NADARS BANNED , REVOLT UPRISING IN TRAVANCORE DISTRICTS
NADARS BANNED , REVOLT UPRISING IN TRAVANCORE DISTRICTS ஒடுக்கப்பட்ட நாடர்கள் தோள் சீலைப் போராட்டம் கேரள மாநிலத்தின் பெரும் பகுதியும் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகள் திருவாங்கூர் சமசுதானத்தின் கீழ் மன்னராட்சியின் கட்டுப்பாட்டில் இருந்தது. அப்போது இந்து நாடாக இருந்தது. அந்த காலகட்டத்தில் சாதீயக் கொடுமைகளால் மக்கள் அதிக அடக்குமுறைக்கு ஆளாகினர். இந்த திருவிதாங்கூர் நாட்டால் தாழ்த்தப்பட்டவர்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட சாணார்[பனையேறி நாடார்], பரவர், ஈழவர், முக்குவர், புலையர் உள்ளிட்ட 18 சாதியைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணிவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. நாடான் என்ற பட்டங்களுக்குரிய நிலக்கிழார் நாடார்களும் இப்பகுதியில் இருந்தனர். இவர்கள் உயர்சாதிகாரர்கள் போல் உயர்வான நிலைமையில் இருந்தனர். நாடான் பெண்கள் மேலாடை அணிந்து கொள்ள முழு உருமை இருந்தது.[1]. இவர்கள் மார்பகத்தை திறந்து போடுவதுதான் உயர் சாதியினருக்குத் தரும் மரியாதை என்று தரம் தாழ்ந்த எண்ணத்தில் திருவாங்கூர் நாடு ஒரு நடைமுறையை வகுத்திருந்தது. இதன்படி 18 சாதிகளை...