SAI PALLAVI ,SOUTH INDIAN ACTRESS BORN 1992 MAY 9
SAI PALLAVI ,SOUTH INDIAN ACTRESS BORN 1992 MAY 9 சாய் பல்லவி செந்தாமரை (Sai Pallavi Senthamarai) என்ற திரைப்பட நடிகை பொதுவாக சாய் பல்லவி என்ற பெயரால் அறியப்படுகிறார் .[1]. 1992 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் நாள் இவர் பிறந்தார். இந்திய நடிகையும் நடனக் கலைஞருமான இவர் தென்னிந்திய திரைப்படங்களில் மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வருகிறார். 2015 ஆம் ஆண்டில் வெளிவந்து மாபெரும் வெற்றிப் படமாக ஓடிய மலையாளத் திரைப்படமான பிரேமம் திரைப்படத்தில் மலர் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பொதுமக்களின் கவனத்தை இவர் ஈர்த்தார். பின்னர் இதைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டில் வெளியான காளி என்ற திரைப்படத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்தார். வருண் தேச்சுடன் இணைந்து பானுமதி என்ற கதாபாத்திரத்தில் காதல் படமான பிடாவில் நடித்ததன் மூலம் 2017 இல் தெலுங்கு திரைப்பட உலகில் அறிமுகமானார். தொலைக்காட்சியில் பிடா திரைப்படம் ஒளிபரப்பப்பட்டபோது தொலைக் காட்சிகளுக்கான தரவரிசையில் ஐந்தாவது முறையாக அதிகபட்ச இலக்கு அளவீட்டுப் புள்ளியை எட்ட இப்படம் காரணமாக இருந்தது [2][3]. சாய் பல்லவி தன்னுடைய தொழில் மூலம் சுகாதாரத்த...