Posts

Showing posts with the label RAAGAM

ORU THALAI RAAGAM

Image
  ORU THALAI RAAGAM தமிழ் சினிமாவில் ஒரு புது தடம் பதித்த 'ஒரு தலை ராகம்' ஒருதலைராகம் படம் 1980 ஆம் ஆண்டு தமிழகம் முழுக்க 30 தியேட்டர்களுக்குள்ளாகவே வெளியானது. படத்தின் தயாரிப்பாளரில் இருந்து, இயக்குநர், இசையமைப்பாளர், நடிகர், நடிகைகள் என எல்லோருமே ஏறக்குறைய புதுமுகங்கள். சரி போய்த்தான் பார்ப்போமே என்று அன்று தியேட்டருக்குள் நுழைந்தவர்களுக்குத் தெரியாது, தங்களுக்கு ஒரு புது அனுபவம் கிட்டப்போகிறது என்று. படம் ஆரம்பித்து சில நிமிடங்களிலேயே இது ஒரு புதுமாதிரியான படம் எனப் புரிந்து கொண்டார்கள். அதற்கு நான்காண்டுகளுக்கு முன்பு வெளியான ’16 வயதினிலே’ கொடுத்த அதே புதுமை. ’16 வயதினிலே’ அதுவரை காட்டியிராத கிராமத்தைக் காட்டி இருந்தது என்றால், இதில் சிறுநகரம் சார்ந்த கல்லூரியை முதன்முதலாக தமிழ் சினிமா அச்சு அசலாகப் படம் பிடித்திருந்தது. இந்தப் படம் முதலில் வசீகரித்தது கல்லூரி மாணவர்களை. ’நம்ம காலேஜ அப்படியே எடுத்துருக்காண்டா’ என கூட்டம் கூட்டமாகச் சென்று பார்த்தார்கள். பின்னர் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என எல்லோரையும் தியேட்டர்களுக்கு வரவழைத்தது. திரையிட்ட இடங்களில் எல்லாம் வெற்றி. ப...