NO CORONO COUNTRY IN INDIA - LAKSHADEEP
NO CORONO COUNTRY IN INDIA - LAKSHADWEEP .கேரளாவை நம்பியே பிழைப்பு; வெளிநாட்டுப் பயணிகள் வருகை!’ - கொரோனா சுவடே இல்லாமல் சாதித்த லட்சத்தீவு இந்தியாவின் லட்சத்தீவில் இதுவரை ஒரு கொரோனா தொற்று பாசிட்டிவ் கேஸ் கூட இல்லை. கடுமையான கட்டுப்பாடுகளினால் கொரோனை விரட்டியடித்துள்ளது அந்தக் குட்டித் தீவு. இந்தியாவில் கொரோனா வைரஸால் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால், இந்தியாவைச் சேர்ந்த யூனியன் பிரதேசம் ஒன்றில் இதுவரை ஒரு பாசிட்டிவ் கேஸ் கூட பதிவாகவில்லை. லட்சத் தீவுகள் இந்தியாவில் இருக்கும் யூனியன் பிரதேசங்களில் ஒன்று. கேரளாவிலிருந்து அதிக போக்குவரத்து கொண்ட இது 36 தீவுகளாக அமைந்துள்ளன. அங்கு மொத்தம் 60,000-க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். மீன் பிடித்தல், தேங்காய் உற்பத்தி, சுற்றுலா ஆகியவையே லட்சத்தீவின் முக்கியப் பொருளாதார ஆதாரமாக உள்ளது. அப்படி வெளிநாட்டினர் பலரும் வரும் அந்தத் தீவில் இதுவரை ஒரு கொரோனா கேஸ் கூட கண்டறியப்படவில்லை என்பது பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. கேரளாவிலிருந்து 200- 300 கி.மீ தொலைவில் அமைந்துள...