VAARIYAAR -VARIYAR
VAARIYAAR -VARIYAR உடல் குலுங்க குலுங்க சிரித்தார் டிஎம்எஸ் : "என்னய்யா சொல்கிறீர்கள் ? வேடிக்கையாக இருக்கிறதே ! நான் பாடப் போகும் இந்த பாடல் வரிகளுக்கு என்ன அர்த்தம் என்பது இங்கே இருக்கும் எவருக்குமே தெரியாதா ?" கையில் பாடல் வரிகள் அடங்கிய காகிதத்தை வைத்துக்கொண்டு மைக் முன் நின்றபடி டிஎம்எஸ் இப்படி கேட்க, ஒலிப்பதிவுக் கூடத்தில் இருந்த அத்தனை பேரும் அவரது கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் மௌனமாக இருந்தார்கள். 'அருணகிரிநாதர்' பட பாடல் பதிவு நேரம் அது. (1964) சிரிப்பதை நிறுத்திய டிஎம்எஸ்ஸின் குரல் கொஞ்சம் கோபத்தோடு உயர்ந்தது. "அர்த்தம் சொல்லுங்கள் ஐயா, அது தெரியாவிட்டால் நான் எப்படி உணர்வுகளோடு இதை பாட முடியும் ? அந்தப் பாடலை கேட்பவர்கள்தான் எப்படி அதை முழுமையாக ரசிக்க முடியும் ?" சுற்றி இருந்தவர்களின் மௌனம் தொடர்ந்தது. மீண்டும் ஒரு முறை தன் கையிலிருந்த அந்த பாடல் வரிகளை வாசித்துப் பார்த்தார் டிஎம்எஸ். "முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்...” திரும்ப திரும்ப வாசித்துப் பார்க்கிறார் டி.எம்.எஸ். அதன் ...