது நேபாளத்தில் உள்ள ஒருவகை மக்களைக் குறிக்கும் சொல். இந்து சமயச் சித்தரான கோரக்நாத் என்ற வார்த்தையிலிருந்து தோன்றியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. மேலும் இமயமலையின் ஒரு பகுதியான கோர்க்கா பிரதேசத்தில் வாழும் மக்கள் ஆதலால் இந்தப் பெயர் பெற்றிருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. இமயமலையில் வாழும் இவர்கள் எந்த கால நிலையும் எளிதாக சாமாளிக்கவும் விவேகமானவர்களாகவும் காணப்பட்டனர்.
ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியால் இந்தியாவில் அமைக்கப்பட்ட ராணுவப்படையில் சேர்த்துக்கொள்ளப்பட்ட கூர்க்காக்கள், அதன்பின் வந்த பிரிட்டிஷ் ராஜியத்திலும் படைபிரிவில் இடம்பெற்றிருந்தனர். இவர்கள் இந்திய சுதந்திரத்திற்கு பின்னர் பிரிட்டிஷ் ராணுவத்திலும் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். பிரித்தானிய அரசக் குடும்பத்திற்கு விசுவாசமாக நடந்து கொண்டனர்.
கூர்க்காக்கள் பொதுவாக குக்குரி என்னும் நீளமான வளைந்த கத்தியை எப்பொழுதும் தங்களுடனே வைத்துக்கொள்ளும் பழக்கம் உடையவர்கள்.எதிரிப் படை அருகில் வந்தவுடன் கண் இமைக்கும் நேரத்தில் தமது கத்தியால் அவர்களை தாக்கும் முறையை கொண்டவர்கள்.
அதாவது கனரக துப்பாக்கிகள்(AK)
அருகில் இருப்பவரை குறி பார்த்து தாக்க கடினம் ஆகையால், எதிரிப் படை குறி பார்க்கும் முன் இவர்களின் கத்தி அவர்களை குறி பார்த்து இரத்தம் வழிய வைத்து இருக்கும். அத்தகைய வேகம் கொண்டவர்கள் இந்த கூர்க்காக்கள்.
தமிழகத்தின் சில இடங்களில் இரவுநேரக் காவல் பணியிலும் ஈடுபட்டு அதன்மூலம் வருமானம் ஈட்டிப் பிழைப்பு நடத்தி வருகின்றனர்.
1880ம் ஆண்டு ஏப்ரல் 19ம் தேதி நடந்த 2வது ஆப்கன் போரின்போதும் கூர்க்கா படைப் பிரிவு சிறப்பாக போரிட்டு உலக நாடுகளின் ஆச்சரியத்தை வெளிக்கொண்டு வந்தது.
இந்தப் பிரிவின் முதல் இந்திய கமாண்டிங் அதிகாரியாக இருந்தவர் லெப்டினென்ட் கர்னல் பி.ஓ. டுன் ஆவார்.
கூர்க்கா பிரிவைச் சேர்ந்த வீரர்கள் சிறந்த கால்பந்து ஆடும் திறன் பெற்றிருந்தவர்கள். எனவே இவர்கள் நாட்டின் முன்னணி கால்பந்து அணிகளான கல்கத்தா, மோகன்பகான், ஈஸ்ட் பெங்கால் அணிகளில் இடம்பெற்று அவற்றிற்கும் பெருமை தேடித் தந்தனர்.
பல்வேறு பணிகளிலும், போர்களிலும் கலந்து கொண்ட பெருமை கொண்ட கூர்க்கா படைப் பிரிவு, காஷ்மீர் பள்ளத்தாக்கிலும் சிறப்பாக பணியாற்றியுள்ளது. அதேபோல ருவாண்டாவுக்கு அனுப்பப்பட்ட ஐ.நா. அமைதிப் படையிலும் இடம் பெற்று நமது நாட்டுக்கு நல்ல பெயர் தேடித் தந்துள்ளது.
இந்திய ராணுவத்தில் 40 கூர்க்கா பட்டாலியன்கள் உள்ளன.
கூர்க்கா படைகள் இந்தியாவின் அணைத்து ராணுவ நடவடிக்கைகளிலும், போர்களிலும், அமைதி படையிலும் பங்குபெற்று , உயிர் தியாகம் செய்திருக்கிறார்கள், நாம் மிகவும் போற்றும் இந்திய ராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் மனக் ஷா கூர்க்கா படைப்பிரிவை சேர்ந்தவர்தான். ஒருமுறை அவர் கூறுகையில்
`ஒருவன் சாவின்மீது பயமில்லை என்று சொல்கிறான் என்றால் ஒன்று அவன் பொய் சொல்கிறான் இல்லை அவன் கூர்காவாக இருப்பான்' என்றார்.
1962 சீனாவுடனான போரில் கூர்க்கா படை தான் சீனர்களுக்கு பெரும் சேதங்களை விளைவித்தது. உலக வல்லரசுகளின் கண் இந்தியாவின் பகாகம் உற்று நோக்க காரணமானது. பல சவால்களையும் எதிர் கொண்டு நவீன ஆயுதங்களை தோற்கடித்து இந்தியா வெற்றி பெற உறுதுணையாக இருந்தது. 20,000 அடி உயரத்தில் சியாச்சின் பனிமலையில் 1987ல் நடைபெற்ற போரில் பாக்கிஸ்தான் ராணுவத்திற்கு பெரும் சேதத்தை விளைவித்தது கூர்க்கா படை இதில் 13 கூர்க்கா வீரர்கள் உயிர்த்தியாகம் செய்தனர், 23 வீரர்கள் காயமுற்றனர். இந்த போரில் சிறப்பாக செயல்பட்டதற்காக 3 மகாவீர் சக்ரா விருதும், 5 வீர் சக்ரா விருதும் வழங்கப்பட்டது.
இந்தியா எனும் நாடு ஆசிய கண்டத்தில் தமது ஆதிக்கத்தையும் இராணுவ பலத்தையும் வெளிக் கொண்டு வர சந்தர்ப்பம் தேடிய வேளை அயல் நாடாகிய இலங்கையில் தமிழ் போராட்ட குழுக்கள் தோன்றின.சிறப்பு பயிற்சி பெற்ற கூர்க்கா படை களமிறங்கியது.இவ் கூர்க்கா படைகளும் சில ரெஜிமெண்ட் காலாற்படை பிரிவுகளும் அனுப்பி வைக்கப் பட்டது.அதாவது ஏனைய நாடுகளுக்கு தமது படை பலத்தை முனைப்பாக காட்டுவதற்கு இலங்கை அந்த நேரத்தில் ஓர் தளமாக காணப்பட்டது.
இந்தியாவின் கூர்க்கா படையணி பலநாடுகளுடன் போரிட்டு பல வெற்றிகளை குவித்திருந்தாலும் ஈழத்தில் தமிழ் வீரத்தில் சிக்குண்டனர்.
.
.

No comments:

Post a Comment