Posts

Showing posts with the label DOSTOYEVSKY

FYODOR DOSTOYEVSKY - CRIME AND PUNISHMENT 11 November 1821 - 9 February 1881

Image
FYODOR DOSTOYEVSKY - CRIME AND PUNISHMENT  NOVEMBER 11,1821-1881 FEBRUARY 9 1764ல் அவர் 'குற்றங்களும் தண்டனைகளும்' என்று ஒரு புத்தகம் எழுதினார். அதில்தான் அவர் 'மரண தண்டனை கூடாது' என்ற கருத்தை முன்வைத்தார்.”“ தஸ்தாயெவ்ஸ்கி “ஒருத்தர் தப்பு செய்தால் நாம் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான் பாலு. “அது யாராக இருந்தாலும் முதலில் அது தப்பு என்பதை நாம் தயங்காமல் சொல்ல வேண்டும்.” என்றேன். “தண்டிக்க வேண்டாமா?” என்று கேட்டான் பாலு. “எல்லா சமயமும் தண்டிக்கத் தேவையில்லை. எச்சரித்து அவர்களைத் திருத்த முடிந்தால் எச்சரிக்கலாம். திரும்ப அதே தப்பைச் செய்தால் தண்டிக்கலாம்” என்றார் ஞாநி மாமா. “அதெல்லாம் சின்னத் தப்புக்குச் சரி. ரொம்பப் பெரிய தப்பு செய்தால் என்ன செய்வது?” என்றான் பாலு. “அதற்குத்தான் சட்டம், நீதிமன்றம் எல்லாம் இருக்கிறதே பாலு?” என்றேன். “வீட்டுக்குள் நுழைந்து ஒரு பெண் மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்துகிற நபருக்கு என்ன தண்டனை தருவது? மரண தண்டனைதானே தரவேண்டும்?” என்றான் பாலு. “இல்லை பாலு. அப்புறம் அவனுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்? ஓர் உயிரைக் கொல்ல அவனு...