Posts

Showing posts with the label BRAIN

BRAIN, STRESS, DISORDER,

Image
  BRAIN STRESS DISORDER சிறுவர், சிறுமிகளை வெவ்வேறு விதங்களில் பாதிக்கும் மன அழுத்தம் - ஆய்வு மிகுந்த மன அழுத்தம் ஏற்படுத்தும் நிகழ்வுகள்,சிறுவர்கள் மற்றும் சிறுமிகளின் மூளைகளை வெவ்வேறு வழிகளில் பாதிக்கும் என ஸ்டான்பஃர்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. குறிப்பாக, அதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் மூளையில், இன்சுலா ( insula) என்று அழைக்கப்படும், உணர்ச்சிகள் மற்றும் பிறர் உணர்வுகளைப் புரிந்து கொண்டு பகிர்ந்து கொள்ளும் தன்மை ஆகியவைகளுடன் தொடர்புள்ள ஒரு பகுதி அளவில் சிறியதாக இருந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் மூளையில், இன்சுலாவின் அளவு வழக்கத்தை விடப் பெரிய அளவில் இருந்தது. இந்தத் தகவல், சிறுவர்களை விட, அதிர்ச்சிக்கு பிறகான மன அழுத்தம் ஏற்படுத்தும் சீர்கேடுகளால் (post-traumatic stress disorder) ஏன் சிறுமிகள் கூடுதலாகப் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை விளக்குவதாக அமைந்திருக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு வேதனைமிக்க அல்லது அச்சுறுத்தலான நிகழ்வு ஏற்பட்ட பிறகு, சிறுவர்கள், சிறுமிகளுக்கு இடையில், காணப்...