KARUNANIDHI AND HIS BAGS OF LIES
KARUNANIDHI AND HIS BAGS OF LIES ..கருணாநிதியும் பொய் மூட்டைகளும் December 23, 2010 By ஈரோடு ஆ.சரவணன் லஞ்சம், ஊழலுக்கு நான் நெருப்பு என தலைப்பிட்டு 2010ம் ஆண்டு நவம்பர் மாதம் 30ந் தேதி முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை அனைத்து ஊடகங்களிலும் டிசம்பர் மாதம் 1ந் தேதி மிகப் பெரிய விளம்பரத்துடன் வெளியாகியுள்ளது. இது ஆண்டின் இறுதியில் மாநில முதல்வர் அடித்த மிகப் பெரிய காமெடி அறிக்கையாகும். அவர் வெளியிட்ட அறிக்கையில் தனது சொத்து பத்துக்களை விலாவாரியாக பட்டியிலிட்டு தான் தவறே செய்யாதவன், தனது உறவுக்காக கூட நான் தவறு செய்யவில்லை என ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். தமிழக முதல்வர் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம் பல வழிகளில் விமர்சனத்திற்கு உட்பட்டுள்ளது. karuna_commedy உண்மையிலேயே தமிழக முதல்வர் ஊழலுக்கு நெருப்பானவரா என்பதை தெளிவுப் படுத்திக் கொள்ள வேண்டும். திமுக ஆட்சிக் காலத்தில் அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் குறுகிய காலக் கட்டத்தில் பொருளாதார ரீதியாக மிகப் பெரிய முன்னேற்றம் அடைந்தது பலரையும் வியப்புக்குள்ளாக்கியது. ஒரு கட்சியின் மாநில பொர...