Posts

Showing posts with the label வீடு

வியட்நாம் வீடு சுந்தரம் ஒரு சகாப்தம் - 2016 ஆகஸ்ட் 7 மறைவு

Image
வியட்நாம் வீடு சுந்தரம் ஒரு சகாப்தம்  - 2016 ஆகஸ்ட் 7 மறைவு  சாவு என்பது நாடக அரங்கேற்றம் போன்றது.  அதற்கான ஒத்திகைதான் வாழ்க்கை    _வியட்நாம் வீடு சுந்தரம் வியட்நாம் வீடு  சுந்தரம் திருச்சியில் 1943 ஆம் ஆண்டு பிறந்தார் . அவர் கைக்குழந்தையாய் இருந்த போது அவருடைய அன்னை காந்தியை பார்க்க  1945 இல் மெட்றாஸ் பட்டணத்திற்கு வந்தார் .தொடர்ந்து பஞ்சம் ,பசி இவற்றால் துரத்தப்பட்ட இவரது அன்னை மெட்றாசுக்கு 1955 இல் குடி  பெயர்ந்தார் சுந்தரத்திற்கு சிறு வயதில் படிப்பு ஏறவில்லை -எனவே சென்னையில் டன்லப் தொழிற்சாலையில் பணியாற்றினார் .படிப்படியாய் உயர்ந்து மிசின் ஆப்பரேட்டர் ஆனார்    அப்போது ஒய் .ஜி .பார்த்தசாரதி ,அவரது மனைவி மற்றும் பட்டு இவர்களின்  பரிச்சயம் ஏற்பட்டது . அவர்களிடம் வசனம் எழுதும் வித்தையை கற்றார் .பின்னாளில் "சோ" ராமசாமி அவர்களும் பட்டுவிடமே தொழில் கற்றார்   தன்னுடைய 15 ஆம் வயதில்  1958ம் ஆண்டு டன்லப் தொழிற்சாலையில் முதலாண்டு விழாவில் மேடை ஏற்றிய முதல் நாடகம் மூலம் அன்றைய சிறப்பு விருந்தினர் எம்.ஜி.ஆரா...