Posts

Showing posts with the label ஜூலை 10: 1857 SEPOY

ஜூலை 10: 1857 ஆங்கிலேயருக்கு எதிரான சிப்பாய் எழுச்சி சிறப்பு பகிர்வு!

Image
  ஜூலை 10: 1857  ஆங்கிலேயருக்கு எதிரான சிப்பாய் எழுச்சி சிறப்பு பகிர்வு!   ( ஜூனியர் விகடனில் வெளியான 'எனது இந்தியா' தொடரிலிருந்து...) சிப்பாய் எழுச்சி    1806-ம் ஆண்டு ராணுவத்தினரின் அடக்கு முறைக்கு எதிராக வேலூர் கோட்டையில் இந்திய சிப்பாய்கள் தங்கள் எதிர்ப்பு உணர்வைக் காட்டினர். 'வேலூர் சிப்பாய் எழுச்சி’ என்று சிறப்பித்துக் கூறப்படும் இந்த நிகழ்வே இந்திய சுதந்திரப் போரின் ஆரம்ப எழுச்சி. 1806-ல் வேலூர் கோட்டையில் 69-ம் ரெஜிமென்ட்​டைச் சேர்ந்த ஒன்றாவது பட்டாலியனின் ஆறு கம்பெனிகள், ஒன்றாவது ரெஜிமென்ட், இரண்டாவது பட்டாலியனின் மொத்தத் துருப்புகள், 23-ம் ரெஜிமென்ட்​டைச் சேர்ந்தவர்கள் என மொத்தம் 1,500 இந்தியச் சிப்பாய்களும் 370 ஆங்கிலேயர்களும் இருந்தனர். இந்தியர்களுக்கு, வெள்ளையர்களைவிட மிகவும் குறைவான சம்பளம் தரப்பட்டது, தங்களுக்கான உரிய பதவிகள் வழங்காமல் ஒதுக்கிவைத்தது மற்றும் தங்களின் சமய அடையாளங்களை அணியக் கூடாது என்று நிபந்தனை விதித்தது ஆகியவை இந்தியத் துருப்புகளிடம் உள்ளூறக் கோபத்தை உருவாக்கி இருந்தது. இதற்கிடையில், சிப்பாய்கள் ஒவ்வொருவரும் வட்ட வடிவிலான தலைப்பா...