CHAPPAL STORY
செருப்பு (சிறுகதை) - திக்குவல்லை கமால் இந்தப் பதினொரு வருடகாலமாக அவனுடைய கால்களுக்கும் நிலமகளுக்கும் இடையில் நிலவிவந்த தொடர்பு தற்பொழுது ஒருமணி நேரத்துக்கு முன்பிருந்து அறுந்துவிட்டது. கழுத்தை வளைத்து, கீழே கால்களை ஒருமுறை பார்த்துக்கொண்டான். அழகான செருப்புக்கள்.. பளீரென்று வெள்ளை நிற அடித்தட்டு... அதிலே கறுப்புநிறப் பட்டிகள்...! மாறுதலான சுவாத்தியம், சூழ்நிலைகளைச் சமாளிக்கத்தக்க புதுரக ஆடைகளை அணிந்த வண்ணம் விண்வெளி வீரர்கள் விண்வெளியிலே மிதப்பதுபோல கால்களே நிலத்தில் படாத வண்ணம் அந்த றப்பர் செருப்பின் மென்மைச் சுகானுபவத்தில் நடந்து கொண்டிருந்தான் அவன். பள்ளிவாசலை நெருங்கியதும் அவனது கண்கள் அகலித்து விரிந்து நின்றன. இன்று அங்கு வருடாந்தக் கந்தூரி அல்லவா? அந்தப் பள்ளிவாசல் மின்விளக்கலங்காரத்தால் ஒளிப் பிரவாகம் பெற்றுக் காட்சியளித்ததுபோல அவனது உள்ளமும் வாழ்க்கையிலேயே முதன்முறையாகச் செருப்பெனும் விளக்கு ஏற்றப்பட்டதால் பிரகாசித்துக் கொண்டிருந்தது. அநேகமாகக் கல்யாண விழாக்களுக்குச் செல்வதற்காகத்தான் பலரும் புத்தாடை, புதுக் காலணிகள் அணிந்துகொள்வது வழக்கம். அவனுக்கோ, அதிலும் ஒருபடி ...