UNITED STATES OF AMERICA GOT FREEDOM FROM ENGLAND 1776 JULY 4
UNITED STATES OF AMERICA GOT FREEDOM FROM ENGLAND 1776 JULY 4 அமேரிக்கா எப்படி வல்லரசாகியது -சுதந்திரம் பெற்ற நாள் 1776 ஜூலை 4 அமெரிக்க ஐக்கிய நாடுகள் என்பது United States of America, USA, US, பொதுவாக யுனைடெட் ஸ்டேட்ஸ் , யு.எஸ். , யு.எஸ்.ஏ, அல்லது அமெரிக்கா என அழைக்கப்படுகிறது. இது ஐம்பது மாநிலங்களும் ஓர் ஐக்கிய மாவட்டமும் கொண்ட ஐக்கிய அரசியல் சட்ட குடியரசு நாடாகும். இந்நாடு வட அமெரிக்கக் கண்டத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் 48 மாநிலங்களும் தலைநகரான வாஷிங்டன் டி.சி.யும் பசிபிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கு இடையே அமைந்துள்ளன. வடக்கே கனடாவும் தெற்கே மெக்சிகோவும் எல்லைகளாக அமைந்துள்ளன. அலாஸ்கா, வட அமெரிக்க கண்டத்தின் வடமேற்கே அமைந்துள்ளது, இது கிழக்கில் கனடாவையும் மேற்கில் ரஷ்யாவையும் கொண்டுள்ளது. ஹவாய் மாநிலம் பசிபிக்கின் மையத்தில் அமைந்திருக்கும் ஒரு தீவுக் கூட்டமாகும். அமெரிக்கா கரீபியன் மற்றும் பசிபிக்கிலும் பல்வேறு பிராந்தியங்கள் மற்றும் தனிமைப் பகுதிகளைக் கொண்டிருக்கிறது. 3.39 மில்லியன் சதுர மைல்கள் (9.83 மில்லியன் சதுர...