Posts

Showing posts with the label MILITARY - KOORKAA

INDIAN MILITARY - KOORKAA REGIMENT

Image
INDIAN MILITARY - KOORKAA REGIMENT தோல்வி காணாத இந்தியாவின் கூர்க்கா படை.... 1814-1816 ஆகிய ஆண்டுகளில் ஆங்கிலேயர்களுக்கும், நேபாளத்திற்கும் இடையே போர் வெடித்தது. அப்போது இந்த கூர்க்கா ரெஜிமென்ட் மிகச் சிறப்பாக பணியாற்றி பல தடைகளை உடைத்தெறிந்து வேகமான துடிப்புடன் ஆங்கிலேயர்களுக்கு வெற்றி தேடிக் கொடுத்தது. 1815ம் ஆண்டு ஏப்ரல் 25ம் தேதி 1/3 கோர்க்கா ரைபிள்ஸ் என்று அழைக்கப்படும் கூர்க்கா படைப் பிரிவு உருவாக்கப்பட்டது. இவ் கூர்க்கா இனத்தவருக்கு இயல்பாகவே போரிடும் ஆற்றலும் குறுகிய நேரத்தில் செயல்படும் திறமையும் இவர்களிடத்தில் சற்று அதிகம் காணப்பட்டது என்பது மறுக்க முடியாத உண்மை ஆரம்பத்தில் கூர்க்கா இனத்தவரை சாதாரண போலீஸ் போலத்தான் ஆங்கிலேயர்கள் நடத்தி வந்தனர் பின்னர்தான் அவர்களின் திறமை கண்டு இராணுவத்தில் இணைத்து படைப் பிரிவையும் உருவாக்கினர். கூர்க்கா (Gurkha) என்பது நேபாளத்தில் உள்ள ஒருவகை மக்களைக் குறிக்கும் சொல். இந்து சமயச் சித்தரான கோரக்நாத் என்ற வார்த்தையிலிருந்து தோன்றியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. மேலும் இமயமலையின் ஒரு பகுதியான கோர்க்கா பிரதேசத்தில் வாழும் ...