MARUTHU PANDIAR SERVICE TO CITIZENS - WATER CANAL
MARUTHU PANDIAR SERVICE TO CITIZENS - WATER CANAL தாகம் தீர்த்தவருக்கு மருது பாண்டியர் செய்த மரியாதை... தொல்லியல் எச்சங்கள் சொல்லும் கதை! அருண் சின்னதுரை ஈ.ஜெ.நந்தகுமார் மருது பாண்டியர் கட்டிய கல் மண்டபம் மருது பாண்டியர் கட்டிய கல் மண்டபம் மருது பாண்டியர் கொல்லங்குடி ஊருக்குக் குடிதண்ணீர் ஊரணியை வெட்டித் தந்ததோடு கல்மண்டபமும் கட்டி சிறப்பித்தனர். சிவகங்கை மாவட்டத்தில் நீர்வளம் பெரிதாக இல்லை எனச் சொல்லப்படுகிறது. ஆனால் பொழியும் மழைநீரை கிராமங்கள் தோறும் குளம், கண்மாய்கள் வெட்டி பக்குவமாய் சேமித்து நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கியுள்ளனர். மேலும் கண்மாய் குளங்களைப் பெருமைபடுத்த பல்வேறு கோயில்களும், மடைக்கல்வெட்டுகளும், குளங்களின் சிறப்பு சொல்லும் தூண்கள் மற்றும் கல்வெட்டுகளும் வைக்கப்பட்டுள்ளன. இதற்கு சான்றாகத்தான் பல்வேறு தொல்லியல் எச்சங்களும் கீழடியை போல் பல இடங்களில் கிடைத்து வருகின்றன. மருது பாண்டியர் வெட்டிய ஊரணி மருது பாண்டியர் வெட்டிய ஊரணி இந்நிலையில் மருதிருவர் எனப் போற்றப்படும் மருதுபாண்டியர் வெட்டிய வளமான ஊரணிக்குச் சாட்சியாக கல் மண்டபங்கள் பொலிவாக காட்சியளிக...